கற்பனைக்கும் எட்டாத மலை உச்சியில் 50 வீடுகள் மட்டுமே உள்ள மலை கிராமம்|periyur PART - 2

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • TRIBAL VILLAGE DOCUMENTARY PERIYUR VILLAGE DOCUMENTARY PART - 2.
    Chinnur ஆதிவாசி காலனி PART - 1👇🔗
    • யாரும் எளிதில் செல்ல ம...
    Chinnur ஆதிவாசி காலனி PART - 2👇🔗
    • வெளிஉலகிற்கு தெரியாத ,...
    Chinnur Hill Top Village 👇🔗
    • Kodaikanal suicide poi...
    Periyur Hill Top Mountain Village PART - 1👇🔗
    • மதிகெட்டான் சோலை மலை உ...
    In this post, we will look at Periyur, a hill village located on a high mountain peak adjacent to the Mathiketan oasis forest in the Kodaikanal hill forests of Dindigul district.To reach this village one has to travel 9 km through a rough and rugged road through dense forest.The people of this village of only 50 houses live on the slopes of the hills by farming.This Periyur village is located in the middle of the forest where Mathiketan oasis forest is on one side and Hat Toth Rock on the other side, Berijam Lake on the other side and suicide point on the other side.On the way to this village there is a tribal village called Chinnur Adivasi Colony and a mountain village called Chinnur.I have uploaded a video about Chinnur and Chinnur Adivasi Colony on our channel.This is the Last Of Our Chinnur Periyur Village Series..
    #westernghats #dangerous #tribalvillage #tribalhouse #tribal #triballife #tribalfestival #tribalfood #chinnur #periyur #triballifestyle #kodaikanal #theni #hiddenplace #tribes
    இந்த பதிவில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலை காடுகளில் அமைந்துள்ள மதிகெட்டாண் சோலை வனப்பகுதியை ஒட்டியுள்ள உயரமான மலை சிகரத்தில் அமைந்திருக்கும் பெரியூர் என்ற மலை கிராமத்தை பற்றி பார்க்கலாம்.இந்த கிராமத்தை சென்றடைய 9 km அடர்ந்த வனப்பகுதியில் அமைந்திருக்கும் கரடு முரடான பாதையில் பயணிக்க வேண்டும்.50 வீடுகள் மட்டுமே உள்ள இந்த கிராமத்தில் உள்ளவர்கள் மலை சரிவுகளில் விவசாயம் செய்து வாழ்கின்றனர்.இந்த பெரியூர் கிராமம் அமைந்திருக்கும் காட்டில் ஒரு புறம் மதிக்கெட்டான் சோலை வனப்பகுதியும் இன்னொரு புறம் தொப்பி தூக்கி பாறையும் இன்னொரு புறம் பேரிஜம் லேக் மற்றொரு புறம் suicide பாய்ண்ட் நடுவில் அமைந்துள்ளது.இந்த கிராமத்துக்கு செல்லும் பாதையில் சிண்ணுர் ஆதிவாசி காலனி என்ற பழங்குடி மக்கள் வாழும் கிராமமும் சின்னுர் என்ற மலை கிராமமும் வரும்.நமது சேனலில் சின்னுர் மற்றும் சின்னுர் ஆதிவாசி காலனி பற்றிய பதிவை பதிவேற்றியுள்ளேன். சின்னூர் மற்றும் பெறியூர் கிராமங்களின் கடைசி பதிவும் இந்த காணொளியோடு முடிவடைகிறது..
    Tribal Village Documentary, Tribal Village, Tribal Villages,Tribal House,Tribal Home,Tribal food,Tribal Dance,Tribal Cooking,Tribal Cheif,Tribal Festival,Tribal Settlement, Tribal Colony, Tribes, Tribes Of India, Western Ghats, Western Ghats Tribal Village, Unexplored Tribal village,Ever Explored Tribal Village, Chinnur Village,Chinnur Village in Tamilnadu,Chinnur Mountain Village,Chinnur Village in Kodaikanal,Chinnur Village in Theni,Chinnur Village in Dindigul,Chinnur Tribal village, Kodaikanal Tribal Village,Theni Tribal Village, Chinnur Tribal Colony,Chinnur Tribal Settlement,Periyur Village, Periyur Village In Kodaikanal, Periyur Village Theni,Theni Periyur Village,Chinnur Aadivaasi Colony, Dangerous Forest, Dangerous Hills, Dangerous Tribes, Dangerous Tribal Village, South Indian Tribes,Indian Tribes, Tribal Community, Tribes Of India,Indian Tribes, Hidden Tribal Village, Hidden Tribes, Hidden Places, Kodaikanal Escape Route, Kodaikanal Suicide Point, Kodaikanal Berijam Lake, Kodaikanal Mathikettan Solai,Mathikettan Solai,National Park,Trekking, Kodaikanal Trekking..
    ****DISCLAIMER****
    All contents provided by KOVAI OUTDOORS is meant for ENTERTAINMENT PURPOSE ONLY.
    Our channel does not promote or encourage any illegal activities.
    We don't recommend the viewers to replicate this and viewers discretion is advised if tried.
    Professional advice should always be sought before entering any dangerous environment as it may cause serious damages to life and property.
    Also, we are not responsible for the damage or losses incurred during such replications.
    MORE INTERESTING AND THRILLING VIDEOS IN OUR CHANNEL.
    PLEASE SUBSCRIBE AND SUPPORT OUR CHANNEL 🙏
    🙏 THANK YOU 🙏

Комментарии • 438

  • @seatbeltprince6633
    @seatbeltprince6633 10 месяцев назад +193

    சாலை வசதி இல்லாமல் இவர்கள் இந்த வீட்டை கட்டுவதற்கு கல், தகரம் மற்றும் மர சாமான்களை எப்படி கொண்டு வந்திருப்பார்கள் என்பதை தயவு செய்து தெரியப்படுத்துங்கள் .நிச்சயமாக குதிரையில் இவ்வளவு பெரிய சாமான்களை கொண்டு வரமுடியாது...மிகவும் ஆச்சரியமாக உள்ளது ....நீங்கள் கஷ்டப்பட்டு எடுத்த இந்த வீடியோவிற்காக உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகாது ...தொடரட்டும் உங்கள் பயணம் ...❤

    • @kovaioutdoors
      @kovaioutdoors  10 месяцев назад +9

      Sir,இவர்கள் வீட்டு கட்டுமான பொருட்கள் கழுதை,குதிரை,தலை சுமை வைத்தது கொண்டு செல்கின்றனர்....சுமந்து செல்லும் கூலி 300ரூபாய்

    • @seatbeltprince6633
      @seatbeltprince6633 10 месяцев назад +2

      Thank u brother 🙏

    • @nonamegaming4291
      @nonamegaming4291 8 месяцев назад +1

      Bro and anga sengal lam romba use panna mattanga alternative eruku weight less ahh

    • @JayaMani626
      @JayaMani626 8 месяцев назад +2

      ​@@kovaioutdoorshi bro enagu oru help

    • @inbaarasan4020
      @inbaarasan4020 7 месяцев назад +6

      ரோப் கார் வசதி செய்து குடுக்கணும் TN government

  • @user-ft7dg1ud8f
    @user-ft7dg1ud8f 10 месяцев назад +42

    இந்த மலைவாழ் மக்கள் ஆதிவாசிகளின் கடினமான வாழ்க்கையை இதுவரைக்கும் வெளி உலகத்துக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என நான் நினைக்கிறேன் உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்

  • @balawayne
    @balawayne 10 месяцев назад +36

    தம் வாழ்வாதாரம் எப்படி இருந்தாலும், யார் எவரையும் 'இருந்து சாப்பிட்டு செல்லுங்கள்' என்று பார்க்கும் ஒரு ஒருவரும் சொல்வது மிக பெரிய விஷயம்!! இந்த மனிதர்களை வருத்தமாக இருந்தாலும், அவர்களது அன்பு ஈடு இணை அற்றது! ❤️ இவர்களிடம் எங்களை கூட்டுச்சென்ற @KovaiOutdoors விற்க்கு மனமார்ந்த நன்றி. 🙏

  • @malarvizhimalarvizhi9010
    @malarvizhimalarvizhi9010 10 месяцев назад +20

    அழகு இருக்கும் இடத்தில் ஆபத்து இருக்கும் என்பது உண்மை தான் இந்த வீடியோவில் உணர்ந்தது பார்ப்பதற்கு மிகவும் நல்ல இருக்கு ஆனால் அங்கு உள்ளவர்களை நினைத்தால் kastamagavum இருக்கு ஆனால் அது தான் அவர்களுக்கு சொர்க்கம் அனைத்து மக்களும் நன்றாக இருக்கணும் என்று இறைவனை பிறத்திக்கின்றேன்🙏

  • @manimozhi2335
    @manimozhi2335 10 месяцев назад +25

    ஒரு அற்புதமான உங்கள் பயணம் கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்த காணொளி உங்கள் உழைப்புக்கு எங்கள் பாராட்டுக்கள் மணி சேலம்

  • @srilabshop
    @srilabshop 10 месяцев назад +64

    இவர்களது வாழ்கை கஷ்டத்தை பார்க்கும் போது நாம் எவ்வளவோ உயரிய நிலையில் உள்ளோம் என்பதை உணர வேண்டும்

    • @kovaioutdoors
      @kovaioutdoors  10 месяцев назад

      🙏

    • @user-pq7si2tg7f
      @user-pq7si2tg7f 8 месяцев назад +1

      உங்கழ்பயனம்கடிநமாதூவழ்தூகள்தம்பி❤❤❤❤❤❤❤❤❤❤

    • @sivaranjanirajagopal5189
      @sivaranjanirajagopal5189 5 месяцев назад

      😅​@@user-pq7si2tg7f

  • @user-vn8eu8hx8g
    @user-vn8eu8hx8g 10 месяцев назад +17

    மனசுக்கு ரொம்ப வருத்தமா இருக்கு 😮 இந்த மக்களின் நிலமையை பார்க்கும் போது

  • @vijayanshana5990
    @vijayanshana5990 9 месяцев назад +7

    Bro இவர்களை தமிழ்நாடு அரசு கண்டுக்க இல்லையா இவர்களும் மனிதர்கல் அல்லவா பார்க்க கஷ்ட்டமா யிருக்கு 😭உங்கள் பயணமும் மிக ஆபத்தாக இருக்கு ரொம்ப ரெஸ்க் 👍

  • @ranjaniranjaniranjani6012
    @ranjaniranjaniranjani6012 9 месяцев назад +5

    இதை பார்க்கும் போது மனசுக்கு வருத்தமளிக்கிறது,வீடுகளை பார்க்கும் போது பிரமிப்பாக இருக்கிறது. ....

  • @radhakrishnan7538
    @radhakrishnan7538 9 месяцев назад +5

    அருமையான இயற்கை காட்சி மென்மேலும் சேனல் வளர வாழ்த்துங்கள்

  • @sivaramakrishnanbal
    @sivaramakrishnanbal 5 месяцев назад +3

    Wow...இந்த பயணத்திற்கு ஈடு இணை இல்லை...அருமை...அருமை....மிக்க நன்றி...எனக்கும் உங்களுடன் வர மிகுந்த ஆவலாக உள்ளது....சின்னூர் பெரியூர்....ஆதிவாசி காலனி...க்ளைமேட்...குளிர் அங்கு கொடைக்கானல் போலவே இருந்ததா..

    • @kovaioutdoors
      @kovaioutdoors  5 месяцев назад

      Kodaikanal vida cooling athigam brother

  • @prabukalluri6167
    @prabukalluri6167 10 месяцев назад +9

    ரொம்ப நன்றி அண்ணா வீடியோ போட்டதற்கு ரொம்ப நன்றி மேலும் மேலும் இதே மாதிரி வீடியோ போடுங்கள் கோவை அவுட் டோர்

    • @kovaioutdoors
      @kovaioutdoors  10 месяцев назад

      கண்டிப்பா சகோ

  • @vaithygomathi-xg8fl
    @vaithygomathi-xg8fl 10 месяцев назад +10

    தம்பி உங்கள் வெற்றி பயணம் தொடர ஏன் மனமார்ந்த நன்றிகள் வாழ்க வளமுடன்

  • @purusothamadass5827
    @purusothamadass5827 10 месяцев назад +15

    உங்கள் பதிவை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி 🙏
    வட்டகானல் to வெள்ளகவிக்கு சாலை அமைப்பதற்காக
    5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான பணி துவங்கப்பட்டுள்ளது.
    மேலும் பெரியூர், சின்னூர் இணைக்கும் படி கல்லாறு to சின்னூர் பழியர் காலணிக்கு சாலை அமைப்பதற்கும்,
    பாலம் அமைப்பதற்கும் 12 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, இந்த தி.மு.க ஆட்சி என்பதை மகிழ்ச்சியுடன்👍 தெரிவிப்பது வெள்ளகவி ஊராட்சி மன்ற தலைவர் . D.T புருஷோத்தமதாஸ்.

    • @kovaioutdoors
      @kovaioutdoors  10 месяцев назад +1

      ❤️👍

    • @venkatinfo6124
      @venkatinfo6124 9 месяцев назад +2

      பெரியகுளம் கல்லாறில் இருந்து இருந்து சின்னூர் ஆதிவாசி காலனிக்கு பாலம் அமைக்கவும் சாலை அமைக்கவும் முடிவு செய்த விஷயத்தை கமெண்டில் பகிர்ந்தமைக்கு பெரியகுளம் வாசியாகிய நான் மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    • @kumarbhat4921
      @kumarbhat4921 9 месяцев назад +1

      When it will start and end

    • @sabariprasanh
      @sabariprasanh 9 месяцев назад +2

      Ayya eathu senjalum mulumaiyaga ithukkana panathai ithukku payanpaduthunga pls.lapa nokkam vendam..

    • @hariniparthiban4490
      @hariniparthiban4490 8 месяцев назад +2

      திரு.புருஷோத்தம தாஸ் அவர்கள் சாலை அமைக்கும் பணியை முன் நின்று செவ்வனே நிறைவேற்றிட வாழ்த்துக்கள்

  • @mohanrajmohanraj3195
    @mohanrajmohanraj3195 10 месяцев назад +5

    ஒரு நாடகத்தில் ஒரு சினிமாவில் தெரியாத விஷயத்தை நீங்கள் தேடி பிடித்து சொல்கிறீர்கள் சூப்பர் மிகவும் நன்றி இந்த மாதிரி கலாச்சாரம் நாடகத்தில் எடுத்தா வருடம் முழுவதும் இவர்கள் படும் துன்பத்தை காட்டலாம் இதை எல்லாம் சொல்லாமல் மாமனார் பிரச்சனை மாமியார் மாமனார் பிரச்சனை நாடகத்தில் ஓட்டிக்கிட்டு நகரத்தில் காலத்தை ஓட்டிகிட்டு இருக்கிறன்

  • @durairaj789
    @durairaj789 10 месяцев назад +3

    தங்களுடை குழு முயற்ச்சிக்கு மிகுந்த பாராட்டுக்களும். நன்றிகளும்.....கூடிய விரைவில் அங்கு வாழ்கின்ற நம் உறவுகளின் எண்ணங்கள் நிறைவேற எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக்கொள்வோம்

  • @sathamhussainsathamhussain4459
    @sathamhussainsathamhussain4459 7 месяцев назад +2

    இது ஒரு கடினமான பயணம் மலை வால் மக்கள் கஷ்டத்தை வெளி உலகிற்கு காட்டிய உங்கள் குழுவிற்கு மிக்க நன்றி இந்த காணொளியை பார்க்கும் போது என் மனம் ப்ரம்மித்து போனது உங்கள் பயணம் தொடரட்டும் வாழ்த்துக்கள் நண்பர்களே

  • @vijayfair6394
    @vijayfair6394 10 месяцев назад +8

    எல்லா இன மக்களுக்கும் ஒரு கலாச்சாரம் , பண்பாடு உண்டு நண்பர்களே அவர்களுக்கு அவர்கள் இடத்தில் உள்ள வேலைகளை செய்து அவரவர் வாழ்விடத்தில் வசிப்பதையே விரும்புவார்கள் எல்லோரும் நகரத்துக்கு வந்துவிட்டால் விவசாயம் யார் செய்வார் எப்படி சோறு கிடைக்கும் என்று சிந்தியுங்கள் நாம் செய்ய வேண்டயது என்னவென்றால் நம்மால் அந்த ஏழை மக்களுக்கு என்ன உதவி செய்ய முடியுமோ அதை செய்ய வேண்டும் அவ்வளவுதான்

  • @shanmugammahalingam9455
    @shanmugammahalingam9455 6 месяцев назад +4

    இது போல் பயணம் செய்யும் நீங்கள் பாதுகாப்புடுடன் செல்ல வேண்டும் அதுபோல ஒருவரை ஒருவர் சார்ந்து பின் தொடரவேண்டும்

  • @dakshinamoorthi8974
    @dakshinamoorthi8974 10 месяцев назад +4

    மிகவும் அற்புதமான மலைப் பயணம் நண்பரே👍👍👍

  • @selvamselvam-ik4vi
    @selvamselvam-ik4vi 9 месяцев назад +1

    அந்த மக்களின் வாழ்க்கை நிலை மை கண்முன் உங்களுக்கு வாழ்த்துக்கள் தம்பி கன்னியாகுமரி செல்வம்

  • @thangarajmuthu723
    @thangarajmuthu723 2 месяца назад

    இவர்கள் இப்படி இருப்பதுதான் பாதுகாப்பு இந்த வீனாய்போன உலகத்தில் நான் இந்த சொர்க்கத்தில் பிரக்கவில்லையே என்கின்ற கவலை என்னை வாட்டுகிறது

  • @narmadhalithin
    @narmadhalithin 10 месяцев назад +6

    அருமையான வீடியோ

  • @உழவன்மகன்
    @உழவன்மகன் 9 месяцев назад +1

    பாவம் இந்த அம்மாவின் வலியும் வேதனையும் நம்மளால் புரிந்துகொள்ள முடிகிறது இந்த அரசும் அதிகாரிகளும் புரியுமா என்று தெரியவில்லை....

  • @anandmarimuthu7955
    @anandmarimuthu7955 2 месяца назад

    👌👌👌👌👌👌👌👌Arumaiyan video

  • @kumarkanthasamy7501
    @kumarkanthasamy7501 8 месяцев назад +1

    அந்த.அக்காவின்.உண்மையானா.அன்பு.அக்காவிர்க்.வாழ்த்துக்கள்

  • @prakashlic7578
    @prakashlic7578 10 месяцев назад +2

    காணக்கிடைக்காத காட்சிகள் , நன்றி தோழர்

    • @kovaioutdoors
      @kovaioutdoors  10 месяцев назад

      ❤️ நன்றிங்க

  • @banupriya192
    @banupriya192 10 месяцев назад +4

    எதிர் பார்த்த வீடியோ.நன்றி

    • @kovaioutdoors
      @kovaioutdoors  10 месяцев назад

      Thank you so much brother ❤️

    • @banupriya192
      @banupriya192 10 месяцев назад +1

      @@kovaioutdoors sister anna

    • @kovaioutdoors
      @kovaioutdoors  10 месяцев назад

      Thank you so much sister 🙏

  • @user-wr4wb9ge1k
    @user-wr4wb9ge1k 9 месяцев назад +1

    Super அனுபவம்

  • @manog8213
    @manog8213 9 месяцев назад +1

    6:40 Idhu thaanya tamil culture. 💚💚

  • @srivatsansc2953
    @srivatsansc2953 10 месяцев назад +7

    Thanks for bringing out the hardships faced by these villagers. The government should step in immediately and provide roads or at winch services to the nearest point so that they can lead a good life.

  • @sundarap2027
    @sundarap2027 9 месяцев назад +1

    இது மாதிரி மக்கள்
    வாழ்க்கை யை
    அரசு க்கு
    கொண்டு போய்
    சேர்ப்பது ம்
    யூ டியூபினர்
    கடமையாகும்
    வெறுமனே
    சந்தாதாரர் கள
    கூட்ட வேண்டும்
    என்று நினைக்க
    கூடாது
    சுயநலம் கூடாது

  • @kvaratharajan9758
    @kvaratharajan9758 4 месяца назад +1

    வேற எந்த பதிவிலும் மக்கள் வாழ்வியலை உங்கள் போல் பதிவு செய்யவில்லை. வாழ்த்துக்கள்

  • @theworldofcats6756
    @theworldofcats6756 10 месяцев назад +14

    அவங்க மலைமேலே விவசாயம் செய்து கொடுக்கற பழங்களை தான் நாம் ரொம்ப சுலபமாக, கீல. காசு.கொடுத்து, வாங்கி சாப்பிடு ரோம் அவங்களுக்கு ஜுப் வசதி செய்து கொடுக்கலாம்

  • @SenthilKumarNalamMedicals
    @SenthilKumarNalamMedicals 6 месяцев назад +1

    Brother
    நான் உங்களின் சின்னூர் பெரியூர் video's பார்த்தேன்
    ஒரு மிக சிறந்த பதிவு.
    இவர்களின் வாழ்வியல் ஒரு வகையில் நம்மை யோசிக்க வைக்கிறது. அவர்கள் இருப்பதை வைத்து நிம்மதியாக வாழ்கின்றனர். அவர்களின் சிரமங்களும் தெரிகிறது.
    அவர்களின் வாழ்வை நமக்கு வெளிப்படுத்திய உங்களுக்கு நன்றி.....Best videos brother

  • @dhoniranjith
    @dhoniranjith 5 месяцев назад +1

    Bro andha aunty sollumbodhu Nan literally azhudhuten bro 🥹 kandipa government evangaluku Edhana help pananum especially Road and Water facility ❤

  • @vijayaletchumi4696
    @vijayaletchumi4696 6 месяцев назад +2

    Thank you ..sharing this wonderful clips, mind-blowing

  • @rameshtherider
    @rameshtherider 10 месяцев назад +1

    சூப்பர் தம்பி

    • @kovaioutdoors
      @kovaioutdoors  10 месяцев назад

      நன்றி அண்ணா

  • @grajendran4821
    @grajendran4821 9 месяцев назад +1

    நல்ல பதிவு! வாழ்த்துக்கள்!

  • @saravananr2035
    @saravananr2035 2 месяца назад +1

    வணக்கம் சேலம் சரவணன் நன்பரே தங்களது இந்த தொண்டு மிகவும் மிகவும் அருமையாக உள்ளது வாழ்க பல்லாண்டு

  • @Jr-mf6ns
    @Jr-mf6ns Месяц назад

    இதை எல்லாம் பார்க்கும் போது நாம் மற்றும் நம் பிள்ளைகள் வாழும் வாழ்கை ராஜ வாழ்க்கை...இதையே நம்ம குறை சொல்லறோம்...பார்க்கவே வேதனையா இருக்கு பாவம்

  • @SaravananSaravanan-pt5qs
    @SaravananSaravanan-pt5qs 10 месяцев назад +3

    அருமையான பயணம் கவனமாக செல்லவும் வாழ்த்துக்கள் உங்கள் பணி சிறக்கட்டும்

  • @maryrani.a8992
    @maryrani.a8992 10 месяцев назад +2

    Thrill payanam. Hardly 👣. Beautiful forest. Pasamana malival makkal. Wonderful 🐕 and kids. Adventure payanam. Thank you🙏 for sharing. Superb.

  • @friendofforest8189
    @friendofforest8189 10 месяцев назад +7

    Fantastic video bro. You explained the sarrows & sufferings of the Kodai village peoples & their daily routine life. I felt sad. Also you & your friends also done excellent effort for this episode. Thanks for all dear bros.

  • @chokalingam5960
    @chokalingam5960 10 месяцев назад +1

    Bestwork.boys.

  • @Sixsface2021
    @Sixsface2021 6 месяцев назад

    சகோ நீங்கள் போடும் வீடியோக்கள் பார்த்து வேர வீடியோக்கள் பார்க்க மணம் வரவில்லை நாங்களே நேரில் சென்று இந்த இடங்களை பார்த்த மாதிரி இருக்கிறது நாம் முன்னேற்றம் அடைந்த நகரங்களில் வாழ்ந்து என்னத்த சாதித்து விட்டோம் மலைவாழ் மக்களும் சில கிராமத்து மக்களும் இருக்கும் இடத்தை விட்டு வரதுக்கு எவ்வளவு யோசனை பன்னுவார்கள் என்று அவுங்களோடு வாழ்ந்து பார்த்தால் தான் தெரியும் அவுங்களாச்சும் நிம்மதியாக வாழட்டும்

    • @kovaioutdoors
      @kovaioutdoors  6 месяцев назад

      நன்றிங்க 🙏👍❤️

  • @jsmeelaani5507
    @jsmeelaani5507 9 месяцев назад +1

    கடைசி நிமிடம் கேட்க பயமாக இருந்தது ஆட்டோ சத்தம் கேட்டதும் நிம்மதி ஆச்சு.

  • @annaduraisundaram8621
    @annaduraisundaram8621 4 месяца назад +1

    இந்த மலைவாழ் மக்களை பார்க்கும்போது இப்படியும் மக்கள் கஷ்டப்பட்டு வாழ்கின்றார்களே என மனம் பதறுகின்றது. இவர்களின் துன்பங்களை வெளி உலகிற்கு தெரியபடுத்திய உங்களுக்கு மிக பெரிய பாராட்டுகள். உங்களின் அளப்பரிய இந்த சேவை தொடரட்டும். வாழ்க வளமுடன்👏👏👏👏👍👍👍🙏

  • @Mohan1978gmialcom
    @Mohan1978gmialcom 10 месяцев назад +1

    நன்றி அண்ணா

  • @davidlourdu3279
    @davidlourdu3279 10 месяцев назад +1

    சூப்பர் 🎉🎉🎉🎉

  • @SathyaDevi-tm9yi
    @SathyaDevi-tm9yi 10 месяцев назад +1

    எல்லாம் நன்மைக்கே அண்ணா

  • @cvajaleel1181
    @cvajaleel1181 10 месяцев назад +2

    அருமையான இந்தப் பதிவிற்காக நீங்கள் எந்த அளவுக்கு சிரமப்பட்டு இருப்பீர்கள் என்று நன்றாக தெரிகிறது உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்!.👍

  • @user-cg1uj6ix6t
    @user-cg1uj6ix6t 7 месяцев назад

    அருமையான பதிவு நண்பரே

  • @sumithras7452
    @sumithras7452 8 месяцев назад +2

    மலைவாழ் மக்கள் பூர்வ குடிகள் ... காடு தான் அவர்கள் வாழ்வாதாரம்... அவர்கள் உணர்வுகளை நாம் புரிந்ததுகொள்ள வேண்டும்... வனவிலங்குகளுடன் சேர்ந்து ஒரு புரிதலுடன் வாழ்கின்றனர்... இதுதான் மனித வாழ்கை...

  • @mohamedhasanguthouse8090
    @mohamedhasanguthouse8090 10 месяцев назад +2

    Makkalin anbu migavum arumai.....❤

  • @Rajapandi-pp1eh
    @Rajapandi-pp1eh 7 месяцев назад +1

    Superb சகோ 🎉😂❤

  • @cmfanz
    @cmfanz 10 месяцев назад +3

    crazy trip.. very thankful to even watch these kind of videos.. romba nandri bro for risking it so much to make it possible for viewers to watch this type of video from periyoor.

  • @pugalendi100
    @pugalendi100 9 месяцев назад +1

    wow great effort guys. ❤

  • @francismanohar152
    @francismanohar152 4 месяца назад

    Wonderful

  • @tamil6285
    @tamil6285 10 месяцев назад +2

    அருமை நண்பா சொல்ல வார்த்தையே இல்லை 😥😍👏👏👏

  • @user-fq1ij3sn8t
    @user-fq1ij3sn8t 5 месяцев назад

    அங்கு இருந்த நாய் 🐕🐕 அதன் குட்டி அருமை

  • @SenthilKumarNalamMedicals
    @SenthilKumarNalamMedicals 6 месяцев назад +1

    Its good that there is cell.phone signal

  • @mohamedziaudeen1315
    @mohamedziaudeen1315 10 месяцев назад +3

    உண்மையிலேயே இவர்கள் தான் சுவர்க்கத்தை அனுபவித்து கொண்டிருக்கின்றனர். நகரத்தில் உள்ளவர்களுக்கு இந்த நிம்மதியான வாழ்க்கை கிடைக்காது. நகரத்தில வாழ்பவர்கள் இவர்களிடம் உபசரிப்பு மற்றும் கஷ்டங்களை அனுபவித்து தெரிய வேண்டும். உங்களுடைய யூடியூப் சேவை மென்மேலும் வளர வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன்.கடவுள் உங்களுக்கு துணை இருப்பார்்

  • @arjunappu5814
    @arjunappu5814 8 месяцев назад +1

    Good job

  • @Voiceofayangudian
    @Voiceofayangudian 10 месяцев назад +1

    அரசு ரோப் கார் வசதி செய்து தரவேண்டும்

  • @user-ym8jo7jt3r
    @user-ym8jo7jt3r 10 месяцев назад +1

    Super👍👍👍❤❤👏👏👏👌👌💪💪💪

  • @manojkumar-fw4kb
    @manojkumar-fw4kb 9 месяцев назад +1

    Nice video 📹 👍

  • @syed123dawood9
    @syed123dawood9 10 месяцев назад +1

    Super bro beautiful place ❤

  • @rabeekmohamed6645
    @rabeekmohamed6645 10 месяцев назад +1

    Super video

  • @kumaranekambaram8771
    @kumaranekambaram8771 10 месяцев назад +1

    Super trip

  • @abrarparvez2231
    @abrarparvez2231 10 месяцев назад +1

    Super bro congratulations

  • @mugilshreem1347
    @mugilshreem1347 9 месяцев назад +1

    Hats off anna❤

  • @gsss1810
    @gsss1810 5 месяцев назад +1

  • @sundarselvan6750
    @sundarselvan6750 10 месяцев назад +1

    இவங்க ஊருக்குள்ள ஏன் வரமாற்ராங்கனு நா சொல்றே ஆதி காலத்துல மனுசனுக்கு உணவும் இருப்பிடமும் மட்டும் தா தேவையா இருந்துச்சு ஆதிக்கமும் அதிகாரமும் கொண்ட மக்கள் இவர்களிடம் நிலத்தையும் உரிமையையும் பறித்து கொண்டதனால் இவர்கள் உணவுக்காக விவசாயமே ஒரே வழியாக இருந்ததால் யாரும் எளிதில் எட்டிவிட முடியாத வகையில் அடர்ந்த வணபகுதிகுள்ளும் மலைகளுகுள்ளும் வசிக்க தொடங்கினர் இவர்களது முன்னோர்கள் . முன்னோர்களின் மரபும் கலாச்சாரமும் இவர்களை பின்தொடர்கிறது. இவர்கள் நகரவாசி மாறுவது அவ்வளவு சுலபம் அல்ல .

  • @lavanyavenkatachalam7589
    @lavanyavenkatachalam7589 6 месяцев назад +3

    Tanglish பதிவு போடுறவங்க மத்தியில தமிழில் பேசுறீங்க❤❤❤, கொஞ்ச நஞ்ச ஆங்கில சொற்களையும் தவிர்க்கலாமே ! அருமையான முயற்சி

  • @kathsiyalp4272
    @kathsiyalp4272 10 месяцев назад +1

    Danger place bro. Congratulations all

  • @karpagams1155
    @karpagams1155 10 месяцев назад +1

    Super bro

  • @azardheen7337
    @azardheen7337 10 месяцев назад +1

    Super anna❤

  • @sureshv6900
    @sureshv6900 8 месяцев назад +1

    யாப்பா. என்ன. வாழ்க்கை. இயற்கையோடு. மக்கள். வாலுதாங்கா. மக்கள். அம்மா. மார். சொல்வது ரெம்பா. கஷ்டமா. இருக்கு. இது. முதல். அமைச்சர். கவனதிற்கு. போக வேண்டும்.

  • @nramachanderan5983
    @nramachanderan5983 9 месяцев назад +1

    திகில்படம் பார்த்த அனுபவம்.

  • @kondappan_Traveler
    @kondappan_Traveler 10 месяцев назад +1

    Super video Anna❤🥰

  • @sureshinfo2753
    @sureshinfo2753 10 месяцев назад +1

    fantastic video hats off

  • @user-jm7eq4vo8p
    @user-jm7eq4vo8p 10 месяцев назад +1

    தம்பிஉங்கபயணம்❤

  • @SenthilKumar-dr7mm
    @SenthilKumar-dr7mm 10 месяцев назад +2

    Wonder full episode ❤

  • @Manjalnila
    @Manjalnila 10 месяцев назад +2

    சாப்பிடுங்க ன்னு தான் எல்லாரும் சொல்றாங்க

  • @sureshv6900
    @sureshv6900 8 месяцев назад +1

    டுரிஷ். பிளேஸா. அக்க. வேண்டும். மக்கள். கவனம். முதல். அமைச்சர். கவனத்திற்கு. செல்ல வேண்டும்

  • @MurugaMuruga-ep1jd
    @MurugaMuruga-ep1jd 9 месяцев назад +2

    நம்மால் நினைத்து கூட பார்க்க முடியாது ஆனாலும் மக்கள் அங்கு வாழ்கின்றனர் ❤❤❤❤❤

  • @vimalak4551
    @vimalak4551 4 месяца назад +1

    ஏறிவரவேஇப்படி மூச்சு வாங்குவது. எப்படி வீடுகட்டும் தற்கால. பொருட்களை. கொண்டுசென்றார்கள்

  • @bharathamani5778
    @bharathamani5778 10 месяцев назад +1

    அருமை அருமை வாழ்த்துக்கள் தம்பி.. சின்னுர், பெரியூர் நேரில் அழைத்து சென்றது போல் இருந்தது... பெரியூர் அக்கா அவர்களின் வேதனை நமக்கு கண்ணீர் வர வைக்கிறது....

  • @nagarajchokkalingam5152
    @nagarajchokkalingam5152 8 месяцев назад +2

    இவர்கள் வாழ்க்கை என்னும் போது எவ்வளவு கஷ்டப்பட்டு வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதை வெளி உலகுக்கு கொண்டு வந்த நண்பர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள்

    • @kovaioutdoors
      @kovaioutdoors  8 месяцев назад

      தங்களின் அன்புக்கு நன்றிங்க

  • @mullai7159
    @mullai7159 9 месяцев назад +1

    உங்களுக்கு தான் நன்றிசொல்லனும் வாழ்த்துக்கள் தம்பி நன்றி

  • @N19069999g
    @N19069999g 9 месяцев назад +1

    All the people are so friendly.Offering food & drinks for your crew .

  • @user-le4oj6nc3b
    @user-le4oj6nc3b 8 месяцев назад +1

    மிகவும் அருமையான பதிவு 🙏

  • @prasannakumaran6437
    @prasannakumaran6437 10 месяцев назад +1

    👍👍

  • @periyannankrishnaveni7367
    @periyannankrishnaveni7367 10 месяцев назад +1

    நல்ல தெளிவாகவே பேசுகிறார்கள்.

  • @vijayfair6394
    @vijayfair6394 10 месяцев назад +1

    இது போன்று மலை பயணங்கள் செல்வதற்க்கும் முன் குறைந்தது 10 நாள்களாவது நடைபயிற்ச்சி செய்த பிறகு பயணத்தை தொடங்க வேண்டும்

  • @vijayfair6394
    @vijayfair6394 10 месяцев назад +3

    மலை பயணங்கள் செய்யும் மக்களை ஈர்க்கும் வகையிலும் மலைபயணம் மேற்கொள்ளும் நபர்களிடம் சில தொகைகளை வாங்கி மலைவாள் மக்கள் சிலரை வழிகாட்டும் நபர்களாகவும் , மற்றும் மலை பயணம் செய்பவர்களுக்கு தங்க சிறு வசதிகளும் அவர்களுக்கு தேவையான உணவுகள் செய்து கொடுப்பதையும் நெறிபடுத்தினால் மலைவாளள் மக்களுக்கு நல்ல பொருளாதாரத்தை மீட்டலாம் என்பது என் கருத்து

  • @Mohana.s2123
    @Mohana.s2123 10 месяцев назад +1

    Hi bro most waited video and one request for me bro ethavathu oru video la unga face kattunga bro

  • @Magesh143U
    @Magesh143U 10 месяцев назад +2

    அரசாங்கம் ஒரு சாலை வசதி கூட செய்து தராமல் இருந்தென்ன.. இல்லாமல் போனால் என்ன 😢😢

  • @SRIRAM-gd1kh
    @SRIRAM-gd1kh 10 месяцев назад +1

    Very very talented and wonderful payanam thanks to all brother