சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலில் அக்னி நட்சத்திரம் தோஷ நிவர்த்தி காவடி ஊர்வலம்.

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024
  • கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ நடராஜர் கோயில் உள்ளது.இங்கு ஆண்டு தோறும் அக்னி நட்சத்திரம் நிறைவு பெற்றவுடன் தோஷ நிவர்த்தி செய்வதற்காக இக்கோயிலில் உள்ள ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி சன்னதிக்கு கோவில் தீட்சிதர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தியை முன்னிட்டு காவடி ஏந்தி செல்லும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு அக்னி நட்சத்திரம் நிறைவடைந்ததை முன்னிட்டு இன்று (31.05.2024)மாலை 6.30 மணிக்கு மேல் கோயில் தீட்சிதர்கள் மற்றும் அவருடைய குடும்பத்தினர் நூற்றுக்கணக்கானோர் சிவகங்கை குளத்தில் இருந்து புறப்பட்டு மேளதாளம் முழங்க காவடி ஏந்தி கோவிலை வலம் வந்தனர். பின்னர் ஊர்வலமாக ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி சன்னதியை அடைந்தனர். அங்கு காவடிகளை வைத்து படைத்தனர் . பின்னர் தண்டாயுதபாணி சாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதனை கோயிலுக்கு வந்திருந்த ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.

Комментарии • 4

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 2 месяца назад

    🙏🌿🌹சிவ சிவ🌼🌷🙏❤❤❤❤🎉

  • @anuradhavaithiyanathan1930
    @anuradhavaithiyanathan1930 2 месяца назад

    Om muruga muruga muruga muruga muruga potri potri potri potri potri

  • @anuradhavaithiyanathan1930
    @anuradhavaithiyanathan1930 2 месяца назад

    Om namashivaya namaha thiruchitrabalam AUM Sri mahaprriyava thiruvadi saranam

  • @thillaigeetham
    @thillaigeetham  2 месяца назад

    Thanks for watching videos, please share this to your friends and families. if interested please read our articles in
    www.thillaigeetham.com