சின்னமனூரில் TVK இளைஞர் அணி சார்பில் விஜய் பிறந்தநாள்விழா....

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • சின்னமனூரில் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானமும், ஏழைப் பெண்களுக்கு இலவச சேலைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது .....
    தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், நடிகருமான தளபதி என தனது ரசிகர்களால் அழைக்கப்படும் விஜய் அவர்களின் 50-வது பிறந்தநாள் விழா ஜூன் 22ஆம் தேதி வழக்கமாக கொண்டாடி வருகின்றனர்.
    ஆனால் இந்த ஆண்டு கள்ளக்குறிச்சி சம்பவத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் காரணமாக தனது ரசிகர்கள் மற்றும் கட்சியினரை தனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என்று விஜய் கேட்டுக் கொண்டார்.
    அதன் அடிப்படையில் சின்னமனூர் நகர தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக விஜயின் பிறந்த நாளான இன்று வழக்கமான கொண்டாட்டங்களை தவிர்த்து, பொதுமக்களுக்கு அன்னதானமும்,ஏழைப் பெண்களுக்கு இலவச சேலை வழங்கும் நிகழ்ச்சியும் நடத்தினர்.
    முன்னதாக கள்ளக்குறிச்சி சம்பவத்தில் இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சி தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட இளைஞர் அணி தலைவர் R.S.பிரகாஷ் தலைமையில், நகர
    தலைவர் சுந்தர்,
    துணைத்தலைவர் கார்த்திக் ,
    செயலாளர்
    முத்துராஜா ,
    துணை செயலாளர் ரஞ்சித்
    பொறுப்பளார் சரவணக் குமார் ஆகியோர் ஏற்பாட்டில் நடைபெற்றது.நிகழ்ச்சியில் ஏராளமான விஜய் ரசிகர்களும் தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்களும் கலந்து கொண்டு ஏழைப் பெண்களுக்கு இலவச சேலைகளும், பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

Комментарии • 1

  • @Lavandreams
    @Lavandreams 2 месяца назад +2

    மிக்க சிறப்பு நண்பா👍மோ.லவனேஷ் 8ம் வகுப்பு🕺 தளபதி ரசிகன் சின்னமனூர்.