மறையுடையாய் தோலுடையாய் வார்சடை மேல் வளரும் பிறையுடையாய் பிஞ்ஞகனே என்றுன்னைப் பேசினல்லால் குறையுடையார் குற்றம் ஓராய் கொள்கையினால் உயர்ந்த நிறையுடையார் இடர்களையாய் நெடுங்களமேயவனே கனைத்தெழுந்த வெண்டிரைசூழ் கடலிடை நஞ்சு தன்னைத் தினைத்தனையாம் இடற்றில் வைத்த திருந்திய தேவ நின்னை மனத்தகத்தோர் பாடல் ஆடல் பேணி இராப்பகலும் நினைத்தெழுவார் இடர் களையாய் நெடுங்களமேயவனே நின்னடியே வழிபடுவான் நிமலா நினைக் கருத என்னடியான் உயிரை வவ்வேல் என்றடற் கூற்றுதைத்த பொன்னடியே பரவி நாளும் பூவோடு நீர் சுமக்கும் நின்னடியார் இடர் களையாய் நெடுங்களமேயவனே மலை புரிந்த மன்னவன் தன் மகளை ஓர் பால் மகிழ்ந்தாய் அலை புரிந்த கங்கை தங்கும் அவிர் சடை ஆரூரா தலை புரிந்த பலி மகிழ்வாய் தலைவ நின் தாள் நிழல் கீழ் நிலை புரிந்தார் இடர் களையாய் நெடுங்களமேயவனே பாங்கினல்லார் படிமஞ்செய்வார் பாரிடமும் பலிசேர் தூங்கிநல்லார் பாடலோடு தொழுகழலே வணங்கித் தாங்கிநில்லா அன்பினோடுந் தலைவ நின் தாள் நிழல் கீழ் நீங்கிநில்லார் இடர் களையாய் நெடுங்களமேயவனே விருத்தனாகி பாலனாகி வேதம் ஓர் நான்கு உணர்ந்து கருத்தனாகி கங்கையாளைக் கமழ் சடைமேல் கரந்தாய் அருத்தானாய ஆதி தேவன் அடியிணையே பரவும் நிருத்தர் கீதர் இடர் களையாய் நெடுங்களமேயவனே கூறுகொண்டாய், மூன்றும் ஒன்றாக் கூட்டி, ஓர் வெங்கணையால், மாறு கொண்டார் புரம் எரித்த மன்னவனே, கொடிமேல் ஏறு கொண்டாய், சாந்தம் ஈது என்று எம்பெருமான் அணிந்த நீறு கொண்டார் இடர் களையாய் நெடுங்களமேயவனே குன்றின் உச்சி மேல் விளங்கும் கொடிமதில் சூழ் இலங்கை அன்றி நின்ற அரக்கர் கோனை அருவரைக்கீழ் அடர்த்தாய் என்று நல்ல வாய்மொழியால் ஏத்தி இராப்பகலும் நின்று நைவார் இடர் களையாய் நெடுங்களமேயவனே வேழ வெண்கொம்பு ஒசித்த மாலும், விளங்கிய நான்முகனும் சூழ எங்கும் நேட ஆங்கோர் சோதி உள்ளாகி நின்றாய் கேழல் வெண்கொம்பு அணிந்த பெம்மான் கேடிலாப் பொன்னடியின் நீழல் வாழ்வார் இடர் களையாய் நெடுங்களமேயவனே வெஞ்சொல் தஞ்சொல் ஆக்கி நின்ற வேடமிலாச் சமணும் தஞ்சம் இல்லாச் சாக்கியரும் தத்துவம் ஒன்றறியார் துஞ்சல் இல்லா வாய்மொழியால் தோத்திரம் நின்னடியே நெஞ்சில் வைப்பார் இடர் களையாய் நெடுங்களமேயவனே நீடவல்ல வார்சடையான் மேய நெடுங்களத்தைச் சேடர் வாழும் மாமறுகிற் சிரபுரக்கோன் நலத்தால் நாடவல்ல பனுவல் மாலை ஞான சம்பந்தன் சொன்ன பாடல் பத்தும் பாட வல்லார் பாவம் பறையுமே
அன்புடையீர், அற்புதம்! இந்த அனுபவத்தை பகிர்ந்ததற்கு நன்றி! நம் புதிய RUclips சேனல் காவடி TV-யில் திருப்புகழ், தேவாரம், திருவாசகம், திருமுறை, திருவருட்பா, மற்றும் பக்தி பாடல்களும் ஆன்மிகக் காணொளிகளும் கேட்க அழைக்கிறேன். இப்போதே சப்ஸ்கிரைப் செய்து, தெய்வீக இசையுடன் இணைந்திருங்கள்! 🔔 சப்ஸ்கிரைப் செய்ய: www.youtube.com/@kaavaditv Dear devotees, Many thanks. I invite you to join our new RUclips channel, @KaavadiTV, where you can listen to sacred Thiruppugazh, Thevaram, Thiruvasagam, Thirumurai, Thiruvarutpa, and many more religious and classical songs. Subscribe now and stay connected with divine music! 🔔 Subscribe: www.youtube.com/@kaavaditv
Very nice voice. A great person like you who studied this devara songs in those days of your padadalai is a great asset to our country. I pray God be always with you. Siva, siva, siva. Vanakkam.
மறையுடையாய் தோலுடையாய் வார்சடை மேல் வளரும்
பிறையுடையாய் பிஞ்ஞகனே என்றுன்னைப் பேசினல்லால்
குறையுடையார் குற்றம் ஓராய் கொள்கையினால் உயர்ந்த
நிறையுடையார் இடர்களையாய் நெடுங்களமேயவனே
கனைத்தெழுந்த வெண்டிரைசூழ் கடலிடை நஞ்சு தன்னைத்
தினைத்தனையாம் இடற்றில் வைத்த திருந்திய தேவ நின்னை
மனத்தகத்தோர் பாடல் ஆடல் பேணி இராப்பகலும்
நினைத்தெழுவார் இடர் களையாய் நெடுங்களமேயவனே
நின்னடியே வழிபடுவான் நிமலா நினைக் கருத
என்னடியான் உயிரை வவ்வேல் என்றடற் கூற்றுதைத்த
பொன்னடியே பரவி நாளும் பூவோடு நீர் சுமக்கும்
நின்னடியார் இடர் களையாய் நெடுங்களமேயவனே
மலை புரிந்த மன்னவன் தன் மகளை ஓர் பால் மகிழ்ந்தாய்
அலை புரிந்த கங்கை தங்கும் அவிர் சடை ஆரூரா
தலை புரிந்த பலி மகிழ்வாய் தலைவ நின் தாள் நிழல் கீழ்
நிலை புரிந்தார் இடர் களையாய் நெடுங்களமேயவனே
பாங்கினல்லார் படிமஞ்செய்வார் பாரிடமும் பலிசேர்
தூங்கிநல்லார் பாடலோடு தொழுகழலே வணங்கித்
தாங்கிநில்லா அன்பினோடுந் தலைவ நின் தாள் நிழல் கீழ்
நீங்கிநில்லார் இடர் களையாய் நெடுங்களமேயவனே
விருத்தனாகி பாலனாகி வேதம் ஓர் நான்கு உணர்ந்து
கருத்தனாகி கங்கையாளைக் கமழ் சடைமேல் கரந்தாய்
அருத்தானாய ஆதி தேவன் அடியிணையே பரவும்
நிருத்தர் கீதர் இடர் களையாய் நெடுங்களமேயவனே
கூறுகொண்டாய், மூன்றும் ஒன்றாக் கூட்டி, ஓர் வெங்கணையால்,
மாறு கொண்டார் புரம் எரித்த மன்னவனே, கொடிமேல்
ஏறு கொண்டாய், சாந்தம் ஈது என்று எம்பெருமான் அணிந்த
நீறு கொண்டார் இடர் களையாய் நெடுங்களமேயவனே
குன்றின் உச்சி மேல் விளங்கும் கொடிமதில் சூழ் இலங்கை
அன்றி நின்ற அரக்கர் கோனை அருவரைக்கீழ் அடர்த்தாய்
என்று நல்ல வாய்மொழியால் ஏத்தி இராப்பகலும்
நின்று நைவார் இடர் களையாய் நெடுங்களமேயவனே
வேழ வெண்கொம்பு ஒசித்த மாலும், விளங்கிய நான்முகனும்
சூழ எங்கும் நேட ஆங்கோர் சோதி உள்ளாகி நின்றாய்
கேழல் வெண்கொம்பு அணிந்த பெம்மான் கேடிலாப் பொன்னடியின்
நீழல் வாழ்வார் இடர் களையாய் நெடுங்களமேயவனே
வெஞ்சொல் தஞ்சொல் ஆக்கி நின்ற வேடமிலாச் சமணும்
தஞ்சம் இல்லாச் சாக்கியரும் தத்துவம் ஒன்றறியார்
துஞ்சல் இல்லா வாய்மொழியால் தோத்திரம் நின்னடியே
நெஞ்சில் வைப்பார் இடர் களையாய் நெடுங்களமேயவனே
நீடவல்ல வார்சடையான் மேய நெடுங்களத்தைச்
சேடர் வாழும் மாமறுகிற் சிரபுரக்கோன் நலத்தால்
நாடவல்ல பனுவல் மாலை ஞான சம்பந்தன் சொன்ன
பாடல் பத்தும் பாட வல்லார் பாவம் பறையுமே
எத்தனை முறை கேட்டாலும் சலிப்புத்தட்டாத தேன்தமிழ்க் குரல் வளம்,வாழ்க இறைவன் கொடுத்த வரம்.பல்லாண்டு காலம் நீவிர் மகிழ்ச்சி யுடன் இறைவனைப் பாடவேண்டும்.
அன்பே சிவம் / சிவ சிவ. நற்றுணையாவது நம சிவாயவே. அற்புதம் என்னை இனிமை. எல்லாம் ஈசன் அருள். ஓம் நம சிவாய ✨💐🙏
மறையுடையாய் தோலுடையாய் வார்சடைமேல் வளரும்
பிறையுடையாய் பிஞ்ஞகனே யென்றுனைப்பே சினல்லால்
குறையுடையார் குற்றம்ஓராய் கொள்கையினால் உயர்ந்த
நிறையுடையார் இடர்களையாய் நெடுங்களம்மே யவனே. 1.52.1
கனைத்தெழுந்த வெண்டிரைசூழ் கடலிடைநஞ் சுதன்னைத்
தினைத்தனையா மிடற்றில்வைத்த திருந்தியதே வநின்னை
மனத்தகத்தோர் பாடல் ஆடல் பேணியிராப் பகலும்
நினைத்தெழுவார் இடர்களையாய் நெடுங்களம்மே யவனே. 1.52.2
நின்னடியே வழிபடுவான் நிமலாநினைக் கருத
என்னடியான் உயிரைவவ்வேல் என்றடற்கூற் றுதைத்த
பொன்னடியே பரவிநாளும் பூவொடுநீர் சுமக்கும்
நின்னடியார் இடர்களையாய் நெடுங்களம்மே யவனே. 1.52.3
மலைபுரிந்த மன்னவன்றன் மகளையோர்பால் மகிழ்ந்தாய்
அலைபுரிந்த கங்கைதங்கும் அவிர்சடையா ரூரா
தலைபுரிந்த பலிமகிழ்வாய் தலைவநின்றாள் நிழற்கீழ்
நிலைபுரிந்தார் இடர்களையாய் நெடுங்களம்மே யவனே. 1.52.4
பாங்கினல்லார்1 படிமஞ்செய்வார் பாரிடமும் பலிசேர்
தூங்கிநல்லார் பாடலோடு தொழுகழலே வணங்கித்
தாங்கிநில்லா2 அன்பினோடுந் தலைவநின்தாள் நிழற்கீழ்
நீங்கிநில்லார் இடர்களையாய் நெடுங்களம்மே யவனே. 1.52.5
விருத்தனாகிப் பாலனாகி வேதமோர்நான் குணர்ந்து
கருத்தனாகிக் கங்கையாளைக் கமழ்சடைமேற் கரந்தாய்
அருத்தனாய ஆதிதேவன் அடியிணையே பரவும்
நிருத்தகீதர் இடர்களையாய் நெடுங்களம்மே யவனே. 1.52.6
கூறுகொண்டாய் மூன்றுமொன்றாக் கூட்டியோர்வெங் கணையால்
மாறுகொண்டார் புரமெரித்த மன்னவனே கொடிமேல்
ஏறுகொண்டாய் சாந்தமீதென் றெம்பெருமா னணிந்த
நீறுகொண்டார் இடர்களையாய் நெடுங்களம்மே யவனே. 1.52.7
குன்றின்உச்சி மேல்விளங்குங் கொடிமதில்சூழ் இலங்கை
அன்றிநின்ற அரக்கர்கோனை யருவரைக்கீழ் அடர்த்தாய்
என்றுநல்ல வாய்மொழியா லேத்தியிராப் பகலும்
நின்றுநைவார் இடர்களையாய் நெடுங்களம்மே யவனே. 1.52.8
வேழவெண்கொம் பொசித்தமாலும் விளங்கியநான் முகனும்
சூழவெங்கும் நேடஆங்கோர் சோதியுளா கிநின்றாய்
கேழல்வெண்கொம் பணிந்தபெம்மான் கேடிலாப்பொன் னடியின்
நீழல்வாழ்வார் இடர்களையாய் நெடுங்களம்மே யவனே. 1.52.9
வெஞ்சொல்தஞ்சொல் லாக்கிநின்ற வேடமிலாச் சமணும்
தஞ்சமில்லாச் சாக்கியருந் தத்துவமொன் றறியார்
துஞ்சலில்லா வாய்மொழியால் தோத்திரநின் னடியே
நெஞ்சில்வைப்பார் இடர்களையாய் நெடுங்களம்மே யவனே. 1.52.10
நீடவல்ல வார்சடையான் மேயநெடுங் களத்தைச்
சேடர்வாழும் மாமறுகிற் சிரபுரக்கோன் நலத்தால்
நாடவல்ல பனுவன்மாலை ஞானசம் பந்தன்சொன்ன 1.52.11
பாடல்பத்தும் பாடவல்லார் பாவம் பறையுமே.
இடர் களையும் பதிகம் .
தலம் திருநெடுங்களம் திருச்சி திருவெறும்பூர் அருகே தான் உள்ளது
ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🙏
தங்கள் பாடல் கேட்டால் இடற் களைவது திண்ணம்🙏🏼
தெய்வீக குரல் அருமை அய்யா ஓம் நம சிவாய
சிவன் சேவடி போற்றி🙏🏼 திரு ஞானசம்பந்தர் பாதம் போற்றி🙏🏼 திரு சம்பந்த குருக்கள் பாதம் போற்றி🙏🏼
திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமை ஐயா.
மிகவும் அருமை மகிழ்ச்சி
அன்புடையீர், அற்புதம்! இந்த அனுபவத்தை பகிர்ந்ததற்கு நன்றி! நம் புதிய RUclips சேனல் காவடி TV-யில் திருப்புகழ், தேவாரம், திருவாசகம், திருமுறை, திருவருட்பா, மற்றும் பக்தி பாடல்களும் ஆன்மிகக் காணொளிகளும் கேட்க அழைக்கிறேன். இப்போதே சப்ஸ்கிரைப் செய்து, தெய்வீக இசையுடன் இணைந்திருங்கள்!
🔔 சப்ஸ்கிரைப் செய்ய: www.youtube.com/@kaavaditv
Dear devotees, Many thanks. I invite you to join our new RUclips channel, @KaavadiTV, where you can listen to sacred Thiruppugazh, Thevaram, Thiruvasagam, Thirumurai, Thiruvarutpa, and many more religious and classical songs. Subscribe now and stay connected with divine music!
🔔 Subscribe: www.youtube.com/@kaavaditv
ஶ்ரீ திருஞானசம்பந்தர் தான்!
தெய்வீக்க் குரல். கைலாயத்துக்கே சென்றது போல் இருக்கிறது. நன்றி அய்யா.
மிகவும் சரியான கருத்து
Very nice voice. A great person like you who studied this devara songs in those days of your padadalai is a great asset to our country. I pray God be always with you. Siva, siva, siva. Vanakkam.
ஓம் சிவாய நம தென்னாட்டுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும்இறைவாபோற்றி திருச்சிற்றம்பலம்
குழந்தைகளை அடிக்கடி கேட்க வைக்கவும் பாட வைக்கவும் வேண்டும்.
மிகவும் அருமையான பாடல் மற்றும் கோவில்தளம். நன்றி அய்யா.
சிவாயநம. திருச்சிற்றம்பலம்
அருமை அய்யா தங்களை வணங்கி சிவனை அடைய
Sivaya nama Siva Siva
ஓம் சிவாய நம 🙏 ஓம் சிவாய நம 🙏
ஓம் நமசிவாய வாழ்க
திருச்சிற்றம்பலம் சிவாயநம திருநீலகண்டம் இராமச்சந்திரன் ஈரோடு
ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏💐💐... மிகவும் அருமை
நன்றி ஐயா
திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏🙏🙏💐💐
சூப்பர் பாட்டு
தங்களை கண்டாலே புண்ணியம்.
Arumai arumai Annaaa
Great voice
சிவாய நம
திருச்சிற்றம்பலம் ஐயா 🙏
சிவாயநம
🙏🌿சிவ சிவ💐திருச்சிற்றம்பலம் 🔱🌹🙏
OM NAMSIVAYA
அருமை ❤️
🙏 தெய்வீகக்குரல் ஐயா
பாடல் அருமை ஐயா 🙏🙏🙏
Om namah shivaya namah
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
இடர் களையும் பதிகம்🙏
🙏
🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
வரிகளுடன் குடுத்தால் உங்களுக்கு புண்ணிய மாக இருக்கும்
தங்கள் cell number அனுப்பவும்.
www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=1&Song_idField=1052
for lyrics and meaning
🙏
🙏
🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏