நான் பார்த்த காணொளியில் மிக சிறந்தது உங்களுடைய இந்த காணொளி மிக அற்புதமாய் தமிழ் மொழியின் சிறப்பை ஜெர்மனியில் இருந்து கூறினீர்கள்...... வாழ்க வளமுடன்.... ஏதோ இனம் புரியாத (நம் மொழி என்னவாகுமோ ) என்று ஒரு கவலை மனதுக்குள் வருகிறது.... எல்லாம் அரசியல் 😭😭
சகோதரி நீங்கள் பேசும் தமிழ் மிகவும் தெளிவாக இருக்கிறது. ஆதலால் கேட்கும் போது இனிமையாக இருக்கிறது. நம் இந்தியாவில் பெரும்பாலான மக்கள் தமிழ் மொழியை நன்றாக தேய்த்து விட்டார்கள். உங்களுக்கு ஏற்பட்டது போன்ற ஓர் நிகழ்வு எனக்கும் ஏற்பட்டிருந்தது. நானும் ஜேர்மனியில் ஓர் வைத்தியரிடம் (Doctor) போயிருந்த போது ஆங்கிலத்தில் பேசுவதற்கு மறுத்து விட்டார். நீ ஜெர்மனியில் தானே வாழ்கிறாய் அப்படியானால் ஜெர்மன் மொழியை கற்றுகொள் என்றார். ஜெர்மன் மக்கள் மொழிப்பற்று நிறைந்தவர்கள். நீங்கள் தமிழ் மொழி மீது வைத்திருக்கும் பற்றினை பார்த்து மிகவும் பெருமிதம் அடைகிறேன். மிகவும் சந்தோஷம். 🙏 வாழ்க தமிழ் மொழி 🙏
முதலில் பாரம்பரிய உடை அணிந்து அதற்கேற்ற காணொளியைப் பதிவு செய்த சகோதரி சசிக்கு பாராட்டுகள் மற்றும் நன்றி. நேயர் விருப்பம் 😂😂 நிறைவேறியது. நம்முடைய மொழிப்பற்றின் இன்றைய நிலையைப் பற்றி தெள்ளத் தெளிவாக எடுத்துரைத்தீர்கள். உண்மை பிறமொழி கலப்பின்றி பேசுவோரை ஏளனம் பேசுபவர்கள் இருக்கும் வரை😟😟😟😟. ஜெர்மனியில் பேசியது அழகு💐. இன்றைய தலைமுறைக்கு தமிழ்ப் பாடத்தை ஆங்கிலத்தில் சொல்லி புரிய வைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம்.
வளையொலில் உங்கள் பதிவு அருமை சகோதரி.....💕 கேட்க இனிமையாகவும் தென்றலாகவும் இருக்கிறது.... நம் குலம் காக்கும் பாரதி கண்ட புதுமைப்பெண் ....... வாழ்த்துக்கள் ஜெர்மனி நாடு மற்றும் மொழி பற்று பற்றிய உங்கள் பதிவு...💐💐🔥
அற்புதம் சசி .. மூத்தக்குடி தமிழ் குடி வழிவந்த எங்கள் பெண் சசி .. நல்ல தமிழ் கேட்க.. நமது உடையில் பார்க்க... மிகப் பெருமையாக உள்ளது ... ஜெர்மன் மொழி பற்று போல்.... இங்கு தமிழ்நாட்டில் நம் l தாய்மொழி தமிழ் பற்று இருந்தால் அருமையாக இருக்கும்... அதனால் என்ன... சசி போன்ற இனிமையான பெண் அழகு தமிழ் பேசி ஜெர்மனியில் தமிழ் பெருமை நிலைநிறுத்திய... தங்கத்தமிழ் பெண்ணுக்கு வந்தனம்🙏🙏🙏.
அம்மா அப்பா கூட இருக்கும் வரை அருமை தெரிவதில்லை.சொந்த நாட்டில் இருக்கும் வரை தாய்மொழி பெருமை புரிவதில்லை. நீங்கள் இப்போதாவது புரிந்து கொண்டதற்கு வாழ்த்துக்கள்.👍🙏
One moment I froze and tears started running down from my cheeks. Mageleh dear daughter, you have proven the dream of Mahakavi Bharathi's Puthumei Penn. God bless you and your family. 🙏🙏
நீங்கள் அமைதியாக கதைக்கும் தமிழ் அழகு. இந்திய தமிழ் மக்கள் பெரும்பாலும் பிறமொழிக் கலப்பில்லாமல் பேசமாட்டார்கள். நீங்கள் இயல்பாக தமிழ் பேசுகிறீர்கள். யெர்மன் மக்களின் தனித்துவமான வாழ்க்கையைப் பகிர்ந்தமைக்கு நன்றி🙏
சகோதரி தங்களின் தமிழ் பேச்சு அருமை நீவீர் செர்மானியில் வாழ்ந்தாலும் நான் பேசும் தமிழை விட நீங்கள் பேசும் தமிழ் சிறப்பு வாழ்க என் தாய்மொழி வளர்க்க என்தமிழ் செம்மொழி..... தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்.நன்றி
மிக்க மகிழ்ச்சியும் நல் வாழ்த்துக்களும் சகோ வாழ்த்துக்கள். ஜெர்மனியைபற்றிய உண்மையான நல்ல விளக்கங்களை தமிழில் சிறப்பாக கூறுகிறீர்கள். அருமை தங்கள் தமிழ் மொழி இனிமை. நானும் ஜெர்மனியில்தான் இருக்கிறேன். நானும் ஜெர்மனியரை திருமணம் செய்து இங்குதான் வாழ்கிறறேன்.
நம்ம நாட்டுக்கு வந்து அவங்க தங்க விரும்பும் இடத்தின் மொழியை கட்டாயம் கற்றுக் கொண்டே ஆகவேண்டும் என்ற சட்டம் இருந்தால் தமிழ் பேசும் நம்மை யாரும் கேலி பேசமாட்டார்கள். இதுபோன்ற முயற்சியை தொடர்ந்து அரசு செய்யவில்லையென்றாலும் முடிந்தவரை நம் அளவிலாவது ஆங்கில கலப்பின்றி பேச முயற்சிக்கலாமே.
அருமை சகோதரி அவர்களே. தாய் மொழி அழிந்தால் அந்த இனம் புல் பூண்டு தெரியாமல் அழிந்து விடும் என்று எளிய முறையில் விளக்கியுள்ளீர்கள். கடைசியில் நீங்கள் சொன்ன சொற்றொடர் மிக கண்டிப்பாக சொன்னீர்கள். அதாவது சில அரசியல் காரணங்களால் தாய்த்திரு தமிழ்நாட்டில் தமிழை வளர்க்கத் தவற விட்டோம். இனிமேலாவது தமிழ் மக்கள் தமிழின் அருமையை அறிந்து தமிழ் உணர்வோடு வாழ்வோம். தமிழ் தழைக்க தமிழர் தலை உயர தரணியெங்கும் நாம் யாரென்று உலகத்திற்கு உணர்வோம். தமிழராய் ஒன்றிணைவோம். தமிழையும் தமிழ் சந்ததியினரையும் காப்போம். வாழ்க தமிழ். வளர்க தமிழர் இனம். நமது ஒற்றுமையை வலிமைப் படுத்துவோம். நன்றி. வணக்கம்.
வணக்கம் சகோதரி. உங்களின் தமிழ்மொழி உச்சரிப்பு மிக அருமை. நான் மலேசியன். நான் பார்க்கும் மூன்றாவது காணொளி இது. இனி தவறாமல் உங்களுடன் பயணம் செய்வேன். முடிந்தால் கிராமப்புர மக்களின் அன்றாட வாழ்க்கையில் நடபதை பகிரவும். நான் பல முறை இந்தியா சென்றுள்ளேன், அங்கு கிராமத்தில்கூட ஆங்கிலம் கலந்துதான் உரை யாடுகிரார்கள். நன்றி சகோதரி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும், ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் பெற இறைவனை வேண்டுகிறேன். 🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾
சிறப்பு சகோதரி இனிய வாழ்த்துகள்.👏👏👏நான் ஈழத்தை பிறப்பிடமாகவும் யேர்மனி Koblez அருகே கடந்த 16 வருடங்களாக வசிக்கின்றேன்.நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை. யேர்மனியர்களின் மொழிப்பற்றும் தூய்மையும் வீதி ஒழுங்குகளை சரியாக பின்பற்றலும் நாங்கள் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.
வணக்கம் சகோதரி, காதல் செய்யும் வயதில் அக்காதலுக்கு முதல் மரியாதை! அகோரப்பசியில் கிடைத்த உணவுக்கு மரியாதை! உடல்சோர்ந்தநேரத்தில் தூக்கத்திற்கு மரியாதை! தேனமுத தடாகத்தில் பிறந்து தவழ்ந்து வளர்ந்த தமிழா தாய்மொழிக்கும் மரியாதை கொடு. உண்மையில் ஜேர்மனியர்களுக்கு தலைவணங்குகிறேன். தன்மொழியைக்காக்கும் எவராயினும் உயர்ந்த இடத்தில் வைத்துப்போற்றப்படவேண்டியவர்கள். சகமொழிகளையும் சகோதர உணர்வோடு ஏற்றுக்கொள்ளவேண்டும். இதில் அரசியல்கலப்படத்தை புறம்தள்ளவேண்டும். என்று தணியும் இந்த ஏக்கம்? வலிகள் இருக்க இருக்க வரிகள் நீண்டுகொண்டேபோகும். நல்ல பதிவு தந்த உங்களுக்கு கோடிநன்றி சகோதரி.🙏
இந்த நொடி முதல் நானும் எனது மனதில் சங்கல்பம் செய்கிறேன். தமிழை 98வீதம் தினமும் பேசும் சந்தர்ப்பங்கள் அனைத்திலும் பேசுவேன். இது இறை மொழியாகும். வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏. நன்றி
அருமையான முயற்சி அக்கா.....வாழ்த்துக்கள்..........அழகான தமிழுடன் இனிமையான குரளுடன் .....விரைவில் உங்கள் வலைதளத்தில் இயற்க்கை உணவை எதிர் பார்த்து காத்து கொண்டிருக்கும்...........அமலா.....
Sister......I salute you from bottom of my heart. You inspires a lot of people of the beauty of their own mother tongue and certainly me a tamilan.......🙏🙏🙏 really great and tqvm.
மிகவும் சிறப்பான பதிவு இது. சிறப்பான வாழ்த்துக்கள் சகோதரி💐👍👏. நாம் தமிழர் என்பதில் பெருமை கொள்கிறோம். உலகில் முதல் தோன்றிய மொழி தமிழ். உலகின் முதல் மாந்தன் தமிழன்.தோன்றிய இடம் குமரிக்கண்டம் . இன்று ஆய்வுகள் மூலம் இதன் பழைமையும் பெருமையும் பேசப்படுகிறது. நாம் எங்கு சென்றாலும் எம் மொழியை பாதுகாக்க வேண்டும். நீங்கள் ஒரு ஜெர்மனிய வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுத்தாலும் தமிழ் மீது எவ்வளவு பற்று வைத்திருக்கிறீர்கள் என்பதை உங்கள் ஒவ்வொரு பதிவுகள் மூலம் அறியமுடிகிறது. நானும் ஈழப்பெண் தான் .வேற்று மொழி தெரியவில்லை என்று வெட்கப்படத் தேவையில்லை.தாய்மொழி தெரியவில்லை என்றால் தான் வேதனை. எமது அடையாளத்தைத் தொலைக்காமல் இருந்தால் போதும். வாழிட மொழி தொடர்- பாடலுக்குத் தேவைப்படுகிறது. உங்களைப் போல சிலர் இருந்தாலே தாய்மொழியாம் தமிழை வாழ வைக்க முடியும். நீங்கள் குறிப்பிட்டது போல் ஈழத் தமிழர்களாகிய நாம் தெளிவான தமிழில் பேசுகிறோம் என்பது பெருமைதான்.
மேடம் சூப்பர், உங்கள் முகம் சற்று வெளி நாட்டு பெண் போல மாறி உள்ளது. அழகாக உள்ளது. சூப்பர் நியூஸ். நீங்கள் அன்பிற்கு நான் அடிமை. தெளிவான நிதானமாக உச்சரிக்கும் பேச்சு 🙏
தேமதுர தமிழோசை ஜெர்மனியில் ஒலிக்க கண்டு வியப்புற்றேன். மிகவும் நன்றி தோழி. காணொளி மிக அருமை. தெளிவான சொற்றொடர். 🤞🤞👍👍💅💅💅❤️❤️🙏🙏🙏😊
பலர் செந்தமிழ் பேசுவது இல்லை ஆனால் தமிழர்கள்,,பேசும் சிலரை கேலி கிண்டல் நையாண்டி செய்வது
ஆங்கிலம் கலந்து பேசுவது இயல்பான ஒன்றாகிவிட்டது இந்த காலத்தில்
நான் பார்த்த காணொளியில் மிக சிறந்தது உங்களுடைய இந்த காணொளி மிக அற்புதமாய் தமிழ் மொழியின் சிறப்பை ஜெர்மனியில் இருந்து கூறினீர்கள்...... வாழ்க வளமுடன்.... ஏதோ இனம் புரியாத (நம் மொழி என்னவாகுமோ ) என்று ஒரு கவலை மனதுக்குள் வருகிறது.... எல்லாம் அரசியல் 😭😭
மெய்சிலிர்க்கிறது தோழி! நான் ஒரு ஏழை என்றாலும் தமிழ் ஆசிரியன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்.
ஆம், நீங்கள் தமிழ் ஆசிரியர் என்பதில் பெருமிதம் கொள்ளவேண்டும்.
நல்ல தொண்டு!
மறைமலை அடிகள்
உங்களின் முயற்சியைக் கண்ணுற்றால்
அகமகிழ்ந்து போவார் தாயே!
நீங்க தமிழ் பேசும் விதம் அழகு சகோதரி 🥰🥰🥰🌹❤புடவை 👍👍👍👍
சகோதரி நீங்கள் பேசும் தமிழ் மிகவும் தெளிவாக இருக்கிறது. ஆதலால் கேட்கும் போது இனிமையாக இருக்கிறது. நம் இந்தியாவில் பெரும்பாலான மக்கள் தமிழ் மொழியை நன்றாக தேய்த்து விட்டார்கள்.
உங்களுக்கு ஏற்பட்டது போன்ற ஓர் நிகழ்வு எனக்கும் ஏற்பட்டிருந்தது. நானும் ஜேர்மனியில் ஓர் வைத்தியரிடம் (Doctor) போயிருந்த போது ஆங்கிலத்தில் பேசுவதற்கு மறுத்து விட்டார். நீ ஜெர்மனியில் தானே வாழ்கிறாய் அப்படியானால் ஜெர்மன் மொழியை கற்றுகொள் என்றார். ஜெர்மன் மக்கள் மொழிப்பற்று நிறைந்தவர்கள்.
நீங்கள் தமிழ் மொழி மீது வைத்திருக்கும் பற்றினை பார்த்து மிகவும் பெருமிதம் அடைகிறேன். மிகவும் சந்தோஷம். 🙏
வாழ்க தமிழ் மொழி 🙏
உங்கள் தமிழ் மிகவும் இனிமை. உங்களைப் போன்றவர்களால் தமிழ் வாழும்.
உங்கள் தமிழ் பேச்சை கேட்டுக்கொடுண்டே இருக்கலாம்போல இருக்கிறது. மெய்சிலிர்கிறது தமிழ்மகளே
முதலில் பாரம்பரிய உடை அணிந்து அதற்கேற்ற காணொளியைப் பதிவு செய்த சகோதரி சசிக்கு பாராட்டுகள் மற்றும் நன்றி. நேயர் விருப்பம் 😂😂 நிறைவேறியது. நம்முடைய மொழிப்பற்றின் இன்றைய நிலையைப் பற்றி தெள்ளத் தெளிவாக எடுத்துரைத்தீர்கள். உண்மை பிறமொழி கலப்பின்றி பேசுவோரை ஏளனம் பேசுபவர்கள் இருக்கும் வரை😟😟😟😟. ஜெர்மனியில் பேசியது அழகு💐. இன்றைய தலைமுறைக்கு தமிழ்ப் பாடத்தை ஆங்கிலத்தில் சொல்லி புரிய வைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம்.
ruclips.net/video/Jtyj4do-Xjc/видео.html
மிக்க நன்றிங்க
அருமை மிக அருமை உங்களின் உச்சரிப்பு ..வாழ்த்துக்கள் சகோதரி ..
உங்கள் தமிழ் பற்று பார்த்து அசந்து போனேன் சகோதரி
வாழ்க வளமுடன்!
வளர்க தமிழ்
வளையொலில் உங்கள் பதிவு அருமை சகோதரி.....💕
கேட்க இனிமையாகவும்
தென்றலாகவும் இருக்கிறது....
நம் குலம் காக்கும் பாரதி கண்ட புதுமைப்பெண் .......
வாழ்த்துக்கள் ஜெர்மனி நாடு மற்றும் மொழி பற்று பற்றிய உங்கள் பதிவு...💐💐🔥
ஜெர்மனியில் எங்க ஊர் இளம்பிள்ளை சேலை உடுத்தியிருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி
எங்களுக்கும் மகிழ்ச்சி
அருமையான பதிவு. உங்கள் இனிய குரலில் அருமையாக இருந்தது👌👌👌💐💐💐
அற்புதம் சசி ..
மூத்தக்குடி தமிழ் குடி வழிவந்த எங்கள் பெண் சசி ..
நல்ல தமிழ் கேட்க..
நமது உடையில் பார்க்க...
மிகப் பெருமையாக உள்ளது ...
ஜெர்மன் மொழி பற்று போல்....
இங்கு தமிழ்நாட்டில் நம் l தாய்மொழி தமிழ் பற்று இருந்தால் அருமையாக இருக்கும்...
அதனால் என்ன...
சசி போன்ற இனிமையான பெண் அழகு தமிழ் பேசி ஜெர்மனியில் தமிழ் பெருமை நிலைநிறுத்திய... தங்கத்தமிழ் பெண்ணுக்கு வந்தனம்🙏🙏🙏.
ruclips.net/video/Jtyj4do-Xjc/видео.html
மிக்க நன்றி ,அருமையம்மா,வாழ்த்துகள்..அன்புடன்...
தமிழ் என்றும் தமிழர்களை வாழ வைக்கும்... வாழ்க தமிழ்... வாழ்க வளமுடன்...🙏🙏 அருமையான பதிவு அக்கா...
உங்கள் முயற்சியில் நாங்களும் பங்கு கொள்ளகிறோம்.வாழ்த்துக்கள் சகோதரி.👍👏👏🌹🌹🌹
அம்மா அப்பா கூட இருக்கும் வரை அருமை தெரிவதில்லை.சொந்த நாட்டில் இருக்கும் வரை தாய்மொழி பெருமை புரிவதில்லை. நீங்கள் இப்போதாவது புரிந்து கொண்டதற்கு வாழ்த்துக்கள்.👍🙏
One moment I froze and tears started running down from my cheeks. Mageleh dear daughter, you have proven the dream of Mahakavi Bharathi's Puthumei Penn. God bless you and your family. 🙏🙏
நன்றிங்க
நீங்கள் அமைதியாக கதைக்கும் தமிழ் அழகு. இந்திய தமிழ் மக்கள் பெரும்பாலும் பிறமொழிக் கலப்பில்லாமல் பேசமாட்டார்கள். நீங்கள் இயல்பாக தமிழ் பேசுகிறீர்கள். யெர்மன் மக்களின் தனித்துவமான வாழ்க்கையைப் பகிர்ந்தமைக்கு நன்றி🙏
சகோதரி தங்களின் தமிழ் பேச்சு அருமை நீவீர் செர்மானியில் வாழ்ந்தாலும் நான் பேசும் தமிழை விட நீங்கள் பேசும் தமிழ் சிறப்பு வாழ்க என் தாய்மொழி வளர்க்க என்தமிழ் செம்மொழி..... தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்.நன்றி
மிக்க மகிழ்ச்சியும் நல் வாழ்த்துக்களும் சகோ
வாழ்த்துக்கள். ஜெர்மனியைபற்றிய உண்மையான நல்ல விளக்கங்களை தமிழில் சிறப்பாக கூறுகிறீர்கள்.
அருமை தங்கள் தமிழ் மொழி இனிமை.
நானும் ஜெர்மனியில்தான் இருக்கிறேன்.
நானும் ஜெர்மனியரை திருமணம் செய்து இங்குதான் வாழ்கிறறேன்.
அருமை 👌 நன்றி 🙏 வாழ்க வளமுடன் 💐 எங்கும் தமிழ் எதிலும் தமிழ். தமிழ் வாழ்க 🙏
என்ன மொழிப்பற்று.தமிழுக்கு என்றும் அழிவில்லை.வாழ்க தமிழ். வளர்க தமிழ்.
தமிழ் என்றும் வாழும். மிக்க நன்றிங்க
வாழ்க சகே நீங்கள் ஜெர்மனியில் நம் தாய் மொழியை வளர்க்க முயற்ச்சி செய்யவும்
அருமை-இனிமைத்தமிழ்!
பாரதியின் வார்தைகளை தங்களின் குரல் வழி
கேட்பதில் மொழிப்பற்றால் நெஞ்சம் நனைகிறது!
மகிழ்ச்சி சசி அக்கா நன்றி❤
இலங்கை யாழ்ப்பாண தமிழ் என்பதில் பெருமைபடுகின்றேன்❤
அருமை அருமை அருமை தமிழ் உடைய பெருமை எவ்வளவு இருக்கிறது என்று முழுமையாக தெரிந்து கொண்டேன் இன்று நன்றி அம்மா நன்றி
அருமை அற்புதம் ஆனந்தம் வாழ்க வாழ்க வாழ்க தொண்டு வாழ்க வாழ்க வாழ்க நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வாழ்க வாழ்க பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் நலமுடன்🙏🏻🙏🏻🙏🏻
உங்களுடைய தமிழ் உச்சரிப்பு இனிமையாக உள்ளது
அருமை! அருமை!தமிழ்மொழி மெய்சிலிர்க்கிறது 👏👏👏
மிக மிக அருமையான பதிவு சகோதரி,மிக்க நன்றி, மகிழ்ச்சி
நன்றிங்க.
உங்களை போன்றவர்களால் தான் தமிழின் பெருமை உலகமெல்லாம் பரவி வளர்கிறது.
நம்ம நாட்டுக்கு வந்து அவங்க தங்க விரும்பும் இடத்தின் மொழியை கட்டாயம் கற்றுக் கொண்டே ஆகவேண்டும் என்ற சட்டம் இருந்தால் தமிழ் பேசும் நம்மை யாரும் கேலி பேசமாட்டார்கள். இதுபோன்ற முயற்சியை தொடர்ந்து அரசு செய்யவில்லையென்றாலும் முடிந்தவரை நம் அளவிலாவது ஆங்கில கலப்பின்றி பேச முயற்சிக்கலாமே.
அருமை சகோதரி அவர்களே. தாய் மொழி அழிந்தால் அந்த இனம் புல் பூண்டு தெரியாமல்
அழிந்து விடும் என்று எளிய முறையில் விளக்கியுள்ளீர்கள். கடைசியில் நீங்கள் சொன்ன சொற்றொடர் மிக கண்டிப்பாக சொன்னீர்கள். அதாவது சில அரசியல் காரணங்களால் தாய்த்திரு தமிழ்நாட்டில் தமிழை வளர்க்கத் தவற விட்டோம். இனிமேலாவது தமிழ் மக்கள் தமிழின் அருமையை அறிந்து தமிழ் உணர்வோடு வாழ்வோம். தமிழ் தழைக்க தமிழர் தலை உயர தரணியெங்கும் நாம் யாரென்று உலகத்திற்கு உணர்வோம். தமிழராய் ஒன்றிணைவோம். தமிழையும் தமிழ் சந்ததியினரையும்
காப்போம். வாழ்க தமிழ். வளர்க தமிழர் இனம். நமது ஒற்றுமையை வலிமைப் படுத்துவோம். நன்றி. வணக்கம்.
தங்கள் காணொளி இடுகை கருத்தாழம் மிக்க ஒன்று. அழகு தமிழ் எளிய நடை. நன்றி சகோதரி.
வணக்கம் சகோதரி. உங்களின் தமிழ்மொழி உச்சரிப்பு மிக அருமை. நான் மலேசியன். நான் பார்க்கும் மூன்றாவது காணொளி இது. இனி தவறாமல் உங்களுடன் பயணம் செய்வேன். முடிந்தால் கிராமப்புர மக்களின் அன்றாட வாழ்க்கையில் நடபதை பகிரவும். நான் பல முறை இந்தியா சென்றுள்ளேன், அங்கு கிராமத்தில்கூட ஆங்கிலம் கலந்துதான் உரை யாடுகிரார்கள். நன்றி சகோதரி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும், ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் பெற இறைவனை வேண்டுகிறேன். 🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾
மிக்க நன்றிங்க. வாங்க சேர்ந்து பயணிப்போம்.
அருமை அருமை தோழி. உங்களுடன் சேர்ந்து நானும் தமிழ் வளர்க்க விளைகிறேன்.
மிகவும் அழகான தெளிவான தமிழ் உச்சரிப்பு.வாழ்க வளமுடன்
இயற்கை உணவும்,மனமும் பற்றிய ஒரு வீடியோ போடுங்க அக்கா.
கண்டிப்பாக.
சிறப்பு சகோதரி இனிய வாழ்த்துகள்.👏👏👏நான் ஈழத்தை பிறப்பிடமாகவும் யேர்மனி Koblez அருகே கடந்த 16 வருடங்களாக வசிக்கின்றேன்.நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை.
யேர்மனியர்களின் மொழிப்பற்றும் தூய்மையும் வீதி ஒழுங்குகளை சரியாக பின்பற்றலும் நாங்கள் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.
அருமை! அருமை! சகோதரி.
அருமை.. கேட்பதற்கு மகிழ்ச்சியாக இருந்தது..
தமிழின் பெருமை நமக்கு தெரிவதில்லை..
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோதரி 🙏🙏🙏
வணக்கம் சகோதரி,
காதல் செய்யும் வயதில் அக்காதலுக்கு முதல் மரியாதை! அகோரப்பசியில் கிடைத்த உணவுக்கு மரியாதை!
உடல்சோர்ந்தநேரத்தில் தூக்கத்திற்கு மரியாதை! தேனமுத தடாகத்தில் பிறந்து தவழ்ந்து வளர்ந்த தமிழா தாய்மொழிக்கும் மரியாதை கொடு.
உண்மையில் ஜேர்மனியர்களுக்கு தலைவணங்குகிறேன்.
தன்மொழியைக்காக்கும் எவராயினும் உயர்ந்த இடத்தில் வைத்துப்போற்றப்படவேண்டியவர்கள்.
சகமொழிகளையும் சகோதர உணர்வோடு ஏற்றுக்கொள்ளவேண்டும்.
இதில் அரசியல்கலப்படத்தை புறம்தள்ளவேண்டும்.
என்று தணியும் இந்த ஏக்கம்?
வலிகள் இருக்க இருக்க வரிகள் நீண்டுகொண்டேபோகும்.
நல்ல பதிவு தந்த உங்களுக்கு கோடிநன்றி சகோதரி.🙏
ruclips.net/video/Jtyj4do-Xjc/видео.html
மிக்க நன்றிங்க
அருமையோ அருமை 👌🤩👌😍
மிகவும் அருமையான பதிவு. தமிழ் என்றால் எனக்கு நன்றாக பிடிக்கும். உலகெங்கும் தமிழோசை பரவச் செய்ய வாழ்த்துக்கள்
இந்த நொடி முதல் நானும் எனது மனதில் சங்கல்பம் செய்கிறேன். தமிழை 98வீதம் தினமும் பேசும் சந்தர்ப்பங்கள் அனைத்திலும் பேசுவேன். இது இறை மொழியாகும். வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏. நன்றி
சிறப்பு. இப்படி யாருமே சொன்னதில்லைங்க. வாழ்த்துக்கள்
தற்போதைய சூழ்நிலைக்கு மிக அவசியமான காணொளி அக்கா. அருமை அருமை நீங்கள் புடவையில் அழகாக உள்ளீர்கள். புடவைதான் பெண்களுக்கு அழகு. அன்புடன் திவ்யா😍
நன்றிங்க திவ்யா
அருமையான பதிவு! தாயே உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 🙏! வாழ்க தமிழ் வளர்க தமிழ் !
நன்றிங்க
மிகவும் அருமை தமிழ் மேல் உள்ள பற்று வரவேற்கிறேன்
வாழ்க வளமுடன் சகோதரி
Alagu
அருமையான முயற்சி அக்கா.....வாழ்த்துக்கள்..........அழகான தமிழுடன் இனிமையான குரளுடன் .....விரைவில் உங்கள் வலைதளத்தில் இயற்க்கை உணவை எதிர் பார்த்து காத்து கொண்டிருக்கும்...........அமலா.....
Arumai sagothari
அருமை
வாழ்க தமிழ் வளர்க தமிழ்
வாழ்க வளமுடன் நலமுடன்
வாழ்க வளமுடன்
உங்கள் தமிழ் மொழி மிகவும் அருமையாக இருக்கிறது, வாழ்த்துக்கள் சகோதரி.
Sister......I salute you from bottom of my heart. You inspires a lot of people of the beauty of their own mother tongue and certainly me a tamilan.......🙏🙏🙏 really great and tqvm.
ruclips.net/video/Jtyj4do-Xjc/видео.html
Nalla pechu. Inimaiyana kural. Vazga valamudan
அருமை. அருமை. இந்த காணொளிக்கு தமிழில் கருத்துகள் வந்தால் மிக மகிழ்ச்சியான தொடக்கமாக இருக்கும்.
மிக அருமை... மனதிற்கு மிகவும் பிடித்தது
அருமை அருமை அருமை யான பதிவு...Thank u madam
மிகவும் அருமையான பதிவு
வணக்கம் 🙏🏽 தங்கச்சி. Ich bin aus norddeutschland,
திருச்சி மாவட்டம், தமிழ்நாடு
Rocking very nicely. Congrats
🙏🙏🙏🙏 super sister எனக்கு உங்கள் தமிழ் பற்றிய இந்த பேச்சு மெய் சிலிர்க்க வைத்தது
மிகவும் சிறப்பான பதிவு இது. சிறப்பான வாழ்த்துக்கள் சகோதரி💐👍👏. நாம் தமிழர் என்பதில் பெருமை கொள்கிறோம். உலகில் முதல் தோன்றிய மொழி தமிழ். உலகின் முதல் மாந்தன் தமிழன்.தோன்றிய இடம் குமரிக்கண்டம் . இன்று ஆய்வுகள் மூலம் இதன் பழைமையும் பெருமையும் பேசப்படுகிறது. நாம் எங்கு சென்றாலும் எம் மொழியை பாதுகாக்க வேண்டும். நீங்கள் ஒரு ஜெர்மனிய வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுத்தாலும் தமிழ் மீது எவ்வளவு பற்று வைத்திருக்கிறீர்கள் என்பதை உங்கள் ஒவ்வொரு பதிவுகள் மூலம் அறியமுடிகிறது. நானும் ஈழப்பெண் தான் .வேற்று மொழி தெரியவில்லை என்று வெட்கப்படத் தேவையில்லை.தாய்மொழி தெரியவில்லை என்றால் தான் வேதனை. எமது அடையாளத்தைத் தொலைக்காமல் இருந்தால் போதும். வாழிட மொழி தொடர்-
பாடலுக்குத் தேவைப்படுகிறது. உங்களைப் போல சிலர் இருந்தாலே தாய்மொழியாம் தமிழை வாழ வைக்க முடியும். நீங்கள் குறிப்பிட்டது போல் ஈழத் தமிழர்களாகிய நாம் தெளிவான தமிழில் பேசுகிறோம் என்பது பெருமைதான்.
உண்மைதாங்க. மிக்க நன்றி
கண்னு ஜெர்மன் போயி நம்ம தமிழ் இவ்வளவு அருமையாக பேசுகின்றாய் உன்னை எனக்கு பிடித்தது.ஈரோடு எப்ப வருவீர்கள்
வாழ்த்துக்கள் சகோதரி. இந்த கானொலியை பாரக்கும் சிலரேனும் சிந்தனை செய்தாலே தங்களது முயற்சிக்கு கிட்டிய பெரிய வெற்றியாகும்.
ஆமாங்க
அருமையான பேச்சு சகோதரி
தமிழ் சிங்க பெண்ணே தமிழ் வாழ்க வாழ்க வாழ்க வளர்க வளர்க😊👍👍👍👌👌👌🌟🌟🌟🌟🌟🌹
மிகவும் அருமை தோழி வாழ்க தமிழ் வளர்க தமிழ்
அன்புடன் தங்கைக்கு.....
தமிழ் மொழி பேச இனிமை...
அழகு தமிழில் வாசிக்க, எழுத
நமக்குக் கிடைத்தது...பாக்கியம்
Arumai
வாழ்த்துக்கள் சகோதரி........ வாழ்க தமிழ் மொழி போல் பல்லாண்டு..........
உங்களூடைய புடவை உங்களுக்கு ரோம்ப அழகாக இருந்தது
அருமை!! வாழ்க வளமுடன்
Akka.....you're pride of thamil.....vallthukkal.love from Mumbai.
மேடம் சூப்பர், உங்கள் முகம் சற்று வெளி நாட்டு பெண் போல மாறி உள்ளது. அழகாக உள்ளது. சூப்பர் நியூஸ். நீங்கள் அன்பிற்கு நான் அடிமை. தெளிவான நிதானமாக உச்சரிக்கும் பேச்சு 🙏
தங்களின் அன்புக்கு நன்றிங்க
உங்களுடைய தமிழார்வத்திற்கு பாராட்டுகள் சகோதரி... நாம் மறந்த ஓலைச்சுவடிகளை ஜெர்மனியர்கள் பாதுகாக்கின்றனர்....
உண்மைங்க
உங்கள் தமிழுக்கு பரிசு என்னுடைய subscription. வணக்கம்.
மிக்க நன்றிங்க
Greetings from Malaysia🌹
Miga Arumai sis... Enakkum aangilam kalakkathe Tamil pesa pudikkum nge.
Vaalge Tamil, Valarga nam Tamil mohli.
உயர்ந்த எண்ணம் உங்களுக்கு.... மொழி.. தந்த வழி கொண்டு... உலகம் முழுவதும். தமிழ். மீண்டும் ஒருமுறை விதைக்கபடும். அறிவியல் அரங்கில்.
உங்கள் தமிழுக்கு நான் ரசிகன்..வாழ்த்துக்கள்..
தங்களின் பேச்சு எனக்கு மிகவும் பிடித்துள்ளது சகோதரி வாழ்க வளமுடன் 🙏
வாழ்க வளமுடன் எல்லா வளமும் பெற்று
சகோதரியின் காணொளி சிறப்பானது , வாழ்க வளமுடன்,
Arumayana pathivu ❤️👍.
அருமையான பதிவு, தமிழன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்
Nandri vanakkam ❤️❤️🌲🌲🌎 keep our world green
Nalvazthukkal sagodari
Rombha nala pathivu 👏👏👏
Hi sasi excellent speech super beautiful tamil 👍 keep rocking dear
அருமை.வாழ்த்துகள்
அருமையான விளக்கம் உரை உங்கள் தமிழ் சேவை எங்களுக்கு தேவை
வாழ்த்துக்கள்
சகோதரியும் உண்மையாவே அருமையான தகவல்...
பதிவுக்கு மிக்க நன்றி.
அக்கா உங்களுடைய தமிழ் மிகவும் அழகாக உள்ளதுடன், கேட்பதற்கும் விருப்பமாக உள்ளது.
தமிழ் வார்த்தைகள் அழகு சகோதரி கேட்டு கொண்டே இருக்கு வேண்டும் தோனுது இனிமையிலும் இனிமை