QUARANTINE FROM REALITY | KANDEN ENGUM | KAATRINILE VARUM GEETHAM | Episode 383

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 янв 2025

Комментарии • 1 тыс.

  • @murallig1180
    @murallig1180 2 года назад +17

    ராஜாவுக்கு பிரபஞ்சத்தின் மொழி புரிகிறது.அவர் பிரபஞ்சத்தின் பிள்ளை.யாருக்கும்கிடைக்காத இசைக் கோர்வை அமைகிறது என்றால் அவர் உண்மையில் இசையின் பிள்ளைதான்.

  • @k.shanmugasundaram6128
    @k.shanmugasundaram6128 Год назад +31

    இவ்வளவு நீங்கள் எல்லோரும் எங்கே இருந்தீர்கள்.....
    அருமை.சகோதர,சகோதரிகளே.....
    தொடரட்டும் உங்கள் பணி.....

  • @swaminathanc1615
    @swaminathanc1615 3 года назад +114

    திருவிளையாடல் படத்தில் வரும் ஒரு வசனம், நாளை எனது பாட்டிற்கு இந்த பாண்டிய நாடே அடிமை, அது போல் இந்த குரலுக்கு உலகமே அடிமை

  • @vijikumar266
    @vijikumar266 3 года назад +63

    முப்பது வருடம் இல்லை, அடுத்த ஜென்மத்திலும் ஒலிக்கும். இந்த குரலுக்குள் இன்னு ஒரு எதிரொலி கலந்து கேட்கிறது. ஶ்ரீவர்தினி congrats. மலை தேன். காற்றை பிரித்து ஜடை போட்ட இளைய ராஜா. Vow!.

  • @farockiawilson9570
    @farockiawilson9570 3 года назад +32

    இந்த பாடலை நான் கேட்டபோது வயது பத்து வயதிருக்கும் இப்பொழுது கேட்கும் போது ராஜா அவர்கள் அந்த காலத்திலேயே இவ்வளவு அதிசயங்களை நிகழ்த்தியிருக்கிறார் . இன்றளவும் . ஒவ்வொரு இசைக்கருவிகளையும் அந்த நுணுக்கத்தை சொல்லும் நீங்களும் நீண்ட ‌ஆயுளும் நெடிய வளமும் பெற்று வாழவாழ்த்துகள்

  • @muthuganesh4978
    @muthuganesh4978 3 года назад +35

    என்ன தவம் செய்தோம் ராஜாவின் பாடலை கேட்பதற்கு .. ஆஹா அருமை..

  • @aarudhraghaa2916
    @aarudhraghaa2916 3 года назад +47

    பலரின் தூக்கத்தை கெடுத்த பாடல். குரல் தேர்வு வர்த்தினி அருமை. அனைவரின் உழைப்பும் அற்புதம்.

  • @tseetharaman
    @tseetharaman 3 года назад +53

    ராஜாவின் இசை கேட்டுக் கொண்டிருக்கும் போதே என் உயிர் பிரிய வேண்டும்.

    • @தமிழன்வரலாறு-ட1ன
      @தமிழன்வரலாறு-ட1ன Год назад +3

      இது கொஞ்சம் ஓவர்.

    • @krishnant202
      @krishnant202 Год назад +3

      நானும் கூடத்தான் அவர் இசையிலே என் உயிர் மூச்சி கலந்திட வேண்டும் அது என் உயிருக்கு பெருமை

    • @nithinvaradaraja9207
      @nithinvaradaraja9207 Год назад +1

      Enakkum athe than bro...From Italy

    • @RkRk-wt5no
      @RkRk-wt5no 4 месяца назад +2

      Seetharam.....you feel good Ilayaraja is god of music in Indian cinema industry.

  • @rk185005
    @rk185005 3 года назад +27

    முதலில் ராஜாவின் மாபெரும் படைப்புக்கு நன்றி. அதனை மிக மிக சிறப்பாக வழங்கிய நம் Team QFRக்கு நன்றி நன்றி நன்றி. இன்றைய இசை ராட்சசி Sri க்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். Spl Kudos to Shyam....

  • @rameshvaikundaraja9450
    @rameshvaikundaraja9450 3 года назад +44

    காதலின் பொன்வீதியில் - பூக்காரி மற்றும் செந்தமிழ்பாடும் சந்தன காற்று- வைரநெஞ்சம் பட பாடல்களை தருமாறு அன்புடன் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்

    • @sundarraj1202
      @sundarraj1202 2 года назад +1

      Arumaiyana padal valzhalthuckkal🌾🌾🌾🌾🌴🌴🌴🌴

    • @akhilaa9423
      @akhilaa9423 2 года назад +2

      S. Great songs.

  • @geethak2995
    @geethak2995 3 года назад +77

    Srivardhini super singing! உண்மையாகவே காற்றினிலே வரும் கீதம்! இலங்கை வானொலியில் மிகவும் ரசித்த சில
    பாடல்களில் ஒன்று! அருமை அருமை!

  • @jaybee-ss6qq
    @jaybee-ss6qq 3 года назад +42

    என்ன ஒரு பாடல், எவ்வளவு அருமையான ராஜா சாரின் இசை கோர்ப்பு இசை ராட்சஷன்.வழங்கிய உங்களுக்கும் உங்கள் குழுவுக்கும் வாழ்த்துக்கள் நன்றி

    • @BalakrishnanR-jv6jj
      @BalakrishnanR-jv6jj 7 месяцев назад

      இந்த பாடலை கேட்டவுடன் ஆனந்தம் அழுகை வந்தது இசை கடவுளுக்கு 120 ஆண்டுகள் இறைவன் அவர்களுக்கு ஆயிள் கொடுக்க வேண்டும் இறைவா வேண்டுகிறேன்

  • @raghunathank327
    @raghunathank327 3 года назад +39

    கேட்டேன் மீண்டும் .. ராஜாவின் ... அற்புதம்....
    கேட்டதுமே....நெஞ்சினில் .... பரவசம்
    ஆனந்தமே இந்த கீதம்....
    என்ன ஒரு வித்தியாசமான கற்பனை அந்த காலத்தில்...வாரக்கணக்கில்..மாதக்கணக்கில் அனுபவித்த பாடலை இப்போது மீண்டும் கேட்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஸ்ரீவர்தனி பிரமாதமாக பாடியுள்ளார். அவருக்கு பக்கபலமாக அத்தனை பேரும் உற்சாகமாக அருமையாக தத்தம் பங்கை நிறைவாக அளித்துள்ளனர். பாராட்டுகள்.

  • @kaverinarayanan2885
    @kaverinarayanan2885 3 года назад +11

    இலங்கை வானொலியில்
    அதிகம் கேட்ட பாடல்.சிரித்தபடியே
    பாடும் ஸ்ரீவர்த்தனி
    அழகாக கீதம் இசைக்க
    ஷியாம் வெங்கட் செல்வா
    கார்திக் லட்சுக்குட்டி
    அனைவரின் பங்களிப்பும் அருமை.இசைஞானியின்
    இசையில் ஜானகி அம்மாவுக்கு அமைந்த
    சிறந்து பாடல்களில்
    ஒன்று. அடாது மழையிலும் விடாது
    பாடல் தந்து எங்களை மகிழ்வித்த The one and only QFR-Subha madam
    Thanks a lot 🙏 Happy journey to 1000 episodes 😊
    Hope you should do it.

  • @rubeshkannan7816
    @rubeshkannan7816 3 года назад +22

    மனதை சிறகடிக்க செய்கிறது
    நன்றி ராஜா ஐயா..
    நன்றி ஸ்ரீவர்திநி மற்றும் குழுவிற்கு...

  • @jeyaprakashk32
    @jeyaprakashk32 3 года назад +61

    வருக வருக ஸ்ரீவர்தினி. நீண்ட நாட்களாக காத்திருந்தேன் உங்கள் பாடலை கேட்க. வாழ்த்துக்கள்

    • @mrdE-oj4of
      @mrdE-oj4of Год назад

      சாவதற்கு முன்பு உன்னுடைய கடைசி ஆசை என்ன அப்படின்னு கேட்டா ஸ்ரீ வர்தினி பாடிய குறிப்பாக இந்த பாட்டை கேக்கணும் தயவுசெய்து ஒளிபரப்ப முடியுமா என்று கேட்பேன் நீங்கள் பாடிய பாட்டை கேட்டு கோபம் தணிந்திருக்கிறேன் மனம் குளிர்ந்திருக்கிறேன் மயக்கம் அடைந்திருக்கிறேன் உங்கள் பாட்டை அடிக்கடி திரும்பத் திரும்ப கேட்கும் போது சக்தி கூடுகிறது உற்சாகம் அதிகரிக்கிறது மொத்தத்தில் இந்த பாட்டு எனக்கு உற்சாக டானிக் ஆகிறது நன்றி அம்மா நன்றி

  • @auromiramediaids9141
    @auromiramediaids9141 3 года назад +43

    Beautiful song presented beautifully.
    ராஜாவின் இசை என்றும்
    காற்றினிலே வரும் கீதம்
    காற்றினிலே வரும் கீதம்.

  • @arvinthsrus
    @arvinthsrus 3 года назад +3

    ஜானகியின் பாடல் மற்றவர்களின் பாடலை விட வித்யாசமானது.. மற்றவர்கள் பாடும் போது குரல் அவர்களிடமிருந்து வெளியே ஒரு அலைவரிசையை நோக்கி சென்று அங்கே நிற்கும்.. ஜானகி பாடும் போது குரல் வெளியே சென்று விட்டு அவரிடமே வந்து நிறைவடையும்.. பல சமயம் - வார்த்தைக்கு வார்த்தை.. இந்த பாடலில் - பூமகள்..அதிசயம்.. ஆனந்தம்.. ஏக்கம் ஏனோ..சொர்க்கம் இங்கே.. இது என் அபிப்பிராயம்.. நன்றி..

    • @arvinthsrus
      @arvinthsrus 3 года назад +2

      இந்தப் படத்தில் ஒரு வானவில் போல பாடலை - பதினாறு வயது பெண்ணி்ன் உணர்விலேயே அந்த குரலில் பாடியிருப்பார்..

  • @shanmugamravi3224
    @shanmugamravi3224 3 года назад +26

    அய்யாவின் தேவ காணம். அருமையாக படைத்துள்ளனர் இசை களைஞர்கள். வாழ்க வளமுடன்.

  • @asokanjegatheesan5563
    @asokanjegatheesan5563 3 года назад +8

    ஸ்ரீ வர்தனியின் பாடல் ஆரம்ப ஹம்மிங்கையும், உச்சரிப்பில் இருக்கும் clarityயையும் புகழ வார்த்தைகளே இல்லை. சபாஷ் ஸ்ரீ வர்தனியின்!

  • @TP-fr7sv
    @TP-fr7sv 3 года назад +8

    இந்த பாடலை வானொலியில் கேட்டால் அன்று முழுவதும் இந்த பாடல் நம் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கும். இன்றும் அப்படியே அதே லயிப்பு. அதற்கு தங்கள் வர்ண்னை மேலும் அழகை கொடுத்தது. காற்றினிலே வரும் கீதம் என திரும்பவும் கிறங்கடித்தது.

  • @arasaivadiveltv2850
    @arasaivadiveltv2850 3 года назад +2

    தெய்வமே இந்த பாட்டை சென்றவாரம் எதிர்ப்பாத்தேன்,அருமை,,,அருமை,,,அருமை,,வாழ்த்துகள்,

  • @senthamaraiselvik5675
    @senthamaraiselvik5675 3 года назад +5

    அடப்போங்கப்பா.... புதுசா என்ன வார்த்தைகள் தான் இருக்கு, பாராட்ட... நல்லா இருங்க எல்லாரும்... 🙌🙌🙌❤️❤️❤️❤️

  • @raghunathansrinivasan7366
    @raghunathansrinivasan7366 3 года назад +16

    கேட்டோம் இசை! இன்னிசை!
    காதையும் மனதையும் வருடிட
    காற்றினிலே வரும் கீதம்
    நெஞ்சினிலே புகும் கீதம்
    QFR இசையிலே! குழுவிலே!
    குரலிலே!

  • @balas6251
    @balas6251 3 года назад +18

    பரவசம் பரவசம் பரவசம். ஸ்ரீ வர்தினிக்கும் மற்றும் அனைத்து கலைஞர்களுக்கும் திருஷ்டி சுற்றி போட வேண்டும். இனிமையோ இனிமை. 🎃🙏🙏

  • @sampathkumar9341
    @sampathkumar9341 3 года назад +9

    Everfirst song that introduced Raaja the great to my heart is this "Kaatrinile varum Geedham" song in my school days..அதுவரை MSV யின் இசை கேட்டு இதுமட்டுமே இசை என்றிருந்த பொழுதில் மிக வித்யாசமான மெட்டமைப்பில், அதுவரை கேட்டிராத ஒலிகளில், மெட்டின் ஏற்ற , இறக்க இயக்கங்களுக்கு இணங்க அற்புதமான தபலா நடை யுடன், திகிலும் அழகும் இணைந்த வயலின், மென்மை கொஞ்சும்ஃப்ளூட், ஜானகி அம்மாவின் கொஞ்சும் குரலில், ... ஆஹா அந்த இனிமையை என்னவென்று சொல்ல, மொழி கைகொடுக்க மறுக்கிறது...
    Hats off to Selva, Hats off to Shyam, Hats off to Venkat, Lachchu, Hats off to Karthik, Hats off to Srivardhani for nice rendition..Hats off to Siva.... Hats off to Subashree madam for having selected this amazing composition of Raaja Sir, the great...
    அந்த Strings portion க்கு ஃப்ரான்ஸிஸ் அண்ட் கோ இல்லாதது பெருங்குறை... இருந்து இருப்பின் இந்த பாடல் எட்டியிருக்கும் உயரமே வேறு...

  • @kandhavelm3012
    @kandhavelm3012 Год назад +1

    மயங்கினேன், கிரங்கினேன்.

  • @arularul38
    @arularul38 3 года назад +14

    ஸ்ரீ வர்தினி மனதை உருகவைக்கும் குரல் மனமார்ந்த பாராட்டுக்கள்

  • @velMurugan-vz1gu
    @velMurugan-vz1gu Месяц назад

    பாடல் இனிமையோ இனிமை
    அதை சிரித்த முகத்தோடு பாடும் சகோதரி ரசிக்க கோடி கண்கள் வேண்டும்
    மூச்சு தம் கட்டி பாட வேண்டிய பாடல் சிரித்தபடி அசால்டாக பாடுகிறார் சகோதரி
    அருமை | அருமை !

  • @dr.radhikaramachandran1726
    @dr.radhikaramachandran1726 3 года назад +31

    The opening humming with her natural,scintillating smile and the ease with which Srivardhini brought out all of the “podi sangathis “and brigaas,are really praise-worthy.Selva’s enchanting flute and Venkat’s variegated rhythm instruments have been spot on; Shyam’s deft fingers on the keys and the fulfilled smile on his face speak volumes about his dedication to programme the song,to transport us all to the same magical moments,just like how the versatile IR did.Blessed are the QFR artists ,to make such memorable experiences,under the valuable support and supervision of their dynamic leader Subhasree!!!And, even more blessed are we,your rasikas, to delight in the warmth and happiness you all have continually given us !!!🙏🙏🙏❤️❤️❤️

    • @srivardhani100
      @srivardhani100 3 года назад +1

      Thank u

    • @sridharbabu1396
      @sridharbabu1396 Год назад

      ​@@srivardhani100 You are a blessed soul, it's not everyone's cup of tea, to deliver such performances, my hearty congratulations and may you always have this 1000 watt smile on your face, which is like a diamond in a crown.
      I am completely blown up by this performance particularly.
      May God bless you and wishing you all the success.

    • @srivardhani100
      @srivardhani100 Год назад

      @@sridharbabu1396 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @babus8008
      @babus8008 Год назад

      Befitting Tribute !

  • @kpp1950
    @kpp1950 3 года назад +1

    சிரித்துக் கொண்டே பாடும் ஸ்ரீ வர்த்தனி அவர்களின் ‌குரல் மிகவும் இனிமையாக இருக்கும் . காற்றினிலே வரும் ‌கீதம் போன்று பல கீதங்களைத் தர வேண்டும்.

  • @skmrbc
    @skmrbc 3 года назад +26

    Wow...Hat's off to QFR team. Raja sir, is an absolute revolutionary music composer. This song is a classic example for that.

  • @chakkarapanip4812
    @chakkarapanip4812 4 дня назад

    அருமையான பாடல்,இசை மிக அற்புதம்.தினமு‌ம் ஒரு முறை கேட்டுவிடுவேன்.

  • @govindanveerappan1881
    @govindanveerappan1881 3 года назад +10

    ராஜா சார் தந்த magic ஐ அப்படியே , ஜானு அம்மா மயக்கும் தேன் குரலில் நனைந்த. QFR team க்கு பெரிய நன்றி. தொடர்க உங்க வெற்றிப்பயணம். வாழ்க வளமாக,வளர்க நலமாக.

  • @gopalakrishnanr243
    @gopalakrishnanr243 Месяц назад

    Srivarthini. Semma voice... young janaki

  • @viswanathansrinivasan9724
    @viswanathansrinivasan9724 3 года назад +37

    பிரமிக்க வைக்கும் orchestration. Raja Sir..simply great
    Wonderful presentation and lovely singing .

    • @arvindhshennaiah5659
      @arvindhshennaiah5659 2 года назад

      ஆஹா. என்ன ஒரு அருமையான பாடல். சிறுவயதில் இலங்கை வானொலியில் கேட்டு ரசித்த பாடல். இசையரசன் நமக்கு கிடைத்த வரம். அவர் வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்ந்திருப்பதே பூர்வ ஜென்ம புண்ணியம்.
      பாடலைப் பற்றி நமக்கு தெரியாத பல விசயங்களை தொகுத்து வழங்கிய சுபா மேடத்திற்கு எத்தனை நன்றிகள் சொன்னாலும் தகும். பாடலைப் பாடிய
      ஸ்ரீ வர்த்தினியின் குரல் இனிமையோ இனிமை.
      நன்றிமா.

  • @whitedevil9140
    @whitedevil9140 3 года назад +5

    🙏🙏👏👏 இலங்கை வானொலியின் ஊடே மிதந்து வந்த பாடல்.. இனி இப்பாடலை கேட்டாலே ஸ்ரீவர்தினி குரலும்.. புன்னகை முகமும்தான் நினைவில் வரும்..!👍👍🌹🌹 ஷ்யாம் குறும்பு பையா..!😊😊 அட்டகாசம்.. உற்சாகம்..! 👌👌

  • @jamessanthan2447
    @jamessanthan2447 3 года назад +2

    அக்காவுக்கு வாய் எல்லாம் ஒரே பள்ளு ,ரொம்ப நன்றாக இருந்தது உங்கள் குரல் மற்றும் உங்கள் முகபாவம் நன்றி பலகோடி ...

  • @sridharr4251
    @sridharr4251 3 года назад +31

    Even in his early days Raja sir did magic with modest conventional instruments. Ultimately it's proved beyond doubt it's the composers ability to create ingenious tunes that matter and stand the test of times.
    Awesome performance by all.👏👏👏

    • @PammalRaaja
      @PammalRaaja 3 года назад +2

      Well said mate!!! it takes a genius to understand this theory ex; Thavikuthu thayangughu our manathu in that the Veena was used lilike a Guitar -which so-called snobbish members of the society took notes of it in disbelief....

  • @thiruvidaimaruthursivakuma4339
    @thiruvidaimaruthursivakuma4339 3 года назад +24

    First and foremost many many thanks and compliments for uploading in this irritating weather conditions. A superb song with superb orchestra and கிரங்க வைக்கும் ஶ்ரிவர்தினியின் குரல். இது இந்த பேய் மழைக்கு சூடாக பஜ்ஜியும், கும்பகோணம் காபி saappittarpola மிக திருப்திகரமாக இருந்தது.OMG. absolutely a class one. Subha madam you are an expert in choosing the singers as well as the song. Great team work 👏👏👏👏👏

  • @karuppaiahccc7025
    @karuppaiahccc7025 2 месяца назад

    எப்போதும் தொடருங்கள் ஆஹா என்ன அருமை
    மனம் பழைய நினைவு க்கு சென்று விட்டது, கண்ணீர் வருகிறது 💕💕💕💕💕

  • @esakkiyar
    @esakkiyar 3 года назад +4

    அதிசயம் ஆனந்தம் காற்றினிலே வரும் கீதம்..
    மயக்கும் இனிய குரல்...வேற என்ன சொல்ல..... அருமை... நன்றி....

  • @fluteduraisamy7654
    @fluteduraisamy7654 3 года назад +2

    மத்யமாவதியில் பாடல் மிகவும் அருமை இனிமை.

  • @santhanamr.7345
    @santhanamr.7345 3 года назад +23

    Srivardhini! Srivardhini! Srivardhini! Aanandam arpudham amazing amarkkalam 👌👍👏. Such a lovely but difficult song rendered with such ease with a captivating smile 😊. Commendable facial expressions! Evergreen support by the whole team! GOD BLESS ALL

  • @gnaanachidhambaram2233
    @gnaanachidhambaram2233 3 года назад +2

    நாட்டுக்குள் எத்தனையோ முத்துக்களும்.வைரங்களும் புதைந்து வெளியே தெரியாமல் இருந்துள்ளன.நீங்கள் வெளியே எடுத்து நகையில் வைத்து ஜொலிக்க வைக்கிறீர்கள்.நல்ல முயற்சி.வாழ்த்துகிறேன்

  • @prabhumuthiah315
    @prabhumuthiah315 3 года назад +9

    One of the most favourited songs heared from Ceylon radio those days..
    ஆம், பரவசம் கொண்டேன் இந்த அருமையான பாடலை ஸ்ரீவர்த்தினியின் குரலில் கேட்டு..

  • @PrakashKumar-rg7ll
    @PrakashKumar-rg7ll 2 месяца назад

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது அருமையான பதிவு வாழ்த்துக்கள் அனைவருக்கும் வாழ்க வளமுடன்.

  • @tyagarajakinkara
    @tyagarajakinkara 3 года назад +10

    Srivardhini has given us one of the best QFR songs Vazhkai odam sella... and now Kanden Engum...she is a versatile singer.

  • @AshokKumar-js8nd
    @AshokKumar-js8nd 2 года назад +1

    my favourite song always

  • @TV-mj5vf
    @TV-mj5vf 3 года назад +16

    The legend of Raja Sir endures, bringing into it's magical fold more new aficionados each week, courtesy QFR. The band and the singer have done complete justice to an awesome song!
    Had goosebumps, throughout! Hats off!👌👌👌👏👏👏

  • @murugank199
    @murugank199 2 года назад

    பாடியவர். குரல். இனச.அமைப்பு. வாழ்க. வளமுடன்.👍👍👍👍👍👍🌹🌹🌹🌹🌹🌹🌹👌👌👌👌👌

  • @essdeeare4558
    @essdeeare4558 3 года назад +6

    வெகு நாட்களுக்குப் பிறகு ஸ்ரீவர்த்தினி...மயக்கி விட்டார்...
    வாழ்த்துக்கள் QFR team...

  • @kannans1251
    @kannans1251 3 года назад +1

    I really wonder & appreciate Mrs Subashri madam for choosing the exact voice of the Legend S Janakiamma. I think she has got this immaculate talent by grace of the God. My humble Pranams

  • @Latha_murali
    @Latha_murali 3 года назад +23

    நிஜமாகவே மிகவும் பரவசம் அடைந்தோம் எங்கள் பள்ளி நாட்களை நினைவு படுத்தும் அருமையான பாடல் SriVardhini superb singing 👍 nowadays whenever I am hearing or seeing one song automatically my mind is thinking about the music instruments what is used in that song and ofcourse hearing your voice in my ear 🙏 what a wonderful lady you are making us how to hear the song 🙏 really admiring you and whole team once again . தொடரட்டும் உங்கள் இனிமையான இசைப் பணி வாழ்க வளமுடன் 🙏🙏🙏

    • @selviganesh7742
      @selviganesh7742 3 года назад +1

      S u r right. Same comment I gave last week 👍👍

    • @kalphanaselvam2931
      @kalphanaselvam2931 3 года назад +1

      Yes me also feel like that

    • @Thiagarajan-V
      @Thiagarajan-V 3 года назад +1

      Verty well said , Nowadays hearing all the songs in Subha's angle and enjoying

    • @selviganesh7742
      @selviganesh7742 3 года назад +1

      @@Thiagarajan-V Thank u. Think alike👍

  • @ravineelaveni8936
    @ravineelaveni8936 2 года назад +1

    சுபஸ்ரீ
    யாறுமா நீ
    காவிரியில்தவழ்ந்தவள்
    இசையின்ஓசையில்
    வளர்ந்தவள்
    என்னஞானம்
    நீ தனிப்பிறவி
    பாரதிகண்ட
    புதுமைபெண்

  • @drsudhs555
    @drsudhs555 3 года назад +3

    Ammadi sri vardhini aanandham po. God bless 🙌....Raja sir 🙏

  • @PrakashKumar-rg7ll
    @PrakashKumar-rg7ll 4 месяца назад

    அருமையான பதிவு நன்றி அந்த காலத்திற்கு அழைத்து சென்றதற்க்கு

  • @velmaster2010
    @velmaster2010 3 года назад +13

    This haunting melody is one of the best compositions of Isai Gnani. Srivardhani amazing rendition. Venkat, Selva, Karthick and Laxman did an excellent job. Siva very soothing editing. Shyam has brought back the late 70's flavour through his awesome performance, programming and arrangements.

  • @shenbagavalli-ym3bv
    @shenbagavalli-ym3bv 3 года назад

    Excellent vaice.Thukkamum illay very nice line. Super.

  • @valavanmani
    @valavanmani 3 года назад +5

    சிறப்பான பங்களிப்பை அளித்த அணிக்கு நன்றி.அத்தனை நுணுக்கங்களும் வெளிப்படுத்திய பாடகி🙏

  • @jsdpropertiesrealtors7608
    @jsdpropertiesrealtors7608 3 года назад +2

    இன்றைக்கும் இந்த பாடலை நம்மை கேட்க வைக்கும் " இளைய ராஜாவை என்ன சொல்லி பாராட்ட????
    Srivardhini has sung well.
    Her voice resembles Janaki Madam.
    Srivardhini has sweet voice and
    "அவர் சிரித்த முகத்தோடு பாடும்போது அந்த கன்னத்தில் குழி பேரழகு"..
    Shyam Benjamin என்ன மனுஷன்யா இவர்???
    சும்மா பூந்து விளையாடுறார்..
    Awesome multi talented person.
    Sure...One day he will become a leading music composer in Tamil film industry👍..
    Nice orchestration and well coordination..
    All the very best QFR Team.
    🙏🙏🙏

  • @jayaseleanjayaselean3565
    @jayaseleanjayaselean3565 3 года назад +14

    What a wonderful song. The singer sang it at the level best. The musicians also done the music very amazing. Evergreen song. We can't forget the King of music ILAYARAJA

  • @murallig1180
    @murallig1180 2 года назад

    Sri varthini.அபாரம்.நல்ல குரல் வளம்.வாழ்க.வளமுடன்.

  • @DrBRJKannan
    @DrBRJKannan 3 года назад +41

    After Naane naanaa, welcome back Ms. Srivatdhini. Excellent performance. The first song in QFR which made me to notice you was 'erilyile elantha maram'. Though there were many singers, your voice, and your smile was unique. Congrats and best wishes.

    • @srivardhani100
      @srivardhani100 3 года назад +3

      Thank u

    • @thiruvidaimaruthursivakuma4339
      @thiruvidaimaruthursivakuma4339 3 года назад +5

      பொங்கும் கடல் ஓசை, தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே அதற்கு உங்கள் குரல் மிக சரியான தேர்வு என்று எழுதி இருந்தேன். நேற்று முன் தினம் உங்களை பற்றி நினைத்தேன். Subhaji அவர்கள் எப்படியோ என் mind read செய்து காற்றினிலே (உங்கள் )கீதத்தை கொண்டு வந்து விட்டார். இப்போ வந்து இருக்கும் tum tum பாடலும் மிக மிக அருமையாக உள்ளது. You have a very high pitch . God bless you for many more accolades.

    • @srivardhani100
      @srivardhani100 3 года назад +4

      Thank u🙏

    • @kasiraman.j
      @kasiraman.j 3 года назад +1

      Sir myself subscriber of your channel dr. Kannan sir

    • @72sembi
      @72sembi 3 года назад +2

      Hai BRJ sir,hope you remember me, I m your junior at Madurai medical college.I too am a fan of srivardhini,she has a very good voice with very minimal frequency distortions.To compliment she has a bubbly attitude

  • @moutainlover
    @moutainlover Год назад +1

    ஆகா ஆகா ... என்ன சொல்வது ... இந்தப் படம் youtube இல் இருந்தாலும் இதுவரை பார்க்கவுமில்லை பார்க்கவிருப்பமுமில்லை .. ஆனால் இந்தப் பாட்டும், ஜெயச்சந்திரனின் தையர தையர பாடலும் பல ஆயிரம் கேட்டுக்கொண்டு வருகிறேன் ... டேப் ரிகார்டர் காலத்தில் ஒரே கேசட்டில் இந்த இரண்டு பாட்டுகளையும் இரண்டு பக்கமும் மாற்றி மாற்றிப் பதிவு செய்து கேட்டுள்ளேன் ... சுபஸ்ரீ சொன்ன பரவசம் ஒவ்வொரு முறையும் நான் உணர்கிறேன் ... அந்த எதிரொலி ...ஆகா ஆகா .. அருமை அனைத்து இசை கலைஞர்களுக்கும் மிக்க நன்றி வாழ்த்துகள்

  • @nithinvaradaraja9207
    @nithinvaradaraja9207 Год назад

    All Raja sir songs no expired day by day refreshing.......

  • @venkatnarayananramakrishna2045
    @venkatnarayananramakrishna2045 3 года назад +9

    Srivardhini totally involved in singing..with ease..stunning performance …we all rejoiced

  • @Ashik-q1n
    @Ashik-q1n Месяц назад

    தேனான குரல் திகட்டாத பாடல்❤❤❤❤❤❤❤🎉

  • @sivalingamlingam3672
    @sivalingamlingam3672 2 года назад +3

    திரும்ப திரும்ப கேட்க தூண்டும் வகையில் இனிய இசையையும் பாடலையும் வழங்கியமைக்கு பாராட்டுக்கள்..

  • @rajtheo
    @rajtheo Год назад +1

    Ceylon Radioவில் எப்போவோ கேட்ட கீதம் இன்றும் கூட காற்றில் ரிங்காரமாய் ஒலித்துக்கொண்டிருக்கிறது
    QFR குழுவினரின் இதைப்போன்ற அற்புதமான மறு பதிவுகள் இன்று ஸ்ரீவர்தினி இனி ஒரு நாளும் வரும் இனிதே

  • @shankarnatarajan6230
    @shankarnatarajan6230 3 года назад +4

    காற்றினிலே வரும் கீதம் இனிமை .... இனிமை...👌👌

  • @sivasubramanianramasamy7796
    @sivasubramanianramasamy7796 3 года назад +2

    அருமை அருமை ....ராஜாவின் இசை...... ஸ்ரீவர்த்தினியின் குரல்.....அனைத்து கலைஞர்களும் மிக அருமையாக இசைத்தனர்....

  • @ravisankaran6280
    @ravisankaran6280 3 года назад +8

    Mesmerising, mind blowing and captivating singing by Srivardhini. May Janaki Amma bless Srivardhini. Venkat on percussion, Selva on flute, Laxman and Karthik on guitars and Shyam's mixing and mastering ably supported the mellifluous singing of Srivardhini. A treat for the ears. Thanks Subhaji for your introduction to the song and for choosing this song. I agree with you Subhaji that such great compositions should not be lost over time. It needs a creative thinker like you to bring such songs to the fore. May your service to Music be cherished for years. God bless you all.

  • @ramvenkatesh9554
    @ramvenkatesh9554 Год назад

    இந்தப் பாடலைக் கேட்டு அசந்து போனேன். ஆஹா என்ன குரல் வளம்! என்ன சங்கதி!அந்த சரஸ்வதியே நேரில் வந்து பாடியது போல் இருந்தது. Shrivardini thank you so much 🙏 and No words to express my feelings about orchestration. Outstanding.

  • @tyagarajakinkara
    @tyagarajakinkara 3 года назад +8

    Sri vardhini take a bow! You just did the impossible of reproduction of janaki ma and her nuanced sangatis, 90%💐one of the classic performance of qfr.

  • @rjlaser3371
    @rjlaser3371 3 года назад +1

    sri varthini too good

  • @sundararajanr5323
    @sundararajanr5323 3 года назад +9

    Srivardhini is at her best today!
    Reverberatimg melody of Raja!!
    Remarkable achievement of QFR!!!

  • @vasudevanvasu1853
    @vasudevanvasu1853 5 дней назад

    அனைவரின் இசைக்கோலங்கள் அற்புதம்

  • @mlogulogu4541
    @mlogulogu4541 2 года назад +1

    வர்த்தினி அவர்களின் குரல் வளம் அருமை அருமை. All musicians done a wonderful job. Especially shyam.

  • @msankarmsankar3207
    @msankarmsankar3207 3 года назад +15

    இந்த பாடல் கேட்கும் பொதெல்லாம் இளையராஜா அருகில் இருந்தால் தொபுக்கடி என்று காலில் விழுந்துவிடும் போல் உள்ளது வார்த்தை இல்லை அவர் வாழும் தெய்வம்

    • @chandrank6976
      @chandrank6976 2 года назад

      இந்த பாடலை எப்ப கேட்டாலும் என் இளமை வயதுக்கு போயிடுவேன் எல்லாம் இசை தேவனின் சிரிஷ்ட்டி.

    • @pandianvk2953
      @pandianvk2953 2 года назад

      எவ்வளவு பெரிய அறிவாளி நீங்கள், இது தெரியாமல் போய் விட்டது தமிழ் நாட்டு மக்களுக்கு.

    • @msankarmsankar3207
      @msankarmsankar3207 2 года назад

      @@pandianvk2953 நீங்கள் அறிவாளி இல்லை என்பது தெரிகிறது , நான் உங்களை காலில் விழ சொல்லவில்லை , நான் தான் விழுவேன் என்றேன் வித்தியாசம் கூட தெரியாமல் அறிவை பற்றி பேசும் ஜ.........

  • @nirmalaraghavan6801
    @nirmalaraghavan6801 Месяц назад

    Subhashree Mam description, Srivardhini Mam delivery of song, wonderful lyrics and above all our music God Raja Sir-Soooooper. What a nostalgic feeling. OMG🎉

  • @kattuda
    @kattuda 3 года назад +6

    நேற்று ராத்திரி தான் இந்த பாட்டை தூக்கம் வராம கேட்டுட்டு அப்படியே தூங்கி போனேன் இன்று திரும்பவும் அதே பாடலை தங்கள் விளக்கத்துடன் மீண்டும் கேட்ட போது எல்லையில்லா பரவசம் மிக நேர்த்தியாய் மிக அருமையாக நீங்கள் ஒவ்வொருவரும் உங்களது முழுமையான பங்களிப்பை கொடுத்து விடுவீர்கள் வாழ்த்துக்கள் இன்னொரு விஷயம் தனித்தனியா மியூசிக் பாட்டு ஒவ்வொருவர் ஒவ்வொரு இடத்திலிருந்தும் பாடக்கூடியதும் வாசிக்கக கூடியதுமான இந்த காரியங்களை எப்படி ஒன்றிணைத்து முழுமையாக்கி எங்களுக்கு தருகிறீர்கள் என்பதை ஒரு வீடியோ போடவும் நீங்கள் மேற்கொள்ளும் சிரமங்களை நாங்கள் அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக இருக்கும்

    • @umamaheswarisenthilkumar6922
      @umamaheswarisenthilkumar6922 Год назад

      S bro... Correct.....pl. Mam try. A in kaluikkaa ka

    • @devarajvijayan9299
      @devarajvijayan9299 Год назад

      Head phone கழட்டிய பிறகும் காதுகளில் ஒலிக்கிறது கவிக்குயில் பாடல் வரிகள் உங்கள் உழைப்பிற்கு நன்றி

  • @j.ramamurthy2290
    @j.ramamurthy2290 2 года назад

    ஒரு காலத்தில் எங்கள் ஊர் டென்ட் கொட்டகையில் படம் போடுவதற்கு முன் போடப்படும் favourite பாடல்.. இப்போது நினைவைப் புதுப்பித்துக் கொண்டேன்... அதுவும் அருமையாக ...

  • @thesilksaree644
    @thesilksaree644 3 года назад +4

    Srivardhani's singing style is always pleasing. Her smile makes the difference. What a music and what a singing and what an appreciation from Suba madam! Vow!!

  • @ammantalkies6869
    @ammantalkies6869 7 месяцев назад +1

    அருமையான குரல்
    நல்லா இருங்க mam,

  • @sundaravallir8387
    @sundaravallir8387 3 года назад +3

    வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. எல்லோரும் பிரமாதப்படுத்தி விட்டனர். வாழ்த்துக்கள். கேட்கும்போது பழைய பரவச நிலைதான்.

    • @sureshsanjeevi3039
      @sureshsanjeevi3039 2 года назад

      என்னமா அனுபவித்து பாடுகிறார் இது ஜானகி அம்மாவின் குரலா வாணி அம்மாவின் குரலா ஏன் என்றால் இந்த பாடலை இருவரும் பாடி இருக்கிறார்கள்

  • @mthangaraju6243
    @mthangaraju6243 5 месяцев назад +1

    ExcelandSweetandEvergreenSong.

  • @tseetharaman
    @tseetharaman 3 года назад +4

    Miracle is happy wonderful music Great Ilayaraja Sir

  • @RajaR-kj3ec
    @RajaR-kj3ec 8 месяцев назад +1

    R.Raja....☆☆☆☆☆...A1...ok...

  • @umamaheswarib3187
    @umamaheswarib3187 3 года назад +7

    Keetoom, kiranginoom.
    Varthini voice head phone yum
    Thandi mind blooing. Oru vari
    Husgi aha padiyadu amesing.
    Shyam so enjoy it lot of thanks to varthini. ❤️❤️❤️❤️

  • @g.krishnamurrthiganabathi4294
    @g.krishnamurrthiganabathi4294 2 года назад +1

    தூக்கமும் இல்லை ஃதுவளுவது முல்லை ஃதனித்திடத்தானே தவிக்குது முல்லை!! சூப்பர் ஜி வாழ்த்துக்கள் ஜி கிருஷ்ணமூர்த்தி அய்யர் ஆர் எஸ் எஸ் மதுரை

  • @vaidyasethuraman452
    @vaidyasethuraman452 3 года назад +3

    Raja Sir stamps his genius in this melody - the young lady is perfect in the song reproduction.

  • @shanmugamshanmugam1315
    @shanmugamshanmugam1315 4 месяца назад

    நான் பிறந்த வருடத்தில் பதிவுசெய்யப்பட்ட பாடல் நன்றி ஜானகி அம்மா.. 🌹

  • @ramacha1970
    @ramacha1970 3 года назад +9

    Wonderful and breezy creation from Raja sir and Janaki Ammal. Extraordinary song from the legends. Happy to hear this song after a long time. Marvelous singing from Srivardhani . Amazing support from the whole musical crew. Thanks Subha madam for presenting this memorable song .

  • @chandruchandruchandruchand9266
    @chandruchandruchandruchand9266 2 года назад

    என் இளமை காலங்களில் வானொலியில் மிகவும் ரசித்து அடிக்கடி கேட்ட பாடல் இப்ப கேட்கும் போது என் இளமை பருவத்தின் நினைவு நிழல் ஆடுகிறது

  • @ubisraman
    @ubisraman 3 года назад +6

    Wonderful song and great rendition by Srivardhini. Laudable performance by the musicians too.

  • @SureshSuresh-oc8go
    @SureshSuresh-oc8go 2 года назад

    மிகவும் அருமையான அழகான குரல் வளம் அதைவிட சிரித்தமுகத்துடன் பாடுவது மிகவும் சிறப்பு வாழ்த்துக்கள்

  • @jeyanthisuresh1690
    @jeyanthisuresh1690 3 года назад +13

    One of my most favourite song from Ilayaraja's . Thnku so much for presenting such a beautiful song.As usual Awesome performance by entire team. Hats off Subha...

    • @sureshsanjeevi3039
      @sureshsanjeevi3039 2 года назад

      Both are sung very well this song, janaki Amma, and Vani amma

  • @veenaranjanimahesh
    @veenaranjanimahesh 3 года назад +3

    Wonderful...Wonderful... Awesome singing and excellent playing by all..Thanks subhasree mam for bringing this GEM to limelight

  • @dillibabu4918
    @dillibabu4918 2 года назад +2

    காற்றினிலே வரும் கீதம் சூப்பர் வாழ்க வளமுடன் 😀