Award Winning Tamil Short Film | Savadhal

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 сен 2018
  • Reach 4 crore people at Behindwoods. Click here to advertise:
    goo.gl/a3MgeB
    For more such videos subscribe to the link goo.gl/AUJGvP We will work harder to generate better content. Thank you for your support.
    For more videos, interviews, reviews & news, go to: www.behindwoods.com/
    Direction:
    SR Nareshkumar,
    Cinematography:
    Jalandhar Vasan,
    Music:
    Sagishna Xavier,
    Cast:
    Kavitha Ravi, Semmalar Annam,
    Producers:
    GA Jesu Doss,
    R Ashok Touyavan,
    S Shiva Kumar.
    Sound Mix :
    Srivijay Ragavan.
    Additional Dialogue:
    Arul Ck Nithish.
    Subscribe here - goo.gl/AUJGvP
  • РазвлеченияРазвлечения

Комментарии • 2,1 тыс.

  • @user-cm2cn7ki8i
    @user-cm2cn7ki8i 5 лет назад +185

    இவ்வளவு comment ற்க்கு மேல் என்னால் புதுசா ஏதும் சொல்லிவிட முடியாது ... அதனால் தான் என்னால் முடிந்த வரை எல்லா comments ஐயும் like செய்தேன் (எழுத்தை மட்டும் பார்த்து திருத்தும் ஆசிரியர் போல்) மாண்புமிகு இயக்குநர் அவர்களே சிறக்கட்டும் உம் பணி

  • @sheilavalaydon6786
    @sheilavalaydon6786 4 года назад +100

    No hero, no villain, just human!. One of the best short film I've watched.

  • @manikandaneswaran3996
    @manikandaneswaran3996 4 года назад +178

    உன்னை வாழத்தாமல் போனால் என் இதயம் மண்ணை போகும் இயக்குனர் அவர்களே .. என் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள் ..

  • @ambrishfdo481
    @ambrishfdo481 5 лет назад +15

    வறுமையில் பசியை மறைத்து பாசத்தை காட்டும் அப்பா.அருமையான படைப்பு கண் கலங்க வைத்த இயக்குனர்.மிக சிறந்த குறும்படம் 👌👌வாழ்த்துக்கள்.

  • @karthikeyankrishnamurthy4764
    @karthikeyankrishnamurthy4764 5 лет назад +345

    தொண்டைக்குழியில் காலை வைத்து அமுக்குவதுபோல் ஒரு வலி. கலங்க வைத்துவிட்டது. இயக்குனருக்கு வாழ்த்துக்கள்.

  • @babyshalini9220
    @babyshalini9220 5 лет назад +85

    நம்ம தாத்தா பாட்டி இருக்கும் போது அவர்களின் அருமை புரிவதில்லை. போன பிறகு ஏங்கி தவிக்கிறோம்.

  • @jeevanandham6597
    @jeevanandham6597 4 года назад +59

    பெற்ற பிள்ளையையும் பேரனையும் பார்த்தபின் சவடால் சத்தம் அடங்கி பாேகிறது. குறும்படம் அருமை

  • @RamKumar-pl2ir
    @RamKumar-pl2ir 4 года назад +157

    அந்த இருபது ரூபா நோட்டு வேர்வையில் நனைந்திருப்பதை காத்தாடி மூலம் சொல்லவருவது அருமை

    • @hanp2183
      @hanp2183 3 года назад +1

      Yes nice la...😖

  • @karankumarcm6960
    @karankumarcm6960 5 лет назад +55

    மிகவும் அருமையான கதை 👌👌👌👌👌👌👌👌👌😥👌 90 KIDS 90 kids thanya .... , எங்களது பிடித்த காலம் 😍 Miss that Days

  • @YogaSelvi.
    @YogaSelvi. 5 лет назад +266

    வருமையின் வலி மரணத்தினும் கொடியது...எத்தனை போருக்குத் தெரியும் ஒவ்வொரு சவடாலுக்குப் பின்னும் அடையமுடியாத ஆசையை எண்ணி தன்னை தானே சமாதானப்படுத்திக் கொள்ளும் உத்தி உள்ளது என்று.....great attempt ya nice film...👏👏👏Background music is really superb...it's help to feel the situation as much as possible....👍

    • @ifthikasoba5778
      @ifthikasoba5778 5 лет назад +2

      யோகா செல்வி amam nengal solvadu mutrilum marukka mudiyada unmay aday unarndavanukku tan Adan vali purium

    • @tamilselvan2268
      @tamilselvan2268 5 лет назад +4

      Super comment

    • @YogaSelvi.
      @YogaSelvi. 5 лет назад +3

      TQ

    • @v.seshagiri72
      @v.seshagiri72 5 лет назад +2

      really superb comment, yes those who born between 70 to 80's had so much in their feeling. a nice and very good short film. congrates

    • @shesank.b3349
      @shesank.b3349 5 лет назад +1

      Vera leve sir

  • @user-fx4wn7ms1j
    @user-fx4wn7ms1j 5 лет назад +30

    மகளை பெற்ற தந்தைகளுக்கு இப்படம் சமர்ப்பணம்🌺

  • @karthis5562
    @karthis5562 3 года назад +17

    ஒரு நாவலை உள் வாங்கி படித்தால் மட்டுமே. இப்படிப்பட்ட அருமையான படைப்பை கொடுக்க முடியும். சிறப்பு நன்றி. வார்த்தைகள் இல்லை....🌹🌹🌹

  • @kodaikanal_nature4699
    @kodaikanal_nature4699 5 лет назад +77

    பட இயக்குனர் மற்றும் அனைவருக்கும் என் மனமார வாழ்த்துகளும் பாராட்டுகளும்....

  • @thiyagarajanpalani1702
    @thiyagarajanpalani1702 5 лет назад +72

    அருமையான படைப்பு. ஒருவரின் பசிக்கு பின்‌ இருக்கும் பல காரணங்களை தெளிவாக உணர்த்துகிறது உங்கள் படைப்பு. மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @sadhguruyouthtruth6562
    @sadhguruyouthtruth6562 3 года назад +65

    பாராட்ட வார்த்தைகளே இல்லை... நான் இதுவரை பார்த்ததிலேயே சிறந்த குறும்படம் இதுதான்! இதில் பணிபுரிந்த அத்துனை கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்

  • @Nimmi_0807
    @Nimmi_0807 3 года назад +19

    அப்படியே எதார்த்தமான படம் அருமை பதிவு கண்களில் கண்ணீர் வந்துவிட்டது என் அப்பாவை நினைத்து💔💔💔

  • @prasanthsivaraj3261
    @prasanthsivaraj3261 5 лет назад +465

    நான் ரோம்ப சந்தோஷம இருக்கன் காரணம் கீழே உள்ள மக்களோட கருத்துக்களை பாருங்க எல்லோரும் தமிழில் பதிவிட்டிருக்காங்க..
    பிரமிப்பு வாழ்க தமிழ்🙏

    • @naveenprasanthselvaraj1886
      @naveenprasanthselvaraj1886 5 лет назад +3

      sorry bro en kita Tamil keyboard illa

    • @srikrishnankrishnan2609
      @srikrishnankrishnan2609 5 лет назад +2

      Iya mannikanum nan vachirukura ponla tamila eppadi type pandradhnu theriyala

    • @KaviyaNatrayan
      @KaviyaNatrayan 4 года назад

      😄😄😄

    • @elakkiyathiagarajan4903
      @elakkiyathiagarajan4903 3 года назад

      உணர்வுப்பெருக்கில் தானாக வருவது தாய் மொழி மட்டுமே... வேறு எந்த மொழி நம்மை நாமாக காட்ட முடியும்!

    • @ravichandrandevadass8341
      @ravichandrandevadass8341 3 года назад

      Indic key Board download பண்ணுங்க.....

  • @RaviShankar-tf1sw
    @RaviShankar-tf1sw 5 лет назад +190

    எங்க அப்புச்சி, அய்யன் எல்லாம் இப்படிதான் இருந்தாங்க. மிக்க நன்றி. இந்த படைப்பை நான் மனதார வரவேற்கிறேன். அணியினருக்கு வாழ்த்துக்கள்.

    • @suryakanthmuniyandi6359
      @suryakanthmuniyandi6359 5 лет назад +1

      அருமையா படைப்பு கண்ணில் நீர் தான் வருகிறது

    • @daydreamer5031
      @daydreamer5031 5 лет назад +1

      Ha ha. In his charactor, I saw my late grandpa. Didn't expect from you when I scrolling the comments da naaya😍😍

    • @RaviShankar-tf1sw
      @RaviShankar-tf1sw 5 лет назад

      vaipila raja...

  • @karthicknani1153
    @karthicknani1153 4 года назад +119

    இந்த தாத்தாவ வெள்ளித்திரைல விட்டீங்கனா வக்காளி எல்லா நடிகரோட மார்க்கெட்டும் காலிடா...அவ்ளோ எதார்த்தமான நடிப்பு...

    • @Simple_Strategy_Sakthi
      @Simple_Strategy_Sakthi 2 года назад +1

      He acted in thane le kandam movie
      With mota rajandrean take count of assignment

    • @suganthid1270
      @suganthid1270 Год назад

      ஒடுக்கத்தூர் பஸ்

    • @suganthid1270
      @suganthid1270 Год назад

      மனதை வருடிய படம்

  • @alwarm8611
    @alwarm8611 4 года назад +28

    என் வாழ்க்கையிலும் நடந்த சம்பவம் தான்..., கிராமங்களின் தாத்தா , அப்பா உறவை அழகாக எடுத்து சொல்லி இருக்காரு..,

  • @honeycomb7760
    @honeycomb7760 5 лет назад +68

    16:33 மனம் உருக வைத்த காட்சி,மெய்மறந்து கண்ணீர் வரவைத்த குறும்படம்....எனது தாத்தாவை நினைவுட்டியதற்கு கோடான கோடி நன்றிகள்...

  • @sanjayvallundar1447
    @sanjayvallundar1447 5 лет назад +468

    இயக்குனர் இவங்கல நடிக்க வச்சாரா இல்ல ஓலிஞ்சு இருந்து படம் பிடிச்சாரானு தெறியல
    அவ்வலவு எதார்த்த தன்மை இந்த படத்தில்

  • @karthika3128
    @karthika3128 2 года назад +12

    பாராட்ட வார்த்தைகள் இல்லை 👏👏👏👏இதில் அப்பா கதாபாத்திரம் வாழ்ந்து இருக்கிறார் நடிக்கவில்லை அருமை என் தந்தையை நினைவு படுத்துகிறார் i miss my Dad 😭😭😭😭

  • @pandidurai2838
    @pandidurai2838 4 года назад +25

    எதார்த்த மானா நடிப்பு இப்படத்தில் வரும் கதாபாத்திரங்கள் இதுவே இப்படத்தின் வெற்றி வகுத்தது மேலும் இதுபோன்ற படம்களை தயாரிக்க வேண்டும்♥️✌️

  • @harryshari5073
    @harryshari5073 5 лет назад +367

    இந்த மாதிரி தாத்தா பாட்டிகளின் மாசற்ற அன்பு இக்கால ஸ்மார்ட் போன் உலகிற்கும் ஸ்மார்ட் குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்களுக்கும் புரிந்திருக்க புரிய வாய்ப்பு இல்லை!!❤
    90s கிட்ஸ் ஆகிய எங்களை எங்களது குழந்தை பருவத்திற்க்கு கொண்டு சென்ற இயக்குனருக்கு! மனமார்ந்த வாழ்த்துகள்!❤🙌😍

    • @dirtyfellows2009
      @dirtyfellows2009 5 лет назад +5

      Nice great 😎😎geathu en noda thathava na rembha miss pandren

    • @Mahendran224
      @Mahendran224 5 лет назад +2

      Harrys Hari CMaVc

    • @Mahendran224
      @Mahendran224 5 лет назад +1

      Dirty fellows VMC

    • @thangarajuc1336
      @thangarajuc1336 5 лет назад +1

      Harrys Hari Krishna

    • @ameermuckthar9249
      @ameermuckthar9249 5 лет назад +4

      Harrys Hari ஆமாம் நன்பரே கிராமத்தானின் உழைப்பையும் வருமாணத்தையும் மற்றும் அவனது வாழ்கையும் திருடும் சோம்பேரி நகரத்து கூட்டம் இருக்கும்வரை இதே காட்சி அவர்களைவிட்டு அகலாது.

  • @jegan6701
    @jegan6701 5 лет назад +34

    அருமையான குறும்படம் ! தாத்தா & மகளின் தத்ரூபமான நடிப்பு கண் கலங்க வைக்கிறது ! சிறப்பான தொழில் நுட்பம் ! வாழ்த்துக்கள்!

  • @lakshmanansugandhiya228
    @lakshmanansugandhiya228 4 года назад +9

    அருமையான கதை இவர்கள் எதார்தமாக நடித்துள்ளார்கள் என்பதைவிட வாழ்ந்திருக்கிறார்கள் என்று தான் கூற வேண்டும்.நான் தாத்தாவின் அன்பை அனுபவித்தது இல்லை அப்பாவின் அன்பும் பாதியிலே முடிந்து விட்டது. இப்படத்தை பார்த்தவுடன் கண்ணீர் கண்களில் ததும்புகின்றன என் அப்பாவின் நியாபம் ஒரு நிமிடம் என் அப்பா மறுபடியும் திரும்பி வந்ததுபோல் ஒரு உணர்வு நன்றி.

  • @prabhuv1326
    @prabhuv1326 4 года назад +42

    இன்று நாம் உண்டு கொழுக்கிறோம்... இன்றுவரை தன் பேரபுள்ளைகளுக்காக தன்வயிறை பட்டினிபோட்டு வாழும் மகான்களுக்கு இந்த குறும்படம் சமர்ப்பணம்.
    இந்த குறும்படத்தை பார்க்கும்போது எனது அய்யா-அப்பத்தா நினைவுகள்தான் வருகிறது...

  • @arulmozhisaravanan978
    @arulmozhisaravanan978 5 лет назад +79

    என் மறைந்த தந்தையை கண் முன் நிறுத்தி கண் கலங்க வைத்துவிடீர்கள்... அருமையான படைப்பு வாழ்த்துக்கள்.

  • @anbua650
    @anbua650 5 лет назад +28

    20 நிமிடத்தில் கண் கலங்க வைத்த ஒரு அற்புதமான படைப்பு 🙏🙏🙏🙏🙏

  • @pmuniappan8670
    @pmuniappan8670 4 года назад +13

    கண்களில் நீர் வழிந்தது, அதைவிட மன வேதனை அதிகம்.🤝🤝

  • @DineshKumar-np4eg
    @DineshKumar-np4eg 5 лет назад +35

    2019 இன்றும் பலரின் நிலை இதுவே.......

  • @tamizhreactions557
    @tamizhreactions557 5 лет назад +114

    அருமையான நடிப்பு!!! வறுமை கொண்ட கிராமத்து தகப்பனின் நிலை இன்றும்!!!

    • @ifthikasoba5778
      @ifthikasoba5778 5 лет назад +1

      தமிழரசு சாந்தகுமார் amam manaday thottu vittadu

  • @aspirantsdoubts6275
    @aspirantsdoubts6275 5 лет назад +67

    இதி்ல் யாரு நடித்தார்கள்? உண்மை சம்பவத்தை தொடர்ந்து படம் எடுத்த மாரி இருந்தது........ உண்மை கதை

  • @gugankumar7465
    @gugankumar7465 5 лет назад +26

    தாத்தாவின் நடிப்பு அருமை❤

  • @thaimolitamil2872
    @thaimolitamil2872 4 года назад +10

    அன்னையரின் பாசம் பாய்ந்தோடும் அருவி போல். தந்தையரின் பாசம் கல்லுக்குள் ஈரம் போல். மிகச்சிறப்பு.

  • @akilaqs
    @akilaqs 5 лет назад +145

    என் அன்பு தாத்தாவை நினைவு படுத்துகிறது. எனக்கு பிடித்த பால்கோவா வை தன் இடுப்பு வேஸ்டி யில் மடித்து குக்க்கூ என்று எனக்கு சைகு செய்து குடுபார். இன்றும் பால்கோவா என்றால் அவர் நினைவு தான் எனக்கு வரும். இன்று அவர் இல்லை ஆனால் பால்கோவா என்று எங்காவது கேட்டால் அவர் என் அருகில் இருப்பது போல் மகிழ்வேன். தாத்தா பாட்டி பாசம் என்பது அப்பா அம்மா வை விட பெரியது. அதை அனுபவித்தவரகளுக்கு மடுமே புரியும்.

    • @GVkalai
      @GVkalai 5 лет назад

      Super , it really true

    • @rajamarthandan8296
      @rajamarthandan8296 5 лет назад

      very true

    • @prabhukumeresen7997
      @prabhukumeresen7997 4 года назад

      Njmlayyy Like my Thathaaa pattiii greater then my parents 😍😍Loveee u patti and thathaaa😘

  • @ganesanramasamy2160
    @ganesanramasamy2160 5 лет назад +76

    என்ன சொல்லனு தெரியல ஆனா (சவடால்)பார்த்த பிறகு மனசு என்னமோ பண்ணுது,அருமையான படம் வாழ்க

  • @goldcollection6951
    @goldcollection6951 4 года назад +11

    ரொம்ப நாள் கழிச்சு ஒரு நல்ல படம் பார்த்த மகிழ்ச்சி.....🤗

  • @anabuanbu9977
    @anabuanbu9977 5 лет назад +10

    மனசு கணக்குது.... அரிதாரம்(முகப்பூச்சு) அற்ற யதார்த்தமான வாழ்வியலை படம்பிடித்து, அதற்கு உயிர்கொடுத்த இயக்குநருக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.!!💐 வாழ்கவளமுடன்.!!!🙏

  • @mohandeva7050
    @mohandeva7050 5 лет назад +7

    எவ்வளவு எளிமையான கதைக்களம். எவ்வளவு நேர்த்தியான நடிப்பு மனதை பறித்து விட்டது கண்களை குளமாக்கி விட்டது

  • @Sdmdinesh
    @Sdmdinesh 5 лет назад +63

    மனதில் ஒரு தாக்கம்
    கண்ணில் நீர்
    ஏன்னு தெரியல!
    நன்றி

  • @manikandannatarajan8978
    @manikandannatarajan8978 5 лет назад +5

    என்னோட அப்பாவும் இப்படி தான்.. தினமும் காலையில சைக்கிள் எடுத்துகிட்டு வேலைக்கு போவாரு, கால சாப்பாடு மதியம் வீட்டுக்கு வந்து தான் சாப்புடுவாரு..
    ஏனோ தெரியல இந்த short film பார்த்த உடனே அவரோட நினைவு வந்துடுச்சி...
    உங்களுக்கும் மற்றும் உங்கள் குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..
    வெற்றிபெற வாழ்த்துக்கள்...

  • @divyathangavel781
    @divyathangavel781 5 лет назад +18

    This Film Made me Cry.... The Old man remember my Grand pa.

  • @Editorjohny
    @Editorjohny 5 лет назад +278

    ஐயா பிலிம் மேக்கருங்களா... நல்லா கேட்டுக்கங்க... உலகத்தரம் உலகத்தரம்னு சொல்றோமே... அது இதுதான்.

  • @Mohamed-rj8xj
    @Mohamed-rj8xj 5 лет назад +58

    👌👌👌👏👏👏😘😘எப்பா மற்ற short film டைரக்டர்களா இதைப்பார்த்து short film எடுக்க கத்துக்கங்கப்பா

  • @akshysp4137
    @akshysp4137 4 года назад +18

    அருமையான கதை ♥️ எல்லாரும் கருத்த தமிழ் ல பதிவிட்டு இருக்கிறத பாக்குறபோ ...... இந்த படத்தோட வெற்றி இது தான் எண்டு தோணுது ♥️🥰 வாழ்த்துக்கள் 💓

    • @savethebharat7141
      @savethebharat7141 4 года назад

      வறுமையை வீராப்பால் மறைக்கும் தியாகி....மீசைக்காரன்....
      கண்கள் பனித்தன......

    • @akshysp4137
      @akshysp4137 4 года назад

      @@savethebharat7141 ♥️♥️

  • @jeevaanantham8248
    @jeevaanantham8248 5 лет назад +40

    கேமரவா ஒளிச்சி வச்சி எடுதுருக்கங்க...👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻💐

  • @prabhakaran5290
    @prabhakaran5290 5 лет назад +37

    படம் செம..கண்ணீர் வர வைக்கும்..👌👌

  • @soniyapavithran688
    @soniyapavithran688 5 лет назад +27

    Naan Vellore la oru village than..now in Pondicherry.... parka en ooru village mariye iruku....en thatha paati pasathuku yengi iruken.,..so sweet film🤩🤩🤩🤩

  • @ramvenkatesh9554
    @ramvenkatesh9554 4 года назад +31

    அவர்கள் நடிக்கவில்லை வாழ்ந்திருக்கிறார்கள் . அந்தச்சின்னப்பையன் கலக்கிட்டான்.

  • @muralimahadevan1781
    @muralimahadevan1781 5 лет назад +6

    I am from Australia - been living here for more than 30 years. My tamil is not good and hence the comments in English. What a wonderful creation.Hats off to the director and the actors. Grandparents all over the world will appreciate this.

  • @jeyende7702
    @jeyende7702 5 лет назад +131

    மகள் பணமெல்லாம் வேண்டாமென அழுதுகொண்டே சொல்லும் போது நானும் அழுதுவிட்டேன். அந்த பெண் சிறிது நேரமானாலும் மிக இயற்கையாக அந்த அப்பாவிற்கு இணையாக நடித்திருக்கிறார். இயக்குனர் யாரையும் ஓவர் ஆக்ட் பண்ண வைக்க வில்லை.

    • @starwin5486
      @starwin5486 4 года назад +1

      சரியாக சொன்னீர் சகோதரா... மிகச் சாதாரணமாக, இயல்பாக நடித்திருக்கிறார்கள்

  • @swaminathanvenkatasubraman9683
    @swaminathanvenkatasubraman9683 5 лет назад +29

    I accidentally come across this short film. Excellent short film; how as a grand father who carefully keeps every money for his beloved daughter; how he avoids every spending under the pretext of arrogance which is actually his emotional attachment for daughter and grand son.
    Really superb

  • @priyan1328
    @priyan1328 3 года назад +9

    படம் பார்க்கும்போது கண்ணீர் வருகிறது 😭😭👌👌👏👏

  • @vj-rr5dy
    @vj-rr5dy 5 лет назад +5

    என்ன நானே திட்டிகிட்டேன் ரொம்ப நாளாக நோட்டிபிகேஷன் காட்டியும் பாக்காம இருந்ததுக்கு... நம்ம ஊரசுத்தி எடுத்து இருக்கிங்க அழகா காட்டி இருக்கிங்க.. மிக அருமை வாழ்த்துக்கள் சகோ 😍💐🤙👏🤝 அப்பாவை நேசிக்கும் மகள்களுக்காக, மகளைநேசிக்கும் அப்பாகளுக்காக .... நல்ல குறும்படங்களை தேடும் என்னைபோன்ற ரசிகர்களுக்காக..🙏

  • @joeljames5008
    @joeljames5008 5 лет назад +171

    யோவ்...நிஜமாவே பஸ்ஸுல நானும் குடியாத்தம் போன மாறியே இருக்குயா...செம்ம feel... வாழ்த்துக்கள் 🌹😘

    • @sheikibrahim7138
      @sheikibrahim7138 5 лет назад +1

      Sir naanum nallah nadipenn enakum any chancee kodunga

    • @benny387
      @benny387 5 лет назад

      Bro....athu vellore route bro

  • @058kaviyarasank7
    @058kaviyarasank7 5 лет назад +22

    குழந்தைப் பருவத்தை மீண்டும் நினைவுபடுத்தியதற்கு நன்றி... 😍

  • @user-uq3cq3ms7z
    @user-uq3cq3ms7z 4 года назад +7

    வறுமையின் வலி தெரிகிறது,
    பணத்தின் சிக்கனம் தெரிகிறது
    பாசத்தின் ஆழம் புரிகிறது
    நன்றாக இவர்கள் வாழ்ந்தார்கள்
    வாழ்த்துக்கள் என்பது கூட சாதாரண வாக்கியம் என்று எண்ண தொண்றுகிறது இக்காவியத்தை பார்க்கும் பொழுது
    நன்றி

  • @gkannan2077
    @gkannan2077 4 года назад +7

    மிகவும் அருமையான குறும்படம் வறுமையான குடும்பத்தின் உண்மையான நிழல்

  • @chandrugovindaraj5514
    @chandrugovindaraj5514 5 лет назад +53

    அருமையான குறும்படம், முதியவரின் நடிப்பு அருமை👌

  • @sakthimech5091
    @sakthimech5091 5 лет назад +22

    அருமையான பாசம் நிறைந்த கதை 😍😍அழகு 😍😍 தந்தைக்கு நிகர் தந்தை மட்டுமே 😘😘😘

  • @santhosh1893
    @santhosh1893 5 лет назад +7

    The last 5mins made me cry and I also felt happy at the same time!!! andha thatha avan peranuku chinna parissa kuduthu irundhalum. aadhu avanuku perussu!!!! looking forward to see more films!!

  • @paranthamand4563
    @paranthamand4563 3 года назад +3

    இந்த படம் அனேக தந்தைகளின் தியாகம், பாசம், தவிப்பு, உணர்வு,...இவை அனைத்தும் ஒன்று சேர்ந்த வாழ்க்கை...இயக்குநர்க்கு வாழ்த்துகள்....

  • @user-jj7ju2rv1o
    @user-jj7ju2rv1o 5 лет назад +28

    சிறந்த படைப்பு , இயக்குனா் அவா்களுக்கு நன்றி.

  • @BalaBala-gd6sn
    @BalaBala-gd6sn 5 лет назад +24

    அப்பா மகள் பாசம்,தாத்தா பேரன் பாசம் பார்க்க அவ்வளவு அழகாக இருந்தது

  • @neelaneela5770
    @neelaneela5770 3 года назад +6

    இயக்குனர்க்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்... உங்களின் இந்த படைப்பு மிகவும் அருமை....

  • @karunanithyvairavan8997
    @karunanithyvairavan8997 8 месяцев назад +1

    ஒரு அருமையான காவியம்.” ஆசைகள் இல்லாத வாழ்க்கையை நீ எப்போது தேடி செல்கிறாயோ அப்போது துன்பங்கள் இல்லாத வாழ்க்கை உன்னை தேடி வரும்” வாழ்த்துக்கள்.

  • @TheSurya9397
    @TheSurya9397 5 лет назад +52

    அருமை. யதார்த்தம் மிளிரும் கதை,கதைமாந்தர். இன்னொரு மகேந்திர ,பாலுமகேந்திரா யுகத்தை துவங்கியிருக்கும் நரேஷ்குமாருக்கு வாழ்த்துக்கள்.மீசை செம்மையான நடிப்பு.

  • @natrajdeva7359
    @natrajdeva7359 5 лет назад +9

    மிக அருமையான படைப்பு... கண் கலங்க வைத்த இயக்குனருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்....

  • @shanmugapriyaarumugam3320
    @shanmugapriyaarumugam3320 3 года назад +2

    தங்களின் குறும்படம் பார்க்கும் போது,,உள்ளுக்குள்ள ஏதோ சென்று மனச தொட்டு அரைஞ்ச மாதிரி இருக்கு.. மிக அருமை சகோ👌

  • @sivanaluguri1393
    @sivanaluguri1393 Год назад +7

    One of the finest movie i have ever watched. I am sure even Mani Ratnam sir could have not portrayed that last minute emotion scene between father and his poor daughter. Kudos to Director and crew

  • @sandhyapalani174
    @sandhyapalani174 5 лет назад +26

    அருமை👏!!!! யதார்த்தமான காட்சிகள்....தரமான படைப்பு👌

  • @dr.a.delphinlafeelafee
    @dr.a.delphinlafeelafee 5 лет назад +366

    என் தாத்தாவை பார்க்க வரும் உறவினர்கள் கொடுத்து விட்டு செல்லும் செந்தொழுவன் பழங்களை சாப்பிடாமல் பள்ளியில் இருந்து வரும் எனக்கு வருந்தி அழைத்துக் கொடுப்பார். விளையாடச் செல்லும் மும்முரத்தில் அவர் அழைப்பை அலட்சியம் செய்து விட்டு ஓடி விடுவேன்..... இரவும் கண் விழித்து காத்திருந்து தின்பண்டத்தை திங்க வைக்காமல் உறங்கமாட்டார்.. ...என் ஐயா (தாத்தா) கொல்லாம்பழத்தில்(முந்திரிபழம்)சாறு எடுத்து பீர் தயாரித்து கொடுப்பார்.... அந்த ஞாபகம் 20 வருடங்களுக்கு பிறகும் பசுமையான நினைவு... அம்மாவினுடன் இருந்ததைக்காட்டிலும் ஐயாவோடு அலைந்து திரிந்த நாட்கள் அதிகம்..சோறு பெரிய உருண்டை பிடித்து நடுவில் முட்டை மீன் வைத்து ஒரு பருக்கைகூட சிந்தாமல் ஊட்டி விடுவார்.. அன்று நிறைந்த மனது இன்று வரை பசிக்கவில்லை.... ஐயா நீ என் தாய்... உன் நினைவு என்னைவிட்டு உயிர் பிரிந்தாலும் நீங்காது.. அந்த அன்பிற்கு கைமாறு ஒன்றும் செய்ய விடாமல் காலன் அபகரித்து விட்டான். ஐ லவ் ஐயா ஐயா உன்ன எப்போது கூப்பிடப்போறேன்.மக்கா என நீ அழைக்கும் சப்தம் கேட்டு நிறைய நாளாயிட்டு... ஐயா ஃபேன் இல்லா காலத்தில் தூங்கும் வரை உன் நேரியலால்(மேல் துண்டு) விசிறி விடுவாய்.. 100 ஏ. சி அதற்கு சமமாக வைத்தாலும் ஈடல்ல.. உன் தளர்ந்த கைகளில் தூங்கிய நாட்கள்.. பஞ்சணை வைத்து உறங்கினாலும் இப்போது அன்று போல் தூக்கம் வரவில்லை.. என் நினைவில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஐயா... உன் போல் கைமாறு கருதா அன்பு செலுத்த முடியாமல் வாழ்கிறேன் இந்நாகரீக உலகத்தில்... நல்ல வேளை நீ இப்போது இல்லை. ।சுயநலம் பிடித்த உலகம் ஐயா.... உன் உடலுக்கு விடை கொடுத்து விட்டு நினைவுகளுக்கு விடை கொடுக்க முடியாமல் தவிக்கும்.... பேத்தி

    • @kanagut2723
      @kanagut2723 5 лет назад +24

      உங்களின் நிஐ வரிகள் என்னை அழ வைக்கின்றது.

    • @dr.a.delphinlafeelafee
      @dr.a.delphinlafeelafee 5 лет назад +2

      @@kanagut2723 🙏

    • @merabalaji6665
      @merabalaji6665 5 лет назад +7

      Real life is our oldendays with grand parenrs

    • @vigneshbanker5055
      @vigneshbanker5055 5 лет назад +4

      A. Delphine lafee nallarukku ya nijama

    • @dr.a.delphinlafeelafee
      @dr.a.delphinlafeelafee 5 лет назад +4

      @@vigneshbanker5055 நன்றி நண்பரே

  • @erraman1
    @erraman1 4 года назад +13

    Excellent. realistic acting; made me speechless, and eyes tears!
    BGM Awesome.

  • @user-li2wt8hj1f
    @user-li2wt8hj1f 4 года назад +5

    தரமான சிறப்பான படம். இயக்குனர்க்கு வாழ்த்துக்கள்

  • @arunprem97
    @arunprem97 5 лет назад +34

    இக்கதையை பாா்க்கிறப்ப என் சியா ஞாபகம் வருது எங்க ஊா்ல நாங்க தாத்தாவ சியானு தான் கூப்பிடுவோம். அருமையான பதிவு👏👏👏
    .

    • @user-lk2rt9ls7t
      @user-lk2rt9ls7t 5 лет назад +1

      எந்த ஊரில்" சியா " என்பீர்கள்

    • @myfunchoice
      @myfunchoice 5 лет назад +1

      உசிலம்பட்டி , கருமத்தூர், தேனீ ( தாயின் தகப்பன் சியான்)

  • @arockiajohnson8893
    @arockiajohnson8893 5 лет назад +27

    No words to say....simplyy awesome superrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrtttrrt

  • @kingjgaming113
    @kingjgaming113 4 года назад +7

    Love from Mumbai
    One of the best short film I have ever watched well done guys

  • @erraman1
    @erraman1 4 года назад +4

    அருமை. யதார்த்தமான நடிப்பு; என்னை பேசாதவராகவும், கண்கள் கண்ணீராகவும் ஆக்கியது!
    பிஜிஎம் அற்புதம்.

  • @BirammaSakthiTech2017
    @BirammaSakthiTech2017 5 лет назад +29

    அருமையான படைப்பு கண்ணில் நீர் தான் வருகிறது

    • @arifmahamood7577
      @arifmahamood7577 5 лет назад

      നന്നായിട്ടുണ്ട്..

  • @ganeshmoorthy7245
    @ganeshmoorthy7245 5 лет назад +7

    மிக மிக மிக தந்துருபமான காட்சி அமைப்பு... ஒரு நாள் சவடால் பெரியவருடன் பயணிக்க வைத்த உங்கள் குழுவிற்கு நன்றிகள்

  • @muralidharan9278
    @muralidharan9278 5 лет назад +4

    அருமையான படம் நிஜ மனிதர்களை கண்முன்னே நிறுத்தியதற்கு இயக்குனருக்கு பாராட்டுக்கள் 👏👏👏

  • @balasubramanian288
    @balasubramanian288 5 лет назад +3

    I cried. Nice. Poverty...... Only people who faced these situations will understand the emotions. Lovely movie. Hats off.

  • @jemsoul2594
    @jemsoul2594 5 лет назад +13

    ஒரு திரைப்படத்தை பார்க்கும் உணர்வு வருகிறது அருமை யான இயக்கம்

  • @Elavarasuarumugam
    @Elavarasuarumugam 5 лет назад +15

    மனதில் ஒரு தாக்கம் எனை குழந்தை பருவத்துக்கு கொண்டு சென்றது...
    அருமை 👌👏👏😍

  • @ajithramadass3489
    @ajithramadass3489 4 года назад +7

    Best film ever😍 so touching when he gave his money to his daughter.. congrats to the whole team😍😍😍

  • @RamKumar-pl2ir
    @RamKumar-pl2ir 4 года назад +67

    இத பாத்து தான் அசுரன் தனுஷ் நடிச்சு இருப்பாரோ

  • @elakkiyathiagarajan4903
    @elakkiyathiagarajan4903 5 лет назад +12

    எத்தனை முறை பார்த்தாலும் அழ வைக்கும் அருமையான குறும்படம்...

    • @jalandharvasan5474
      @jalandharvasan5474 5 лет назад +1

      elakkiya thiagarajan நன்றி

    • @m.vijith671
      @m.vijith671 5 лет назад +3

      Wow what a great Creation , weldone director and team.all the characters have done their part nicely. How many sacrifice, avoids, how many fake stories, blames to satisfaction his daughter family.even his wife could not have chance to see their daughter family, because of the finance situation, and how she worried and what a great hearty satisfaction by his wife too.He loves all the foods, fruits and drinks that he faced on his journey, but he kept quiet and control him mind with his own.THE PAALGOVA AND KOLIGUNDU IS REALLY HIGH LEVEL VALUE AFTER HE GIFTED TO RAMESH. Thanking to having this on my mind.

  • @deepandeepan2124
    @deepandeepan2124 5 лет назад +114

    கமெண்ட் பண்ணக் கூடாது என்று தான் பார்த்தேன்..
    பண்ண வேண்டும்

    • @thenmozhik2355
      @thenmozhik2355 4 года назад +5

      நான் இது வரை எந்த படத்திற்கும் கருத்து கூறியது கிடையாது. படம் மிக மிக யதார்த்தம். நடிப்பு அபாரம். கதையின் போக்கு அருமை.

  • @factofact1955
    @factofact1955 3 года назад +9

    19 நிமிசத்தில கண்ணுல தண்ணி வர வசிட்டிங்களே..🥺🥺😥😥😞😞
    நா என்னனு சொல்லுவே.... சொல்ல வார்த்தையே இல்லை.....🥺🥺❤️❤️👏👏👍👍💐💐

  • @raghuraman1440
    @raghuraman1440 Год назад +1

    நான் இந்த குறும்படம் இன்று 28.10.22 பார்த்து மகிழ்ந்தேன். இயக்குனர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @shrishri265
    @shrishri265 5 лет назад +68

    பாசமுள்ள அப்பாவை பெற்ற பெண்கள் தாங்கள் இறக்கும் வரை அப்பாவை மறக்க மாட்டார்கள். பிறந்ததிலிருந்து கணவன் வீட்டிற்கு. செல்லும் வரை தான் ஒரு பெண்ணிற்கு வசந்த காலம்.

  • @kamalasystems1491
    @kamalasystems1491 5 лет назад +13

    இந்த மாதிரி தாத்தா பாட்டிகளின் மாசற்ற அன்பு இக்கால ஸ்மார்ட் போன் உலகிற்கும் ஸ்மார்ட் குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்களுக்கும் புரிந்திருக்க புரிய வாய்ப்பு இல்லை!!❤
    90s கிட்ஸ் ஆகிய எங்களை எங்களது குழந்தை பருவத்திற்க்கு கொண்டு சென்ற இயக்குனருக்கு! மனமார்ந்த வாழ்த்துகள்.... அருமை உங்களின் இது போன்ற படைப்புகள் மேலும் தொடர வாழ்த்துக்கள்

  • @aishwaryakabilan8413
    @aishwaryakabilan8413 5 лет назад +3

    I am 20's kid . i cannot stop my tears when see that film...edho film pakra feeling eh ila live ah paakura mari irundhuchu..thank u director....u make a good job..it is really awesome....

  • @mridulasuresh7465
    @mridulasuresh7465 4 года назад +5

    Beautiful film , the old man has acted so well .👌👌👌👌🙏🏽🌹

  • @Yuvabcomist
    @Yuvabcomist 5 лет назад +9

    அருமையான படம்.......
    ஒரு நிமிடம் சிந்திக்க வைத்தது...
    மறு நிமிடம் கண்ணீல் நீர்...

  • @msobitha8771
    @msobitha8771 5 лет назад +27

    இந்த தாெலைகாட்சி தாெடா் நாடகங்கள் வராமலிருந்திருந்தால் எங்க தாத்தா பாட்டியும் எங்கள் மேல் அன்பாயிருந்திருப்பாா்கள்.சிறப்பான கதை நடிப்பு தயாாிப்பு வாழ்த்துக்கள்.

    • @jalandharvasan5474
      @jalandharvasan5474 5 лет назад

      M Sobitha நன்றி

    • @Kavilakshmii
      @Kavilakshmii 5 лет назад

      என்னோட தாத்தாவ உறிச்சி வச்சிருக்கியேயா.....அருமை

  • @mohanambalmanoharan5298
    @mohanambalmanoharan5298 3 года назад +1

    மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளது. அந்த பெரியவர் அப்படியே தத்ரூபமாக நடித்துள்ளார். வாழ்த்துக்கள்

  • @babuniranjan2135
    @babuniranjan2135 5 лет назад +2

    ஒவ்வொரு சவடாலுக்கு பின்னாலும்...பேரத்துக்கு முன்னாலும்..அதை வாங்க முடியாத வறுமையும்...ஆதங்கமும்...அருமையான படம்...