காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே பாடல் | Kalamithu Kalamithu song | பத்மினி சோக இனிமையான பாடல் .

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • #theanisai #Kannadasansongs #msvhitsongs #susheelahits
    காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே பாடல் | Kalamithu Kalamithu song | பத்மினி சோக இனிமையான பாடல் . Tamil Lyrics in description .
    Movie : Chithi
    Music by : M. S. Viswanathan
    Song : Kalamithu Kalamithu
    Singers : P. Susheela
    Lyrics : Kannadasan
    பாடகி : பி. சுசீலா
    இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
    பெண் : பெண்ணாகப் பிறந்தவர்க்கு
    கண்ணுறக்கம் இரண்டு முறை
    பிறப்பில் ஒரு தூக்கம்
    இறப்பில் மறு தூக்கம்
    இப்போது விட்டு விட்டால்
    எப்போதும் தூக்கம் இல்லை
    என்னரிய கண்மணியே
    கண்ணுறங்கு கண்ணுறங்கு
    பெண் : ஆரிராரிரி ஆரிர ராரோ
    ஆரி ராரிராரோ…
    ஆரிராரிரி ஆரிரி ஆரோ
    ஆரி ராரிரிரோ…
    பெண் : காலமிது காலமிது
    கண்ணுறங்கு மகளே
    காலமிதை தவற விட்டால்
    தூக்கமில்லை மகளே
    தூக்கமில்லை மகளே
    பெண் : நாலு வயதான பின்னே
    பள்ளி விளையாடல்
    நாலு வயதான பின்னே
    பள்ளி விளையாடல்
    நாள் முழுதும் பாடச் சொல்லும்
    தெள்ளுத் தமிழ் பாடல்
    எண்ணிரண்டு வயது வந்தால்
    கண்ணுறக்கம் இல்லையடி
    எண்ணிரண்டு வயது வந்தால்
    கண்ணுறக்கம் இல்லையடி
    ஈரேழு மொழிகளுடன்
    போராடச் சொல்லுமடி தீராத தொல்லையடி
    பெண் : காலமிது காலமிது
    கண்ணுறங்கு மகளே
    காலமிதை தவற விட்டால்
    தூக்கமில்லை மகளே
    தூக்கமில்லை மகளே
    பெண் : மாறும் கன்னி மனம் மாறும்
    கண்ணன் முகம் தேடும்
    ஏக்கம் வரும் போது
    தூக்கமென்பதேது
    தான் நினைத்த காதலனை
    சேர வரும் போது
    தான் நினைத்த காதலனை
    சேர வரும் போது
    தந்தை அதை மறுத்து விட்டால்
    கண்ணுறக்கம் ஏது கண்ணுறக்கம் ஏது
    பெண் : மாலையிட்ட தலைவன் வந்து
    சேலை தொடும் போது
    மங்கையரின் தேன் நிலவில்
    கண்ணுறக்கம் ஏது கண்ணுறக்கம் ஏது
    பெண் : காலமிது காலமிது
    கண்ணுறங்கு மகளே
    காலமிதை தவற விட்டால்
    தூக்கமில்லை மகளே
    தூக்கமில்லை மகளே
    பெண் : ஐயிரண்டு திங்களிலும்
    பிள்ளை பெறும் போதும்
    அன்னை என்று வந்த பின்னும்
    கண்ணுறக்கம் போகும் கண்ணுறக்கம் போகும்
    கை நடுங்கி கண் மறைந்து
    காலம் வந்து தேடும்
    கை நடுங்கி கண் மறைந்து
    காலம் வந்து தேடும்
    காணாத தூக்கம் எல்லாம்
    தானாக சேரும் தானாக சேரும்
    பெண் : காலமிது காலமிது
    கண்ணுறங்கு மகளே
    காலமிதை தவற விட்டால்
    தூக்கமில்லை மகளே
    தூக்கமில்லை மகளே
    பெண் : ஆரிராரிரி ஆரிர ராரோ
    ஆரி ராரிராரோ…
    ஆரிராரிரி ஆரிரி ஆரோ
    ஆரி ராரிரிரோ……ஆரி ராரிரிரோ…

Комментарии • 481

  • @romancatholicbgm
    @romancatholicbgm 3 месяца назад +38

    யாருங்க சொன்னது 2k kids லாம் இது மாதிரி பாடல்கள் கேட்கமாட்டங்காகணு?? இந்த பாடலை நான் சிறு வயதில் இருந்தே கேட்டு இருக்கிறேன் எனக்கு மிகவும் பிடித்த பாடல் ❤
    பழமையே சிறந்தது ❤Old is gold 🪙❤

    • @muthulakshmin6539
      @muthulakshmin6539 Месяц назад +1

      காலத்தா.ல் அழிக்க முடியாத பாடல்

  • @mahendravalavallan2143
    @mahendravalavallan2143 Год назад +96

    பெண்ணின் நிலையை இதைவிட தெள்ளத் தெளிவாக புரியும் படி சொல்ல வார்த்தை யேது ஆஹா ஆஹா சூப்பர்

  • @aathipakavanaathipakavan6863
    @aathipakavanaathipakavan6863 10 месяцев назад +45

    கண்ணதாசன் காலம் கொடுத்த கவி கொடை மீண்டு வா கண்ணதாச

  • @subasridhar7572
    @subasridhar7572 7 месяцев назад +18

    இரண்டு பேரும் குழந்தைகள் கண்ணீர் வந்து விட்டது கைநடுங்கி கண்மறைந்து எண்ண அற்புதமான வரிகள் கண்ணதாசன் மகாகவிக்கு கோடான கோடி நன்றிகள்.

  • @bhaskaranarumugam4274
    @bhaskaranarumugam4274 Год назад +53

    நல்ல காலம் நான் 1960களிலில் பிறந்துவிட்டேன். அதனால் தான் இது போன்ற மனதை வருடும் பாடல்களை கேட்கும் பாக்கியம் கிடைத்தது..
    2000க்கு பிறகு பிறந்திருந்தால் வாழ்க்கை வீணாக போய் இருக்கும்..
    அதுவும் இந்த ஐடி காலத்தில்.. எந்த தாய்க்கும் தாலாட்டு பாடவும் தெரியாது.. குழந்தைகள் பாடு பாவம்...

    • @vimalavenugopal4814
      @vimalavenugopal4814 10 месяцев назад

      😊

    • @muthuabi3137
      @muthuabi3137 10 месяцев назад

      Valdigal. Sar.. Rasigan. K. M. R. Madurai

    • @barveensikkan
      @barveensikkan 10 месяцев назад +3

      Sir 1995 naan piranthen enakku age 28naanu intha patta orunaalaikku 1thalavayavathu ketruven

    • @barveensikkan
      @barveensikkan 10 месяцев назад

      Thanks to my dad because refer this song

    • @rukmangathantgruk1621
      @rukmangathantgruk1621 9 месяцев назад +2

      No nan 1994 na intha paadal paadi than en 2kulanthaikalaium thinga vaippen

  • @samps9598
    @samps9598 7 месяцев назад +31

    இளவயதில் பார்த்த போது பாடலையும் காட்சியையும் ரசித்தேன். இப்போது பேத்திகள் நான்கு பேரையும் பாடலோடு நினைக்கும்போது கண்கள் நீர்த்திரையிடுவதைத் தவிர்க்க முடியவில்லை.
    சிறப்பாக அந்தக் கடைசிச் சரணம்
    "கை நடுங்கி கண் மறைந்து காலம் வந்து சேரும் - காணாத தூக்கமெல்லாம் தானாகச் சேரும்" - இறைவா 😢😢😢

    • @rpgaming5300
      @rpgaming5300 6 месяцев назад

      அருமையான ... வரிகள் இல்லையாமா

  • @apsarassamayal
    @apsarassamayal 10 месяцев назад +19

    குழந்தை பருவம், பள்ளி பருவம்(டீன் ஏஜ்),கன்னி,மனைவி,தாய்,முதுமை,இந்த ஐ ந்து பெண்களின்,பருவத்தை இதைவிட சிறந்த முறையில் எவராலும் எழுத இயலாது,நம் கவிஞர் தவிர ,பெண்களின் உன்ன தமான வாழ்கை பயணத்தை ஒரே பாடலில் கொடுத்த, சுசீலா அம்மா msv ஐyya,கண்ணதாசன் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்து கொண்டிருக்கும் என்று பெருமை கொள்வோம்,என் குழந்தைகளுக்கும்,இந்த பாடலை பாடி thoongavaithen,இப்போது என் பேரக்குழந்தைகளுக்கும் பாடிகொண்டிருகிற்றேன்

    • @raghuraman1440
      @raghuraman1440 10 месяцев назад +1

      அம்மா நீங்கள் ஆரோக்கியமாக இருந்து உங்கள் கொள்ளு பேர குழந்தைகளுக்கும் பாட வாழ்த்துக்கள்.

  • @yogabalajisivakumar5259
    @yogabalajisivakumar5259 7 месяцев назад +9

    என் மகளுக்கு இன்றளவும் இந்தப்பாடலைப் பாடுகிறேன் அருமையான வரிகள் ❤❤❤

  • @jsenthil7832
    @jsenthil7832 Год назад +60

    தெய்வம் மானிட ரூபத்தில்..
    தாயாக,,, தாரமாக,, சகோதரியாக ,,மகளாக,,

  • @vincentnarayanassamy5599
    @vincentnarayanassamy5599 11 месяцев назад +18

    தமிழும் தமிழ் இனமும் உள்ளவரை வாழும் இந்த கவிதை கவியரசே உனது புகழும்

  • @jamunaram3801
    @jamunaram3801 Год назад +52

    கவியரசுகு கண்ணதாசன் மாபெரும் கடவுள் சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை கோடி வாழ்த்துக்கள்...🙏🙏🙏🙏🙏👋👋👋👌👌

    • @paulthurai2051
      @paulthurai2051 Год назад

      -

    • @sethuramanveerappan3206
      @sethuramanveerappan3206 Год назад +1

      கோடி கணக்கான தமிழ் ரசிகர்கள்,,,,இதே மன நிலையில்தான் உள்ளனர்!

    • @ganeshkaranai9006
      @ganeshkaranai9006 11 месяцев назад

      ​@@sethuramanveerappan3206😊

  • @anandhavalliananthy5178
    @anandhavalliananthy5178 Год назад +37

    மனம்அமைதியில்லாமல் தவிக்கும்போது இந்த பாடலை கேட்பைன்கண்ணீருடன்சேர்ந்து தூக்கமும் அதனுடன்ஏதோ அமைதியும் ஏற்படும் கண்ணதாசனின்தீவிர ரசிகை

  • @manik2216
    @manik2216 2 года назад +91

    உண்மையை உணர்த்தும் பாடல். கவியரசு கண்ணதாசனுக்கு ஆயிரம் வாழ்த்துக்கள் . மீண்டும் ஒரு பிறவி எடுத்தால் கடவுளுக்கு ஆயிரம் நன்றிகள்.

    • @murugesankonguoct9071
      @murugesankonguoct9071 Год назад +6

      கவிஞரை போல் இன்னெருவர் பிறக்கப்போவதில்லை.

    • @kalavathyn3222
      @kalavathyn3222 Год назад +2

      @@murugesankonguoct9071 p0

    • @தாய்.தமிழ்இனிய.தமிழ்
      @தாய்.தமிழ்இனிய.தமிழ் Год назад +1

      என் தாய். தமிழன்னல்லவா. கவிப்புயல். தாசன். கண்ணதாசன்

    • @karkannandurairaj8658
      @karkannandurairaj8658 Год назад +2

      தமிழனின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பவர் கவிஞர்

    • @maarimuthu2423
      @maarimuthu2423 Год назад

      @@murugesankonguoct9071 Dec

  • @praseethashankar7580
    @praseethashankar7580 Год назад +29

    அன்றும் இன்றும் என் மனதை தொட்ட பாடல் '
    மறக்கமுடியாத, கானம் .

  • @RaviRavi-ll7th
    @RaviRavi-ll7th Год назад +50

    உறக்கத்தின் தன்மைகளை உண்மைகளை எவ்வளவு அழகாக பாடலில் எடுத்துக் காட்டியுள்ளார் கவிஅரசரே எனக்கு அருள் தருக உன்னை தெய்வமாக வணங்குகிறேன் எனக்கு கவி வரம்கொடு அப்பா ரவி

  • @k.ganesank.ganesan3144
    @k.ganesank.ganesan3144 Год назад +17

    வாழ்க்கை என்ன வென்று.
    மழலையர்களும் அறிந்து கொள்ள மழலைமொழியிலேயே கூறுவது போல் இருக்கிறது. இந்த பாடல் வரிகள் அத்தனையும் அருமை.
    இதை நம் தொண்மை மொழியான தமிழ் மொழியில் கேட்கும் போது.
    காதுகளில் தேனருவி பாய்ந்தது போல் இருக்கிறது.
    என்ன வென்று எனக்கு சொல்லத் தெரியவில்லை என்றே சொல்ல வேண்டும்.நம் தெல்லுதமிழின் அருமைப்பெருமைகளை.
    தமிழ் மொழிக்கு இணை மொழித் தரணியில் ஏதும் இருக்கிறதா? என்று என்னைக்கேட்டால். நான் பட்டென்று தேங்காய் உடைத்தார்ப்போல் இல்லை என்றே சொல்வேன்.
    வையத்தில் வாழுந்த எவரும் தமிழ் மொழியின் சிறப்பினை அறியாது இறந்திருக்கமுடியாது.
    அப்படி எவரேனும் இறந்திருந்தால்.எளிமையான தமிழ் மொழியை அறிந்துக்கொள்ள முடியவில்லையே என்று தான் இறந்திருப்பார்.
    நன்றி தமிழ் தேனான என் மொழிக்கு❤‌......

    • @mrscientificsaint6535
      @mrscientificsaint6535 Год назад

      😊 ok jni
      😂 FC ghr it ini ohzzz hn ins❤ in

    • @arivuanbu7200
      @arivuanbu7200 Год назад

      தீந்தமிழ்..வண்டமிழ்,நம் செந்தமிழ்..

    • @arivuanbu7200
      @arivuanbu7200 Год назад

      ❤❤❤❤❤❤

  • @karkannandurairaj8658
    @karkannandurairaj8658 Год назад +43

    இந்த பாட்டை கேட்க கேட்க சுசிலா அம்மாவின் இனிமையான குரல் நம் மைமயக்க நிலைக்கு கொண்டு செல்லும் அருமையான வரிகள் இறவா கவிஞருடையது

  • @rathinavelus8825
    @rathinavelus8825 2 года назад +62

    என் அம்மா ஞாபகம் வரும்போதெல்லாம், இந்த திருமதி சுசீலா அம்மையாரின் தாலாட்டுப் பாடலை தான் மீண்டும் மீண்டும் மனம் நாடுகிறேன்.எனவே சுசீலா அம்மையார் எல்லாருக்கும் தாய்போல் இருக்கிறார்.அவர்கள் ஒரு தமிழ் நாட்டின் தாயார் தான்.வாழ்க அம்மையார் நீடூழி காலம்.

  • @nagaraninagarani2721
    @nagaraninagarani2721 Год назад +37

    எனக்கு மிகவும் பிடித்த சோகமாக இருக்கும்போது இந்த பாடல் மிகவும் அருமையான பாடல்

    • @meenasoman3906
      @meenasoman3906 Год назад

      எனக்குபிடித்தபாடல்

  • @MasahiraKani
    @MasahiraKani 9 месяцев назад +12

    என்பிள்ளைகளைஇப் பாடலை
    பாடித்தான் தூங்கவைப்பேன்
    அந்த நாட்களில்;
    மறக்கமுடியாத பாடல்🌷😊

  • @prabhakarana4926
    @prabhakarana4926 9 месяцев назад +9

    என் அம்மா அந்த பாடலை பாடி என்னை உறங்க வைத்திருக்கிறார்கள்

  • @abdulwahaba9690
    @abdulwahaba9690 9 месяцев назад +7

    இந்த பாடல் நிஜமான வாழ்க்கை உளவியல் முறையில் வார்த்த பாடல்.ஆனால் இன்று இந்த நிலையில் மாற்றம் வந்துள்ளது வரவேற்க்கிறேன்

  • @murugiahn3741
    @murugiahn3741 Год назад +31

    கண்ணதாசன் ஒரு தெய்வீக கவிஞர்.

  • @karkannandurairaj8658
    @karkannandurairaj8658 Год назад +50

    எனக்கு மனசுக்கு கஷ்டமாக இருக்கும் போது இந்தப் பாடலை கேட்டபின் என் மனசு லேசாகி விடும்

  • @murugiahn3741
    @murugiahn3741 Год назад +62

    கண்ணதாசன் மீண்டும் பிறக்க வேண்டும்.

  • @mathivananjayaraman4477
    @mathivananjayaraman4477 10 месяцев назад +8

    நானும் என் மகளை இந்த பாடலை பாடி தான் தூங்க வைத்து இருக்கிறேன் எனக்கு பிடித்த பாடல். ...

  • @Rajai-qk3xw
    @Rajai-qk3xw Год назад +33

    பெண்களின் வாழ்கையில் இப்படிதான் இருக்கும் என்று பாடலில் கவிஞர் சொல்லி விட்டார்

  • @murugananjalai3910
    @murugananjalai3910 2 года назад +98

    பெண்களின் நிலையை உணர வைக்கும் பாடல்...

  • @kalyanamm4768
    @kalyanamm4768 2 года назад +60

    மாலையிட்ட தலைவன் வந்து சேலை தொடும் போது மங்கை அவளின் தேனிலவில் தூக்கம் என்பதேது.என்ன அருமையான வரிகள்.கண்ணதாசனை தவிர வேறு யாரும் இது போல் எழுத முடியாது.

  • @saraswathigunasekaran8845
    @saraswathigunasekaran8845 20 дней назад

    நான் என் மகள்களுக்கு பாடிய பாடல்களின் இதுவும் ஒன்று ❤

  • @moorthysm1879
    @moorthysm1879 Год назад +96

    என் மகள் மற்றும் மகன் இருவருக்குமே இன்னும் இந்த பாடலை தான் பாடுவேன் அருமையான பாடல் 💐💐👍👍👍

  • @impugal
    @impugal 2 года назад +49

    நிலை பெற்ற புகளுக்கு உரியவர் நிகராற்ற கவிஞர் நம் கண்ணதாசன் அவர்கள் 👃👃👃👃👃👃👃👃❤❤❤❤❤❤❤

  • @anandharajasai
    @anandharajasai Год назад +23

    பத்மினி அம்மா நடிப்பில் மிகவும் அருமையான படம். கிட்டத்தட்ட இந்த படத்தை ஒரு இருபது தடவையாவது பார்த்திருப்பேன்

  • @rathinavelus8825
    @rathinavelus8825 2 года назад +31

    தாயாரின் குழந்தை பராமரிப்பு மிகவும் இனிமையானது.தாலாட்டுப்பாடல் தாயாரின் அருமை தெரிகிறது.

  • @Whyyyyy-h1s
    @Whyyyyy-h1s 8 месяцев назад +2

    காலமிது, காலமிது கண்ணுறங்கு மகளே, காலமிதை தவற விட்டால் தூக்கமில்லை மகளே 👌💕

  • @tamilselvi3034
    @tamilselvi3034 Год назад +17

    P.susheelamma gifted by god to Tamilnadu.

  • @sakthivela7933
    @sakthivela7933 Год назад +44

    கவிஞர் கடவுளின் ஆசியால் பாடியுள்ளார்

  • @rangasamyk4912
    @rangasamyk4912 Год назад +45

    கவிஞர் கண்ணதாசன் அவர்கள்
    MSV அவர்கள் சுசீலா கூட்டணியில் உருவான அற்புதமான பாடல்

    • @indiragandhir8574
      @indiragandhir8574 Год назад +2

      XD

    • @rangasamyk4912
      @rangasamyk4912 Год назад

      ​@@indiragandhir8574பொருள் புரியவில்லை.what does it mean

    • @padma-xu9lp
      @padma-xu9lp Год назад

      ​@@indiragandhir8574😂😂

  • @SuthanthiraMala-qz4rs
    @SuthanthiraMala-qz4rs 14 дней назад

    எங்க அம்மா நினைப்பு வந்துருச்சு 😢😢😢😢😢😢

  • @karkannandurairaj8658
    @karkannandurairaj8658 Год назад +18

    கண்ணதாசன் வரிகளை இசை அரசி தன் இனிமையான குரலில் பாடும் போது நம்மை மயக்க நிலைக்கு கொண்டு செல்லும் நீரோடையின்சலசலப்பு சத்தம் மயக்க நிலைக்கு கொண்டு செல்வதைப் போல்

  • @sethurajanveluchamy3098
    @sethurajanveluchamy3098 Год назад +12

    காவியங்களும் காப்பியங்களும் இதிகாசங்களும் சிறப்படைவதற்கு பெண்களை காரணம் பெண்களே இந்த உலகத்தின் கண்கள்
    மிக்க நன்றி இனிமையான வணக்கம்

    • @kvkandakumar8454
      @kvkandakumar8454 Год назад

      ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்காமல் கேட்க தோன்றும் பாடல் இது.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 года назад +42

    அப்பப்பபா!என்னா அர்த்தமானப்பாடல்! 👸

    • @brindhadevi9958
      @brindhadevi9958 2 года назад

      ‌‌

    • @arumugam8109
      @arumugam8109 Год назад +1

      அழகான பாடல் 🍍🌹🍎

    • @helenpoornima5126
      @helenpoornima5126 7 месяцев назад +1

      ​@@arumugam8109ஆமாம் ஆறுமுகம்! நலமா? 👸❤😂❤😂💃

    • @BommuRaj-se5sy
      @BommuRaj-se5sy 5 месяцев назад

      ​@@arumugam8109z na na 3:04 3:11 😮😊😊😊😊😊😊😢😢😢😢😂😂😮😊😢😮🎉🎉🎉🎉😅😮😮

    • @ganeshveerabahu9082
      @ganeshveerabahu9082 21 день назад

      Good song
      Meaningful song
      Short and sweet write up

  • @thirunavukkarasunatarajan2351
    @thirunavukkarasunatarajan2351 2 года назад +48

    இசையும் குரலும் வரிகளும் மனதை உருக்கும்

  • @arumugamv7116
    @arumugamv7116 6 месяцев назад +1

    1960களில் என் போன்றவர்களுக்கு இனிமையான பாடல்.என் தாய் தாலாட்டுவது போல் இனிமை.இதை கேட்க மறுபடியும் இந்த பூவுலகில் குழந்தையாக பிறக்க வேண்டும்.

  • @srivatsan-t7g
    @srivatsan-t7g 27 дней назад

    என் சித்தப்பா இந்த பாடல் பாடி என்னை தூங்க வைப்பார்

  • @manic9893
    @manic9893 Год назад +36

    நமது கலாச்சாரத்தை உணர்த்தும் பாடல்

  • @shiva.chennai
    @shiva.chennai 8 месяцев назад +3

    இரவு இரண்டு மணி. இந்த நேரத்தில் கேட்கிறேன். தூக்கம் வரவில்லை.

  • @sugumarsugumar7316
    @sugumarsugumar7316 Год назад +9

    அருமையான வரிகள்

  • @muthulakshmi6477
    @muthulakshmi6477 15 дней назад

    Arumaiyana padal

  • @MohanaS-c2g
    @MohanaS-c2g Год назад +4

    உண்மையான வரிகள்..... அருமையான பாடல் 😒😒😒😢😢😢

  • @buvaneswarir1667
    @buvaneswarir1667 День назад

    3:38 ஆகா! என்ன வரிகள்! ❤❤❤

  • @UshaVenkat-hx5ph
    @UshaVenkat-hx5ph 4 месяца назад +3

    எனக்கும் இந்த பாட்டு ரெம்ப பிடிக்கும்

  • @sankarakumarkrishnan8084
    @sankarakumarkrishnan8084 Год назад +52

    அனுபவம் தந்த உண்மையை கவிஞர் பாடியதை நினைத்து,நெஞ்சம்
    நெகிழ்ந்ததனால் வந்த கண்ணீர் சகோதரி! அனுபவம் பேசுகின்றது
    சகோதரி! லெட்சுமி .

    • @stylish_abi6035
      @stylish_abi6035 Год назад

      Oo6hhhty6

    • @vasansvg139
      @vasansvg139 Год назад +2

      கவிஞர்.... இந்த பாடலுக்கு எழுத வரும் போது.... ஒரு முப்பது முப்பத்தைந்து வயது இருந்தால் பெரிது.... ஆனால், பாடல் வரிகள் அதனையும் தாண்டி இருக்கிறது... அது தான் அவரின்; ஞாலம்.....

    • @chandrakala1895
      @chandrakala1895 Год назад

      ​@@vasansvg139 vh ol. No mp inna😅🎉I on oh mp m.

  • @boomikaponukutty9285
    @boomikaponukutty9285 2 года назад +22

    வரியின் வலிமை அருமை

  • @vincentnarayanassamy5599
    @vincentnarayanassamy5599 Год назад +20

    கவியரசர் ஒரு தாயாக இருந்து வடித்த கவிதை காலமுள்ளவரை வாழுமிந்த தாலாட்டு

  • @ranineethi760
    @ranineethi760 2 года назад +24

    அம்மாவாக பத்மினி சூப்பராக நடித்திருந்தார்.

  • @nirmalaravi4375
    @nirmalaravi4375 2 года назад +16

    ஒரு பெண் பிறந்து இறக்கும் வரை நடக்கும் நடை முறை வாழ்க்கை அருமை

  • @vijayajeya9437
    @vijayajeya9437 10 месяцев назад +8

    பாட்டு கேட்கும்போதெல்லாம் அழுகிறேன். இந்தப்பாட்டை பாடி என் குழந்தைகளை தூங்க வைத்தேன். இன்று என் பையனுக்கு பாடுகிறேன்

  • @Balakrishnan-jb7uq
    @Balakrishnan-jb7uq 2 года назад +11

    எவ்வளவு செய்திகள் ஒரு பாடலில்!

  • @mnazarnazar78
    @mnazarnazar78 2 года назад +12

    அருமையான பாடல் அருமை நடிப்பு

  • @mnazarnazar78
    @mnazarnazar78 Год назад +31

    அம்மாவின் நடிப்பு (பத்மினி) சித்தி அனைவரும் அருமையான நடிப்பு பாடகள் சிறப்பாக இருந்தது

  • @laxmiiyer3
    @laxmiiyer3 6 месяцев назад

    Arumai perumai ulla thookathin vayadu soolum padal superb

  • @maheshwarisankar835
    @maheshwarisankar835 Год назад +7

    கேட்கும்போதெல்லாம் மனமும் உடலும் சிலிர்க்கும்.

  • @israelisravehlan3355
    @israelisravehlan3355 Год назад +6

    Excellent Excellent lyrics. Legend -
    Ayaa.Kannadasan.🙏🙏🙏

  • @sweetsumi4039
    @sweetsumi4039 Год назад +24

    For my 2 daughters when they born I used to sing all old melody night time song to make them to sleep. When they started to speak they itself say amma sing this. What kind of words, each and every word is a lesson, experiences, their feelings responsibility . All time favrt song. I'm sharing ds song to my elder daughter who s going to get married.

  • @muthusamyashokkumar774
    @muthusamyashokkumar774 Год назад +20

    All experts, Kannadasan, musician, actress, singer, made a good delivery and great success of this song. Once heard, can never forget and again and again has to listen it.

  • @user-mf4fi4od6c
    @user-mf4fi4od6c 5 месяцев назад +162

    2024 yaravathu Unda????

  • @sundharsinger827
    @sundharsinger827 Год назад +6

    கண்ணீர்...கண்ணீர்...கண்ணீர்...கண்ணீர்...க...கண்ணீர்....கண்ணீர்.

  • @jayashreesaravanan6953
    @jayashreesaravanan6953 9 месяцев назад +1

    அடுத்த பிறவியில் கவிஞர் கண்ணதாசனுக்கு மகனாக பிறக்க வேண்டும்--கவிஞர் முத்தையாதாசன்

  • @kalyanamm4768
    @kalyanamm4768 2 года назад +27

    கைநடுங்கி கண்மறைந்து காலம் வந்து தேடும் காணாத தூக்கம் எல்லாம் தானாக சேரும்.காலத்தின் முடிவை கண்ணதாசனின் வரிகள் கண்களை குளமாக்கிவிட்டது.

    • @ranineethi760
      @ranineethi760 2 года назад +5

      கண்ணதாசன் ஐயாக்கு முன்னால் யாரும் இப்படி வாழ்க்கையை வகைப்படுத்தி எழுதியிருக்க மாட்டார்கள்.

    • @amuthaeniya6978
      @amuthaeniya6978 2 года назад +1

      naan rasethu kattathu👍

  • @satharubansatharuban-be7dm
    @satharubansatharuban-be7dm Год назад

    ❤🎉🎉Sweet beautiful wonderful Excellent song valthukal congratulations I like this song valthukal nanriekal vanakam valthum Anpu saba poomani 🎉❤🎉

  • @kaniappansrly9744
    @kaniappansrly9744 2 года назад +10

    உயிரானபாடல் உயிரோட்டமான இசை

  • @AkbarAli-td4we
    @AkbarAli-td4we Год назад +8

    First time indha paadalai khetkiren yhenaku migavum pidithirukiradhu indha paadal yhenakum irandupenkulandhai ulladhu avargalukaaga.....I love this song 2022/11/4 today

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu5656 2 года назад +25

    அருமையான பெண்களுக்கான தாலாட்டு பாடல் !!

    • @aravinth8879
      @aravinth8879 Год назад

      பெண்களுக்கான அருமையான பாடல்.

  • @kangiarvijayakumar7492
    @kangiarvijayakumar7492 Год назад +2

    யாரடா கவிஞர்
    யார் இசைஅமைப்பாளர்
    கண்ணீர் வரவலைத்த 😂❤

  • @chandranerer1255
    @chandranerer1255 Год назад +7

    Evergreen classic song of P.Susheelamma. Heart touching lyrics. Great music.

  • @thangasamy7629
    @thangasamy7629 Год назад +5

    தமிழ்காக்கவாவது கவிஞர் கண்ணதாசன் ஒருமுறை மீண்டும் பிறக்க வேண்டும்.

  • @malathymurugesan-hc5mg
    @malathymurugesan-hc5mg Год назад +1

    பழையபாடலுக்குஈடில்வைஅருமை

  • @மக்கள்தோழன்-ம7ச
    @மக்கள்தோழன்-ம7ச 7 месяцев назад

    கண்ணீர் வடிகிறது கவியரசரே...

  • @syedmasood2207
    @syedmasood2207 Год назад +1

    ஆஹா அருமையான பாடல் நன்றி

  • @arunachalampitchiah5853
    @arunachalampitchiah5853 Год назад +1

    சிறந்த கருத்து இசை மற்றும் பல கலந்த பாடல் ketkka இனிமை

  • @v.keeranurmanimaran9580
    @v.keeranurmanimaran9580 Год назад +1

    What a voice. Sushila ammaa. Great amma

  • @saranyaram6892
    @saranyaram6892 6 месяцев назад

    Enga amma madila padukum pothellam intha song than paduvanga.. Avanga voice ipovum yapagam iruku...😍✨

  • @selvam5440
    @selvam5440 Год назад

    இப்படி ஒரு கவிஞனை நான் பார்த்தது பெரிய ஐ❤❤❤❤

  • @sssgs8190
    @sssgs8190 8 месяцев назад

    பென்னாகபிறந்தவளுக்கு,இதுதான்உன்மையானபாட்டு

  • @psgcnkiruthikaa5651
    @psgcnkiruthikaa5651 Месяц назад

    காணாத தூக்கம் வரும் நாளை எதிர் பார்க்கிறேன்😭

  • @msrmsrmsr5561
    @msrmsrmsr5561 8 месяцев назад +1

    அருமையா கருத்துநிறைந்த காலத்தால் அழியாத பாடல் இக்கால கவிஞன் எவனுக்கும் சமுகநல பாடல்கள் எழுத தெரியவில்லை

  • @koppalampillaisrinivasn9726
    @koppalampillaisrinivasn9726 8 месяцев назад +1

    Really we are lucky to hear
    Suseela Amma voice

  • @sundharamkc7984
    @sundharamkc7984 9 месяцев назад

    கவியரசரின்அற்புதமானபாடல்,இந்ததலைமுறைபெண்கள்கேட்கவேண்டும்

  • @duraikarthi7131
    @duraikarthi7131 2 года назад +5

    மிக அருமையான பாடல்

  • @manimegalaik1391
    @manimegalaik1391 10 месяцев назад +4

    தூக்கம் இல்லாவிடில் இந்த பாடலின் வரிகளில் உள்ள தை புரிந்து கொள்ள வேண்டும் அப்போதைய பாடல்ஆனால்என்றும்பொருந்தும்

    • @manimegalaik1391
      @manimegalaik1391 10 месяцев назад +1

      உறவுகள் உள்மனம் அதை புரிந்து கொள்ள வேண்டும்

    • @kannakanna9212
      @kannakanna9212 9 месяцев назад +1

      ​@@manimegalaik1391உங்கள் மனம் ஏதோ ஒரு வகையில் காயப்பட்டுள்ளதோ?

  • @palusamyvijayaraj4189
    @palusamyvijayaraj4189 2 года назад +26

    கண்ணதாசா திரும்பி வா

  • @rajendranveerasamy9160
    @rajendranveerasamy9160 11 месяцев назад +1

    இது போன்ற பாடல்கள் கவியரசு கண்ணதாசன் ஆல் மட்டும் முடியும் அவர் கடவுளின் அருள் பெற்ற மாமனிதன் ❤❤❤அவரை வனங்குகிறேன் 6:14

  • @dhanalakshmik1486
    @dhanalakshmik1486 8 месяцев назад

    Arumai...

  • @muthusamyashokkumar774
    @muthusamyashokkumar774 Год назад +20

    When I see this picture Sitthi, 25 yrs back I watched this Song and made burden on my heart, how much womanhood suffer in their life till their end. This song made great impact on me.

  • @KalaiSelvi-f8c
    @KalaiSelvi-f8c 10 месяцев назад +2

    அருமையான பாடல். 5:36 ❤❤❤

  • @punithasiva382
    @punithasiva382 7 месяцев назад +1

    ❤❤❤❤ super song❤❤❤❤

  • @theunknown-gl3mx
    @theunknown-gl3mx 8 месяцев назад +1

    காலம் இதை தவறவிட்டால் தூக்கமில்லை மகளே...

  • @annadurai1482
    @annadurai1482 Месяц назад

    Super song...those are having daughters like song...

  • @SanSan-wt6pk
    @SanSan-wt6pk 8 месяцев назад

    The Legend one of Tamil Cenema, one and only Mr. Kanadasan. Only he can come up with these magical Lines, Reality of women's life nicely expressed.