Poosuvathum venniru / திருச்சாழல் / Thiruchaazhal / Maanikavaasagar / Thiruvasagam
HTML-код
- Опубликовано: 10 фев 2025
- Vocal: Thirumanthira Nagar Kesavaraj Krishnan
Composer: Sangeetha Vidhushi Thirumathi Leelavathy Gopalakrishnan
Violin: Isai Kalai Mani Karthikeyen Ganapathi
Mirudangam: Sunnatha Nanthi Ratna Kala Sri Sivakumarasan Indran
Gadam: Karthik Krishnasamy
Morsing: Rajasegaran S.Ramasamy
Mixing & Mastering: Unik Studio, Chennai
Videography : Humble Tree Productions
பூசுவதும் வெண்ணீறு பூண்பதுவும் பொங்கரவம்
பேசுவதும் திருவாயால் மறைபோலுங் காணேடீ
பூசுவதும் பேசுவதும் பூண்பதுவும் கொண்டென்னை
ஈசனவன் எவ்வுயிர்க்கும் இயல்பானான் சாழலோ.
Q: He smears holy ash on His body, wears a hooded snake and speaks about sacred Vedas with His holy lips. (What kind of a person is He?)
A: By what He smears, speaks and wears He shows that He is the supreme god of all living things and He becomes the norm to all that is natural.
கோயில் சுடுகாடு கொல்புலித்தோல் நல்லாடை
தாயுமிலி தந்தையிலி தான் தனியன் காணேடீ
தாயுமிலி தந்தையிலி தான்தனியன் ஆயிடினும்
காயில் உலகனைத்துங் கற்பொடிகாண் சாழலோ.
Q: His temple is the burning ground, deadly tiger skin is His clothes. He has no mother or a father and lives a lonely life. Can you see that?
A: Though He is lonely without a mother or a father, He is so powerful that His anger will reduce this world to dust.
அயனை அனங்கனை அந்தகனைச் சந்திரனை
வயனங்கள் மாயா வடுச்செய்தான் காணேடீ
நயனங்கள் மூன்றுடைய நாயகனே தண்டித்தால்
சயமன்றோ வானவர்க்குத் தாழ்குழலாய் சாழலோ.
Q: He caused scars which cannot be rid of, to Brahman, Manmathan, Yaman and Chandiran. Can’t you see that?
A: O damsel with flowing hair! When our Lord with three eyes punishes them, know that it is a victory to the celestials.
(தில்லையில் அருளியது /நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)
பூசுவதும் வெண்ணீறு பூண்பதுவும் பொங்கரவம்
பேசுவதும் திருவாயால் மறைபோலுங் காணேடீ
பூசுவதும் பேசுவதும் பூண்பதுவுங் கொண்டடென்னை
ஈசனவன் எவ்வுயிர்க்கும் இயல்பானான் சாழலோ. 255
என்னப்பன் எம்பிரான் எல்லார்க்குந் தானீசன்
துன்னம்பெய் கோவணமாக் கொள்ளுமது என்னேடீ?
மன்னுகலை துன்னுபொருள் மறைநான்கே வான்சரடாத்
தன்னையே கோவணமாச் சாத்தினன்காண் சாழலோ. 256
கோயில் சுடுகாடு கொல்புலித்தோல் நல்லாடை
தாயுமிலி தந்தையிலி தான் தனியன் காணேடீ
தாயுமிலி தந்தையிலி தான்தனியன் ஆயிடினும்
காயில் உலகனைத்துங் கற்பொடிகாண் சாழலோ. 257
அயனை அனங்கனை அந்தகளைச் சந்திரனை
வயனங்கள் மாயா வடுச்செய்தான் காணேடீ
நயனங்கள் மூன்றுடை நாயகனே தண்டித்தால்
சயமன்றோ வானவர்க்குத் தாழ்குழலாய் சாழலோ. 258
தக்கனையும் எச்சையும் தலையறுத்துத் தேவர்கணம்
தொக்கனவந் தவர்தம்மைத் தொலைத்ததுதான் என்னேடீ?
தொக்கனவந் தவர்தம்மைத் தொலைத்தருளி அருள்கொடுத்தங்கு
எச்சனுக்கு மிகைத்தலைமற் றருளினன் காண் சாழலோ. 259
அலரவனும் மாலவனும் அறியாமே அழலுருவாய்
நிலமுதற்கீழ் அண்டமுற நின்றதுதான் என்னேடீ?
நிலமுதற்கீழ் அண்டமுற நின்றிலனேல் இருவருந்தம்
சலமுகத்தால் ஆங்காரந் தவிரார்காண் சாழலோ. 260
மலைமகளை யொருபாகம் வைத்தலுமே மற்றொருத்தி
சலமுகத்தால் அவன்சடையிற் பாயுமது என்னேடீ?
சலமுகத்தால் அவன்சடையிற் பாய்ந்திலளேல் தரணியெல்லாம்
பிலமுகத்தே புகப்பாய்ந்து பெருங்கேடாஞ் சாழலோ. 261
கோலால மாகிக் குரைகடல்வாய் அன்றெழுந்த
ஆலாலம் உண்டான் அவன்சதுர்தான் என்னேடீ?
ஆலாலம் உண்டிலனேல் அன்றயன்மால் உள்ளிட்ட
மேலாய தேவரெல்லாம் வீடுவர்காண் சாழலோ. 262
தென்பா லுகந்தாடுந் தில்லைச்சிற் றம்பலவன்
பெண்பா லுகந்தான் பெரும்பித்தன் காணேடீ
பெண்பா லுகந்திலனேற் பேதாய் இரு நிலத்தோர்
விண்பாலி யோகெய்தி வீடுவர்காண் சாழலோ. 263
தானந்தம் இல்லான் தனையடைந்த நாயேனை
ஆனந்த வெள்ளத் தழுத்துவித்தான் காணேடீ
ஆனந்த வெள்ளத் தழுத்துவித்த திருவடிகள்
வானுந்து தேவர்கட்கோர் வான்பொருள்காண் சாழலோ. 264
நங்காய் இதென்னதவம் நரம்போ டெலும்பணிந்து
கங்காளந் தோள்மேலே காதலித்தான் காணேடீ
கங்காளம் ஆமாகேள் காலாந்த ரத்திருவர்
தங்காலஞ் செய்யத் தரித்தனன்காண் சாழலோ. 265
கானார் புலித்தோல் உடைதலைஊண் காடுபதி
ஆனா லவனுக்கிங் காட்படுவார் ஆரேடி?
ஆனாலும் கேளாய் அயனுந் திருமாலும்
வானாடர் கோவும் வழியடியார் சாழலோ. 266
மலையரையன் பொற்பாவை வாள்நுதலான் பெண்திருவை
உலகறியத் தீவேட்டான் என்னுமது என்னேடீ
உலகறியத் தீவேளே தொழிந்தனனேல் உலகனைத்துங்
கலைநவின்ற பொருள்களெல்லாங் கலங்கிடுங்காண் சாழலோ. 267
தேன்புக்க தண்பனைசூழ் தில்லைச்சிற் றம்பலவன்
தான்புக்கு நட்டம் பயிலுமது என்னேடீ?
தான்புக்கு நட்டம் பயின்றிலனேல் தரணியெல்லாம்
ஊன்புக்க வேற்காளிக் கூட்டாங்காண் சாழலோ. 268
கடகரியும் பரிமாவும் தேரும்உகந் தேறாதே
இடபம்உகந் தேறியவா றெனக்கறிய இயம்பேடீ
தடமதில்கள் அவைமூன்றுந் தழலெரித்த அந்நாளில்
இடபமதாய்த் தாங்கினான் திருமால்காண் சாழலோ. 269
நன்றாக நால்வர்க்கும் நான்மறையின் உட்பொருளை
அன்றாலின் கீழிருந்தங் கறமுரைத்தான் காணேடீ
அன்றாலின் கீழிருந்தங் கறமுரைத்தான் ஆயிடினுங்
கொன்றான்காண் புரமூன்றுங் கூட்டோ டே சாழலோ. 270
அம்பலத்தே கூத்தாடி அமுதுசெயப் பலிதரியும்
நம்பனையுந் தேவனென்று நண்ணுமது என்னேடீ?
நம்பனையும் ஆமாகேள் நான்மறைகள் தாமறியோ
எம்பெருமான் ஈசாவென் றேத்தினகாண் சாழலோ. 271
சலமுடைய சலந்தரன்தன் உடல்தடிந்த நல்லாழி
நலமுடைய நாரணற்கன் றருளியவா றென்னேடீ?
நலமுடைய நாரணன்தன் நயனம்இடந் தானடிக்கீழ்
அலராக இடஆழி அருளினன்காண் சாழலோ. 272
அம்பரமாம் புள்ளித்தோல் ஆலாலம் ஆரமுதம்
எம்பெருமான் உண்டசதுர் எனக்கறிய இயம்பேடீ
எம்பெருமான் ஏதுடுத்தங் கேதமுது செய்திடினும்
தம்பெருமை தானறியாத் தன்மையன்காண் சாழலோ. 273
அருந்தவருக் காலின்கீழ் அறமுதலா நான்கினையும்
இருந்தவருக் கருளுமது எனக்கறிய இயம்பேடீ?
அருந்தவருக் கறமுதல்நான் கன்றருளிச் செய்திலனேல்
திருந்தவருக் குலகியற்கை தெரியாகாண் சாழலோ. 274
திருச்சிற்றம்பலம்
🙏
Thank you so much ❤️❤️ ❤️💐💐💐
🙏
Sajala manadhukku oru aruthal.sivaya namaha.
சங்கீதம் கற்காத என்னை போன்ற கடைநிலை பக்தர்கள், பாட கற்று கொள்ள இன்னும் திருவாசக பாடல்கள் பாடி அருள வேண்டும்.. குருவே.. தாங்கள் சிவபுராணம் தினமும் கேட்கிறேன் ஐயா..
சிவனது பேராற்றல் தங்களை ஈர்த்து இவ்வாறு
உள்ளத்தை உருக்கும் வகையில் பாடச் செய்கிறது போலும்.
வாழ்க!.......வளர்க!
அடியேன் கிருஷ்ணன்.
தென்காசி 11.05.2022.
மிகவும் அருமை ஐயா.இராகம் பெயர் . வேண்டுகிறேன்.ராகமாலிகை போல் வருகிறது.
Om Namah Shivaya Vaazhgha...♥️💐🙏
வணக்கம் ஐயா 🙏 இந்த பாடலை கேட்கும்போதெல்லாம் இறைவனை கண்முன்னே உணரச்செய்கிறது. என்நேரமும் தங்களுடைய குரல் ஒலித்த வண்ணம் .........உள்ளது இல்லம் 😍😍😍😍 மிக்க நன்றி 💐💐💐 🙏🙏🙏
இந்த நடராஜ பெருமான் சிலை எங்கே செய்யபட்டது முகவரி கொடுங்கள் கேசவன் ஐயா..🙏
திருச்சிற்றம்பலம்..🙏
Nice.devaram.song.siva.siva. திருச்சாழல்.❤🎉
திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய சிவசிவ ஹர ஹர மகாதேவா 🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔
திருச்சிற்றம்பலம் 🙏🏻🙏🏻🙏🏻.
Ungal uruvathhil sivanai kangiren
honey.sweet.song.nice.sir.🕉️🌟🌺💙🦋🌙🌹🌟🌜🎶🎵Hari.om.sir.k.k
ஐயா உங்கள் குரலில் பாடல்களை கேட்கும் போது அப்படியே சிவன் தலத்தில்
அமர்ந்து உள்ளது போல்
தோன்றுகிறது. ஆன்மா இறைவனடி உறைந்தது போனது. தென்னாடு உடைய சிவனே போற்றி.
Anney intha varusam sivarathiri unga paattoda aarambichuruken 💝🙏
இப்பாடலை எல்லோரும் சதாரணமாக பாடுகின்றவிதத்தில் அல்லாமல் வித்தியாசமாகவும் அற்புதமாகவும் பாடினீர்கள் ஐயா. மிக்க நன்றி. சில அற்புத தேவார பதிகங்களை முழுதுமாக வழங்கினால் நல்லது.
திருசிற்றம்பலம் ஐயா, கண்டிப்பாக நன்றி🙏
வாழ்க வளமுடன் அருமை 👌 மென்மேலும் வளர இறைவனை பிரார்த்தித்துக் கொள்கின்றேன் 🙏 திருச்சிற்றம்பலம்
சிவாய நம,திருசிற்றம்பலம்
அய்யா சோதி டீவில எஙக கோயில் பத்தி பொடனுன காஸா இல்லையா அய்யா இது பாத்துட்டு எனக்கு சொல்லுஙக
Ur voice is amazing. Pls sing the whole song and release it asap,sir
Woove finaly got this song.. some body did a video of dharumapuram adheenam sannithanam withis music.. i just searching from that.. finaly i got.. thank u keshvji..
ஆஹா.. திருவாசகத்திற்கு உருகாதார் ஒருவாசகத்திற்கும் உருகார் ❤️
நமசிவய வாழ்க நாதன் தாள் வாழ்க 🙏 அருமையான தெய்வீகமான குரல்... வாழ்க சிவசகோ🙏
சிவாயநம
Your shivapuranam song is mesmerise if anyones listen
I respect you sir
Thank you so much Brother..so glad you watched my video and I appreciate your kind review. Sivayanama 🙏
❤🙏 Hari Om ❤️🙏
அற்புதம்❤
Super ²and 👍👍👍👍🙏🙏🙏🙏👂👂👂👂
🙏
Sivayanama Avan arullaale avan thaal vanangi yelumbai vurukkum thiruvaasagam thangal isaiyaal iraivanaiyum vuruga seidhirukkum naanenna adiyen thangal isaiyaal kuralaal kaatril karaindhu vitten thangalin saiva thondukku adiyenin 🙇🙇🙇🙇🙇 thiruchitrambalam
Sivayanama Ayya 🙏
Nicely rendered. Keep up the good work. Aalak Niranjan
Thank you sir 🙏
🙏🙇
very nice super good song
Sir my hearty thanks for ur wonderful creations, bakthi yil manam urugiyathu nathiganum aathiganan avan
Thiruchitrambalam 🙏🏾
ஐயா அப்பன் நடராஜ பெருமான் சிலை எங்கு வடிவமைத்தது ஐயா 🙏🙏🙏
Very Nice.
Siva Siva
🙏
Your voice is brilliant as usual👏👍👌🌷🕉
Thank you very much for sharing your very own version of பூசுவதும் which was a unique and soulful rendition that I'm sure will echo in many people's hearts and homes.
All the best and keep doing what you enjoy the most as it brings joy to others as well💐🌸🏵🌹🌻🌼
Cute Nadarajar by the way 😍
🎈மிக்க நன்றி தங்கள் பதிவில் மகிழ்ந்தேன் எம்பெருமான் திருவருள் தங்களுக்கும் நிறை அருளுடன் கிடைக்க விண்ணப்பிக்கிறேன்
திருசிற்றம்பலம் 🙏
@@keshavrajsofficial நன்றி ஐயா⚘
@@21nandini 💙💙💙💙🕉️💙💙💙💙💙💙💙🕉️🕉️🕉️🕉️
Superb Performance Vocal by Sri KeshavRaj Krishnan with his Team of Musicians on the Instruments with a Heartfelt Music.God Bless you and more blessings to follow in your future performances 🙌🏻🙏
Thank you for your endless support, kind words of encouragement and blessings ayya 💕
அருமையான பதிவு. அனைவர்க்கும் நன்றி. வாழ்க வளமுடன். ஓம் நமசிவாய.
சிவாய நம மிக்க நன்றி
திருசிற்றம்பலம்
Na onga big fan anna
Thank you so much for your support Thambi. Greatly appreciate.
ஈர்க்கும் காந்தகுரல்....
🙏🍁
அருமையான பதிவு ஐயா 🙏
🍁🙏
Kodaanu kodi nanrigal..... plz continue it.... plz..... Thiruchittrambalam.....🙏🙏🙏
Thiruchitrambalam 🙏
அருமை ஐயா
🙏🍁
அருமை ஐயா! ஓம் நமசிவாய
திருசிற்றம்பலம் ஐயா
Beautifully done nice again. Keep it up, brother. Thennaadudaiya Shivane Potri!
Thank you so much sister... I appreciate your kind review. Thiruchitrambalam 🙏
வாழ்த்துக்கள் நண்பரே...
தினம் உங்கள் குறள் தான்
பயண தொடக்கத்தில், உயிர்க்கு ஊட்டச்சத்து உங்கள் படைப்புகள். நன்றி.
மிக்க நன்றி நண்பா.
மனிதபிறவிஎடுத்தமைக்கு அற்புதமான குரலில் கேட்கவே
சிவாயநம
Devine
Thank you 🙏
சிவாயநம
சிவாய நம 🙏
🙏🙏🙏🙏🙏🙏
🍁🙏
🙏🙏🙏namashivayaaaaa
🙏 Sivayanama
om na ma sivaya
🙏
உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்றுள்ளீர்கள் அருமை.
திருச்சிற்றம்பலம்.
திருமுறையே சைவநெறிக் கருவூலம்
தென்தமிழின் தேன்பா காகும்
திருமுறையே கயிலையின் கண் சிவபெருமான்
செவிமடுத்த செந்தமிழ் வேதம்
திருமுறையே நடராசன் கரம் வருந்த
எழுதியருள் தெய்வ நூலாம்
திருமுறையே சொக்கேசன் மதிமலிவாய்
மலர்ந்தருளும் சிறப்பிற்றாமால்.
ஐயா திருமுறை எக்காலத்திலும் உயர் தமிழ் மறையே.. தங்கள் பதிவு புரிகிறது இப்பெழுதுள்ள இளம் தலைமுறையும் விரும்பும் வண்ணம் கொண்டு சேர்ப்பதில் எனது முயற்சி தொடரும் சிவாய நம
நன்றி ஐயா
திருசிற்றம்பலம்🙏
❤️ Melting sago..sivaya nama 🙏
Sivayanama
அருமை... வாழ்க வளமுடன்
நன்றி ,சிவாயநம
Hatsoff to your whole team. ஆனந்தக் கூத்தனை அலங்காரம் செய்து காண்பித்ததால் பிறவிப் பயனடைந்தேன். அருமையான பதிவு. திருச்சிற்றம்பலம்.
சிவாய நம, திருசிற்றம்பலம் ஐயா
Super bro
Om Nama Shivaya!!!
🙏
siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama 🕉️namasivaya 🕉️namasivaya 🕉️namasivaya 🕉️namasivaya 🕉️namasivaya
🙏🙏🙏🙏🙏siva siva
திருசிற்றம்பலம்
Very peaceful voice, looking forward for more songs from your voice 🙏🌹🌹🌹🌹🌹🌹
Thank you for your support, keep watching my upcoming videos. Appreciate your kind feedback🙏🙏
அருமை, வாழ்த்துக்கள் 🙏
நன்றி🙏
Sir, 🙏🙏🙏🙏
🙏 Nandrii amma
அருமை
🙏
Super
🙏
Ayya god bless you
Thank you Ayya 🙏
அற்புத குரல்வளம்
🙏
Your voice give peaceful and positive vibe ......keep providing sivaperuman song frequently Sir pls...🙏🙏🙏
Thank you sister, I will post more songs in the future
Thank you so much🙏🙏
👏👏👏👏👏👏👏🙏🙏🙏🥰👌🙏🙏👏
🍁
ஆக அற்புதம்! !🎵
🙏
🙏🙏🙏❤️😍💐💐
🙏
Bravo
Thank you so much for your comments sir 🙏
Bhakti mayam ah irruku
🙏
@@keshavrajsofficial Anna enoda vedio va pattu comment pannunga anna pleaseeeeee🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Can you specify the different raghas. Excellent rendering
நன்றி அம்மா 🙏
ராகம் : பாகேஸ்ரி
(ஸ க2 ம1 த2 நி2 ஸ்/ ஸ் நி2 த2 ம1 ப த2 க2 ம1 ரி2 ஸ)
பூசுவதும் வெண்ணீறு
பூண்பதுவும் பொங்கரவம்
பேசுவதும் திருவாயால்
மறைபோலுங் காணேடீ
பூசுவதும் பேசுவதும்
பூண்பதுவுங் கொண்டென்னை
ஈசனவன் எவ்வுயிர்க்கும்
இயல்பானான் சாழலோ.
ராகம் : அடாணா
(ஸ ரி2 ம1 ப நி3 ஸ் / ஸ் நி3 த2 ப ம1 க3 ரி2 ஸ)
கோயில் சுடுகாடு
கொல்புலித்தோல் நல்லாடை
தாயுமிலி தந்தையிலி
தான்தனியன் காணேடீ
தாயுமிலி தந்தையிலி
தான்தனியன் ஆயிடினுங்
காயில் உலகனைத்துங்
கற்பொடிகாண் சாழலோ.
ராகம் : சிவரஞ்சனி
( ஸ ரி2 க2 ப த2 ஸ்/ ஸ் த2 ப க2 ரி2 ஸ)
அயனை அநங்கனை
அந்தகனைச் சந்திரனை
வயனங்கண் மாயா
வடுச்செய்தான் காணேடீ
நயனங்கள் மூன்றுடைய
நாயகனே தண்டித்தால்
சயமன்றோ வானவர்க்குத்
தாழ்குழலாய் சாழலோ.
I heard for quite a no of times and practised and sang in our bhajan group
🙏👌👌
Thank you thambii
🙏
Aparam onga voice ku na adiymai
🙏
SIVAYANAMA
Sivayanama 🙏
௮ம்மையப்பா,, ❤❤🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
❤❤❤❤❤❤❤🪔🪔🪔🪔🪔🪔🕉️🕉️🕉️🕉️🕉️🌺🌺🌺💯👌👌👌👌👌👌
அருமை
OM NAMA SHIVAYA
🙏🏾
அருமை ஐயா
💙💙💙💙💙🕉️🕉️🕉️🕉️✨✨✨✨✨✨🙏🙏🙏🙏🙏🙏🌟🌟🌟🌟🌟🌟🌙🌙🌙💞💞💞