2025 ஜனவரி அரசு ஊழியர்கள் பென்சனர்கள் அகவிலைப்படி உயர்வு சற்று முன் வெளியான புதிய தகவல்
HTML-код
- Опубликовано: 7 янв 2025
- நாளுக்கு நாள் அதிகரிக்கும் விலைவாசி மற்றும் பணவீக்கத்தை சமாளிக்க மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு டிஏ மற்றும் டிஆர் வழங்கப்படுகின்றன.
ஜூலை 2024 முதல் டிசம்பர் 2024 வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் தரவுகளின் அடிப்படையில் ஜனவரி மாத அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் தீர்மானிக்கப்படும்.
ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான ஏஐசிபிஐ குறியீடு 141.5 ஆகும். இதன் மூலம் டிஏ மதிப்பெண் 54.49ஐ எட்டியுள்ளது. சமீபத்தில் தொழிலாளர் அமைச்சகம் அக்டோபர் மாத ஏஐசிபிஐ குறியீட்டு எண்களை வெளியிட்டது. அக்டோபர் மாத எண்கள் 1.2 புள்ளிகள் அதிகரித்துள்ளன.
டிசம்பர் 2024 -க்குள் குறியீடு 144.45 -ஐ எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிசம்பர் மாத ஏஐசிபிஐ எண்கள் வந்தபிறகு, அகவிலைப்படியில் 3% அதிகரிப்பு காணப்படலாம் என்றும் மொத்த அகவிலைப்படி 56% ஆக அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.