234. நீரு(ம்) நிலம் அண்டாத (திருப்புகழ்) - Neerum Nilam Andatha (Thirupugazh)

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 янв 2025
  • 234. நீரு(ம்) நிலம் அண்டாத (திருப்புகழ்) - Neerum Nilam Andatha (Thirupugazh)
    (வரிசை எண் - 1111 - பொதுப்பாடல்கள்)
    நீரு(ம்) நிலம் அண்டாத
    தாமரை படர்ந்து ஓடி
    நீளம் அகலம் சோதி
    வடிவான (2)
    நேச மலரும் பூவை
    மாதின் மணமும் போல
    நேர் மருவி உண் காதல்
    உடன் மேவி (2)
    சூரியனுடன் சோமன்
    நீழல் இவை அண்டாத
    சோதி மருவும் பூமி
    அவை ஊடே (2)
    தோகை மயிலின்
    பாகனாம் என மகிழ்ந்து
    ஆட சோதி அயிலும்
    தாரும் அருள்வாயே (2)
    வாரி அகிலம் கூச
    ஆயிரம் பணம் சேடன்
    வாய் விட ஒடு எண்
    பாலும் உடு போல (2)
    வார் மணி உதிர்ந்து ஓடவே
    கவின் நிறைந்து ஆட
    மா மயில் விடும் சேவல்
    கொடியோனே (2)
    ஆரியன் அவன் தாதை
    தேடி இனமும் பாடும்
    ஆடல் அருணம் சோதி
    அருள் பாலா (2)
    ஆனை முகவன் தேடி
    ஓடியே அ(ண்)ண அம் காதல்
    ஆசை மருவும் சோதி
    பெருமாளே (2)
    சூரியனுடன் சோமன்
    நீழல் இவை அண்டாத
    சோதி மருவும் பூமி
    அவை ஊடே
    தோகை மயிலின்
    பாகனாம் என மகிழ்ந்து
    ஆட சோதி அயிலும்
    தாரும் அருள்வாயே
    சோதி அயிலும் தாரும்
    அருள்வாயே!!
    பெருமாளே!!

Комментарии •