காமாட்சி அம்மை பதிகம் வரிகளுடன்(see desc)/kamatchi ammai pathigam with lyrics

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • காமாட்சி அம்மை பதிகம்/kamatchi ammai
    pathigam ‪@chinnuscafe111‬
    காமாட்சி அம்மை பதிகம்
    உந்திக்கு ளுலகனைத்து முயிர்த்தளித்த வுன்றன்னைப்
    புந்திக்கு ளிருத்துதற்குப் போதுமோ போதமர்ந்தார்
    வந்திக்கு மரியவளே வடிவுடைகா மாட்சியுனைச்
    சிந்திக்கு மடியேற்குத் திருவளிக்குந் திருவுடையோய் !(1)
    மாவோடு மலர்க்கொன்றை வன்னிகணை யைம்போதின்
    காவோடு களிக்கச்சிக் காமாட்சி யம்மையுனை
    நாவோடு புகழ்ந்தறியேன் நவின்றுபூ சனைபுரியும்
    பூவோடு னடிபோற்றப் புகலளித்தற் கெய்தாயோ !(2)
    இருளென்னச் சூழ்மாய விருவினைக்குட் கிடந்ததரிய
    பொருளென்னப் பற்றுதற்குப் புல்லறிவு மில்லாதான்
    உருளென்னப் பிறவிதொறு முழல்கின்ற அடியேற்கின்
    றருளென்ன வருளினையே அம்மைகா மாட்சியுமை ! (3)
    வேதத்தின் முன்னானாய் விஞ்சைக்கு மரிதானாய்
    பூதத்தின் உண்ணின்றாய் போக்குவர வேயிகந்தாய்
    நாதத்தின் வித்தானாய் நங்கைகா மாட்சிநினோர்
    பாதத்தின் சிறுவிரலைப் பரந்தவகல விடம்கொளுமோ ! (4)
    பண்ணுற்ற வின்மொழியாய்
    பாலுற்ற வெண்ணகையாய்
    எண்ணுற்ற எண்ணமெலாஎண்ணமெலா மீடேற்ற வல்லவியே
    விண்ணுற்ற எவ்வெவர்க்கும் மேலாய தேவியுனைக்
    கண்ணுற்ற வர்க்கினிய காஞ்சிகா மாட்சியுமை ! (5)
    அழுந்தோறும் மகற்கன்னை யகமகிழ்ந்துச் செம்பரிதி
    எழுந்தோருறும் மலர்கஞ்ச மெனவுளத்தோ டூட்டுவள்போல்
    விழுந்தோறும் நின்னடியில் விருப்போடு மெடுத்தணைத்துத்
    தொழுந்தோறுங் காத்தியுயிர் தொழுங்காம நாட்டத்தோய் ! (6)
    மதியருளும் மதியேயோ வழிபுகட்டும் ஒளியேயோ
    கதியருளுங் கதியேயோ கடவுட்கா மாட்சியுயர்
    நிதியருளும் நிதியேயோ நினைத்தடியேன் புகழ்ந்துரையுந்
    துதியருளும் படிவேண்டின் துதித்திடுமா றருளுதியே ! (7)
    அரவினோ ராழியணி அம்மையுல கெங்கினுமுன்
    உரவினோ டுயிரளிப்பை யொருவனெனக் கொளிப்பமெனக்
    கரவினோ ருளங்கொள்ளின் கறைகொளுமுன் புகழுன்னைப்
    பரவினோ ரவர்கட்குப் பரிந்தருள்கா மாட்சியுமை ! (8)
    தூற்றுவரா யினுமுன்னைத் தொழுதிலரா யினுமொருவர்
    தேற்றுவரா ரும்மிலராஞ் சிறியவர்தந் துயர்கடிந்துச்
    சேற்றுவரா லுருவிழியோய் சிறுமையெலாந் தவிர்நின்னைப்
    போற்றுவரா லருளுமைநீ புகழ்காம கோட்டத்தோய் ! (9)
    அம்மாவோ யாங்களுயிர்க் காதரமே யென்றென்று
    விம்மாவோ லிட்டழைத்தல் விண்கிழிக்கு மண்மையுளாய்
    சும்மாவோ நீயிருப்பை சுந்தரனே கம்பனொடும்
    பொம்மாவோ லக்கமமர் போதுசெவி கேளாதோ ! (10)
    செம்பிட்ட முலைமுழுதுந் திமிர்குங்கு மந்தோய
    வம்பிட்ட சிலைவிழியி னருட்பொழியுங் காமாட்சி
    எம்பிட்ட முதையுண்டா னிடத்தொருபா லிருந்தோயைக்
    கும்பிட்ட அடியேங்கட் குலமுழுது மளிப்பவளே ! (11)
    அம்மை மலரடி வாழ்க !!
    ‪@chinnuscafe111‬
    kamatchi
    amman
    slokas
    tamil slokas
    devi stuti
    kanchi kamatchi stuti
    kanchee kamakshi stuti
    stotrams in tamil
    thei pirai panchami
    காமாட்சி
    காஞ்சிபுரம்
    காஞ்சி காமாட்சி
    காமகோடி
    அம்மன் துதி
    தமிழ் துதிகள்
    பதிகம்
    பதிகங்கள்
    அன்னை துதி

Комментарии • 3

  • @gomathiganesh8724
    @gomathiganesh8724 Год назад

    You mentioned with lyrics . Please add the words to the comments or description . Very naturally sung. Thank you for the upload.

    • @chinnuscafe111
      @chinnuscafe111  Год назад

      Sure will add in description. Give me some time mam🙂🙏will msg u as I add

    • @chinnuscafe111
      @chinnuscafe111  Год назад

      Uploaded full lyrics in description. 🙂