பெங்களூருவில் வேகமாக பரவும் டெங்கு காய்ச்சலுக்கு ஒருவர் பலி. தமிழ்நாட்டில் பரவும் அபாயம்..

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 авг 2024
  • கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் செல்வம் 03/07/2024
    பெங்களூருவில் வேகமாக பரவும் டெங்கு காய்ச்சலுக்கு ஒருவர் பலி. தமிழ்நாட்டில் பரவும் அபாயம் இருப்பதால், தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை.
    கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த சில தினங்களாக டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. நேற்று முன்தினம் டெங்கு காய்ச்சல் காரணமாக பெங்களூருவில் ஒருவர் பலியான நிலையில் அங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
    அண்டை மாநிலமான கர்நாடக மாநிலத்திற்கும் அங்கிருந்து தமிழ்நாட்டிற்கும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சென்று வருகின்றனர். குறிப்பாக வேலை நிமித்தமாக பெங்களூர் புறநகர் பகுதிகளான அத்திப்பள்ளி சந்தாபுரம் பொம்மனஹள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் தமிழ்நாட்டிலிருந்து ஏராளமானவர்கள் சென்று வருகின்றனர்.
    இந்த நிலையில் பெங்களூர் மாநகரில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் அவைகள் தமிழ்நாட்டிற்கும் பரவக்கூடும் என்பதால் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள ஜூஜூவாடி சோதனை சாவடியில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் பொதுமக்களுக்கு பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Комментарии •