திருச்சுழி ஸ்ரீ திருமேனிநாதர் கோவிலில் வெகு விமரிசையாக நடைபெற்ற சங்காபிஷேகம்.
HTML-код
- Опубликовано: 11 дек 2024
- விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருள்மிகு ஸ்ரீ திருமேனிநாதர் துணைமாலை அம்மன் கோவில் மகா சங்காபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
108 சங்குகளில் புனித நீர் நிரப்பப்பட்டு யாகசாலை பூஜைகள்
நடைபெற்றன.
அதன் பின்னர், சுவாமி மற்றும் அம்மனுக்கு சங்குகளில் உள்ள புனித நீர் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சுவாமி மற்றும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
கார்த்திகை மாதம் மூன்றாம் சோம வாரத்தில் நடைபெற்ற இந்த சங்காபிஷேக உற்சவத்தில் திருச்சுழி, அருப்புக்கோட்டை மற்றும் காரியாபட்டி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி மற்றும் அம்மனைத் தரிசனம் செய்தனர்.