"விறகுவெட்டியின் மனைவி" - சொர்க்கத்தில் முதலில் நுழையும் பெண்ணின் சரிதம் ..|| இறையன்பன் குத்தூஸ்.
HTML-код
- Опубликовано: 9 фев 2025
- சொர்க்கத்தில் முதலில் நுழையும்
பெண்ணைப் பற்றி சரிதம் கேளுங்கள்
கொஞ்சம் கவனம் வையுங்கள்
அன்னை ஃபாத்திமா காலத்து சம்பவமிது புரிந்து கொள்ளுங்கள்
பெண்களே தெரிந்து கொள்ளுங்கள்
-----------------------------------------------------------------------------------------------------------------
இறையன்பன் குத்தூஸ் பாடிய, பாத்திமா நாயகியின் காலத்தில் நடைபெற்ற சம்பவத்தை குறிப்பிடும் "சொர்க்கத்தில் முதலில் நுழையும் பெண்ணைப் பற்றி சரிதம் கேளுங்கள்" என்ற பாடல்.
------------------------------------------------------------------------------------------------------------------
LYRICS
சொர்க்கத்தில் முதலில் நுழையும்
பெண்ணைப் பற்றி சரிதம் கேளுங்கள்
கொஞ்சம் கவனம் வையுங்கள்
அன்னை ஃபாத்திமா காலத்து சம்பவமிது புரிந்து கொள்ளுங்கள்
பெண்களே தெரிந்து கொள்ளுங்கள்
ஒருநாள் நபியிடத்தில் அன்னை பாத்திமா
கேள்வி கேட்டாராம்
சொர்க்கத்தில் முதலில் நுழையும் பெண்ணை பற்றி
செய்தி கேட்டாராம்
நபிகள் சிரித்துக் கொண்டாராம்
உடனே எடுத்துச் சொன்னாராம்
நபிகள் சிரித்துக் கொண்டாராம்
உடனே எடுத்துச் சொன்னாராம்
என் அருமை மகளே
நீ சொர்க்கத்திற்கு தலைவியே ஆவாய்
என்றாலும் விறகு வெட்டி மனைவி ஒருத்தி
முதலிலே போவாள்
என்றாலும் விறகு வெட்டி மனைவி ஒருத்தி
முதலிலே போவாள்
அந்த ஒரு பெண்ணின் வீடு உனது வீட்டிற்கு
பக்கத்திலே என்றார்
அன்னையோ அந்த பெண்ணை பார்ப்பதிலே
ஆவலைக் கொண்டார்
அலியாரின் அனுமதியை பெற்றுக் கொண்டு
காணவே சென்றார்
வாசலில் நின்று அந்த வீட்டுக் கதவை
அன்னை தட்டினார்
யாரது என்ற ஒரு குரல் மட்டும்
காதில் எட்டியது
நான் தான் நபிமக்களார் பாத்திமா
உம்மமைக் காணவே வந்தேன்
நான் உங்கள் வீட்டுக்குள்ளே உங்களிடம்
பேசவே வந்தேன்
இவ்விதம் அன்னை சொல்லியும்
வீட்டுக்கதவு திறந்திடவில்லை
என் கணவர் இல்லா நேரம் கதவு திறக்க
அனுமதி இல்லை
என் கணவர் இல்லா நேரம் கதவு திறக்க
அனுமதி இல்லை
அல்லாஹ்வின் தூதர் மகளை காண்பதற்கு
ஆசை தான் எனக்கு
என்றாலும் என் கணவர் அனுமதியில்லை
தெரியுமா உமக்கு
நாளைக்கு மீண்டும் வந்தால் கணவரிடத்தில்
கேட்டு வைக்கிறேன்
நாயகியே வருந்திட வேண்டாம் நான் உங்களை
கேட்டுக் கொள்கிறேன்
விறகுவெட்டி சம்சாரத்தை சோதிக்கவே அன்னை நாடினார்
மறுநாள் புதல்வர்களை அழைத்துக் கொண்டு
வீடு ஏகினார்
கதவினை தட்டியதும் யாரது என குரலும் கேட்டது
ஹாசிம் நபி மகள் வந்துள்ளேன்
ஹசன் ஹுஸைனும் கூட வந்துள்ளார்
என்று அன்னை சொன்னதுமே
விறகு வெட்டி மனைவி கூறினார்
என்னுடைய கணவரிடம் நீங்க வர அனுமதி பெற்றேன்
என்னுடைய கணவரிடம் நீங்க வர அனுமதி பெற்றேன்
என்றாலும் உங்கள் புதல்வர் உள்ளே வர
அனுமதி இல்லை
என்றாலும் உங்கள் புதல்வர் உள்ளே வர
அனுமதி இல்லை
நாயகியே மறுத்தமைக்கு என்னை நீங்கள்
மன்னிக்க வேண்டும்
நான் கூறும் வார்ததைகளை தயவு செய்து
சிந்திக்க வேண்டும்
மூன்றாம் நாள் தனிமையிலே அன்னை பாத்திமா
மறுபடி சென்றார்
முன்செய்த படியே அந்த வீட்டுக்கதவை
அன்னை தட்டினார்
விறகு வெட்டி மனைவி வந்து கதவை திறந்து
உள்ளே அழைத்தார்
விறகு வெட்டி மனைவி வந்து கதவை திறந்து
உள்ளே அழைத்தார்
என்னுடைய கணவரிடம் வருகை குறித்து
அனுமதி கேட்டேன்
எம்பெருமான் குடும்பத்தினர் யார்வந்தாலும்
தடையில்லை என்றார்
எம்பெருமான் குடும்பத்தினர் யார்வந்தாலும்
தடையில்லை என்றார்
இருவரும் இவ்விதமாய் பேசிக்கொண்டு
இருந்த போதிலே
இறைவன் தொழுகைக்காக அஸர் நேரம்
பாங்கு கேட்டது
கை கால்கள் ஒழுவெடுத்து
இருவருமே தொழுதிடலானார்
கண்களில் நீர் பெறுக
இறைவனிடம் வருந்திடலானார்
தொழுகையை முடித்துடுக்கொண்டு வேறொருபுறம்
அன்னை அமர்ந்தார்
தன்மையுள்ள விறகுவெட்டி மனைவி
அஸர் தொழுகைக்குப் பின்னே
தன்னிரு கைகள் ஏந்தி உருக்கமான
பிரார்த்தனை கேட்டார்
அல்லா நான் செய்யும் சேவையிலே
என் கணவர் மகிழ்ந்திட வேண்டும்
அவருக்கு ஆயுள்பலம் தேகநலம்
அளித்திட வேண்டும்
அவருக்கு ஆயுள்பலம் தேகநலம்
அளித்திட வேண்டும்
என்னுடைய பிரார்த்தனையை என் இறைவா
ஏற்றுக் கொள்வாயே
என்று துஆ முடித்து விறகு வெட்டி மனைவி எழுந்தார்
அங்கிருந்த அன்னை பாத்திமா அதனைக் கண்டு
நெஞ்சம் நெகிழ்ந்தார்
அல்ஹம்துலில்லா என உணர்ச்சி பொங்க
கூறி நெகிழ்ந்தார்
அஸ்லலாமு அலைக்கும் என ஸலாம் கூறி
விடை பெற்றுக் கொண்டார்
அடுத்த நாள் தனதருமை தந்தையிடம்
நடந்ததைச் சொன்னார்
அடுத்த நாள் தனதருமை தந்தையிடம்
நடந்ததைச் சொன்னார்
இறைவனை வணங்காமல் வேறெதுவும்
வணங்க கட்டளையிருந்தால்
இனிதான கணவனையே வணங்கும்படி
அனுமதித்திருப்பேன்
இனிதான கணவனையே வணங்கும்படி
அனுமதித்திருப்பேன்
கணவனின் உடமைகளை கவனமாக காத்துக் கொள்பவள்
கணவனின் நம்பிக்கைக்கு பாத்திரமாய் நடந்து கொள்பவள்
கணவனின் குணமறிந்து கனிவு கொண்டு கடமை செய்பவள்
கணவனின் காலடியில் காலமெல்லாம் சேவை செய்பவள்
கணவனின் ஆணையின்றி வீட்டில் பிறரை சேர்த்திடாதவள்
கணவனின் எதிரில் கையை தரக்குறைவாய் நீட்டிடாதவள்
கணவனின் எதிரில் கையை தரக்குறைவாய் நீட்டிடாதவள்
நாளைய சொர்க்கத்திலே நல்லிடத்தை பெற்றுக் கொள்வாளே
நரகத்தின் கொடுமையான தண்டனையின்றி தப்பிக் கொள்வாளே
நரகத்தின் கொடுமையான தண்டனையின்றி தப்பிக் கொள்வாளே
என்னருமை பாத்திமாவே ஒட்டகத்தில்
நீ வரும் பொது
ஏற்புடைய விறகுவெட்டி மனைவி அந்த
ஒட்டக கயிற்றை
கையிலே பிடித்தபடி முதலில் சொர்க்கம் நுழைந்திடுவாளே
கண்ணான என் மகளே அடுத்தபடி நீ நுழைவாயே
என்று நபி நாயகமே
எடுத்துரைத்தார் அருமைத் தாயமாரே
எந்நாளும் ரசூல் சொல்லை ஏற்றுக் கொண்டால்
ஜெயம் பெருவீரே
எந்நாளும் ரசூல் சொல்லை ஏற்றுக் கொண்டால்
ஜெயம் பெருவீரே
எந்நாளும் ரசூல் சொல்லை ஏற்றுக் கொண்டால்
ஜெயம் பெருவீரே
எந்நாளும் ரசூல் சொல்லை ஏற்றுக் கொண்டால்
ஜெயம் பெருவீரே ...................
_____________________________________________________________________