Sivanar Manam Kulira-சிவனார் மனங்குளிர-திருப்புகழ்-Thiruppugazh-சுவாமிமலை நவரத்னமாலை - விருத்தம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 фев 2025
  • #SivanarManamKulira, #சிவனார்மனங்குளிர, #திருப்புகழ், #Thiruppugazh, #Arunagirinathar, #அருணகிரிநாதர்,
    #நின்பக்கல் அன்பில்லா, #சங்கடங்கள்தீர்க்கும், #சுவாமிமலைநவரத்னமாலை,
    #WithLyrics, #Parayanam, #Shaivam, #சைவம், #Saivam,
    #Thirumurai , #திருமுறை, #ThirumuraiAmudham, #திருமுறைஅமுதம், #PanniruThirumurai, #பன்னிருதிருமுறை, #TamilMusic, #TamilIsai, #தமிழ்இசை, #KREswaran, #KRஈஸ்வரன் , #ThirumuraiselvarPerasiriyarKREswaran, #திருமுறைச்செல்வர்பேராசிரியர்ஈஸ்வரன் #DrSrividhyaChandrasekar, #PannisaiselviDrSrividhyaChandrasekar, #Shaivam, #சைவம், #SrividhyaEswaran, #Saivam,#பண்ணிசைச்செல்விமுனைவர்ஸ்ரீவித்யாசந்திரசேகர்,
    விருத்தம்
    சங்கடங்கள் தீர்க்கும் சுவாமிமலை நவரத்ன மாலை
    ராகம் : பூர்விகல்யாணி
    நின்பக்கல் அன்பில்லாப் பாவியர் படுந்துயரம்
    நின்னடியர் தாமுறுவதும்,
    நின்னை என்றும் மறவாத புண்ணியர் பெருஞ் செல்வம் நிர்மூடர் தான் பெறுவதும்,
    ராகம் : முகாரி
    அன்புடன் நல்லறம் செய் தருமசாலிகள்
    அல்லலால் மனநோவதும்,
    அறந்தனை மறந்திடும் அசத்தியப் பேயர்கள்
    அகமகிழ்ந்தே வாழ்வதும்,
    ராகம் : மோஹனம்
    உன் மகிமையோ அல்லது கலியுகப் பெருமையோ?
    உனையன்றி அணு அசையுமோ?
    உலகினிற் கண்கண்ட மெய்யான தெய்வமே.
    உயர் பரங்குன்றில் உறைவாய்!
    ராகம் : தோடி
    வன் பகைச் சூர்வேர் களைந்ததுபோல் என்
    பகையை மாற்றிடும் வடிவேலவா!!
    வண்ணமயில் வாகனா! பொன்னேரகப்
    பதியில் வளர் சாமிநாத குருவே.
    திரு அருணகிரிநாதர் அருளிய
    திருப்புகழ்
    சிவனார் மனங்குளிர (பழநி)
    ராகம் : பூர்விகல்யாணி
    சிவனார் மனங்குளிர உபதேச மந்த்ரமிரு
    செவிமீதி லும்பகர்செய் ...... குருநாதா
    ராகம் : முகாரி
    சிவகாம சுந்தரிதன் வரபால கந்தநின
    செயலேவி ரும்பியுளம் ...... நினையாமல்
    ராகம் : மோஹனம்
    அவமாயை கொண்டுலகில் விருதாவ லைந்துழலு
    மடியேனை அஞ்சலென ...... வரவேணும்
    ராகம் : தோடி
    அறிவாக மும்பெருக இடரான துந்தொலைய
    அருள்ஞான இன்பமது ...... புரிவாயே
    ராகம் : பூர்விகல்யாணி
    நவநீத முந்திருடி உரலோடெ யொன்றுமரி
    ரகுராமர் சிந்தைமகிழ் ...... மருகோனே
    ராகம் : முகாரி
    நவலோக முங்கைதொழு நிசதேவ லங்கிருத
    நலமான விஞ்சைகரு ...... விளைகோவே
    ராகம் : மோஹனம்
    தெவயானை யங்குறமின் மணவாள சம்ப்ரமுறு
    திறல்வீர மிஞ்சுகதிர் ...... வடிவேலா
    ராகம் : தோடி
    திருவாவி னன்குடியில் வருவேள்ச வுந்தரிக
    செகமேல்மெய் கண்டவிறல் ...... பெருமாளே.

Комментарии • 32