ரெகார்டிங் வந்தேன்.. நா உள்ள வரலாமா? இங்க சாப்பிடலாமா? - கேட்ட எம்.எஸ்.அம்மா l

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024

Комментарии • 15

  • @jayasreesanthanam4570
    @jayasreesanthanam4570 Месяц назад +4

    உங்கள் இருவரையும் பார்த்தது ரொம்ப சந்தோஷம். காணொளி அருமை. வாழ்த்துக்கள்😊🎉🎉

  • @uksharma3
    @uksharma3 Месяц назад +3

    நீண்ட காலத்தின் பின் குடும்பத்தவர் அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து பார்க்கக்கூடிய ஒரு நிகழ்ச்சி. சம்பவங்களாக இல்லாமல், வாய்ப் பேச்சு மூலமே பார்வையாளர்களைக் கட்டிப்போட முடியும் என்பதற்கு உங்கள் இருவரினதும் உரையாடல் நல்ல எடுத்துக்காட்டு.
    பல அரிய தகவல்களைச் சொல்லியிருக்கிறீர்கள்.
    தொழில்நுட்ப வசதிகள் குறைவாக இருந்த காலத்தில் நேயர்கள் அறியாவண்ணம் நிகழ்ச்சியில் குறை இல்லாமலும், தொய்வு நேராமலும் வானொலியின் பெருமையைக் காப்பாற்றிய உங்கள் திறமையே திறமை.
    உண்மையில் தொழில் நுட்பம் மனிதர்களின் சொந்தத் திறமைகளை மழுங்கடிக்கிறது என்பது என்றுமே அடியேனின் அபிப்பிராயமாகும். உங்கள் செய்கை பற்றி அறிந்தது என் எண்ணத்துக்கு மேலும் வலுவூட்டியிருக்கிறது.
    ஸ்ரீமதியாரும் உங்களைத் தூண்டிவிடக் கூடிய வகையில் எடுத்துக் கொடுப்பது போல் உரையாற்றியது மேலும் சிறப்பு.
    நீங்கள் ஆன்மீகத்தைத் தொடாமல் உலகாயத விடயங்களுக்குள் நின்றுகொண்டு நல்லறிவு வளர உதவியிருக்கிறீர்கள்.
    நன்றி. வணக்கம்.

  • @njagadeesan2019
    @njagadeesan2019 Месяц назад +4

    எளிமையான‌ வாழ்க்கையை,‌ சிக்கலாக்காமல் இருக்க‌ தங்கள் அனுபவம்‌ பெற வைக்கும்.

  • @ckumshr
    @ckumshr Месяц назад +2

    அற்புதமான காணொளி . நல்ல ஒரு ஊக்கம் தரும் கலந்துரையாடல் . அவருக்கே உரித்தான பாணியில் தெள்ளத்தெளிவான அவரோட கணீர் குரலில் கேட்டு மனம் லயித்தேன், குறிப்பாக வடுமாங்காய் @18:40. இவர்களின் வாழ்க்கைத்தத்துவம் இன்றைய இளம் தம்பதியற்கு தேவையான ஒன்று. இவர் வேலையில் காட்டிய அந்த ஈடுபாடு @52:31 சவாலை எதிர்நோக்கி வெற்றி பெற்றது எல்லாமே இன்றைய தலைமுறை குறிப்பாக 2k கிட்ஸ் கற்றுக்கொள்ளவேண்டும் . சிறந்த கலந்துரையாடல். சங்கரா டிவி க்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள். 👏👏👏

  • @lakshmija
    @lakshmija Месяц назад +2

    ' அனுபவம் ', ' தத்துவப் பாடல்கள் ' குறித்து அவர்
    கூறியவை, உலகியலில்- பெரும்பாலோரின் கருத்துகளையொட்டியே!

  • @nirmalamuralikrishna7242
    @nirmalamuralikrishna7242 Месяц назад +2

    Excellent interview!😊

  • @kpjaishree1978
    @kpjaishree1978 Месяц назад +2

    Parents ku respect kudukavum avargalai kadaisi varai kuda irundu parthukolla vendum enra unnathamana uyarvana vishayathai eduthu sonna Thangal iruvarkum nanri

  • @kpjaishree1978
    @kpjaishree1978 Месяц назад +2

    அருமை

  • @ramamanibalaji6343
    @ramamanibalaji6343 Месяц назад +1

    சுருக்கமாகச் சொன்னால்,
    "எண்ணங்களே மனம்".
    மனமென்றொன்று கிடையாது!
    மனத்தை வழிபட முடியாது.

    • @lakshmija
      @lakshmija Месяц назад

      மனம் - கண்ணுக்குப் புலனாகாத 'அகக்கருவி'-அந்தக்கரணம்..சக்தி வழிபாட்டில், 'மனோமயகோசம்', அம்பாளுக்கு உரியதாகக் கருதப்படுகிறது... மனத்தினால் செய்யப்படுவது ' அக வழிபாடு '. மனமும் மனத்தில் உறையும் பரம்பொருளும் ஒன்றே...இதையே 'மனத்தை வழிபடுங்கள் ' என்று கூறியிருக்கிறார், ஐங்கரன்...

  • @ramamanibalaji6343
    @ramamanibalaji6343 Месяц назад

    காலை வேளைகளில் கூட தத்துவப் பாட்டுகள் சரியாகப் பொருந்தும்.
    அது அவரவர் சூழ்நிலையைப் பொருத்தது. பொத்தாம் பொதுவாகச் சொல்வது தவறு!
    எடுத்துக்காட்டாக, வேலையில் (அலுவலகத்திலோ, உடுலுழைத்து செய்யும் வேலையிலோ) மிக அழுத்தமிருந்தால், "போனால் போகட்டும் போடா!", போன்ற பாடல்கள் ஒரு மன நிம்மதியாக கொடுக்கலாம் (கொடுக்குமென்று சொல்லவில்லை; உங்களை மாதிரி அடித்துச் சொன்னால், நானும் ஜெயராமன் ஆகிவிடுவேன்)

  • @ramamanibalaji6343
    @ramamanibalaji6343 Месяц назад

    அனுபவிக்கறது வேறு, அனுபவப்படுவது வேறு.
    எல்லோருக்கும் எல்லாவற்றிலும் அனுபவம் வருகிறது. எல்லோரும் அனுபவத்தை ஒரே மாதிரி பார்ப்பதில்லை.
    அனுபவங்கள் சிலரை அமைதியானவர்களாக மாற்றுகிறது; சிலரை போராளிகளாக மாற்றுகிறது.
    எது சரி, எது தவறு என்பது அவரவர் பார்வையைப் பொருத்தது. ஒரு பதில் சொல்பவர்கள் முட்டாள்கள்.
    ஒரு சிறிய உதாரணம்:
    திபெத் விடுதலைக்காக குரல் கொடுப்பதை இந்தியா ஆதரிக்கிறது.
    ஆனால், காஷ்மீர் விடுதலைக்காகக் குரல் கொடுப்பதை பிரிவினை வாதம் என்று சொல்கிறது.
    சரியா, தவறா என்பது நாம் எந்த பக்கத்தில் இருக்கிறோமென்பதைப் பொருத்தது. அவ்வளவே!
    இப்பொழுது இஸ்ரேல் சரியா, அல்லது ஹமாஸ் சரியா?
    ரஷ்யா சரியா, அல்லது உக்ரைன் சரியா?
    இதற்கெல்லாம் "ஒரே ஒரு சரியான விடை" கிடையவே கிடையாது.
    "எந்த பக்கம் வெற்றி பெற்றால் எனக்கு லாபமோ, அது தான் சரி", என்பது தான் ஒவ்வொரு மனிதனின் உண்மையான எண்ணம்!

    • @uksharma3
      @uksharma3 Месяц назад

      திபெத் எப்போதுமே தனியாக இருந்த நாடு. அது வேறு எந்த நாட்டின் கீழும் இருந்ததில்லை. பிரிட்டன் இந்திய துணைக்கண்டம் முழுவதையும் தான் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவந்த பின்னரும் திபெத் தனி சுதந்திர நாடாக இருந்தது. அதை சீனா ஆக்கிரமித்துள்ளது. ஆகவே திபெத் தன் விடுதலைக்காகப் போராடுவதில் அர்த்தம் உள்ளது.
      காஷ்மீர் இந்தியத் துணைக்கண்டத்தின் ஒரு பகுதி. இந்தியத் துணைக்கண்டத்தில் பல்வேறு ராஜ்ஜியங்கள் இருந்தன. அதில் காஷ்மீரும் ஒன்று. பின்னர் ஆங்கிலேயர் பல ராஜ்ஜியங்களைக் கைப்பற்றினார்கள். சில ராஜ்ஜியங்களை ஒப்பந்தத்தின் அடிப்படையில் தனியாக இயங்க விட்டார்கள். அவற்றில் பெரிய ராஜ்ஜியங்களும் இருந்தன, சிரியவைகளும் இருந்தன. மைசூர், ஹைதராபாத், பரோடா, காஷ்மீர் பெரிய ராஜ்ஜியங்கள்.
      இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தபோது இந்தத் தனி ராஜ்ஜியங்கள் அதனோடு இணைக்கப்பட்டன. அப்போது காஷ்மீரையும் இந்தியாவோடு இணைக்குமாறு கேட்டபோது காஷ்மீர் மன்னர் முதலில் சம்மதம் தெரிவித்துவிட்டுப் பின்னர் ஒரு நாடகமாடி மறுத்துவிட்டார். (இந்த வரலாறு Freedom at Midnight என்ற நூலில் விரிவாகவும் நகைச்சுவை கலந்து சுவையாகவும் எழுதப்பட்டுள்ளது.)
      பின்னர் பாகிஸ்தானால் ஏவப்பட்ட பதானியர்கள் காஷ்மீருக்குள் படையெடுத்து வந்தபோது காஷ்மீர் மன்னர் மண்டியிடாக் குறையாக தனது ராஜ்ஜியத்தை இந்தியாவோடு இணைக்கும்படி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுக் கொடுத்தார். ஆகவே பரோடா, ஹைதராபாத், மைசூர் போல, காஷ்மீரும் இந்தியாவின் ஒரு பகுதியானது.
      அங்கே பெரும்பான்மை மக்கள் இஸ்லாமியர்களாக இருப்பதால் அது வேறு நாடு அல்ல. காஷ்மீரில் இந்துக்கள் தான் இருந்தார்கள். இந்து சமயத்தில் ஓர் அங்கமாகிய சைவம் காஷ்மீரில் தழைத்து வளர்ந்திருந்தது. இஸ்லாமியப் படையெடுப்புகளால் மக்கள் மத மாற்றம் செய்யப்பட்டனர். அதனால் தான் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக ஆனார்கள். அவர்களின் போராட்டம் நியாயமற்றது. அது நியாயம் என்றால் புதுச்சேரி பிரான்சுடனும், கோவா போர்த்துக்கல்லுடனும் இணைவதற்குப் போராட்டம் நடத்தினால் அது நியாயம் என்று ஆகி விடும்.
      காஷ்மீர் இந்தியாவின் இணைந்த பகுதி. அதனை திபெத்துடன் ஒப்பிடக் கூடாது.