வெற்றிகரமான தொழிலதிபராக மாறிய மலையாள நடிகைகள்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 май 2024
  • வெற்றிகரமான தொழிலதிபராக மாறிய மலையாள நடிகைகள்!
    மலையாளத் திரை உலகில் பிரபலமான பல நடிகைகள் இன்று வெற்றிகரமான தொழில் முனைவோராக மாறி உள்ளனர். அவர்கள் நடிப்பு திறனை தாண்டி வணிக திறமைகளையும் வெளிப்படுத்தி பல சாதனைகளை செய்து வருகின்றனர்.
    -இவர் மலையாள திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி துறையில் பிரபலமானவர். கோலங்கள் சீரியல் மூலம் தொலைக்காட்சி துறையில் கால் பதித்த இவர் அதற்குப் பிறகு துறைமுகம், வைரஸ், வள்ளியேட்டன் போன்ற பல மலையாள திரைப்படங்களில் துணை வேடத்தில் நடித்துள்ளார். தற்போது இவர் கொச்சியில் பிரானா என்ற பெயரில் ஜவுளி கடையை நடத்தி வருகிறார்.
    -பல மலையாள திரைப்படங்களில் துணை வேடத்தில் நடித்து வரும் நடிகை காவியா மாதவன் கொச்சியில் சொந்தமாக துணிக்கடை வைத்துள்ளார். லக்ஷயா என்ற இந்த துணிக் கடையை பிரபல மலையாள நடிகர் மம்முட்டி திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது.
    -பிரபல மலையாள நடிகை மல்லிகா சுகுமாரன் தனது மகன்கள் இந்திரஜித் மற்றும் பிருத்விராஜ் ஆகியோருடன் இணைந்து டோஹாவில் 'கத்தார் ஸ்பைஸ் போட்' என்ற உணவகத்தை நடத்தி வருகிறார்.
    -என்னு நிண்டே மொய்தீன், டிராபிக் மற்றும் இரண்டாம் பாவம் போன்ற மலையாள திரைப்படங்கள் மூலம் பிரபலமான நடிகை லீனா. உடற்பயிற்சியில் ஆர்வம் கொண்ட இந்த நடிகை தற்போது கொச்சியில் அக்குருதி என்ற பிட்னஸ் சென்டரை நடத்தி வருகிறார்.
    -மலையாள சினிமாவில் பிரபலமான நடிகை கனிகா. இவர் தற்போது தமிழில் சீரியல்களில் நடித்து வருகிறார். மோகன்லால் ஜெயராம் என பல பெரிய நடிகர்களுடன் நடித்த நடிகை கனிகா தற்போது சென்னையில் மெடல் டயக்னாஸ்டிக்ஸ் என்ற ஹெல்த் கேர் சென்டர் தொடங்கியுள்ளார்.
    -பல மலையாள திரைப்படங்களில் துணை வேடங்களில் நடித்தவரும் நமீதா பிரமோத் 2023 ஆம் ஆண்டில் கொச்சியில் சம்மர் கஃபே டவுன் என்ற பெயரில் ஒரு புதிய உணவகத்தை தொடங்கினார். பிரபல நடிகை அபர்ணா பாலமுரளி, ரஜீஷா விஜயன் போன்ற நடிகைகள் இந்த உணவகத்தை திறந்து வைத்தனர்.
    -இந்த நடிகை மலையாள சினிமாவில் தனது கணவர் ஆஷிக் அபுவுடன் இணைந்து பல பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார். இது தவிர 2014 ஆம் ஆண்டு கொச்சியில் மாமாங்கம் என்ற டான்ஸ் ஸ்டுடியோவை துவங்கினார்.
  • РазвлеченияРазвлечения

Комментарии •