காரியாபட்டி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கார்த்திகை இரண்டாவது செவ்வாய்க்கிழமை அபிஷேகம்.
HTML-код
- Опубликовано: 11 дек 2024
- விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் மூலவருக்கு கார்த்திகை இரண்டாவது செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. முன்னதாக திருமஞ்சனம், அரிசி மாவு,பால், தயிர்,தேன்,பன்னீர் உள்ளிட்ட அபிஷேக பொருட்கள் கொண்டு சிறப்பாக அபிஷேகம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ சுப்ரமணியசுவாமிக்கு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் காரியாபட்டி பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.