விநாயகர் அகவல் | Vinayagar Agaval | 'Kalaimamani' Veeramani Raju | Jothitv

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • விநாயகர் அகவல் | Vinayagar Agaval | 'Kalaimamani' Veeramani Raju | Jothitv
    இயற்றியவர் : ஔவையார்
    இசை :அபிஷேக் ராஜு
    பாடியவர் : கலைமாமணி " வீரமணி ராஜு
    விநாயகர் அகவல்:
    ஔவையார் அருளிய விநாயகர் அகவல்
    இந்த அகவலை பாடினால்
    கணபதியின் திருவடி அருள் கிடைக்கும்
    ஞானம் கிடைக்கும் பக்தி கிடைக்கும்
    யோகப் பயிற்சி கைகூடும்
    குண்டலினி சக்தியும் கைகூடும்
    ஓம் கணபதி ஓம் ஓம் கணபதி ஓம்
    ஓம் கணபதி ஓம் ஓம் ஓம் கணபதி ஓம்
    ஓம் கணபதி ஓம் ஓம் கணபதி ஓம்
    ஓம் கணபதி ஓம் ஓம் ஓம் கணபதி ஓம்
    சீதக் களபச் செந்தா மரைப்பூம்
    பாதச் சிலம்பு பலஇசை பாடப்
    பொன் அரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
    வன்னமருங்கில் வளர்ந்து அழகு எறிப்ப
    பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் (05)
    வேழ முகமும் விளங்கு சிந்தூரமும்
    அஞ்சு கரமும் அங்குச பாசமும்
    நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
    நான்ற வாயும் நாலிரு புயமும்
    மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் (10)
    இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
    திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
    சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
    அற்புதம் ஈன்ற கற்பகக் களிறே!
    முப்பழ நுகரும் மூஷிக வாகன! (15)
    இப்பொழுது என்னை ஆட்கொள்ள வேண்டித்
    தாயாய் எனக்குத் தான் எழுந்தருளி
    மாயாப் பிறவி மயக்கம் அறுத்தே
    திருந்திய முதல் ஐந்தெழுத்தும் தெளிவாய்ப்
    பொருந்தவே வந்து என் உளந்தனில் புகுந்து (20)
    குருவடிவு ஆகிக் குவலயந் தன்னில்
    திருவடி வைத்துத் திறமிது பொருள் என
    வாடா வகைதான் மகிழ்ந்து எனக்கருளிக்
    கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே
    உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில் (25)
    தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
    ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
    இன்புறு கருணை இனிதெனக் அருளிக்
    கருவிகள் ஒடுங்கும் கருத்தை அறிவித்(து)
    இருவினை தன்னை அறுத்து இருள் கடிந்து (30)
    தலமொரு நான்கும் தந்து எனக் அருளி
    மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே
    ஒன்பது வாயில் ஒருமந்திரத்தால்
    ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
    ஆறா தாரத்(து) அங்குச நிலையும் (35)
    பேறா நிறுத்திப் பேச்சுரை அறுத்தே
    இடைபிங்கலையின் எழுத்து அறிவித்துக்
    கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி
    மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின்
    நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக் (40)
    குண்டலி அதனில் கூடிய அசபை
    விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
    மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
    காலால் எழுப்பும் கருத்து அறி வித்தே
    அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் (45)
    குமுத சகாயன் குணத்தையும் கூறி
    இடைச் சக்கரத்தின் ஈரெட்டு நிலையும்
    உடல் சக்கரத்தின் உறுப்பையும் காட்டிச்
    சண்முக தூலமும் சதுர்முக சூட்சமும்
    எண் முகமாக இனிதெனக் அருளி (50)
    புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
    தெரியெட்டு நிலையும் தரிசனப் படுத்திக்
    கருத்தினில் கபால வாயில் காட்டி
    இருத்தி முத்தி இனிது எனக் அருளி
    என்னை அறிவித்(து) எனக்கருள் செய்து (55)
    முன்னை வினையின் முதலைக் களைந்து
    வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
    தேக்கியே என்றன் சிந்தை தெளிவித்(து)
    இருள்வெளி இரண்டுங்கு ஒன்றிடம் என்ன
    அருள்தரும் ஆனந்தத்து அழுத்தியென் செவியில் (60)
    எல்லை யில்லா ஆனந் தம்அளித்(து)
    அல்லல் களைந்தே அருள்விழி காட்டிச்
    சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
    சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி
    அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க் (65)
    கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
    வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
    கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
    அஞ்சு அக்கரத்தின் அரும்பொருள் தன்னை
    நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்து (70)
    தத்துவ நிலையைத் தந்து எனை யாண்ட
    வித்தக விநாயக விரைகழல் சரணே! (72)
    #vinayagarchaturthi #vinaygaragaval #vinayagarsongs #veeramanikannan #devotionalsongs #ganesha #tamildevotionalsongs #Avvaiyar #jothitv #jothitvlive #jothitvlatest
    ====================================================================
    Welcome To Jothi tv, India's No.1 Devotional Channel and 24*7 Live RUclips Channel where we bring Early Morning mantras, Rasipalan, Devotional Temple stories, Tamil Devotional songs, enchanting mantras all abishegam, aartis, pujas in temples . We have recorded LIVE Visual direct from temple abhishekam and aarti, poojas, and special day functions in most famous temples and their places added soul to the Devotional Bhakti Life with us. We hereby bring you the latest devotional programs to bring divinity through Live Telecast Special poojas and aartis. Our subscribers of JOTHI TV are Worldwide.
    DTH CHANNEL NO TATASKY - 1587 | VIDEOCON - 3021 | SET TOP BOX NO VKDIGITAL - HD- 16 & SD 56 | TACTV-91 TCCL - 705 | SCV-254 | AKSHAYA - 39 | AirTel - 818
    =================================================================================
    SUBSCRIBE "JOTHI TV " For More Videos
    For more live of temples click here :
    / @jothitvofficial
    Enjoy and stay connected with us!
    ► Subscribe to us on RUclips : / @jothitvofficial
    ► Like us on Facebook : / jothitv
    ► Follow us on Telegram : t.me/+UuycxDh8...
    ► Follow us on Instagram : / jothitv.india
    ► Website : www.polimernew...
    Reach Us @JOTHITV
    8939936611
    This content is Copyright to JOTHI TV RUclips Channel​ , Any unauthorized reproduction, redistribution or re-upload is strictly prohibited of this material. Legal action will be taken against those who violate the copyright of the following content.
    ============================================================
    ============================================================
    #jothitv

Комментарии • 7

  • @srivignesh8115
    @srivignesh8115 3 месяца назад +1

    Sri sakthi ganapathi
    Sripuram Golden temple
    Vellore 🙏🏻

  • @krishnankuppuswamyvenkata949
    @krishnankuppuswamyvenkata949 3 месяца назад

    AumGam❤❤❤❤❤

  • @devadassvelusamy3613
    @devadassvelusamy3613 3 месяца назад +2

    ஓம் ஶ்ரீ செல்வ விநாயகர் போற்றி போற்றி போற்றி ஓம்

  • @rameshr6847
    @rameshr6847 3 месяца назад

    🎉🎉🎉

  • @KannanKannan-ne7zi
    @KannanKannan-ne7zi 3 месяца назад +2

    விநாயகர் சுப்பரபாதம் முருகன் சுப்பரபாதம் பெருமாள் சுப்பரபாதம் அனுப்புங்கள்

  • @KannanKannan-ne7zi
    @KannanKannan-ne7zi 3 месяца назад

    🙏🙇‍♂️👌

  • @kothan747
    @kothan747 2 месяца назад

    சீர்காழி கோவிந்தராஜன் தெய்வீகக் குரல்....தமிழ் விநாயகர் அகவல் என்று எவ்வளவு அழகாக உச்சரிக்கிறார் .....வீரமணி ராஜு ஐயா தயவு செய்து வேண்டாம்....சீர்காழி பாடல்கள் அமைதியையும் பக்தியையும் வளர்க்கும் .....