தானெனை முன்படைத்தான் / சுந்தரர் தேவாரம் / திருத்தணி சுவாமிநாதன் ஐயா

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 фев 2025
  • தானெனை முன்படைத்தான் / சுந்தரர் தேவாரம் / திருத்தணி சுவாமிநாதன் ஐயா
    திருநொடித்தான் மலை
    பண் :பஞ்சமம்
    பாடல் எண் : 1
    தானெனை முன்படைத்தான் அத
    றிந்துதன் பொன்னடிக்கே
    நானென பாடலந்தோ நாயி
    னேனைப் பொருட்படுத்து
    வானெனைவந் தெதிர்கொள்ள மத்த
    யானை அருள்புரிந்து
    ஊனுயிர் வேறுசெய்தான் நொடித்
    தான்மலை உத்தமனே
    பாடல் எண் : 2
    ஆனை உரித்தபகை அடி
    யேனொடு மீளக்கொலோ
    ஊனை உயிர்வெருட்டி ஒள்ளி
    யானை நினைந்திருந்தேன்
    வானை மதித்தமரர் வலஞ்
    செய்தெனை யேறவைக்க
    ஆனை அருள்புரிந்தான் நொடித்
    தான்மலை உத்தமனே
    பாடல் எண் : 3
    மந்திரம் ஒன்றறியேன் மனை
    வாழ்க்கை மகிழ்ந்தடியேன்
    சுந்தர வேடங்களால் துரி
    சேசெயுந் தொண்டன்எனை
    அந்தர மால்விசும்பில் அழ
    கானை யருள்புரிந்த
    துந்தர மோநெஞ்சமே நொடித்
    தான்மலை உத்தமனே
    பாடல் எண் : 4
    வாழ்வை உகந்தநெஞ்சே மட
    வார் தங்கள் வல்வினைப்பட்
    டாழ முகந்தவென்னை அது
    மாற்றி அமரரெல்லாம்
    சூழ அருள்புரிந்து தொண்ட
    னேன் பரமல்லதொரு
    வேழம் அருள்புரிந்தான் நொடித்
    தான்மலை உத்தமனே
    பாடல் எண் : 5
    மண்ணுல கிற்பிறந்து நும்மை
    வாழ்த்தும் வழியடியார்
    பொன்னுல கம்பெறுதல் தொண்ட
    னேன்இன்று கண்டொழிந்தேன்
    விண்ணுல கத்தவர்கள் விரும்
    பவெள்ளை யானையின்மேல்
    என்னுடல் காட்டுவித்தான் நொடித்
    தான்மலை உத்தமனே
    பாடல் எண் : 6
    அஞ்சினை ஒன்றிநின்று அலர்
    கொண்டடி சேர்வறியா
    வஞ்சனை யென்மனமே வைகி
    வானநன் னாடர்முன்னே
    துஞ்சுதல் மாற்றுவித்துத் தொண்ட
    னேன்பர மல்லதொரு
    வெஞ்சின ஆனைதந்தான் நொடித்
    தான்மலை உத்தமனே
    பாடல் எண் : 7
    நிலைகெட விண்ணதிர நிலம்
    எங்கும் அதிர்ந்தசைய
    மலையிடை யானைஏறி வழி
    யேவரு வேனெதிரே
    அலைகட லால்அரையன் அலர்
    கொண்டுமுன் வந்திறைஞ்ச
    உலையணை யாதவண்ணம் நொடித்
    தான்மலை உத்தமனே
    பாடல் எண் : 8
    அரவொலி ஆகமங்கள் அறி
    வார்அறி தோத்திரங்கள்
    விரவிய வேதஒலி விண்ணெ
    லாம்வந் தெதிர்ந்திசைப்ப
    வரமலி வாணன்வந்து வழி
    தந்தெனக் கேறுவதோர்
    சிரமலி யானைதந்தான் நொடித்
    தான்மலை உத்தமனே
    பாடல் எண் : 9
    இந்திரன் மால்பிரமன் னெழி
    லார்மிகு தேவரெல்லாம்
    வந்தெதிர் கொள்ளஎன்னை மத்த
    யானை யருள்புரிந்து
    மந்திர மாமுனிவர் இவன்
    ஆர்என எம்பெருமான்
    நந்தமர் ஊரனென்றான் நொடித்
    தான்மலை உத்தமனே
    பாடல் எண் : 10
    ஊழிதொ றூழிமுற்றும் உயர்
    பொன்நொடித் தான்மலையைச்
    சூழிசை யின்கரும்பின் சுவை
    நாவல ஊரன்சொன்ன
    ஏழிசை இன்றமிழால் இசைந்
    தேத்திய பத்தினையும்
    ஆழி கடலரையா அஞ்சை
    யப்பர்க் கறிவிப்பதே

Комментарии • 62

  • @jayaramanpn6516
    @jayaramanpn6516 11 месяцев назад +3

    யாரவன் சுந்தரர் காலத்திலேயே வந்துள்ளது.இனிமை.அருமை.சிவசிவ

  • @MOHANKUMAR-zx5wb
    @MOHANKUMAR-zx5wb Месяц назад +1

    உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் ஜயா சிவ சிவ சிவ

  • @santhinivasangovind5693
    @santhinivasangovind5693 Месяц назад

    ஓம் சிவாய நம 🙏

  • @p.sakthivel2583
    @p.sakthivel2583 Месяц назад

    உயிரை இறை பாதத்தில் ஒடுங்க வைக்கும் பதிகம். இறைநிழலில் இளைப்பாறுதல் பூமிதனில் பெறுதற்கு அரிய அருட்பேறு.

  • @tsrinivasan4305
    @tsrinivasan4305 Год назад +3

    மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டும் திருப்பதிகம்

  • @subrapon
    @subrapon 2 месяца назад +1

    ஆகிரி இராத்த்தில் அமைந்த சுந்தர்ர் தேவாரம். அருமை.

  • @s.dhayashree17s.dhayashree74
    @s.dhayashree17s.dhayashree74 Год назад +8

    அருமையாக உள்ளது தேவாரம் கேட்கமனம் நிறைவாக இருக்கிறது

  • @maharajanselva341
    @maharajanselva341 2 месяца назад +1

    அவிநாசி உறையும் ஆழித்தேர் வித்தகனை தில்லை உறையும் ஆரூர் பெருமானே. அலைகடல் அருகில் சுயம்புவாக எழுந்தருளி அரசாளும் இறைவன் உவரியில் என்னை ஆட் கொண்ட பரமன்.. திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்

  • @kalusulingamnagarathinam5778
    @kalusulingamnagarathinam5778 28 дней назад

    அருமை, அருமை

  • @Lakshmi-fo6fb
    @Lakshmi-fo6fb 6 месяцев назад +2

    இந்த பாடலை கேட்டஉடனே அலை பாய்ந்த மனம் சற்று அமைதி பெற்றது, திரு சிற்றம்பலம் ஓம் நமசிவய 🌹🙏

  • @ValliKallidai
    @ValliKallidai Год назад +1

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்

  • @kandhavadivelangovindasami1093
    @kandhavadivelangovindasami1093 Год назад +5

    சிவ சிவ மனதை உருக வைக்கிறது!

  • @anbesivan6499
    @anbesivan6499 6 месяцев назад +1

    ஓம்நமசிவாய சிவாயநம ஓம்🔥🔥 ஐயா அவர்கள் திருவடி
    தாழ்பணிகின்றேன்🙌🙌🙌🙌

  • @sivachandran89
    @sivachandran89 6 месяцев назад +6

    தானெனை முன்படைத்தான் அத
    றிந்துதன் பொன்னடிக்கே
    நானென பாடலந்தோ நாயி
    னேனைப் பொருட்படுத்து
    வானெனைவந் தெதிர்கொள்ள மத்த
    யானை அருள்புரிந்து
    ஊனுயிர் வேறுசெய்தான் நொடித்
    தான்மலை உத்தமனே
    1
    ஆனை உரித்தபகை அடி
    யேனொடு மீளக்கொலோ
    ஊனை உயிர்வெருட்டி ஒள்ளி
    யானை நினைந்திருந்தேன்
    வானை மதித்தமரர் வலஞ்
    செய்தெனை யேறவைக்க
    ஆனை அருள்புரிந்தான் நொடித்
    தான்மலை உத்தமனே
    2
    மந்திரம் ஒன்றறியேன் மனை
    வாழ்க்கை மகிழ்ந்தடியேன்
    சுந்தர வேடங்களால் துரி
    சேசெயுந் தொண்டன்எனை
    அந்தர மால்விசும்பில் அழ
    கானை யருள்புரிந்த
    துந்தர மோநெஞ்சமே நொடித்
    தான்மலை உத்தமனே
    3
    வாழ்வை உகந்தநெஞ்சே மட
    வார் தங்கள் வல்வினைப்பட்
    டாழ முகந்தவென்னை அது
    மாற்றி அமரரெல்லாம்
    சூழ அருள்புரிந்து தொண்ட
    னேன் பரமல்லதொரு
    வேழம் அருள்புரிந்தான் நொடித்
    தான்மலை உத்தமனே
    4
    மண்ணுல கிற்பிறந்து நும்மை
    வாழ்த்தும் வழியடியார்
    பொன்னுல கம்பெறுதல் தொண்ட
    னேன்இன்று கண்டொழிந்தேன்
    விண்ணுல கத்தவர்கள் விரும்
    பவெள்ளை யானையின்மேல்
    என்னுடல் காட்டுவித்தான் நொடித்
    தான்மலை உத்தமனே
    5
    அஞ்சினை ஒன்றிநின்று அலர்
    கொண்டடி சேர்வறியா
    வஞ்சனை யென்மனமே வைகி
    வானநன் னாடர்முன்னே
    துஞ்சுதல் மாற்றுவித்துத் தொண்ட
    னேன்பர மல்லதொரு
    வெஞ்சின ஆனைதந்தான் நொடித்
    தான்மலை உத்தமனே
    6
    நிலைகெட விண்ணதிர நிலம்
    எங்கும் அதிர்ந்தசைய
    மலையிடை யானைஏறி வழி
    யேவரு வேனெதிரே
    அலைகட லால்அரையன் அலர்
    கொண்டுமுன் வந்திறைஞ்ச
    உலையணை யாதவண்ணம் நொடித்
    தான்மலை உத்தமனே
    7
    அரவொலி ஆகமங்கள் அறி
    வார்அறி தோத்திரங்கள்
    விரவிய வேதஒலி விண்ணெ
    லாம்வந் தெதிர்ந்திசைப்ப
    வரமலி வாணன்வந்து வழி
    தந்தெனக் கேறுவதோர்
    சிரமலி யானைதந்தான் நொடித்
    தான்மலை உத்தமனே
    8
    இந்திரன் மால்பிரமன் னெழி
    லார்மிகு தேவரெல்லாம்
    வந்தெதிர் கொள்ளஎன்னை மத்த
    யானை யருள்புரிந்து
    மந்திர மாமுனிவர் இவன்
    ஆர்என எம்பெருமான்
    நந்தமர் ஊரனென்றான் நொடித்
    தான்மலை உத்தமனே
    9
    ஊழிதொ றூழிமுற்றும் உயர்
    பொன்நொடித் தான்மலையைச்
    சூழிசை யின்கரும்பின் சுவை
    நாவல ஊரன்சொன்ன
    ஏழிசை இன்றமிழால் இசைந்
    தேத்திய பத்தினையும்
    ஆழி கடலரையா அஞ்சை
    யப்பர்க் கறிவிப்பதே

  • @muthukrishanannagarajan9790
    @muthukrishanannagarajan9790 3 месяца назад

    சிவ சிவ

  • @palaniappandhp9985
    @palaniappandhp9985 2 года назад +15

    இப்பாடல் என்னை திருஅஞ்சைக்களம் அழைத்துச் சென்றது ..... 🙏🏻

    • @பண்இசைதேவாரம்
      @பண்இசைதேவாரம்  2 года назад +3

      சிவ சிவா....🙏🏼🙏🏼🙇‍♂️🙇‍♂️

    • @vinram
      @vinram 2 года назад +5

      சென்ற மாதம் அஞ்சைகளத்து மகாதேவரை தரிசித்தேன்

  • @krishnavenivenkatraman2016
    @krishnavenivenkatraman2016 2 года назад +11

    கேட்கக்கேட்க த் திகட்டாத திருப்பதிகம்

  • @murugansambandam1056
    @murugansambandam1056 Год назад

    ❤ சிவ சிவ

  • @krishnavenivenkatraman2016
    @krishnavenivenkatraman2016 2 года назад +13

    இந்த பதிகம் என்னைக் கைலாசம் போகும் ஆசையைத் தூண்டுகிறது

  • @krishnamoorthibalaguru2416
    @krishnamoorthibalaguru2416 6 месяцев назад

    சிவசிவ ❤

  • @sevvanthisevvanthi6092
    @sevvanthisevvanthi6092 Год назад

    ஓம் நமசிவாய

  • @mg.muthukumarmg.muthukumar5028
    @mg.muthukumarmg.muthukumar5028 9 месяцев назад

    நற்றுனையாவது நமச்சிவாயவே ஸ்ரீவில்லிபுத்தூர்

  • @NethraragavanRagavan-fu2rf
    @NethraragavanRagavan-fu2rf Год назад +3

    உயிரை உருகவைக்கிறது ஐயா.... சிவாயநம...

  • @ushavenkatramana5329
    @ushavenkatramana5329 2 года назад +12

    பதிகம் கேட்க கேட்க தன்னை மறந்து கண்ணீர் தன்னையறியாமல் வந்து கொண்டேயிருந்தது தினமும் பதிகங்கள் படிக்கிறேன் உங்கள் குரலில் கேட்கும் போது உருக்கமாக உள்ளது ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏🙏🙏

  • @JothiMuthulakshmi-h7k
    @JothiMuthulakshmi-h7k Год назад

    Mava sava nandri ayya nit pavi

  • @vinram
    @vinram 2 года назад +20

    என்னமோ தெரியவில்லை தினம் இரவு தூங்கும்முன் இதை கேட்காமல் தூக்கம் வரூவதில்லை

  • @puspanadarajah8089
    @puspanadarajah8089 6 месяцев назад

    Anbe sivam ❤❤❤

  • @SenthilKumar-yc4lw
    @SenthilKumar-yc4lw Год назад +1

    Sivasiva sivasiva

  • @dhinakar7844
    @dhinakar7844 Год назад

    Sundarar thiruvadi potri

  • @KalyaniAkshaya
    @KalyaniAkshaya 7 месяцев назад

    Thiruchitrambalam. Om Namasivaya.

  • @Rajeeakumar
    @Rajeeakumar Год назад +1

    சிவ சிறப்பு

  • @krishnamoorthyj2513
    @krishnamoorthyj2513 6 месяцев назад

    இசைக்கருவிகள் ஒலி மிகுதியாக உள்ளதால் பாடலைதெளிவாகக்கேட்டு ரசிக்க முடியவில்லை.

  • @JbRecordingStudios
    @JbRecordingStudios 2 года назад +1

    SIVAYA NAMA Miha Arumai Siva. Sivananthathin Ellaikke Kondu Sendru Vittathu Ippadal

  • @elangovan2070
    @elangovan2070 Год назад +1

    இரா.இளங்கோவன்வீரசைவர்சிறுவாச்சூர்

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 2 года назад

    🌷🌻சிவ சிவ🌿🌸திருநீலகண்டம்🌷🌹🙏திருச்சிற்றம்பலம் 🐦🐄🙏🍋

  • @jayalakshmipalanisamy4723
    @jayalakshmipalanisamy4723 8 месяцев назад

    🙏🙏🙏🙏🙏

  • @kulalvaimozhinadarajan7189
    @kulalvaimozhinadarajan7189 Год назад +1

    Arumai ayya

  • @veerapathiran543
    @veerapathiran543 Год назад +1

    முக்தி பதிகம்❤️✨

  • @SenthilKumar-yc4lw
    @SenthilKumar-yc4lw 2 года назад +1

    Siva siva

  • @rathinasabapathivt6590
    @rathinasabapathivt6590 Год назад

    அருமை அருமை நல்ல பதிவு

  • @ramadoss49
    @ramadoss49 Год назад

    Picture s are good
    Song is good

  • @b.paranisrigugan8773
    @b.paranisrigugan8773 2 года назад +2

    அய்யா வணக்கம் அருமையாக உள்ளது

    • @பண்இசைதேவாரம்
      @பண்இசைதேவாரம்  2 года назад +2

      🙏🏼 சிவ சிவ 🙏🏼
      நாம் அனைவரும் நால்வர் பெருமக்களுக்குதான் நன்றி சொல்ல வேண்டும்... ஐயா

    • @b.paranisrigugan8773
      @b.paranisrigugan8773 2 года назад

      @@பண்இசைதேவாரம் நன்றி அய்யா

  • @devasenapathykp6497
    @devasenapathykp6497 2 года назад +1

    ஓம் சிவாய நம

  • @kumarsivakumar4920
    @kumarsivakumar4920 2 года назад +2

    Super

  • @callmeshan6087
    @callmeshan6087 2 года назад +5

    சுந்தரின்தேவாரம்அதிமதுரமாகதித்திக்கின்றதுசிவாயநம

  • @ramadoss49
    @ramadoss49 Год назад +3

    Please put with lyrics please

  • @karthikeyan8513
    @karthikeyan8513 2 года назад +1

    🙏🙏

  • @ramadoss49
    @ramadoss49 Год назад +1

    We are not having book

  • @SenthilKumar-yc4lw
    @SenthilKumar-yc4lw 2 года назад +2

    Siva siva

  • @lakshmananlakshmanan7839
    @lakshmananlakshmanan7839 Год назад

    Siva siva

  • @manikavasagams9042
    @manikavasagams9042 Год назад

    Siva siva

    • @thiagarajans4040
      @thiagarajans4040 Год назад

      எதிர் பாராமல் மனைவி ரா‌ஜலட்சுமி மறைந்த துக்கத்தை இந்த பாடல்தான் ஆறுதல் அளிக்கிறது.