வாரத்தில் இருதினங்கள் மட்டுமே திறக்கும் ஆலயம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோயில் வரலாறு
    தமிழ் நாட்டில், பெரம்பலூர் மாவட்டத்தில், பெரம்பலூரில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிறுவாச்சூர் எனும் ஊரில் அமைந்துள்ள ஒரு அம்மன் கோயிலாகும். திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள தொட்டியம் எனும் ஊரிலும் இப்பெயரிலான ஒரு கோவில் உள்ளது.தன் கணவனை ஆராயாமல் கொன்ற பாண்டியனிடம் நீதிகேட்டு, கோபத்துடன் மதுரையை எரித்தாள் கண்ணகி. பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றபோது வழியில் இருந்த செல்லியம்மன் கோயிலில் அன்றிரவு தங்கத் தீர்மானித்தாள்.
    அங்கு தங்கியிருந்தபோது, அன்றிரவு செல்லியம்மன் தன் கருவறையிலிருந்து வெளிப்பட்டு, கண்ணகியிடம் வந்து, “பெண்ணே நீ இங்கு தங்கக் கூடாது” என்றார். காரணம் கேட்ட கண்ணகியிடம், தான் ஒரு மந்திரவாதியின் பிடியில் சிக்கி இருப்பதாகவும், தனது பக்தியால் தன்னிடம் பல வரங்களைப் பெற்ற அவன், ஒரு கட்டத்தில் மந்திரங்கள் மூலம் தன்னையே அவனுக்கு அடிமையாக்கி விட்டதாகக் கூறினார். மேலும் தனது அழிவுச் செயல்களுக்கு அவன் தன்னைப் பயன்படுத்தத் துடிப்பதாகவும். இந்த நிலையில் நீ இங்கு இருப்பதைப் பார்த்தால் அது உனக்கு ஆபத்து என்றார்.
    செல்லியம்மனின் நிலையைக் கண்டு கண்ணகி மனம் வருந்தினாள். சற்று நேரத்தில் கோயிலுக்கு வந்த மந்திரவாதி, செல்லியம்மனை வெளியே வருமாறு அழைத்தான். திடீரென அவன் எதிரில் வாளோடு வந்த கண்ணகி, அவன் கழுத்தைத் துண்டித்தாள். வந்தது கண்ணகியல்ல, அவள் உருவத்தில் குடியேறிய காளியம்மன்தான் என்பதை உணர்ந்த மந்திரவாதி அவளிடம் இறுதியாக ஒரு வரம் வேண்டினான். அதன்படி இந்த ஆலயத்தில் தனக்கு ஒரு சமாதி அமைக்கப்பட வேண்டும் என்றும். பக்தர்கள் எல்லாம் அதன்மீது கால் வைத்துவிட்டு அம்மனை தரிசிக்க வர வேண்டும் என்றும். அதுவே தான் செய்த பாவங்களுக்குப் பரிகாரம் என்றான்.
    கண்ணகி உருவில் இருந்த காளியம்மனும் இதற்கு ஒத்துக்கொண்டாள். மனம் நெகிழ்ந்த செல்லியம்மன், கண்ணகியின் உதவியைப் போற்றும் வண்ணம், “இனி இந்த சிறுவாச்சூர் உனக்கானது. மதுரகாளியம்மனாக நீயே இங்கு எழுந்தருள்வாயாக. பில்லி சூனியம், காற்று, கருப்பு போன்ற தீயசக்திகள் எதற்கும் இங்கு இனி இடம் கிடையாது. சூனியங்கள் இங்கு நடைபெறாது. நான் காட்டுக்கு நடுவே அமைந்துள்ள பெரியசாமிக் குன்றுக்குச் செல்கிறேன். நீ எப்போது வேண்டுமானாலும் என்னை வந்து சந்திக்கலாம்’’ என்று கூறி மறைந்தாள்.

Комментарии • 26

  • @dhanabaldhanabal5801
    @dhanabaldhanabal5801 5 месяцев назад +1

    ஓம்சக்தி மதுரகாளியம்மன் போற்றி

  • @shanthishanthi6655
    @shanthishanthi6655 5 месяцев назад +1

    Om sri Madurakaliamman thunai

  • @sumathisumathi6987
    @sumathisumathi6987 5 месяцев назад

    நன்றி அய்யா .இந்த அம்மன் எங்களது குலதெய்வம். ஸ்ரீ சிறுவாச்சூர் மதுர காளியம்மன் தாயே போற்றி
    .

    • @moonstudiokrishna3878
      @moonstudiokrishna3878  5 месяцев назад

      பெரும் புண்ணியம் செய்தவர்கள் நீங்கள் ஓம் ஸ்ரீ மதுரகாளியம்மன் போற்றி🙏

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 5 месяцев назад +1

    ஶ்ரீ சிறுவாச்சூர் மதுரகாளி துணை🙏

  • @RavichandranRavichandran-ig9sk
    @RavichandranRavichandran-ig9sk 5 месяцев назад +1

    இவள் எங்கள் குலதெய்வம்

    • @moonstudiokrishna3878
      @moonstudiokrishna3878  5 месяцев назад

      பெரும் புண்ணியம் செய்தவர்கள் நீங்கள் ஓம் ஸ்ரீ மதுரகாளியம்மன் போற்றி🙏

  • @umaselvaraja1222
    @umaselvaraja1222 5 месяцев назад +1

    Thank you sir 🎉it is our kulla Swami ❤ awesome 💯

  • @prakashd4
    @prakashd4 5 месяцев назад +2

    nice sir...

  • @sabarishajai7077
    @sabarishajai7077 5 месяцев назад +1

    வணக்கம் ஐயா மிக்க நன்றி எங்க அம்மாவீட்டு குலதெய்வம் உங்கள் வீடியோ பதிவில் மூலமாக பார்த்தது கோவிலுக்கே போய்ட்டு வந்த திருப்த்தி கிடைத்து மிக்க நன்றி ஐயா

    • @moonstudiokrishna3878
      @moonstudiokrishna3878  5 месяцев назад +1

      நன்றி🙏 எல்லாம் அந்த அன்னையின் செயல்🙏

  • @burma.2609
    @burma.2609 2 месяца назад +1

    🤝

  • @mythilisridharan7862
    @mythilisridharan7862 5 месяцев назад +1

    Romba super

  • @rukmaniganesh5372
    @rukmaniganesh5372 5 месяцев назад +1

    Amma Madurakali amma thiruthal potri🙏🙏🙏

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 5 месяцев назад +1

    🙏🌺🌷சிவ சிவ🌺🌳🙏🏽🙏🙏🙏🙏🙏❤❤❤

  • @sakthisrinivasankandasamy6535
    @sakthisrinivasankandasamy6535 5 месяцев назад +1

    நன்றி

  • @vedaji6577
    @vedaji6577 5 месяцев назад +1

    Eggal kulathivam