பலருக்கும் தெரியாத அற்புதம் முருகன் கோவில்

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள வடசென்னி ஸ்ரீ முருகன் கோயில் அமைந்துள்ளது. அளவற்ற சக்தி வாய்ந்த வடசென்னிமலை திருத்தலத்தில் ஸ்ரீ முருகப்பெருமான் மூன்று திருக்கோலங்களில் அருள் பாலிக்கின்றார்.
    ஸ்ரீ பாலசுப்பிரமணியனாகக் குழந்தை வடிவிலும், வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணியராகத் திருமணக் கோலத்தில், ஆதிமூலர் தண்டாயுதபாணியாக முதிர்ந்த பருவத்திலும் பக்தர்களுக்குத் தரிசனம் அளித்து அருள்பாலிக்கின்றார்.
    இம்மலையின் அடிவாரத்தில் சுமார் 400 வருட காலமாக விளங்கும் ஆலமரத்தடியில் கருவறை மண்டபம் மற்றும் விமானம் ஆகியவற்றுடன் அமைதியான சூழ்நிலையில் இந்த திருத்தலம் அமைந்துள்ளது.
    பல ஆண்டுகளுக்கு முன்னர் இப்பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் வடசென்னிமலை குன்றின் மீது ஆடு, மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தனர். அம்மலையில் அழகுடன் கூடிய ஒரு சிறுவன் அடிவாரத்திலிருந்து மலையின் மீது வேகமாக ஓடுவதைக் கண்டனர்.
    அந்த சிறுவனின் அழகினால் ஈர்க்கப்பட்ட சிறுவர்கள் வியப்படைந்து அந்த சிறு பாலனைப் பின்பற்றி ஓடி உள்ளனர். அச்சிறுவன் மலை உச்சியை அடைந்ததும் குறிப்பிட்ட ஓரிடத்தில் மின்னலை ஒத்த பேரொளி பிழம்புடன் மறைந்து விட்டதாகவும், சிறுவர்கள் திரும்பி வந்து தாங்கள் கண்ட காட்சியை ஊர் பெரியவர்களிடம் எடுத்துக் கூறியுள்ளனர்.
    சிறுவர்கள் கூறியதைக் கேட்ட கிராமத்துப் பெரியவர்கள் மலை உச்சியை அடைந்து அவரிடம் பார்த்தபோதுதான் மூன்று சிலைகள் தோன்றியதைக் கண்டு அதிர்ச்சியுற்றனர். அந்த மூன்று சிலைகளும் வள்ளி தெய்வானை முருகப்பெருமான் என உணர்ந்த ஊர் பொதுமக்கள் சிலைகளுக்குப் பூஜை செய்து வழிபட்டு வந்தனர்.

Комментарии • 6

  • @natarajanchokkalingam3990
    @natarajanchokkalingam3990 5 месяцев назад +2

    அருமையான பதிவு ஐயா நன்றி ❤❤❤

  • @user-bq5pf6jn2y
    @user-bq5pf6jn2y 5 месяцев назад +1

    மிகவும் அருமையான பதிவு அண்ணா நன்றிகள்பல🙏🙏🙏🙏🙏🙏🔯🔯🔯🔯🔯🦚🦚🦚🦚🦚🦚🪔🪔🪔🪔🪔🪔🌷🌷🌷🌷🌷

  • @shanthibalasundaram4699
    @shanthibalasundaram4699 4 месяца назад

    அற்புதமான தரிசனம் நன்றி