இயேசுவின் இரத்தத்தால் நம்மைக் கழுவும் செபம் Precious Blood of Jesus Prayer
HTML-код
- Опубликовано: 5 фев 2025
- Join this channel to get access to perks:
/ @tamilbiblewisdom2022
Whatsapp Link- chat.whatsapp....
Telegram Link - t.me/TamilBibl...
RUclips Link - / tamilbiblewisdom2022
Click on the above link and subscribe to Tamil Bible Wisdom Channel.
#இறைவார்த்தை#TAMILBIBLEREADING2022#TamilBibleWisdom
INSTAGRAM - / tamilbiblewisdom2022
FACEBOOK - www.facebook.c...
SPOTIFY open.spotify.c...
திருப்பலி நற்செய்தி,இன்றையநற்செய்திவாசகம்,
SUBSCRIBE TO THIS CHANNEL TO LISTEN TO TAMIL CATHOLIC DAILY BIBLE READINGS.
அன்றாட இறைவார்த்தையை கேட்க இந்த channel-லை subscribe செய்து கொள்ளவும்.
பரிசுத்த திரு இரத்தத்தை நோக்கி ஜெபம்
சிலுவையில் இயேசு சிந்தின இரத்தத்தால் சமாதானம் உண்டாகும். கொலோசெயர் 1: 20
இயேசுவே நீர் சிலுவையில் சிந்திய வல்லமையான இரத்தம் கொண்டு என் உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை அபிஷேகம் செய்யும். இறை இயேசுவே இப்பொழுது என்னை தீமை, பாவம், சோதனை, தீயவனின் தாக்குதல்கள், சூனியங்கள், இருளின் பயம், மனித வார்த்தையின் பயம், நோய், சந்தேகம், கோபம் மற்றும் விருப்பப்படாத எல்லா நாசங்களிலிருந்தும் விடுதலை செய்யும். ஆபத்துக்கள், விபத்துகளிலிருந்து என்னை பாதுகாத்தருளும். இப்போது நான் உமது பரிசுத்த ரத்தத்தின் முழு பாதுகாப்பினை அடைந்து விட்டேன் என்பதை நினைத்து நான் உம்மை துதிக்கிறேன். இயேசுவின் பரிசுத்த இரத்தமே எம்மை காத்தருளும். இயேசுவின் தூய இரத்தமே பரிசுத்த மனசாட்சியை தாரும். இயேசுவின் தூய இரத்தமே வார்த்தையான தேவனே, எங்களை காத்தருளும். இயேசுவின் தூய இரத்தமே எங்கள் ஆழ்மனதை பரிசுத்தப்படுத்தும். இயேசுவின் தூய இரத்தமே மனதில் உள்ள கெட்ட சிந்தைகளை தூய்மைப்படுத்தும். இயேசுவின் தூய இரத்தமே அவிசுவாச வார்த்தைகளை எடுத்து மாற்றும். இயேசுவின் தூய இரத்தமே மனதில் உள்ள பய உணர்வுகளை கழுவும். இயேசுவின் தூய இரத்தமே உடல் உறுப்பில் உள்ள காம உணர்வினை கழுவும். இயேசுவின் துயரத்தமே தலைமுறைகளில் உள்ள பாவ சாபங்களை கழுவும். இயேசுவின் தூய இரத்தமே குற்ற உணர்வுகளை கழுவி மாற்றும். இயேசுவின் தூய இரத்தமே நான் கருவறையில் உருவான நேரத்தில் உண்டான எல்லா எதிர் அனுபவங்களை கழுவி பரிசுத்தப்படுத்தும். ஆமென்.
இயேசுவின் இரத்தத்தால் நம்மைக் கழுவும் செபம்
இயேசுவே எங்களுக்காக கல்வாரியில் நீர் சிந்திய உம்முடைய விலையேறப் பெற்ற இரத்தத்தினால் எங்கள் குடும்பத்தில் இருக்கின்ற ஒவ்வொருவரையும் கழுவும் . எங்கள் வீடுகளில் இருக்கின்ற ஒவ்வொரு பொருட்களிலும் உம்முடைய இரத்தத் துளிகளைத் தெளித்து வையும். எங்கள் வீடுகளின் தரைகளிலும் ,சுவர்களிலும் , கூரைகளிலும் உம்முடைய இரத்தத்தைத் தெளியும் . எங்கள் வீடுகளைச் சுற்றிலும் நிலங்களின் எல்லைகளைச் சுற்றிலும் உம்முடைய இரத்தத்தைத் தெளித்து வைத்து உமது காவல் தூதர்களை எங்களுக்குத் துணையாக நிறுத்தி வையும் .எங்களுக்கு எதிராகச் செய்யப்படும் எந்தஒரு காரியமாக இருந்தாலும் , மாய மந்திர சக்திகள் ,சாத்தானின் ஏவுதல்கள் , பில்லி சூனியக் கட்டுகள் மற்றும் ஆபத்துகள் , விபத்துகள் ,அவமானங்கள் , நோய்கள் , பிற தேவைகள் அனைத்திலும் எங்களைப் பாதுகாத்து வழி நடத்தும் . நாங்கள் செல்லுகின்ற வழிகளில் எல்லாம் சென்றடைகின்ற ஒவ்வொரு இடங்களில் எல்லாம் உம்முடைய இரத்தத் துளிகளைத் தெளித்து வைத்து எங்களுக்கு முன்னும் பின்னும் வலமும் இடமும் உமது பிரசன்னத்தால் வழி நடத்தும். இதுவரை எங்களைப் பாதுகாத்து வந்த தேவன் இனிவரும் நாட்களிலும் எங்களைப் பாதுகாத்து வழிநடத்தும்படி செபிக்கிறோம் ஆமென்
Thankyou jesau🙏🙏🙏💓💓💓