இலங்கை வானொலி "தென்றல்" மதிய விருந்தில் கே.எஸ்.ராஜா நினைவலைகளில்திரு மயில் வாகனம் சர்வானந்தா அவர்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • இலங்கை வானொலியின் சிரேஷ்ட அறிவிப்பாளர் அமரர் திரு.கே எஸ் ராஜா அவர்களின் நினைவலைகளில் ,எமது சிரேஷ்ட அறிவிப்பாளர் திரு மயில்வாகனம் சர்வானந்தா அவர்களின் சிறப்பான பேட்டி!
    **************************************************
    03/09/2021 பிற்பகல் ஒரு மணி தொடக்கம் இலங்கை வானொலி தென்றலில் இடம்பெற்ற "மதிய விருந்து "நிகழ்ச்சியில்,
    சுமார் இருபத்தி ஏழு வருடங்களுக்கு முன்பு
    இவ்வுலகைப் பிரிந்த ,புகழ்பெற்ற மின்னல் அறிவிப்பாளர் திரு கே எஸ் ராஜா அவர்களின் நினைவேந்தல் அம்சம் இடம்பெற்றது.உண்மையில் மிகச் சிறப்பே.
    சிரேஷ்ட அறிவிப்பாளர் அமரர் கே எஸ் ராஜா அவர்கள் தொடர்பான பல விளக்கங்களை, நேயர்களுக்கு தெரியாத சில சம்பவங்களையெல்லாம், மிகவும் அழகாக விளக்கி அருமையாகப் பேட்டியளித்தார் எங்கள் தென்றலின் மற்றும், நிகழ்ச்சிகளின் தயாரிப்பாளருமான
    எமது சிரேஷ்ட அறிவிப்பாளர் திரு மயில்வாகனம் சர்வானந்தா அவர்கள்.நிகழ்ச்சியை மிகவும் சிறப்பாகத் தொகுத்து வழங்கினார் எமது இளைய தலைமுறை அறிவிப்பாளர் திரு ராஜகோபால் உதயகுமாரன் அவர்கள்.
    நம்மை விட்டும் இந்த உலகை விட்டு பிரிந்து சென்ற சிரேஷ்ட அறிவிப்பாளர் அமரர் திரு கே எஸ் ராஜா அவர்களை இத்தனை ஆண்டுகள் கழித்தும் ,மறக்காமல் நினைவு கூர்ந்து வாழ்த்திப் போற்றிய இலங்கை வானொலி தென்றலுக்கு உண்மையில் அனைவரும் நன்றிகள் கூற வேண்டும்.
    அந்த வகையில் எமது இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் அன்னை வானொலி தென்றலுக்கும் , அங்கு கடமை புரியும் அனைவருக்கும், நிகழ்ச்சியை மிகவும் சிறப்போடு ,நேயர்கள் ரசிக்கத் தக்க வண்ணம் தொகுத்து வழங்கிய அன்பு அறிவிப்பாளர் திரு.ராஜ கோபால் உதயகுமாரன் அவர்களுக்கும் நேயர்கள் சார்பாகவும் என் சார்பாகவும் மனமார்ந்த நன்றிகளும் நல்வாழ்த்துகளும் !
    என்றும் அன்பின் அபிமான நேயர்
    """""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
    எம். ஐ. உஸனார் ஸலீம்
    நிந்தவூர் - இலங்கை( கி.மா)
    0777161224 -0754551230
    (ஞாயிறு ) 05 / 09 / 2021.
    """"""""""""""""""""""""""""""""""""""""

Комментарии • 35