Azhagiya Kanne Song இசைஞானி இசையில் S.ஜானகி பாடிய அழகிய கண்ணே பாடல்... Ilaiyaraaja | S.Janaki

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 ноя 2024

Комментарии •

  • @chithraa4445
    @chithraa4445 7 месяцев назад +30

    இந்தப்பாட்டை பார்த்தவுடன் நானும் என் பிள்ளைகளும் வாழ்ந்த வாழ்க்கை ஞாபகம் வந்தது. சோகம் இழையோடும் இனிமையான பாடல்.வாழ்க்கை ஒருமுறைதான் தானும் வாழ்ந்து அடுத்தவரையும் வாழ விடுங்கள். ஒரு நல்ல மனைவி அமைந்தால் கடவுளுக்கு நன்றி சொல்லி அன்புடன் வாழுங்கள். பணம்,பணம் என்று அலையாதீர்கள்

    • @jamesyacob5051
      @jamesyacob5051 6 месяцев назад

      😢😢😢

    • @GovindRaj-uu6sb
      @GovindRaj-uu6sb 4 месяца назад

      உண்மை sister

    • @gowthamr.p8287
      @gowthamr.p8287 4 месяца назад +1

      என் அம்மாவிற்கு மிகவும் பிடித்த பாடல். தற்போது அம்மா இல்லை. இந்த பாடல் என் கண்களில் கண்ணீர் வரவழைக்கிறது. நீங்கள் சொல்வது போல் நல்ல கணவனையும் பெண்கள் இழந்து விட பெண்கள் இப்போது தயாராகிவிட்டார்கள். பாடலுக்கு கண்கலங்கும் தலைமுறை வேறு இப்போது மற்றவரை கண்கலங்க வைக்கும் தலைமுறை வேறு. சில நேரங்களில் நம் கர்மா என்று சில குப்பைகளை நாம் தூக்கி சுமக்க வேண்டி உள்ளது. தாயின் அன்பு எப்போதும் கிடைக்காதது.

  • @athavang786
    @athavang786 2 года назад +272

    இந்த பாடல்வரிகளை எழுத எவனும் பிறக்கபோவதில்லை
    இந்த குரலில் பாடவும் யாரும் பிறக்கபோவதில்லை
    இந்த இசையும் இனி எந்த ஜென்மத்திலும் எவனும் அமைக்கபோவதில்லை
    நாம் தான் கொடுத்துவைய்தவர்கள்

    • @rajavikram5350
      @rajavikram5350 Год назад +1

      Super 👌

    • @mohan1771
      @mohan1771 Год назад +8

      தெய்வமே 🙏🏻 சரியா சொன்னீங்க

    • @essmeans3548
      @essmeans3548 Год назад +15

      மிகச் சரி..... (படமாக்கிய மகேந்திரனையும், தாயாகவே மாறிய அஸ்வினியையும் விட்டுவிட்டீர்கள்)

    • @athavang786
      @athavang786 Год назад

      @@essmeans3548 👍👍👍

    • @ayyamperumalgomathinayagam5668
      @ayyamperumalgomathinayagam5668 Год назад +3

      Enna alagana kaaviyam.....ini ipdi oru padaippuku vaaippu illa.....saathiyam illatha naraga vaalkaiyil vaalkirom......ethilum sirappu illai. Palaya thirupthi illai....yeno vaalanumennu nagargirathu ellor vaalvum......

  • @sbspsenthilkumar1721
    @sbspsenthilkumar1721 3 года назад +409

    சங்கம் காணாதது தமிழும் அல்ல தன்னை அறியாதவள் தாயும் அல்ல இந்த வார்த்தைகள் ரொம்ப ரொம்ப அருமை

    • @chitrachitu6382
      @chitrachitu6382 3 года назад +2

      அருமை மிகவும் நன்றி அய்யா

    • @bhuvaneswariporchelvam3923
      @bhuvaneswariporchelvam3923 3 года назад

      👌

    • @kanchiraveisubramaniyan9187
      @kanchiraveisubramaniyan9187 3 года назад +1

      Yes. This line is highlight of the song. KannA dhasan is a unique "Kavinjar- poet.
      Surpriseto hear, how he connects the words for our enlightenment to say.!!!!

    • @narendirababubabu4119
      @narendirababubabu4119 3 года назад +13

      அது "தன்னை" அல்ல "தனை" என்று நினைக்கிறேன். தனை (தனையன்) (குழந்தையை அறியாதவள் தாயும் அல்ல என்ற பொருளில். நன்றி.

    • @komban2745
      @komban2745 2 года назад

      Su

  • @ramasamythiruchandran9443
    @ramasamythiruchandran9443 2 года назад +1267

    கடவுள் என்முன்னே தோன்றி என்னவரம் வேண்டும் என்றுகேட்டால் நான்வாழ்ந்த 80 -90 ன் வாழ்க்கையை மீண்டும் இளையராஜாவின் இசையோடு மீட்டுகொடு என்பேன்..,,,

    • @sumathip3745
      @sumathip3745 2 года назад +105

      நிச்சயமாக இந்த எண்ணங்களோடு நிறைய மக்கள் இருக்கிறார்கள். வாழ்க இளையராஜா ஐயா.

    • @manichinnappa1922
      @manichinnappa1922 2 года назад +31

      Super

    • @vijayakumarnatarajan2408
      @vijayakumarnatarajan2408 2 года назад +24

      thanks for all

    • @muthumari9294
      @muthumari9294 2 года назад +61

      வாழ்ந்து விட்டோம் அதுவே தெய்வம் தந்த சிறப்பு.

    • @amuthas7542
      @amuthas7542 2 года назад +20

      Naanum

  • @nasarvilog
    @nasarvilog 3 года назад +466

    இந்தப் பாடலை நமக்காக உயிர் தந்த கண்ணதாசன் அவர்களுக்கு நன்றி இளையராஜா அவர்களுக்கும் எஸ் ஜானகி அவர்களுக்கும் என் பாராட்டுக்கள்

    • @rpgaming5300
      @rpgaming5300 3 года назад +4

      👍👍👍👍

    • @starkill2201
      @starkill2201 3 года назад +1

      ruclips.net/video/Kbs3IAUgjPc/видео.html

    • @juliejohn6420
      @juliejohn6420 3 года назад +2

      😘😘😘a😘ala😘a😘lalo😘la😘al😘😘😘a😘😘la😘la😘l😘a😘l😘l😘as😘al😘a😘la😘l😘😘lala😘😘la😘😘l😘😘la😘la😘😘a😘a😘alaa😘😘ala😘a😘a😘😘a😘😘a
      Saalaa😘😘அல்லாத😘a😘a😘a😘a😘a😘a😘l😘al😘a😘laa😘a😘😘l😘😘al😘a😘😘a😘😘😘😘😘l😘la😘a😘la😘la😘😘😘😘😘😘😘😘a😘lla😘😘a😘lala😘 கால 😘😘😘 என 😘
      😘😘லா😘a😘a😘😘ala😘😘aa😘laaalaa😘a😘lallla😘ala😘a😘lla😘aa😘a😘a😘a😘a😘a😘😘😘a😘😘😘😘ala😘a😘la😘😘அல்லது😘😘😘😘😘a😘aa😘al😘😘😘 ஆள் a😘 அல்லது 😘al😘al😘😘aa😘a😘a😘la😘la😘lalaa😘aala😘😘lal😘l😘aa😘l😘lala😘aa😘😘ala😘😘😘l😘a😘😘😘😘😘😘😘a😘😘😘😘😘😘😘😘😘lmao😘😘lala😘😘😘a😘al😘😘a😘😘lal😘l😘a😘😘😘al😘la😘al😘la😘😘😘😘😘a😘a😘😘l😘a😘is😘😘a😘a😘😘😘a😘😘😘a😘😘a😘la😘😘😘😘😘😘😘al😘லவ்😘😘😘 என 😘,😘😘l😘😘l😘al😘😘😘😘😘

    • @rajendranrevathi4558
      @rajendranrevathi4558 3 года назад +1

      @@rpgaming5300 y

    • @umarn2635
      @umarn2635 3 года назад +3

      உயிருக்கு உயிர் கொடுத்த அஸ்வினியை விட்டுவிட்டீர்களே

  • @SayedMohamed-w5p
    @SayedMohamed-w5p 11 месяцев назад +71

    இந்தப் பாடலில் ஏதோ ஒரு மர்மம் ஒளிந்துள்ளது இந்த பாடலை எப்போது கேட்டாலும் என் மனதில் ஏதோ ஒரு டன் வெயிட்டை ஏத்தியது போல பாரமாகி விடுகிறது அது ஏன் என்று தெரியவில்லை ஆனாலும் சுகமான வலி அது மட்டும்

    • @vijiviji4823
      @vijiviji4823 6 месяцев назад +1

      உண்மையிலேயே எனக்கும் அப்படித்தான் உள்ளது.

    • @kprakash8067
      @kprakash8067 6 месяцев назад +1

      எனக்கு மிதப்பது போல் தெரிகிறது.

    • @kprakash8067
      @kprakash8067 6 месяцев назад +2

      இளையராஜா அண்ணாத்த !என்னாத்த சொல்றது !
      மயக்கம்‌ வருதே !
      போதை தரும் இசை !
      இனியொரு முறை
      இந்த மண்ணில்
      பிறந்தால்தான்
      மண்ணோடு‌ சேர்ந்து
      மயங்கிக் கிடைக்கலாம் !
      இசைஞானி
      எங்கள்
      இளையராஜா வாழ்க‌!

    • @jamesyacob5051
      @jamesyacob5051 6 месяцев назад +1

      இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் நான் அழுவேன்.. காரணம் தெரியவில்லை..

    • @Nasrinmary
      @Nasrinmary 4 месяца назад +1

      ஆஆ

  • @rethinamrethinam3438
    @rethinamrethinam3438 3 года назад +255

    எல்லா அம்மாக்களும் தன் பிள்ளைகளுக்காகவே தன் சுதந்திரத்தை விட்டு கொடுப்பவள் தாய் எனக்கு மிகவும் பிடித்த பாடல்

    • @shanthidhananjayan4578
      @shanthidhananjayan4578 2 года назад +5

      உண்மையை மிகச்சிறப்பாக சொன்னீர்

    • @santhivanadhurai5900
      @santhivanadhurai5900 2 года назад +2

      20 years back ila eppavum iruntha nalla irukum epa child major ayetanga

    • @SELVISELVI-uw4tk
      @SELVISELVI-uw4tk Год назад +2

      தாய்க்கு இணையான தெய்வம் உள்ளதா?

    • @kavithat8338
      @kavithat8338 Год назад +2

      ரொம்ப பிடித்த பாடல்❤

  • @kamarajs1465
    @kamarajs1465 7 месяцев назад +18

    மெட்ராஸ்க்கு வந்தபுதிதில் 80 ல் TV முன் உட்கார்ந்து 17 வயதில் ஒளியும் ஒலியும் பார்த்த அப்போதே இதயத்தை ஏதோ செய்தது, இப்பொழுதோ இந்த பாட்டை கேட்கும்போதெல்லாம் இளவயதில் ஞாபகம் வந்து உயிரைக்ககொள்ளுகிறது. நான்கு வயதில் தந்தையை இழந்த என்னோடு நான்கு பிள்ளைகளை என் தாயார் தனிமையில் வளர்த்தார்கள், கண்ணதாசன் போன்று இளையராஜா போன்று உலகில் வேறு எந்த மொழியிலும் யாரும் பிறக்கப் போவதில்லை..
    ஞாபகம் 2:43

  • @starkill2201
    @starkill2201 4 года назад +655

    ஜென்மம் முடியும் வரை கேட்பேன்
    சலிக்காவில்லை என்றால் மறுபிறவி எடுத்து வருவேன் , ❤️❤️❤️

  • @ravindhiran.d6180
    @ravindhiran.d6180 2 года назад +304

    படித்துவிட்டு, எழுபதுகளின் பிற்பகுதியில் வேலைக்காக‌ நான் அலைந்து திரிந்து கொண்டிருந்த நேரம் அது. சரியான வேலை கிடைக்காமல் மனம் சோர்ந்து போய் இருந்த நேரம் எனது மனப் புண்ணை ஆற்றியது, வானோலிப்பெட்டி வழியே தவழ்ந்து வந்த இசைஞானி இளையராஜாவின் இதுபோன்ற பாடல்கள்தான்.💐💐💐💐💐

    • @vageducationalconsultancy7775
      @vageducationalconsultancy7775 2 года назад +2

      🙏🏼😭

    • @tamilselvankaalathi6368
      @tamilselvankaalathi6368 2 года назад +3

      அழகிய வரிகள்

    • @sundararajaperumaljothider6941
      @sundararajaperumaljothider6941 2 года назад +7

      இரவு நேரங்களில் நெஞ்சை வருடுகின்ற இசை ஞானி உடைய பாடல்கள் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்கள் இன்ப வெல்லம் பொங்குகின்ற நேரம்

    • @kundumani5162
      @kundumani5162 2 года назад +1

      😂

    • @sriramajeyam779
      @sriramajeyam779 2 года назад +1

      Excellent your experience

  • @rajeshsamrutha34
    @rajeshsamrutha34 3 года назад +194

    நான் இந்த திரைக் காவியத்தை கடந்த கொரோனா காலத்தில்தான் பார்த்தேன். ஒரு வாரமாக அந்த படத்தின் தாக்கம் என்னை ரொம்பவே ஆட்கொண்டது. மகேந்திரன் இயக்கம் அனைவரும் சிறப்பான நடிப்பு மிக அருமை. படத்தின் மிகப்பெரிய பலம் ராகதேவனின் பாடல் மட்டுமின்றி பின்னணி இசை என் கண்களை ஆறாக ஊற்றெடுக்க வைத்து விட்டார்.உதிரிப் பூக்கள் என் நினைவில் என்றும் உதிராப் பூக்கள்தான்

    • @mohan1771
      @mohan1771 10 месяцев назад

      குறிப்பாய் வில்லனாக நடித்த விஜயனின் நடிப்பு பிரமாதம்....

  • @vinayagamc3866
    @vinayagamc3866 4 года назад +410

    சொர்கம் எப்போதும் நம் கையிலே, என்ன ஒரு உயர் தத்துவம், கருத்து, இசை, அருமை! அருமை! .

  • @svrajendran1157
    @svrajendran1157 2 года назад +101

    இந்தகுயில் ஐம்பதுகளில் பாட ஆரம்பித்தபோதும் , இசைஞானி வந்த எழுபதுகளில்தான் இசையின் இளவரசி ஆனார் வயது ஏற ஏறத்தான் குரலில் இனிமை கூடியது என்பதே உண்மை ஜானகி அம்மாவின் பாடல்களில் இது ஒரு மைல்கல்

    • @rajavikram5350
      @rajavikram5350 Год назад +1

      Excellent

    • @sharmilabasheer7706
      @sharmilabasheer7706 Год назад +1

      ​@Raja Vikram 😅

    • @mohan1771
      @mohan1771 Год назад +1

      Well said

    • @akhilks3464
      @akhilks3464 Год назад +3

      Late 50s,60,70,80,late 90s South industry ruled s. Janaki amma especially 50,60,70,80s kannada, malayalam industry's full ruled s. Janaki amma and late 60s, 70,80,90 Tamil and telugu ruled also 80s she was ruled hindi music

    • @wolfsr9259
      @wolfsr9259 Год назад +2

      ​@@akhilks3464 not true It was P. Susila mam.

  • @manic6643
    @manic6643 4 года назад +198

    தாய் சேய் உயிரில் கலந்த பாடல் இந்த உலகில் இதைவிட மனதிற்க்கு ஆனந்தம் உண்டோ நிச்சையம் கிடையாது ராஜாவின் தெய்வீகபாடல் இது இருகைசேர்த்து வணங்குகிறேன்

  • @kmahendranmahendrank880
    @kmahendranmahendrank880 2 года назад +139

    இதுபோன்ற பாடல்களுக்கு என்றும் அழிவில்லை, எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்,மஞ்சள் என்றென்றும் நிலையானது மழை வந்தாலுமே கலையாதது கவியரசரின் வரிகளில் எத்தனை அர்த்தம்! ஜானகி அம்மாவின் குரலில் நெஞ்சைப் பிழியும் சோகம் இழையோடும் உணர்வோடு பாடும் பாடல் இது .

  • @natarajanvanchinathan4206
    @natarajanvanchinathan4206 3 года назад +152

    கவியரசு கண்ணதாசனால் மட்டுமே இப்படி எழுதமுடியும். எளிமை,இனிமை.

    • @venkatvenkat3673
      @venkatvenkat3673 3 года назад +4

      நாம் தாயாகும் போதுதான் நம் தாயின் அருமை தெரிகிறது.

    • @palaniappanhi9498
      @palaniappanhi9498 2 года назад +1

      கண்ணதாசா நீ சாகவில்லை உன் கைகளால் எழுதிய இது போன்ற பாடல்களால் தமிழர்களை வாழவைத்து கொண்டு இருக்கிறாய்.தலைமகனே அடுத்த பிறவி எடுத்து வந்து பாட்டெழுதி நம் தமிழை காப்பாத்து கண்ணதாசா.

  • @rajendranner5459
    @rajendranner5459 3 года назад +490

    அந்த 80.களின் எவர்கிரீன் காலம் திரும்ப வரவே வராதா..அதுவே சொர்க்கம்.....சொர்க்கம்

  • @valliammala2470
    @valliammala2470 3 года назад +235

    கண்ணதாசனின் வரிகள் கண்ணீரை வரவழைக்கின்றன.மலரும் நினைவுகள் மனதை நெருடின.💗💗💗👌👌👌

  • @jeyaxeroxbalu5139
    @jeyaxeroxbalu5139 2 года назад +141

    "அழகிய கண்ணே
    உறவுகள் நீயே
    நீ எங்கே
    இனி நான் அங்கே
    என் சேய் அல்ல
    தாய் நீ
    அழகிய கண்ணே
    உறவுகள் நீயே
    சங்கம் காணாதது
    தமிழும் அல்ல
    தனை அறியாதவள்
    தாயும் அல்ல
    சங்கம் காணாதது
    தமிழும் அல்ல
    தனை அறியாதவள்
    தாயும் அல்ல
    என் வீட்டில் என்றும்
    சந்ரோதயம்
    நான் கண்டேன்
    வெள்ளி நிலா
    அழகிய கண்ணே
    உறவுகள் நீயே
    சொர்க்கம் எப்போதும்
    நம் கையிலே
    அதை நான் காண்கிறேன்
    உன் கண்ணிலே
    சொர்க்கம் எப்போதும்
    நம் கையிலே
    அதை நான் காண்கிறேன்
    உன் கண்ணிலே
    என் நெஞ்சம் என்றும்
    கண்ணாடிதான்
    என் தெய்வம்
    மாங்கல்யம்தான்
    அழகிய கண்ணே
    உறவுகள் நீயே
    மஞ்சள் என்றென்றும்
    நிலையானது
    மழை வந்தாலுமே
    கலையாதது
    மஞ்சள் என்றென்றும்
    நிலையானது
    மழை வந்தாலுமே
    கலையாதது
    நம் வீட்டில் என்றும்
    அலை மோதுது
    என் நெஞ்சம்
    மலையாதது
    அழகிய கண்ணே
    உறவுகள் நீயே
    நீ எங்கே
    இனி நான் அங்கே
    என் சேய் அல்ல
    தாய் நீ
    அழகிய கண்ணே
    உறவுகள் நீயே"
    -------------¤💎¤-------------
    💎உதிரிப்பூக்கள்
    💎1979
    💎An amazing voice of ஜானகி
    💎An evergreen pathos of
    இளையராஜா
    💎கண்ணதாசன்

  • @seeniappan9643
    @seeniappan9643 3 года назад +261

    என்றும் இளையராஜா இசை வாழும்., ஆத்ம ராகம் எண்பது இதுதான்., நன்றி இளையராஜா என்ற இசை ஞானிக்கு.,

    • @starkill2201
      @starkill2201 3 года назад

      ruclips.net/video/Kbs3IAUgjPc/видео.html

    • @kanchiraveisubramaniyan9187
      @kanchiraveisubramaniyan9187 3 года назад +4

      Add to kannadasan too for the lyrics , where he spinned the words like knitting cloth.

    • @umarn2635
      @umarn2635 3 года назад +6

      இசைஞானி அல்ல இசைமேதை

  • @jahanilango
    @jahanilango 3 года назад +229

    மனக்காயத்தோடு பாடும் பாடல்..
    அதில் சொற்களும் இசையும் பாடும் அழகும்
    போட்டிபோடுகின்றன..

  • @menakaganesan111
    @menakaganesan111 4 года назад +165

    சங்கம் காணாதது தமிழும் அல்ல.. தன்னை அறியாதவள் தாயும் அல்ல.. வரிகள் 👌👌👌👌

  • @devass6173
    @devass6173 2 года назад +55

    இந்த பாடல் எங்கு கேட்டாலும் மனதை ஏதோ செய்கிறது எங்கள் ராஜாவின் இசை ராஜ்ஜியத்தில் மயங்காத வண்டுகள் தான் இருக்க முடியமா என்ன மலரில் மட்டும் தான் தேன் இருக்குமா,,,,,?

  • @riviereganessane9128
    @riviereganessane9128 2 года назад +141

    ஆராத சோகத்தை எல்லாம் தன் குழந்தையின் சிரிப்பில் மறக்கும் ஒரு தாயின் சோக கீதம் மெல்லிய இழையாக மறைந்து நிற்கும் சோகமே இப்பாடலின் தனிச்சிறப்பு

  • @Indran71
    @Indran71 11 месяцев назад +14

    எல்லாத் திரைப்பாடல்களிலும், இசை இருக்கலாம்! இளையராஜாவின் பாடல்களில் மட்டும்தானே ஜீவன் இருக்கிறது!
    இசைமழையால் பெருகுகின்றதே கண்ணீர் கடல்!!!😢

  • @ramalingamk5319
    @ramalingamk5319 Год назад +21

    என் பேத்தி நினைவாக இந்த பாடல்.. அவள் அமெரிக்க மண்ணில் இருக்கிறாள்... கவியரசு கண்ணதாசன் திரை இசை சந்தம். ஜானகி அம்மையார் பாடிய மெல்லிய மனமுருக்கும் குரல்.. இசைஞானி இசை.. எங்கோ கொண்டு செல்கிறது..

  • @archanapremvelam2865
    @archanapremvelam2865 3 года назад +368

    எண்ண முடியாத அளவிற்கு கேட்டு விட்டேன்.இன்னும் இப்பாடல் சலிக்க வில்லை. என் குழந்தைகளின் பால்ய பருவம் நியாபகம். இந்த பாடல் மாதிரி இனி வரும் காலத்தில் யாரும் போட முடியாது..

    • @arunramchandar3904
      @arunramchandar3904 3 года назад +11

      Very emotional song madam. When I listened this song I cried many times alone

    • @rameshr2578
      @rameshr2578 3 года назад +3

      Ennkumthan

    • @starkill2201
      @starkill2201 3 года назад

      ruclips.net/video/Kbs3IAUgjPc/видео.html

    • @udayasp655
      @udayasp655 2 года назад +6

      வாழ்த்துகள் சகோ..

    • @l.psureshkumaar2721
      @l.psureshkumaar2721 2 года назад +11

      படம் எது என்று கேட்டால் தெரியாத பள்ளி பருவத்தில் என்னை ஏதோ உணர்வுடன் கலந்த இசை ஞானி பாடல்களில் இந்த பாடல் முக்கியமானது

  • @gpmsrinivasan5873
    @gpmsrinivasan5873 3 года назад +77

    நான் கிராமத்தில் பிறந்து வளர்ந்து பின் நகரத்தில் வாழ்ந்து இப்போதும் இந்தப் பாடல் எங்கு கேட்டாலும் நின்று பாடல் முடிந்த பின் செல்வேன்

    • @vijayaragavan5957
      @vijayaragavan5957 3 года назад

      Super

    • @umarn2635
      @umarn2635 3 года назад

      எண்பதுகளில் ரேடியோ பெட்டி முன் தவமிருந்த காலம் அது

  • @athiandjani2409
    @athiandjani2409 3 года назад +199

    Janaki அம்மா குரலுக்கு என்றும் நான் அடிமை🥰🥰🥰🥰🥰🥰😍😍😍😍😍

  • @vadhanamr3037
    @vadhanamr3037 3 года назад +201

    சங்கம் காணாதது தமிழும் மல்ல தன்னை அறியாதவாள் தாயும் அல்ல...
    கவிஞனின் படைப்பிற்கு நாங்கள் அடிமை...

    • @deepadeepa.r6344
      @deepadeepa.r6344 3 года назад +3

      Vera level

    • @komban2745
      @komban2745 2 года назад

      Su

    • @palaniappanhi9498
      @palaniappanhi9498 2 года назад +1

      கண்ணதாசன் ஒருவன் இல்லை என்றால் இது போன்ற உயிரோட கலந்த சொற்கள் நமக்கு கிடைக்காது இளையராஜா இசை அதற்கு பிறகுதான் கவிஞனுக்கே இந்த ஆளுமை

    • @dhanalakshmipadmanathan5186
      @dhanalakshmipadmanathan5186 2 года назад

      @@palaniappanhi9498 ஆமோத்திக்கிறேன் ஐயா...

  • @jayanthibellvan8576
    @jayanthibellvan8576 3 года назад +60

    🌸🌸🌸🌸என் தந்தைக்கு மிகவும் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று... 🌷🌷🌷 Miss u so much pa 🌸🌸🌸

    • @gandhimohan.d6620
      @gandhimohan.d6620 3 года назад +2

      எங்க அப்பாவுடன் பார்த்த படம் .அப்ப 8வது படிக்கிறேன்

  • @சவக்கடல்
    @சவக்கடல் 11 месяцев назад +3

    அழகிய கண்ணே... உறவுகள் நீயே...
    நீ எங்கே...
    இனி நான் அங்கே...
    என் சேய் அல்ல...
    என் தாய்... நீயே...
    அழகிய கண்ணே...
    உறவுகள் நீயே...
    சங்கம் காணாதது தமிழும் அல்ல...
    தன்னை அறியாதவள்...
    தாயும் அல்ல...
    என் வீட்டில்...
    என்றும் சூரியோதயம்...
    நான் கண்டேன்... வெள்ளி நிலா....
    சொர்க்கம் எப்போதும்...
    நம் கையிலே...
    அதை நான் காண்கிறேன்...
    உன் கண்ணிலே...
    என் நெஞ்சம்... என்றும் கண்ணாடிதான்...
    என் தெய்வம் என்றும்...
    மாங்கல்யம்தான்...
    மஞ்சள் என்றென்றும் நிலையானது...
    மழை வந்தாலுமே... அது கலையாதது...
    நம் வீட்டில் என்றும் அலை மோதுது...
    என் நெஞ்சம்...
    இன்றும் அலையாடுது...

  • @vishalvinod8923
    @vishalvinod8923 3 года назад +48

    இந்த பாட்டு எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு அது என்னவோ தெரியல இந்த பாட்டு கேட்கும்போது கண்ணுல தண்ணியே வருது ❤️

  • @rameshponnaiah7609
    @rameshponnaiah7609 3 года назад +154

    மிக அருமையான பாடல்.இதயத்தை அலுத்தும் சோகம் மற்றும் சொல்லமுடியாத ஒரு மௌனத்திண் வலியை கொண்டுவருகிற பாடல் .இசையும், பாடலின் வரிகளும் வர்ணிக்க வார்த்தை இல்லை .

  • @BaluBal-b7m
    @BaluBal-b7m 7 месяцев назад +5

    Indias no 1 best song for 100 years . No one create this tune againe.

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 3 года назад +54

    பழைய நினைவுகளை நம் எண்ணத்தில் எதிரொலிக்க செய்யும் இளையராஜாவின் இசை கருவிகள் பொழிந்த இசை மழை..
    தாய்மையின் அன்பை நினைவு படுத்தும் நம் மனதை கனக்க வைக்கும் ஜானகியின் குரலோசை..
    பட்டாம்பூச்சிகளாக பறந்து திரியும் அஞ்சு மகேந்திர் .. ஹாஜா ஷரீப்..
    பெண்மைக்கு அழகு சேர்க்கும் அந்த தாய்மையின் வடிவமாக ..
    ஒளிப்பதிவாளர் அசோக் குமாரின் கண் கேமரா வழியாக பார்த்த பசுமையும் பாசமும் ததும்பும் அழகான காட்சிகள்..
    இயக்குனர் மகேந்திரன் இந்த பாடலுடன் நம் நினைவில் நிழலாடுகிறார்..

  • @natarajans6904
    @natarajans6904 4 года назад +264

    இந்த மாதிரி பாடல் இனிமேல் வராது . காலத்தால் அழியாத காவியம்

    • @udayasooriyan191
      @udayasooriyan191 3 года назад +2

      நடராஜன் அவர்களே உங்களுக்கு வயது எத்தனை என்று தெரிந்து கொள்ளலாமா நன்றி

    • @natarajans6904
      @natarajans6904 3 года назад

      @@udayasooriyan191 49

    • @udayasooriyan191
      @udayasooriyan191 3 года назад +1

      @@natarajans6904 நன்றி இப்படியான பாடல்கள் வந்த காலம் எப்படி இருந்தது

    • @umarn2635
      @umarn2635 3 года назад +1

      அது ஒரு பொற்காலம்

    • @rameshn4070
      @rameshn4070 3 года назад

      @@natarajans6904 மரரரௌ

  • @prakashprk878
    @prakashprk878 3 года назад +50

    இளையராஜ ஜானகி அம்மாவுக்கு கோடான கோடி நன்றி அப்படி ஒரு பாடல் இதயம் தொட்ட பாடல்களில் தனித்துவம் பெற்ற பாடல் உயிரோட்டமான பாடல் இதுக்கு மேல என்ன சொல்ல வார்த்தைகளால் விவரிக்க முடியல...

  • @jeyajeya4756
    @jeyajeya4756 3 года назад +87

    உதிரிப்பூக்கள்.... பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படம்+ பாடம்.....

  • @sathiyanarayananvinayagam2857
    @sathiyanarayananvinayagam2857 2 месяца назад +10

    நல்ல பாட்டு யார் வேணாலும் குடுக்கலாம், இப்டி அடிக்கடி கேக்குற மாதிரி பாட்டு இவரால மட்டும் தான் குடுக்க முடியும் THE LEGEND

  • @jayanthijayakanth8292
    @jayanthijayakanth8292 Год назад +10

    பிள்ளைகளுக்கு ஆகவும் கணவருக்காகவும் வாழும் அப்பாவி அம்மாக்களுக்கு இந்த பாடல் சமப்பர்ணம

  • @MAHALAKSHMI-oj8ty
    @MAHALAKSHMI-oj8ty 3 года назад +35

    என் உயரினும மேலான என் இனிய அம்மா எங்களிடம் இந்த பாடலை அடிக்கடி பாடி பாடி எங்கள் ஐந்து பேரையும் அன்பில் அரவணைத்து வளர்த்த பாடல் ....... இன்று கேட்டாலே அம்மாவின் அரவணைப்பு வாட்டி வதைக்கிறது....😭😭😭😭😭😭😭😭

  • @boscolawrencemarianathan760
    @boscolawrencemarianathan760 4 года назад +267

    1987 -- அன்று வயது 8.
    தலையில் புத்தகப்பையை மாட்டிக்கொண்டு பள்ளிக்கு நடந்து செல்லும்போது அந்த குறிப்பிட்ட சம்சா கடையில் இந்த பாடல்..
    ஏதோ!! இனம்புரியாத ஏக்கம், ஈர்ப்பு , இன்னும் விவரிக்க முடியாத ஏதோ ஒரு உணர்வு. எல்லாம் கலந்த ஒரு கிரக்கம். பாடலை கேட்டுக்கொண்டே இருக்க..
    சம்சா கடைகார
    அண்ணன்: டாய் பள்ளிக்கூடம் மணி ஆகலையா???
    ஐய்யய்யோ!!!!!😱😱😱
    ஓடுரா!! ஓடுரா!! 🏃🏃🏃🏃..
    அந்த நினைவுகளை அசை போட்டால் இன்றும் கண்களில் கண்ணீர் வரும்.. 😭😭😭😭
    அப்படி காலத்தால் அழியாத படைப்பு அது.
    பாடல், இசை, இவையிரண்டும் உணர்வுடன் கலந்து. இதயம் எல்லையில்லா ஆனந்தத்தில் மூழ்கும்...
    இன்றளவும் இந்தப் பாடலை முந்திச்செல்ல தாய் அன்பு கொண்ட பாடல் இயற்றப்படவில்லை என்றே நான் சொல்லுவேன்...
    இதை யார் எப்படி எடுத்துக் கொண்டாலும் கவலைப்பட போவதில்லை.. 💗💗💗💗

  • @muralidharanc5769
    @muralidharanc5769 10 месяцев назад +3

    தாயை இழந்து வாடுபவர்களுக்கு தாயின் அரவனைப்பை மீண்டும் தரும் பாடல். இயக்குனர் பாடல் ஆசிரியர் பாடிய குரலுக்கு உரியவர் இசை அமைப்பாளர் திரைப்படத்தில் நடித்த நடிகை அனைவருக்கும் என் நன்றியை கானிக்கை ஆக்குகிறேன்.

  • @kalaranikalaranipalani5396
    @kalaranikalaranipalani5396 4 года назад +64

    என்ன ஒரு இதயததை வருடும் அழகான பாடல் மனம் போகுதே அந்த kalaingalie தேடி .

  • @nausathali8806
    @nausathali8806 4 года назад +73

    இதுபோன்ற பாடல்கள் நமக்கு
    கிடைக்க காரணமே
    படத்தின் இயக்குனர் (மகேந்திரன்)
    இப்படத்தின் இசையமைப்பாளர்
    (இளையராஜா)
    இந்த இருவரிடமும் தேடுதல் என்ற
    விஷயம் ரொம்பவே மேலோங்கி
    இருந்த காரணத்தினாலேயே
    ஜீவனுள்ள இப்பாடல்.
    "ஜானகி அம்மா"வின் குரலின் மூலம்,
    சாந்தமான முறையில் நமக்கு தந்திருக்கிறார்கள், அமைதியான
    இயற்கை சூழலில் நிலையான
    மணநிறைவோடு இப்பாடலை
    கேட்கவேண்டும்.
    உலகத் தரமிக்க இயக்குனர்
    மகேந்திரன் மட்டுமே,
    (பாடல்) மற்றும் கதைக்கான களங்களை தேர்ந்தெடுத்து நமக்கு
    தரக்கூடியவர்.
    எப்போதாவது பூக்கும்
    குறிஞ்சி பூ அல்ல இது,
    அன்றாடம் பூத்து அன்றே
    தெய்வத்தை சென்றடையும்
    தெய்வீக மலர் இது !!!
    மலரும் நினைவுகள்
    சின்னஞ்சிறு மலர்களோடு !!
    படம் : உதிரிப்பூக்கள்.
    இசை : இசைஞானி இளையராஜா.

    • @starkill2201
      @starkill2201 3 года назад +2

      Super varigal nandiy sir

    • @nausathali8806
      @nausathali8806 3 года назад +1

      @@starkill2201
      மிக்க நன்றி சகோதரரே...!

    • @udayasooriyan191
      @udayasooriyan191 3 года назад +1

      உண்மை

    • @nausathali8806
      @nausathali8806 3 года назад

      @@udayasooriyan191 நன்றி சகோதரரே...!

    • @palaniappanhi9498
      @palaniappanhi9498 2 года назад

      இந்த பாட்டுக்கு உயிர் குடுத்தது கவிஞர் கண்ணதாசன் மட்டுமமே வேற எவரும் இல்லை

  • @பெ.மாதேஷ்
    @பெ.மாதேஷ் 4 года назад +136

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத பாடல்.....,

  • @ManimaranGovindhan
    @ManimaranGovindhan 5 месяцев назад +7

    ஊதிரி பூக்கள்.!
    ஜானகி அம்மா குரல்வளம் இனிமை நிறைந்த தேன் மழை
    கீதங்கள் எனக்கு பிடித்த பாடல்
    இசை இளைய
    ராஜா
    அவர்கள1 இசைமைத்த பாடல் எத்தனை தடவை கேட்டாலும் கேட்டுக்கொண்டு இருக்கலாம்.
    வாழ்த்துக்கள்.!

  • @romeoraja7888
    @romeoraja7888 2 года назад +6

    நான் மட்டுமல்ல எண்பதுகளில் பிறந்த அனைவரும் அப்போது வாழ்ந்த வாழ்க்கை ஒரு வரப்பிரசாதம் வெள்ளிக்கிழமை ஒளியும் ஒலியும் சனிக்கிழமை இந்தி திரைப்படம் ஞாயிற்றுக்கிழமை தமிழ் திரைப்படம் சத்தான தின்பண்டங்கள் எப்போதும் வீட்டிற்கு வெளியே நண்பர்களுடன் விளையாடுவது இன்னும் நிறைய நிறைய நீங்காத நினைவுகளுடன் நாம் விரும்பும் இசைஞானி இளையராஜா கீதங்கள்

  • @sakyamohan
    @sakyamohan Год назад +4

    ஆயிரம் முறைக்கு மேல் பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் நான் அழாமல் இந்த இசைஞானியின் இணையற்ற பாடல் முடிந்ததில்லை! என் வாழ்வின் தவம் இந்த பாடலை என் பிறப்பில் கேட்கிறேன்! எந்த மனநோயையும் தீர்க்கும் இணையற்ற மனமருந்து இசைஞானி இளையராஜாவின் இசை!
    இசைபோதிசத்துவனே! இன்னும் பல நூற்றாண்டுகள் உனது இசைமெட்டுக்கள் பல நூறு பரம்பரைகளை பண்பாட்டோடு இணைக்கும்!

  • @sakthivelsakthi6845
    @sakthivelsakthi6845 2 года назад +27

    3.10...to...3.40...
    இந்த இசை வரும் போது என் கண்களில் கண்ணீர் நிரம்பி வழிகிறது...

    • @PammalRaaja
      @PammalRaaja Год назад +1

      It is not flute it’s type of ,but an emotion triggering instrument Raaja sir cleverly used it.

  • @ஈசன்-ட8ங
    @ஈசன்-ட8ங 3 года назад +77

    ஒரு தாய்க்கு நிகர் எவரும் இல்லை 😌😌😌🙏🙏🙏

  • @nagasankar6799
    @nagasankar6799 4 года назад +103

    இரவில் அமைதியான சூழலில் கேட்க வேண்டிய பாடல்

  • @MohamedMohamed-rv6bt
    @MohamedMohamed-rv6bt 6 месяцев назад +8

    அருமையான வரிகள்..
    மனதை மிகவும் வருடும் இசை..
    தாய் அன்பிற்கு ஈடு இணை இல்லை

  • @RAJKUMAR-hm3nc
    @RAJKUMAR-hm3nc 11 месяцев назад +2

    சங்கம் காணாதது தமிழும் அல்ல.. தன்னை அறியாதவள் தாயும் அல்ல.. சொர்கம் எப்போதும் நம் கையிலே வரிகள்

  • @sathamsmsathamsm9911
    @sathamsmsathamsm9911 Год назад +14

    எத்தனை காலங்கள் ஆனாலும் தாயின் அன்பு எதற்க்கும் ஈடாகாது❤❤❤

  • @shanmugavelramasamy1908
    @shanmugavelramasamy1908 2 года назад +47

    எத்தனை தலைமுறை கடந்தாலும்.. மன அமைதியையும் இனிமையையும் தரும் பாடல்....

  • @AnadhiSankaran
    @AnadhiSankaran 2 месяца назад +7

    சங்கம் காணாதது தமிழிலும் அல்ல தன்னை அறியாதவள் தாயும் அல்ல நல்ல அருமையானவரிகள் இந்த பாடல் உயிரோட்டம் உள்ள பாடல்

  • @viveksundar707
    @viveksundar707 2 года назад +37

    ஓர் அடியில் உலகளந்தான், ஓர் பாடலில் மக்கள் மணங்களை வென்றான்

  • @msubramaniam8
    @msubramaniam8 2 года назад +7

    எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத பாடல் வரிகள், இசை, குரல், காட்சி அமைப்பு, நடிப்பு..இப்படி அனைத்தும் நிறைந்த காலத்தால் அழியாத காவியம் உதிரிப்பூக்கள்...தமிழ் என்றும் அமிழ்தே..இப்பாட்டை ஒவ்வொரு முறை கேட்கும்போதும் மனம் கன க்கும்..இனம் புரியாத ஒரு சோகம், சிலிர்ப்பு. நம்மை அறியாமல் கண்களில் வடியும் கண்ணீர் துளிகள்..கண்ணதாசன் அய்யா, ...என்றும் சிரஞ்சீவி ..இளையராஜா சார், ஜானகியம்மா , மகேந்திரன் சார் ...மறக்க முடியாத காவியம்

  • @kjagadeesan2776
    @kjagadeesan2776 6 месяцев назад +11

    உன் இசையில் கண்ணீர் வருகிறது....மேகங்கள் அருகில் இருந்து கேட்குமேயானால்
    நிச்சயம் மழை வரும்..!

  • @Ramalingam-ni5bh
    @Ramalingam-ni5bh 5 месяцев назад +10

    அமெரிக்காவில் இருக்கும் என் பேத்தி ஞாபகம் வருகிறது.. கவியரசு கண்ணதாசன் வைரவரிகள் இவை.. அம்மா ஜானகி குரலோ மதுரம்

  • @UmaMaheswari-ze5gd
    @UmaMaheswari-ze5gd Год назад +2

    சங்கம் காணாதது தமிழும் அல்ல தனைஅறியாதவள் தாயும்அல்ல
    அடடா என்ன அருமையான வரிகள்
    இசை கொடுத்த இசைஞானி அவர்களுக்கும்,கவியரசு அவர்களுக்கும் கோடானு கோடி நன்றி .எக்காலத்துக்கும் பொருத்தமான பாடல்.

  • @prakashk643
    @prakashk643 Год назад +3

    இதை போல் இனி ஒரு படம் மகேந்திரன் அவர்கள் மீண்டும் வரப்போவதும் இல்லை தமிழ் சினிமாவில் இப்படி ஒரு படம் அவரால் மட்டும்தான் எடுக்க முடியும்

  • @vanithalakshmi3510
    @vanithalakshmi3510 3 года назад +46

    Oh.What a song.I Wwassinging this song for my daughter. Now she is 40yr s Still when I think of her I sing this song. I wonder whether in future we will get an emotional song like this with beautiful lyrics, soothing music,sweet voice like Janakiamma. No no song can outwit this song. Of course natural acting of kutty Anju Kaja Aswini.Ketkalam,Kiran galas,mayangalam

    • @abiramiprakasam
      @abiramiprakasam 3 года назад

      Yes it reminds me my mom....brave lady no more now.

    • @vanithalakshmi3510
      @vanithalakshmi3510 Год назад

      @@abiramiprakasam Oh sorry 😔.L am seeing urteply justnow Amom is always Amom.Be strong

  • @RajkumarRajkumar-dc9ny
    @RajkumarRajkumar-dc9ny 8 месяцев назад +5

    நான் இந்த பாட்டை நிறைய தடவை கேட்டு விட்டேன் எனக்கு சலிக்கவே இல்லை

  • @sa.t.a4213
    @sa.t.a4213 3 года назад +32

    Romba നല്ല പാട്ട്. Picturization adipoli. എന്നുടെ കുട്ടികാലത്ത് കേട്ട പാട്ട് . നല്ല പാടിയിരുക്ക് ജാനകി അമ്മ.Janaki Amma and the team you really performed well. Thanks for the commitment and dedication 🙏🙏🙏

  • @boopathycid7943
    @boopathycid7943 5 месяцев назад +15

    இந்த பாடலை எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம்

  • @BABLOO2015
    @BABLOO2015 3 года назад +480

    இந்த பாட்டுக்கு ஒரு சொட்டு கண்ணீர் வரவில்லை என்றால் மனநோயாளி ஆக இருப்பாங்க

    • @kalaivanimannavan6537
      @kalaivanimannavan6537 3 года назад +8

      Kandippa bro

    • @revathinaveen8836
      @revathinaveen8836 3 года назад +9

      உண்மைதான் நண்பரே

    • @umarn2635
      @umarn2635 3 года назад +13

      உண்மையாக பாசம் உள்ளவர்களுக்கு நிச்சயமாக ஒரு துளி கண்ணீர் வரத்தான் செய்யும்

    • @rajraj-xg4pb
      @rajraj-xg4pb 3 года назад +6

      Yes Bro

    • @premalatha2080
      @premalatha2080 3 года назад +6

      Yes

  • @murugesanp3393
    @murugesanp3393 Месяц назад +11

    எத்தனை ஆண்டுகள் மறைந்தாலும் இந்த பாடலை மறக்க முடியாது

  • @ந.ரா.வேல்முருகன்
    @ந.ரா.வேல்முருகன் 2 месяца назад +7

    சங்கம் காணாதது தமிழும் அல்ல
    தன்னை அறியாதவள் தாயும் அல்ல. என் தாயை நினைக்க வைத்த வரிகள்.

  • @neelanagan6126
    @neelanagan6126 7 месяцев назад +5

    இப்பாடலைக் கேடகும் போதெல்லாம் என்னால் என் கண்ணீரை கட்டுப்படுத்தமுடியாது ஒரு தாய் தன் பிள்ளைகளின் மேல் வைத்துள்ள அன்புக்கு ஈடு இணையில்லை அற்புதமான நடிப்பு கணவனே தெய்வம் என்றெண்ணி வாழும் அவளை கணவர் புறகணிக்கும் ஒவ்வொரு முறையும் அவள் படும் வேதனையை காட்டும் நடிப்பு அற்புதம் தந்தையின் பாசத்திற்காக ஏங்கும் பிள்ளைகளின் நடிப்பும் மிக அற்புதம் இப்படம் மட்டுமல்ல இப்பாடலும் ஒரு காவியம்

  • @pazhaniyappanmuthu7144
    @pazhaniyappanmuthu7144 2 года назад +7

    நம் வாழ்க்கையை நாமே நேரில் பார்க்கும் மிக அழுத்தமான மறக்கமுடியாத பதிவு..

  • @MrArasu747
    @MrArasu747 3 года назад +46

    கவிஞர் கண்ணதாசனின் அருமையான வரிகள் காலத்தினால் அழியாதது

  • @nagendranp5815
    @nagendranp5815 7 месяцев назад +5

    உதிரி பூக்கள்........வாழ்வில் எல்லோரும் சந்திக்கும் ஒரு பயணம்.....திருமண அனாலும்....இறப்பு அனாலும்......பூக்கள்....என்றுமே உதிரி போகும்.......mahrndran sir சல்யூட் 😢😢😢😢

  • @sivakumarc6166
    @sivakumarc6166 4 месяца назад +14

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤இசைக்கு உயிர் கொடுத்த எங்கள் இளையராஜா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mathialaganp3286
    @mathialaganp3286 3 года назад +5

    கொடியும்.மலரும்.வாசனையும்.என்றும்பிரியாது.அதபோல்.கண்ணதாசனும்.கொடியே.இளையராஜா.மலர்.ஜானகியம்மா.வாசனை.அழகியபாசம்உள்ளபாடல்.வாழ்க.தெய்வங்களே

  • @subbannanpalanisamy2197
    @subbannanpalanisamy2197 5 месяцев назад +11

    இன்றும் என்றும் மனதை பிசையும் கண்ணீர் காவியமாக இப்பாடல் இசைத்துக் கொண்டே இருக்கும்!

    • @neppolianneps8489
      @neppolianneps8489 5 месяцев назад

      நான் தினமும் இந்த பாடலை கேட்கிறேன் அழுகிறேன்

  • @vikramanjoshua6913
    @vikramanjoshua6913 Год назад +12

    My dad used to sing this song for me to sleep. Now am in Bulgaria and my family is in Chennai. Nostalgic whenever I hear this song. Missing him and my mom's cooking a lot.

  • @gandhimohan.d6620
    @gandhimohan.d6620 2 месяца назад +12

    இசைஞானி அவர்களின் இப்பாடலை கேட்கும் போதெல்லாம் கண்ணீர் சிந்தும்

  • @vethiyan7754
    @vethiyan7754 3 года назад +22

    நான் பிறந்த வருடம் தான் கண்ணதாசன் நினைவு வருடம் நான் அழுதது உனக்காகதான் இருக்கும்😭😭😭😭

  • @newfortr7242
    @newfortr7242 3 месяца назад +20

    இந்த பாட்டைக்கேட்டு கண்கலங்காதவர்கள் மனுதப்பிறவியேயில்லை

  • @karthigaivelan1138
    @karthigaivelan1138 3 месяца назад +6

    இசையை தந்த கடவுளுக்கும்
    இசை மேதை இளையராசாவுக்கும் கோடி நன்றிகள்.

  • @RajeshwariEa
    @RajeshwariEa 6 месяцев назад +9

    மஞ்சள் என்றென்றும் நிலையானது மழை வந்தாலுமே கலையாதது நம் வீட்டில் என்றும் அலைமோதுது என் நெஞ்சம் மலையாது. அழிகிய கன்னே உறவுகள் நீயே.

  • @வள்ளிதமிழ்
    @வள்ளிதமிழ் 4 года назад +40

    எனது சிறு வயதில் கேட்ட பாடல்..
    பாசம். ஜானகி அம்மாவின் குரல் சூப்பர் 👌👌

    • @JoJo-ow4fh
      @JoJo-ow4fh 3 года назад

      Jency voice... Not janki Amma

    • @deepub6588
      @deepub6588 Год назад

      Sung by Janaki amma. En isai devathai

  • @fouziyabuhari9289
    @fouziyabuhari9289 2 месяца назад +7

    80 பதில் நந்தம்பாக்கம் ஜோதி தியேட்டரில் பார்த்தோம் இதில் வரும் ஹீரோ என் friend செலின் மாதிரி இருப்பாங்க எனக்கு ரொம்ப பிடிக்கும் அது ஒரு பொற்காலம் மீண்டும் அதே 80க்கு போக வேண்டும் நாங்கள் தொலைத்த நாட்களையும் என் ஃப்ரெண்ட் தேடிக் கொண்டு இருக்கிறோம்

  • @tmm1965
    @tmm1965 11 месяцев назад +2

    ஒவ்வொருவரின் அம்மா வின் நினைவுகளை நம் கண்முன் காட்டும் பாடல்

  • @manivannancn1844
    @manivannancn1844 2 года назад +16

    இந்த பாடலை கேட்கும்போது மறைந்த எங்க அம்மாவின் நினைவு வருகிறது.

  • @kanishkasenthilkumar8683
    @kanishkasenthilkumar8683 7 месяцев назад +8

    இனம்புரியாத ஒன்று மனதை ஆழ்த்தியது இந்த பாடலை கேட்கும் போது

  • @ramalingamk5319
    @ramalingamk5319 3 года назад +3

    அழகிய பாடலை பழகிய விதத்தில் எழுதிட கவியரசு கண்ணதாசன் தவிர வேறு யாரால் இயலும்.. இசைஞானி இளையராஜா மனதை அசைய வைக்கும் வித்தை கற்றவர்.. ஜானகி அவர் தம் குரலின் வசீகரம் என்றும் எப்போதும் மாறாதது..

  • @nareshvarman4199
    @nareshvarman4199 3 года назад +33

    80வருடங்களில் இந்த பாடலை எங்கஊர கள்ளிமடையில்ஆத்தூமேட்டுகளில் கேட்ட நினவுகள்

  • @palaniappanhi9498
    @palaniappanhi9498 3 месяца назад +8

    கண்ணதாசன் வரிகள் காலத்தால் அழியாதவை என்ன ஒரு அற்புதம்

  • @hemaladha1064
    @hemaladha1064 3 года назад +20

    ஒரு தாயாக மாறியதும் நூறு சதவீதம் இந்த பாடலை நான் உணர்ந்தேன்

    • @anbumukilan1975
      @anbumukilan1975 3 года назад

      வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் சகோதரி

  • @vaithivaithi2831
    @vaithivaithi2831 3 года назад +47

    அழகிய கண்ணே பாடல் எனக்கு தெவிட்டாத தீஞ்சுவை கனி

  • @catherinepremkumar4583
    @catherinepremkumar4583 6 месяцев назад +6

    Wow, super song, Kannadasan , Ilayaraja are legends... Great gift to tamil industry. Lucky to be a Tamilian

  • @all-rounderammama
    @all-rounderammama 5 месяцев назад +16

    இந்த பாடலை கேட்கும் பொழுது என் தோழி லீலா மேரி பிலோமினா ஞாபகமாக வரு‌கிறது. அவள் எங்கே இருக்காங்க என்று தெரிவில்லை நாங்க கேப்ரன் ஹால் பள்ளி மாணவிகள்

    • @TheGreatTamilKitchen
      @TheGreatTamilKitchen 4 месяца назад

      ❤❤❤

    • @sivakumarm6223
      @sivakumarm6223 4 месяца назад +4

      அழுகிய கண்ணே தமிழ் மண்ணின் அற்புதமான இசை..அளவான நடிப்பு என அனைத்தும் அசத்தல்‌..👏👏👏👏👏👍👍👍🙏🙏🙏
      அக்காலத்தில் ஒரு பெண் குழந்தை ஒரு ஆண் குழந்தை என்று இரண்டு குழந்தைகள் இருந்த வீடுகள் அனைவருக்கும் இந்த பாட்டு தாய்மையின் மேன்மையே உணர்த்திய பாடல்..
      ஒரு கோபக்கார மோசமான மனிதனை கணவராக பெற்று நரகத்தில் வாழும் அந்தப் பெண் தன் குழந்தைகளுடன் வாழும்போது மட்டும் சொர்க்கத்தில் இருப்பதாக உணர்ந்து அந்த குழுந்தைகளுக்கு ஒரு அழகான சொர்க்கம் போன்ற உலகத்தை ஒரு தாயால் படைக்க முடிகிறது என்பதுதான் தமிழ் பண்பாட்டின் உச்சம்.
      இதனால்தான் அக்காலத்திலும் சரி இக்காலத்திலும் சரி மோசமான கணவர்களை ஒரு பெண் பெற்றுக் கொண்டாலும் கூட, தமிழ் பெண்கள் அம்மோசமான வாழ்க்கையிலும் கூட, ,அக்குடும்பத்தில் உள்ள குழந்தைகள் பெரும்பாலும் அதில் அதிகம் பாதிப்படைவதில்லை.
      அதற்கு பெரும்பாலும் அந்த தாயே அம்மையப்பன் ஆக நின்று தான் நரகத்தை அனுபவிக்கும் போதும் குழந்தைகளுக்கு சொர்க்கத்தை கொடுத்து விடுகிறாள். குழந்தைகளும் நல்ல ஒழுக்க நெறியில் வளர்வதற்கு தாயாக நிற்கும் அந்த அருட்சக்தி அன்னையாக விளங்கும் கடல் போன்ற பொறுமை உள்ள அந்த மனைவியே காரணமாக அமைகிறார் 🙏🙏🙏
      இதேபோல சில குடும்பங்களில் பெண்களால் பிரச்சினை ஏற்படும்போதும் அல்லது அவர்கள் ஆரோக்கியத்தில் பிரச்சினையால் குடும்பம் பாதிக்கப்படும் போது , தமிழ்நாட்டில் பல ஆண்கள் அந்த அம்மையப்பன் ஆக மாறி குழந்தைகளை பொறுமையுடனும் பொறுப்புடனும் தியாக உணர்வுடனும் வளர்ப்பதை கண்டு பிரமித்து இருக்கிறேன்... இது இரண்டுமே தமிழ் பண்பாட்டின் ஆழமான கூறு. இதற்கு ஆண் பெண் இருவருக்குமே தமிழ் அறநெறி படி மிகப்பெரிய தியாக உணர்வுடனும் பொறுப்புடனும் வாழ கற்றுக் கொண்டு உள்ளதால் இது நடக்கிறது. 👏👏👏👏👏 இந்த அற்புதமான கலாச்சாரம் நமது கலாச்சாரம் என்று தமிழ்நாட்டில் வாழும் அனைவரும் பெருமை பட வேண்டிய விஷயம்.
      மிக அற்புதமான படம்👏👏👏 கதாநாயகி அஸ்வினி தன் சோகத்தை மறைத்துக் கொண்டு சந்தோஷத்தோடு இருப்பதுபோல் இரண்டு உணர்வையும் ஒரு சேர காட்டியிருப்பார்...எப்படிதான் டைரக்டர் மகேந்திரன் இப்படி ஒரு நடிப்பை சொல்லிக் கொடுத்தார் என்பது அதிசயம்தான்.
      பாடல் வரிகளில் கூட சங்கம் காணாதது தமிழும் அல்ல என்று அருமையான ஒரு வரியை உள்ளே புகுத்தி இது தமிழ் பண்பாட்டுடன் வளரும் குடும்பம்..அதில் ஒரு சண்டாளன் வந்து விட்டாலும் சகித்துக் கொண்டு வாழ்ந்து வாழ்கையை சிறப்பாக அமைத்துக் கொள்வதுவே தமிழ் குடும்பம் என்று கவிதை நயத்துடன் விளக்கிய படம்...
      இதில் ஒரு காட்சியில் 👆👆👆பூத்துக்குலுங்கும் பூஞ்சோலை களை காட்டும்போது கேமரா ஒரு கட்டத்தில் இந்த காய்ந்த சருகுடன் நிற்கும் கள்ளிச் செடியையும் காட்டி... அவள் தன் வாழ்கை கள்ளிசச்செடியாக அமைந்திருந்தாலும், குழந்தைகளுக்கு பூஞ்சோலையாக இருக்கிறாள் என்பது கேமரா மூலம் டைரக்டர் பேசும் மௌன மொழி.👏👏👏
      தயவுடன்
      மு.சிவா

    • @chandramoulimouli6978
      @chandramoulimouli6978 4 месяца назад

      ​ @@sivakumarm6223தாய்மையின் தியாகம் போற்றுதலுக்குரியது.உங்கள் கருத்தும் நன்று.

    • @esakkimuthu4643
      @esakkimuthu4643 2 месяца назад

      காலம் மிகவும் கொடூரமானது

  • @dhanamp5523
    @dhanamp5523 7 месяцев назад +3

    சகோதரர் ராமசாமி திருச்சந்திரன் அவர்கள் கூறியது போல் 80's to 90's வாழ்க்கை முறையை கொடு கடவுளே என வரம் கேட்பேன் என்றார். Yes நானும் மேற்காணும் வாழ்நாளின் இசை மழையில் நனைய விரும்புகிறேன். வாழ்வில் துன்பம் வருதாலும் இந்த இன்னிசை பாடல்களை கேட்கும் ஆனந்த கண்ணீரிலும் ஒரு சுகம்.❤❤❤❤❤❤

  • @rizamt
    @rizamt 8 месяцев назад +7

    அய்யா இசைஞானி யே நீ இன்னும் எவ்வளவு திமிராவும் கெத்தாவும் இருய்யா... இன்னா பாட்டுய்யா மனச போட்டு குடையுதுய்யா ஏதோ பன்னுது....

  • @sammouli8291
    @sammouli8291 3 года назад +43

    Remembering my grandmother. She was abused by my grandfather having 5 children including my father. She raised all alone without my grandfather support and all her children were well settled. Just this song and Ashwini character bring tear and grandmother memories. As long as I am alive will hear this song. Very sentimental song

    • @alkemiebala
      @alkemiebala 2 года назад

      God bless you.

    • @anandhimurali5024
      @anandhimurali5024 2 года назад

      @@alkemiebala fbffc

    • @sammouli8291
      @sammouli8291 Год назад +2

      I miss my grand mother. Seeing my grand ma in ashwini character. Very painfully unknown emotions.

  • @Amirtha20077
    @Amirtha20077 3 года назад +16

    திரும்ப வராத காலங்கள் இந்தபாடலை கேட்டவுடன் அழுகை வந்துவிடும் மமிகவும் பிடித்தபாடல்