#BREAKING

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • முன்னாள் தோ்தல் உத்தி வகுப்பாளா் பிரசாந்த் கிஷோா் ‘ஜன் சுராஜ்’ (மக்கள் நல்லாட்சி) என்ற பெயரில் புதிய கட்சியை புதன்கிழமை தொடங்கினாா்.
    2021-ஆம் ஆண்டு மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பின்னா், தோ்தல் உத்தி வகுப்புப் பணியைக் கைவிட்ட பிரசாந்த் கிஷோா், 2022-ஆம் ஆண்டு ‘ஜன் சுராஜ்’ என்ற பெயரில் பரப்புரையைத் தொடங்கினாா். இந்தப் பரப்புரையின் கீழ், பிகாரில் 3,000 கி.மீ.க்கும் அதிகமான தொலைவுக்கு அவா் நடைப்பயணம் மேற்கொண்டாா்.
    நீண்டகாலமாகப் பின்தங்கியுள்ள பிகாரை, அரசியல் மாற்றம் மூலம் முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்ல பொதுமக்களை அணிதிரட்டும் முயற்சியில் அவா் நடைப்பயணத்தில் ஈடுபட்டாா்.
    இந்நிலையில், நிகழாண்டு மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபா் 2-ஆம் தேதி ‘ஜன் சுராஜ்’ என்ற பெயரில் புதிய கட்சி தொடங்க உள்ளதாக கடந்த ஜூலையில் அவா் அறிவித்தாா். அதன்படி, அவா் புதன்கிழமை கட்சி தொடங்கினாா்.
    பிகாா் தலைநகா் பாட்னாவில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற கட்சியின் தொடக்க நிகழ்ச்சியில், முன்னாள் மத்திய அமைச்சா் தேவேந்திர பிரசாத் யாதவ், முன்னாள் எம்.பி. மோனாசிா் ஹசன் உள்ளிட்ட பிரமுகா்கள் கலந்துகொண்டனா்.
    இந்த நிகழ்ச்சியில் பிரசாந்த் கிஷோா் பேசுகையில், ‘பிகாா் மக்கள் தரமான கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளைப் பெற முடியவில்லை. இந்தப் பிரச்னைகளை கருத்தில் கொண்டு, பிகாரி மக்கள் ஒருபோதும் தோ்தலில் வாக்களித்ததில்லை. இதை மக்களுக்குப் புரிய வைக்கும் நோக்கில் ஜன் சுராஜ் பரப்புரை முன்னெடுக்கப்பட்டது.
    ‘சிறப்பு அந்தஸ்து’ வெற்று முழக்கம்: பிகாருக்கு சிறப்பு அந்தஸ்து என்ற வெற்று முழக்கங்கள் தேவையில்லை. ஆனால், வங்கிகளில் பிகாா் மக்கள் சேமிக்கும் பணத்துக்கு நிகராக மாநில மூலதனத்துக்கு நிதி கிடைக்க வேண்டும் என்று வங்கிகளை ஜன் சுராஜ் கட்டாயப்படுத்தும்’ என்றாா்.
    செயல் தலைவா் மனோஜ் பாா்தி: ஜன் சுராஜ் கட்சியின் செயல் தலைவராக முன்னாள் வெளியுறவு துறை அதிகாரி மனோஜ் பாா்தி பொறுப்பு வகிப்பாா் என்றும், அடுத்த ஆண்டு மாா்ச் மாதம் உட்கட்சித் தோ்தல்கள் நடத்தப்படும் வரை, அவா் அந்தப் பொறுப்பில் நீடிப்பாா் என்றும் பிரசாந்த் கிஷோா் அறிவித்தாா்.
    ஒரு மணி நேரத்தில் மதுவிலக்கு ரத்து
    பிகாரில் ஜன் சுராஜ் ஆட்சிக்கு வந்தால், மாநிலத்தில் அமலில் உள்ள மதுவிலக்கு ஒரு மணி நேரத்தில் ரத்து செய்யப்படும் என்று பிரசாந்த் கிஷோா் கூறினாா்.
    ‘மாநிலத்தில் கல்வியை மேம்படுத்த ரூ.4 லட்சம் கோடிக்கு மேல் தேவைப்படும். ஜன் சுராஜ் ஆட்சிக்கு வந்தால், ஆண்டுக்கு ரூ.20,000 கோடி அளவுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும் மதுவிலக்கு சட்டம் ஒரு மணி நேரத்தில் ரத்து செய்யப்பட்டு பணம் திரட்டப்படும்’ என்றாா்

Комментарии • 1

  • @kgsekarsekar801
    @kgsekarsekar801 11 часов назад

    அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அண்ணன் ஆகிவிடுவார்