திருவாசகம் I திருஅண்டப் பகுதி - 1 I சிவபெருமானின் விஸ்வரூப தரிசனம் I Thiru Anda Paguthi I Part 01
HTML-код
- Опубликовано: 6 фев 2025
- #ibakthipasi #ஐபக்திபசி #kannappan #thiruvasagam
திருவாசகம் I திருஅண்டப் பகுதி - 2
• திருவாசகம் I திருஅண்டப...
அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி
ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின்
நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன
இன்னுழை கதிரில் துன்அணுப் புரையச் 5
சிறிய வாகப் பெரியோன் தெரியின்
வேதியன் தொகையொடு மாலவன் மிகுதியும்
தோற்றமுஞ் சிறப்பும் ஈற்றொடு புணரிய
மாப்பே ரூழியும் நீக்கமும் நிலையும்
சூக்கமொடு தூலத்துச் சூறை மாருதத்து 10
எறியது வளியிற்
கொட்கப் பெயர்க்குங் குழகன் முழுவதும்
படைப்போற் படைக்கும் பழையோன் படைத்தவை
காப்போற் காக்குங் கடவுள் காப்பவை
கரப்போன் கரப்பவை கருதாக் 15
கருத்துடைக் கடவுள் திருத்தகும்
அறுவகைச் சமயத் தறுவகை யோர்க்கும்
வீடுபே றாய்நின்ற விண்ணோர் பகுதி
கீடம் புரையுங் கிழவோன் நாள்தொறும்
அருக்கனிற் சோதி அமைத்தோன் திருத்தகு 20
மதியின் தண்மை வைத்தோன் திண்திறல்
தீயின் வெம்மை செய்தோன் பொய்தீர்
வானிற் கலப்பு வைத்தோன் மேதகு
காலின் ஊக்கங் கண்டோன் நிழல்திகழ்
நீரின் இன்சுவை நிகழ்ந்தோன் வெளிப்பட 25
மண்ணின் திண்மை வைத்தோன் என்றென்று
எனைப்பல கோடி யெனைப் பல பிறவும்
அனைத்தனைத் தவ்வயின் அடைத்தோன் அஃதான்று
மாயோன் ( கிருஷ்ணன் )
மூத்த பேராசிரியர், ம. சு. பல்கலைக்கழகம்
திருநெல்வேலி