வெயில் கொடுமைக்கு தீர்வு என்ன? |

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 авг 2024
  • சூழலை பசுமைப்படுத்தும் நோக்குடன் செயற்பட்டுவரும் Green Layer அமைப்பானது வடக்கு கிழக்கு பகுதிகளில் கிட்டத்தட்ட 75000 மரங்களை நடுகை செய்ததோடு 3 லட்சத்துக்கும் அதிகமான பனம்விதைகளையும் நாட்டியுள்ளது. அத்துடன் சூழலை சுத்தப்படுத்துதல் மரங்களை பராமரித்தல் போன்ற சூழல் நேய செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வருகிறது. அந்தவகையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கல்லூரி, வலிகாமம் கிழக்கு கோப்பாய் பிரதேச சபை மற்றும் கோப்பாய் போலீஸ் உத்தியோகத்தர்கள் ஆகியோருடன் இணைந்து மரநடுகை மற்றும் ஏற்கனவே நடப்பட்ட மரங்களுக்கான பராமரிப்பு செயற்திட்டத்தை மேற்கொண்டது.
    அண்மைக்கலாக கோடைகால வெப்பத்தின் கோர தாண்டவத்தை தாங்க முடியாமல் சமூக வலைத்தளங்களில் புலம்பித்தள்ளிக்கொண்டிருக்கிறோம். ஒருகணம் சிந்தியுங்கள்.... இப்படி நாம் புலம்புவதால் எந்த மாற்றமும் நிகழப்போவது கிடையாது.. மாறாக நாம் ஒவ்வொருவரும் மரங்களின் தேவையை உணர்ந்து அவற்றை நடுகை செய்வதோடு எஞ்சியிருக்கின்ற மரங்களை பாதுகாப்போமேயானால் எதிர்காலத்தில் கோடைகாலப் பகுதியில் உருவாகும் சூழல் வெப்பநிலை அதிகரிப்பை கட்டுப்படுத்த இயலுமாயிருக்கும்.
    இயற்கை ஆச்சரியம் நிறைந்தது.. கோடைகால வெப்பத்தால் மக்கள் அவதிப்பட்டுக்கொண்டிருக்க சற்றும் எதிர்பாராத காலநிலை மாற்றத்தால் ஒருவார காலமாக மழை தொடர்ச்சியாக பெய்துகொண்டிருக்கிறது. காலநிலை மாற்றம் எமக்கு பாதகமானது எனச் சொன்னாலும் வாடிப்போயிருந்த பயிர்களுக்கும் மரம்செடி கொடிகளுக்கும் மனிதர்களாகிய எமக்கும் இந்த மழை புத்துணர்ச்சியை அளித்திருக்கிறது. இந்தக்காலநிலையை சரியாக பயன்படுத்திக்கொண்ட இந்தக்குழு மரநடுகை மற்றும் ஏற்கனவே நடப்பட்ட மரங்களுக்கான பராமரிப்பு செயர்த்திடத்தை மேற்கொண்டது மிகவும் பாராட்டப்படக்கூடிய விடயமாகும்.
    இலங்கையிலுள்ள நமது முயற்சியாளர்களை ஊக்கப்படுத்தும் நோக்கிலேயே எம்மால் இந்த ஊடகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எம் தேசத்தின் எந்தவொரு பகுதியிலிருப்பவரும் எம்மை தொடர்புகொள்ளமுடியும். நாம் தங்களது வியாபாரங்களை உலகறியச்செய்ய தயாராகவுள்ளோம்.
    Our Vision is to encourage all Entrepreneurs in Srilanka, Any Entrepreneurs could contact us for your all needs. We will support you and encourage your future developments.
    எங்கள் channelன் நலன் விரும்பிகள் Whatsapp group ல் இணைய, பின்வரும் லிங்கை கிளிக் செய்யுங்கள்
    chat.whatsapp....
    SaHo Media
    Face Book - / sahocreations
    Tik Tok - / saho_creations
    You tube - / @sahocreations
    Contact Person - Sivanantham Virushan +94772487201
    Facebook - / svirushan

Комментарии • 12

  • @jassoyogarajah4974
    @jassoyogarajah4974 3 месяца назад +1

    மிக்க நன்றி. வார்த்தைகள் இல்லை. உங்களைப்போன்ற அனைவரையும் இயற்க்கை ்அன்னை ஆசிர்வதிப்பார்

  • @kannankandaya3529
    @kannankandaya3529 3 месяца назад

    உங்களுடைய பணி தொடரட்டும் வாழ்த்துக்கள்

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 3 месяца назад +1

    👌👍🙏🙏

  • @arunabi1861
    @arunabi1861 3 месяца назад

    அருமை

  • @eelapirianrajasingam6565
    @eelapirianrajasingam6565 3 месяца назад +1

    சகோதரர்களே, உங்களது செயல்படுக்களை அதன் விழிப்புணர்வையும் சிங்களசக்கோதரர்களின் பக்ககங்களுக்கும் எப்படி எடுத்து செய்யலாம் என்பதை கலந்தாலோசியுங்கள். இது மரங்களைமட்டும் வளர்க்காமல் சமூக ஒற்றுமையையும் வளர்க்கும். உங்கள் அமைப்புக்கு புலம்பெயர்ந்த மக்கள் எப்படி உதவலாம். லண்டனில் இருந்து.

  • @tourer6558
    @tourer6558 3 месяца назад +1

    அத்துடன் பிளாஸ்ரிக் கழிவுகளையும் மக்கள் வீதிகளிலும் தண்ணீர் வாய்க்கால் வழியவும் கடற்கரையிலும் வீச்சமல் இருக்க விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்❤

    • @SaHoCreations
      @SaHoCreations  3 месяца назад +1

      அதுவும் செய்துகொண்டுதான் இருக்கினம்