டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 10 இடங்களை பிடித்த சீரியல்கள்.. உங்க ஃபேவரெட் சீரியல் எது..?

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 май 2024
  • டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 10 இடங்களை பிடித்த சீரியல்கள்.. உங்க ஃபேவரெட் சீரியல் எது..?
    கடந்த சில வாரங்களில் சின்னத்திரை தொடர்களின் டிஆர்பி ரேட்டிங் குறைந்து இருந்தது. சன் டிவி மற்றும் விஜய் டிவியில் சில சீரியல்கள் முடிவுக்கு வந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த வாரத்திற்கான டிஆர்பி ரேட்டிங் வெளிவந்துள்ளன.
    -சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் சீரியல்கள் ஒரு முக்கியமான பொழுதுபோக்கு அம்சமாக மாறிவிட்டது. அதிலும் பெண்களுக்கு அது பெரிய பொழுதுபோக்கு அம்சமாக உள்ளது. இவற்றை கருத்தில் கொண்டு டிவி சேனல்களும் வாரத்தின் 7 நாட்களிலும் சீரியல்களை ஒளிபரப்பி வருகின்றன.
    -ஆனால் டிஆர்பி ரேட்டிங்கை வைத்தே சீரியல்களின் வெற்றி தீர்மானிக்கப்படுகிறது. மக்கள் சீரியலை பார்க்கும் எண்ணிக்கையை பொறுத்து சீரியல்களின் டிஆர்பி கணக்கிடப்படுகிறது.
    -முதலிடம் பிடித்த சிங்க பெண்ணே:கடந்த வாரம் முதல் இடம் பிடித்த சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியல் இந்த வரமும் 9.44 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துள்ளது.
    -இரண்டாம் இடம் பிடித்த கயல்:சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் 9.79 புள்ளிகளைப் பெற்று இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
    -மூன்றாம் இடத்தில் எதிர்நீச்சல்:கடந்த வாரம் 4-வது இடத்தில் இருந்த சன் டிவியின் எதிர்நீச்சல் சீரியல் இந்த வாரம் 8.61 புள்ளிகளுடன் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
    -நான்காவது இடம் பிடித்த வானத்தைப்போல :கடந்த வாரம் 5-வது இடத்தில் இருந்த சன் டிவியின் வானத்தைப்போல சீரியல் இந்த வாரம் 8.05 புள்ளிகளைப் பெற்று நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
    -5 வது இடம் பிடித்த சிறகடிக்க ஆசை:விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்றாக சிறகடிக்க ஆசை கடந்த வாரம் 4-வது இடத்தில் இருந்த நிலையில், இந்த வாரம் 7.44 புள்ளிகளுடன் 5-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
    -6 வது இடத்தில் சுந்தரி 2:கடந்த வாரம் 7-வது இடத்தில் இருந்த சன் டிவியின் சுந்தரி 2 இந்த வாரம் 6.82 புள்ளிகளுடன் 6-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
    -7 வது இடத்தில் மல்லி:சன. டிவியில் புதிதாக தொடங்கப்பட்ட மல்லி சீரியல், கடந்த வாரம் டி.ஆர்.பி பட்டியலில் இடம் பிடிக்காத நிலையில், இந்த வாரம் 6.36 புள்ளிகளுடன் 7-வது இடத்தை பிடித்துள்ளது.
    -8 வது இடத்தை பிடித்த பாக்கியலட்சுமி:கடந்த வாரம் 8-வது இடத்தில் இருந்த விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம் 6.27 புள்ளிகள் பெற்று 8 வது இடத்தை தக்க வைத்துள்ளது.
    -9 வது இடத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர் 2 சீரியல் கடந்த வாரம் 9-வது இடத்தில் இருந்த நிலையில், இந்த வாரமும், இந்த முறை 5.81 புள்ளிகளை பெற்று 9வது இடத்தில் உள்ளது.
    -10 வது இடத்தில் கார்த்திகை தீபம்:அவ்வப்போது டாப் 10 ரேட்டிங்கில் எட்டிப்பார்க்கும் ஜீ தமிழின் கார்த்திகை தீபம் சீரியல், இந்த வாரம் 5.47 புள்ளிகளுடன் 10-வது இடத்தை பிடித்துள்ளது.
  • РазвлеченияРазвлечения

Комментарии •