காலை 11.00 மணி DD தமிழ் செய்திகள் [22.10.2024]

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024
  • 1) பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க ரஷ்யா புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோதி - இந்தியா-ரஷ்யா இடையேயான கூட்டாண்மை மேலும் வலுப்படும் என்று நம்பிக்கை
    2) மத்திய அமைச்சர் அமித் ஷா-வின் 60-வது பிறந்த நாள் - பிரதமர் நரேந்திர மோதி, மத்திய அமைச்சர் எல் முருகன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
    3) 2027-ல் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார சக்தியாக இந்தியா திகழும் - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்ட வட்டம்
    4) தலைநகர் தில்லியில் காற்றின் தரம் தொடர்ந்து பின்னடைவு - மிக மோசமான நிலையை எட்டியதாக அறிவிப்பு
    5) ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தலில் 21 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ் - இரண்டாம் கட்ட தேர்தலுக்கான அறிவிக்கை இன்று வெளியிடுகிறது தேர்தல் ஆணையம்
    6) மேற்கு வங்கத்தில் இளநிலை மருத்துவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ் - மேற்கு வங்க அரசு அளித்த உறுதி மொழியை ஏற்று நடவடிக்கை
    7) சிரியாவில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் - ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தளபதி கொலை
    8) அடுத்த ஆண்டு இந்தியாவில் 4 ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டிகள் - முதல் போட்டி சென்னையில் நடைபெறும் என அகில இந்திய டென்னிஸ் சங்கம் அறிவிப்பு
    9) வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி - நாளை புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்- ஒடிசாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

Комментарии •