வவுனியா இளைஞர்கள் செய்த செயல் |

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024
  • பனைமரம் தமிழ் மக்களின் வாழ்வோடும், வளத்தோடும் நெருக்கமாகப் பின்னிப் பிணைக்கப்பட்டது. எமது வாழ்வின் சகல அம்சங்களிலும் பனையின் பங்களிப்பு மிகப்பெரியது. இதன் ஒவ்வொரு பகுதியும் உணவாக, பாவனைப் பொருட்களாக, வாழ்விடம் அமைக்கப் பயன்படும் சாதனங்களாக, கிணற்றில் நீரள்ள உதவும் எரிபொருள் தேவையற்ற இயந்திரமாக பல்வேறு வழிகளில் மனிதனுக்கு பயன்படுகிறது.
    வடக்கின் அளப்பெரும் சொத்துக்களாகவும், தனிச் சிறப்பு அம்சமாகவும் திகழும் இந்தப்பனைமரம் அள்ள அள்ளக் குறையாத வளங்களையும், ஒப்பில்லாத நன்மைகளையும் எமக்கு அளிப்பதால்த்தான் “பூலோக கற்பக விருட்சம்” என்று அழைக்கப்படுகிறது. அந்த அளவிற்கு பனை மரம் தரும் வளங்கள் எல்லையில்லாதவை. #jeibeem
    நகரமயமாக்கல்,வீதி அபிவிருத்தி,பாரிய கட்டட நிர்மாணம் போன்ற காரணங்களால் பனைவளம் வடக்கில் வெகுவாக குறைவடைந்து செல்கிறது. பல நூற்றாண்டுகளாக எமக்கு அளவற்ற பயன்களை தந்துகொண்டிருக்கும் இந்த பனைவளத்தை காப்பது நம் அனைவரினதும் கடமை அல்லவா... ஆகவே மாற்றத்தை எம்மிலிருந்து ஆரம்பிப்போம் என சுயாதீனமாக ஒன்றிணைந்த தமிழ் இளைஞர்கள் பனைசார் நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் நோக்கோடு தொடர்சியாக நான்காவது வருடமாக நுங்குத்திருவிழாவை நேற்றைய தினம் வவுனியா மண்ணில் ஒழுங்குபடுத்தியிருந்தனர்.
    நுங்கால் குளிரட்டும் கோடைகாலம் என்ற வாசகத்தோடு இடம்பெற்ற இந்தத்திருவிழாவில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டிருந்தனர். நுங்கு குடிக்கும் போட்டி,நுங்கு அடுக்கும் போட்டி போன்ற போட்டிகளும் பனைவளத்தை மையமாக வைத்து நடத்தப்பட்டது. அத்துடன் பனைசார் உற்பத்திகளின் விற்பனையும் கண்காட்சியும் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் சகோ கிரேஷன்ஸ் ஆன நாங்களும் கலந்துகொண்டிருந்தோம்.
    நம் நாட்டின் அபிவிருத்தியில் பனைசார் உற்பத்திகள் பெரும் பங்கு வகிக்கின்றன. பனை மரத்திலிருந்து பெறப்படும் கள்ளு, பதநீர், கருப்பட்டி, கருவெல்லம், பனங்கிழங்கு, ஒடியல் மா, பனாட்டு, பனைசார் கைவினைப்பொருட்கள் போன்றவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் எமது நாடு கணிசமான அளவு வருவாயைப்பெறுகிறது. பனைமரம் தனது வானளாவு ஓங்கிய உயரத்தைப் போலவே தனது பயனிலும் உயர்ந்துள்ளது என்றால் அது மிகையாகாது. நம் முன்னோர்களின் வாழ்வில் இப் பனைமரங்கள் அதிகளவில் செல்வாக்குச் செலுத்தியுள்ளன. ஆகையால்தான் நம் முன்னோர்கள் அதிக ஆயுளுடன் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்ந்துள்ளனர்.
    பனைமரத்திலிருந்து கிடைக்கப்பெறுகின்றன “நுங்கு” கோடை காலங்களில் ஏற்படும் உடல் உஷ்ணமாதல், உடல் வறட்சி, நா வறட்சி போன்றவற்றை நீக்கி உடலைப் புத்துணர்வுள்ளதாகவும், உற்சாகமுள்ளதாகவும் மாற்றவல்லது. பனைமரத்திலிருந்து கிடைக்கப்பெறும் பனைவெல்லம், கருப்பட்டி என்பன சீனியை விடவும் சிறப்பு வாய்ந்தவை. இவை இனிப்புள்ள பதார்த்தமாக உள்ளபோதிலும் மருத்துவ குணம் வாய்ந்தவை ஆகும்.
    எம் முன்னோர்கள் ஆற்றங்கரைகளிலும், குளக் கரைகளிலும் ஏராளமான பனம் விதைகளை நட்டு வைத்திருப்பதனைப் பார்த்திருப்பீர்கள். பனை மரங்கள் ஆறுமாதத்துக்கு ஒரு தடவை வேர்களை புதுப்பிக்கும். பனை வேர்களில் அதிகளவான தண்ணீர் தேங்கி நிற்பதனால், நிலத்தடி நீர் மட்டம் எப்போதுமே கீழிறங்காது. கம்போடியாவில் பனை வளம் தான் அந்த நாட்டின் பொருளாதாரத்தையே உயர்த்துகின்றது. இலங்கையின் வடக்கு கிழக்கில் பனைவளங்கள் செறிவாக காணப்படுகிறது. இந்த வளத்தை முறையாக கையாளுவோமேயானால் நிச்சயமாக எமது பிரதேசத்தை பொருளாதார ரீதியாக முன்னேற்ற முடியும்.
    நாம் அனைவரும் ஒன்று திரண்டு தமிழர் தாயகத்தில் பனை விதைப்பை ஊக்குவிப்போம். பனைசார் உற்பத்திகளை ஊக்குவிப்போம். எதிர்கால சந்ததிக்கு செழிப்பான வாழ்வை விட்டு செல்வோம்.
    இலங்கையிலுள்ள நமது முயற்சியாளர்களை ஊக்கப்படுத்தும் நோக்கிலேயே எம்மால் இந்த ஊடகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எம் தேசத்தின் எந்தவொரு பகுதியிலிருப்பவரும் எம்மை தொடர்புகொள்ளமுடியும். நாம் தங்களது வியாபாரங்களை உலகறியச்செய்ய தயாராகவுள்ளோம்.
    Our Vision is to encourage all Entrepreneurs in Srilanka, Any Entrepreneurs could contact us for your all needs. We will support you and encourage your future developments.
    எங்கள் channelன் நலன் விரும்பிகள் Whatsapp group ல் இணைய, பின்வரும் லிங்கை கிளிக் செய்யுங்கள்
    chat.whatsapp....
    SaHo Media
    Face Book - / sahocreations
    Tik Tok - / saho_creations
    You tube - / @sahocreations
    Contact Person - Sivanantham Virushan +94772487201
    Facebook - / svirushan

Комментарии • 6

  • @kirubakaran2012
    @kirubakaran2012 3 месяца назад +2

    அருமை நண்பா... ஆதரவிற்கு மிக்க நன்றிகள்... ஊர் தோறும் பரவட்டும்

    • @SaHoCreations
      @SaHoCreations  3 месяца назад

      மிக்க நன்றிகள் சகோ

  • @user-tw7gp8sh8g
    @user-tw7gp8sh8g 3 месяца назад +1

    அருமையான பதிவு. உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்.

    • @SaHoCreations
      @SaHoCreations  3 месяца назад

      மிக்க நன்றிகள் சகோ

  • @arunabi1861
    @arunabi1861 3 месяца назад +2

    அருமை

    • @SaHoCreations
      @SaHoCreations  3 месяца назад

      மிக்க நன்றிகள் சகோ