சங்கீதகலாபூஷணம் பொன் சுந்தரலிங்கம்அவர்கள் பாடிய திருப்பள்ளியெழுச்சி "புத்தூர்சிவன் கோவில்"

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 дек 2024

Комментарии • 131

  • @bhuvaneshpandi1075
    @bhuvaneshpandi1075 Год назад +30

    இப்பாடலை எங்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பொற்றாமரைக் குளத்தின் அருகே உள்ள படியில் அமர்ந்து சிறிது நேரம் தியான நிலையில் இப்பாடலை அங்குள்ள ரேடியோ வில் கேட்டுள்ளேன். மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்ற ஓர் ஆசை 🙏🏻ஓம் நமசிவாய🙏🏻

  • @chinnathuraivijayakumar6767
    @chinnathuraivijayakumar6767 Год назад +11

    ஈழத்து மாணிக்கவாசகர் அவர்கள் குரலில் இறைவனை வழிபட்டு வந்தால் இந்த அனுபவம் புரியாத புதிர்.. உங்கள் குரலுக்கு செவி வழி அடிமைகள்... அன்பே சிவம்

  • @sinnathuraikalaivani
    @sinnathuraikalaivani Год назад +11

    தேடியும் கிடைத்தற்கரிய சொத்து பகிர்ந்தமைக்குபலகோடி நன்றிகள்

  • @devarajanbala6250
    @devarajanbala6250 4 года назад +10

    இந்த பாடல் செவியுற்றேன்
    பிறவி பயன் பெற்றேன்

  • @baluyoutubechannel5315
    @baluyoutubechannel5315 7 месяцев назад +7

    அருமையான குரல் வளம் மெய் மறந்து கண்ணீர் பெருக பாடலை ரசித்தேன்

  • @bhanumathyswaminathan2223
    @bhanumathyswaminathan2223 3 года назад +12

    இறைப்பசிக்கு அன்றாட அருசுவை விருந்து . செவிக்கு, ஆத்மாவிற்கு விருந்துமாகி , மருந்துமாகும் இனிய கானம்

  • @sivajeevajothisiddhargal4206
    @sivajeevajothisiddhargal4206 3 года назад +9

    ஐயா திருவாசத்தில் இருந்து திருப்பள்ளி எழுச்சி மிக அருமை உங்கள் குர்ல் மிக மிக அருமை ஐயா என்னை ஈர்த்த குரல்
    நமச்சிவாய வாழ்க

  • @jaganathankrishnamoorthy6284
    @jaganathankrishnamoorthy6284 Год назад +2

    உங்களுடைய பாடல் கேட்டு பரவசம் அடைந்தேன்

  • @shantybpskrishnasamyJB183
    @shantybpskrishnasamyJB183 3 года назад +6

    திருசிந்தூர்!-திருச்செந்தூர் திருச்சீரலைவாய் -!- மன்னார் வளைகுடா~~~~{சிந்துர(மின்)மேவு

  • @yuvanpraveen6147
    @yuvanpraveen6147 Год назад +3

    உருகியது ஊர் உயிர் ஐயா உங்கள் குரலில்

  • @p.sampathkumarsampatjkumar1717
    @p.sampathkumarsampatjkumar1717 Год назад +2

    மிகவும் அருமை அற்புதமான குரல் வளம்

  • @thaache
    @thaache 4 года назад +12

    அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
    நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...
    இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்...
    .
    ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
    .
    காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்...
    நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், புலாகுகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்..
    .
    மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
    .
    விழித்திடுங்கள் தமிழர்களே!!..
    .
    [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..]
    .
    மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்..
    .
    யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்..
    .
    பார்க்க:-
    ௧) www.internetworldstats.com/stats7.htm
    ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
    ௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp
    ௪) speakt.com/top-10-languages-used-internet/
    ௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
    .
    திறன்பேசில் எழுத:-
    ஆன்டிராய்ட்:-
    ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi
    ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam
    ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil
    .
    ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:-
    ௪) tinyurl.com/yxjh9krc
    ௫) tinyurl.com/yycn4n9w
    .
    கணினியில் எழுத:-
    உலாவி வாயிலாக:-
    ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab
    ௨) wk.w3tamil.com/tamil99/index.html
    .
    மைக்ரோசாப்ட் வின்டோசு:-
    ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html
    .
    லினக்சு:-
    ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html
    ௫) indiclabs.in/products/writer/
    ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil
    .
    குரல்வழி எழுத:-
    tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள்.
    .
    பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:-
    ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en
    ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en
    .
    இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html
    .
    நன்றி.
    தாசெ,
    நாகர்கோவில் ::::::: தந

  • @c.venkatachalamvenkatachal9976
    @c.venkatachalamvenkatachal9976 Год назад +3

    கபில்வெங்கட்
    தேடக்கிடைக்காத
    பொக்கி்சம்
    உங்கள்பதிவு
    சிவயாநமக

  • @jaganathankrishnamoorthy6284
    @jaganathankrishnamoorthy6284 2 года назад +3

    இனிமையான குரல் தெளிவான உச்சரிப்பு அருமை

  • @srbalayourfriend1729
    @srbalayourfriend1729 2 года назад +4

    தெய்வீக குரல் ஓம் நமசிவாய

  • @arunmelody5255
    @arunmelody5255 2 года назад +2

    உங்கள் இசைக்கு நான் அடிமை ஐயா

  • @rsssasikumarsuba7647
    @rsssasikumarsuba7647 2 года назад +3

    கடவுள் தரிசனத்தை உணர்ந்தும் இந்த பதிவு ‌வணக்குகிறேன்

  • @vijayabhargavinagarajan2580
    @vijayabhargavinagarajan2580 3 года назад +17

    சிவாலயம் சென்ற நிம்மதி.
    நாதஸ்வரம் , ஐயா குரலில்
    திருப்பள்ளியெழுச்சி
    நன்றிகள் கோடி 🙏🙏

  • @hmcmillenium
    @hmcmillenium 4 года назад +12

    திருப்பள்ளியெழுச்சி - மணிவாசகர்
    போற்றி ! என் வாழ்முதலாகிய பொருளே!
    புலர்ந்தது; பூங்கழற்கு இணைதுணை மலர்கொண்டு
    ஏற்றி, நின் திருமுகத்து எமக்கருள் மலரும்
    எழில்நகை கொண்டு நின் திருவடி தொழுகோம்;
    சேற்றிதழ்க் கமலங்கள் மலரும் தண்வயல் சூழ்
    திருப்பெருந்துறை உறை சிவபெருமானே!
    ஏற்றுயர் கொடியுடையாய் ! எனையுடையாய்!
    எம்பெருமான் பள்ளியெழுந்தருளாயே! (1)
    அருணண் இந்திரன் திசை அணுகினன்; இருள்போய்
    அகன்றது; உதயம் நின் மலர்த்திரு முகத்தின்
    கருணையின் சூரியன் எழ எழ, நயனக்
    கடிமலர் மலர, மற்று அண்ணல் அங்கண்ணாம்
    திரள்நிரை அறுபதம் முரல்வன; இவை ஓர்!
    திருப்பெருந்துறையுறை சிவபெருமானே!
    அருள் நிதி தர வரும் ஆனந்த மலையே!
    அலைகடலே பள்ளி யெழுந்தருளாயே! (2)
    கூவின பூங்குயில்; கூவின கோழி;
    குருகுகள் இயம்பின; இயம்பின சங்கம் ;
    ஓவின தாரகை ஒளி; ஒளி உதயத்து
    ஓருப்படுகின்றது; விருப்பொடு நமக்குத்
    தேவ நற்செறிகழல் தாளிணை காட்டாய்!
    திருப்பெருந்துறையுறை சிவபெருமானே!
    யாவரும் அறிவரியாய் ! எமக்கெளியாய்!
    எம்பெருமான் பள்ளியெழுந்தருளாயே! (3)
    இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால் ;
    இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால் ;
    துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால் ;
    தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால் ;
    சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால் ;
    திருப்பெருந்துறையுறை சிவபெருமானே!
    என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும்
    எம்பெருமான் பள்ளியெழுந்தருளாயே! (4)
    பூதங்கள் தோறும் நின்றாய் எனின், அல்லால்
    போக்கிலன் வரவிலன்" என நினைப் புலவோர்
    கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
    கேட்டறியோம் உனைக் கண்டறிவாரைச்
    சீதங்கொள் வயல் திருப்பெருந்துறை மன்னா!
    சிந்தனைக்கும் அரியாய் ! எங்கண் முன்வந்து
    ஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும்
    எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே! (5)
    பப்பற வீட்டிருந்து உணரும் நின் அடியார்
    பந்தனை வந்தறுத்தார்; அவர் பலரும்
    மைப்புறு கண்ணியர் மானுடத்து இயல்பின்
    வணங்குகின்றார்; அணங்கின் மணவாளா!
    செப்புறு கமலங் கண் மலரும் தண்வயல் சூழ்
    திருப்பெருந் துறையுறை சிவபெருமானே!
    இப்பிறப்பு அறுத்து எமை ஆண்டருள் புரியும்
    எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே! (6)
    "அது பழச்சுவையென, அமுதென, அறிதற்கு
    அரிதென, எளிதென", அமரும் அறியார்,
    "இது அவன் திருவுரு; இவன் அவன்" எனவே;
    எங்களை ஆண்டுகொண்டு இங்கெழுந்தருளும்
    மதுவளர் பொழில் திருஉத்தர கோச
    மங்கையுள்ளாய் ! திருப்பெருந்துறை மன்னா!
    எது எமைப் பணிகொளுமாறு அது கேட்போம்;
    எம்பெருமான்பள்ளி யெழுந்தருளாயே! (7)
    முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய்;
    மூவரும் அறிகிலர்; யாவர் மற்றறிவார்!
    பந்தணை விரலியும் நீயும் நின்னடியார்
    பழங்குடில் தொறும் எழுந்தருளிய பரனே!
    செந்தழல் புரை திருமேனியுங் காட்டித்
    திருப்பெருந் துறையுறை கோயிலும் காட்டி
    அந்தணன் ஆவதும் காட்டி வந்தாண்டாய்;
    ஆரமுதே பள்ளி யெழுந்தருளாயே! (8)
    விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா
    விழுப்பொருளே ! உன தொழுப்பு அடியோங்கள்
    மண்ணகத்தே வந்து வாழச்செய்தானே!
    வண் திருப்பெருந்துறையாய் ! வழியடியோம்
    கண்ணகத்தே நின்று களிதரு தேனே!
    கடலமுதே ! கரும்பே ! விரும்படியார்
    எண்ணகத்தாய் ! உலகுக்கு உயிரானாய்!
    எம்பெருமான்பள்ளி எழுந்தருளாயே! (9)
    "புவனியில் போய்ப் பிறவாமையின் நாள்நாம்
    போக்குகின்றோம் அவமே; இந்தப் பூமி
    சிவன் உய்யக் கொள்கின்றவாறு" என்று நோக்கித்
    திருப்பெருந் துறையுறைவாய் திருமாலாம்
    அவன் விருப்பெய்தவும் மலரவன் ஆசைப்
    படவும் நின் அலர்ந்த மெய்க்கருணையும் நீயும்
    அவனியில் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்!
    ஆரமுதே பள்ளி யெழுந்தருளாயே! (10)
    திருச்சிற்றம்பலம்
    Source: www.shaivam.org/siddhanta/thivempalli_t.htm

    • @geeveeu
      @geeveeu 11 месяцев назад

  • @arnatarajan7099
    @arnatarajan7099 4 года назад +39

    பாடலை செவியுறும்கால் மனம் உருகி, ஊண் உருகி சிவதரிசனம் கண்களில் காண ஆனந்தமே! பாடகருக்கு தலையாய வணக்கம்.

    • @d.venkatasubbareddy3896
      @d.venkatasubbareddy3896 4 года назад +11

      சிவமும் செந்தமிழும்
      சேர்ந்தெமை மயக்கும்
      சிவம் உமைக்காத்தருள
      தவமிகுதமிழகம்தழைக்க
      உவமையில்வகையில்
      உருக்கி நீர் இசைத்தால்
      அவமெலாம்தீர எமக்கு
      அருளுக மேன்மேலும்
      புவனமும் சிறக்கும்
      புனிதமே நிறைக்கும்
      புன்மைகள் ஒழிந்து
      நன்மைகள் செழிக்க!
      வெங்கடசுப்பாரெட்டி
      மயிலை சென்னை

    • @sundarbala7083
      @sundarbala7083 4 года назад +2

      @@d.venkatasubbareddy3896 நன்றி

  • @radhakavi6724
    @radhakavi6724 2 месяца назад +1

    குரலும்பாடலும் நம் உள்ளத்தை இறைவன் திருவடி நிழலில் சேர்க்கின்றது ஓம் நமசிவாய நமஹ

  • @bhanumathyswaminathan2223
    @bhanumathyswaminathan2223 4 года назад +4

    கேட்க கேட்க திகட்டாத இனிமையான குரலுடன் கூடிய இசைத்தமிழ்

  • @guruguharamanaalayam4917
    @guruguharamanaalayam4917 Год назад +1

    உள்ளமும் உயிரும் உருகுதய்யா உந்தன் குரலில் இப்பாடலைக் கேட்கும் போது ❤❤❤

  • @sundarbala7083
    @sundarbala7083 4 года назад +13

    இறைவனே வந்து காட்சி தருகிறான், இன்னிசையால் மகிழ்ந்து, எம் உயிர் கரைந்து.
    சுந்தர்
    தம்பிக்கோட்டை

    • @rsssasikumarsuba7647
      @rsssasikumarsuba7647 2 года назад

      பட்டுகோட்டை அருகே
      மகிழ்ச்சி

  • @shanmugasundaramsundaram9114
    @shanmugasundaramsundaram9114 3 года назад +11

    நல்லதொரு இசையுடன் கூடிய கணீர் குரலில் கேக்கும் போது முருகனே என்ன வேண்டும் என்று கேக்கு தூண்டும் வகையான பாடல் - சூப்பர் - சோ ஷண்முகசுந்தரம் - கோவை 16

  • @mathusinghrenganathan925
    @mathusinghrenganathan925 15 дней назад

    ❤உலகமே இறையுடன் உங்களுக்கும் அடிமை

  • @manirajah811
    @manirajah811 2 года назад +2

    அருமையான பதிவு👍

  • @kalaiaraspandian4052
    @kalaiaraspandian4052 4 года назад +4

    தெய்வீககுரல்

  • @balasubramaniamveluppillai660
    @balasubramaniamveluppillai660 3 года назад +5

    மிகவும் இனிமையான குரல்.

  • @selvarajp1751
    @selvarajp1751 Месяц назад

    நாள்தவறாமல் சூரியஉதயத்திற்கு ஒரு நாழிகை (24நிமிடங்கள்)முன்னதாக இப்பாடலை ஓடவிட்டு உடன் பாடி இறையை வணங்குதல் சிறப்பு.ஓம் நமசிவாய.

  • @arunagiri8796
    @arunagiri8796 4 года назад +10

    வளர்க உமது இறை வழிபாடு

  • @suganthisathyaprakash4600
    @suganthisathyaprakash4600 4 года назад +18

    அருமையான குரல் திருச்சிற்றம்பலம் ஓம் நம் நமச்சிவாயம் போற்றி போற்றி

  • @sivathasanmathyvannan8003
    @sivathasanmathyvannan8003 4 года назад +6

    எல்லாம் சிவமயம்🙏🇩🇪

  • @srk8360
    @srk8360 4 года назад +7

    ஓம் நமசிவாய...🙏🙏🙏🙏🙏...திருச்சிற்றம்பலம்...🙏🙏🙏🙏🙏🙏 நன்றி நன்றி...

  • @m.arumugam5493
    @m.arumugam5493 2 года назад +2

    அற்புதம்

  • @HemaNemoo
    @HemaNemoo 4 года назад +5

    ஆரமுதே பள்ளியெழுந்தருளாயே

  • @esivaramaniyer
    @esivaramaniyer 8 месяцев назад +1

    எம்பெருமானே, வையகம் உம்மைத் தொழுது உய்ய கருணை காட்டுங்கள்.

  • @venkatvanswaminathan5634
    @venkatvanswaminathan5634 4 года назад +3

    நமச்சிவாயம் வாழ்க நாதன் தாள்வாழ்க
    என்னை ஆட்கொண்டு செயல்பட வைப்பாயாக இறைவா கூத்தா சடையா

  • @sangarapillaishanmugam1208
    @sangarapillaishanmugam1208 2 года назад +5

    iyya used to sing prayer song first thing in the morning, in skanada varodaya college those days then classes start so that helped a lots of students to concentrate all now in good positions all over the world

  • @prasadthiru2002
    @prasadthiru2002 22 дня назад

    Great Nadhaswaram and rendering of Thiruvasagam by Pon Sunderalingam Sir. Very addictive and want to hear the rendering at Home and in Shiva temple.. Kapaleeswarar/ Meenakshi Amman Koil ( Now a dayd mobiles are not allowed into Maddrai Meenakshi Annan Temple... sad)Thanks a ton Puttur Sivan TV, Nadadsaswarm artist, Pon Sunderalingam sir. Tank You. Om Nama Sivaya, Sivs Sambo Shankara, Jai Sri Ram...✌✌✌✌

  • @diwageryogen4750
    @diwageryogen4750 4 года назад +4

    வணக்கம், வாழ்த்துக்கள், நன்றி கள்.

  • @jayaramann854
    @jayaramann854 4 года назад +5

    Very good to hear Immeasurable anandham peace with Mangàla Isai of NATHASWARAM Great

  • @palanisamypmp9723
    @palanisamypmp9723 3 года назад +2

    Very excellent

  • @kalyanraman801
    @kalyanraman801 4 года назад +4

    மிகவும் அருமையான பாடல் பதிவு

  • @jayaramann854
    @jayaramann854 4 года назад +13

    Divine voice to listen forever forgetting worldly affairs

  • @rangarajusivashanmugam2057
    @rangarajusivashanmugam2057 4 года назад +4

    Goodmorning

  • @govindarajansankaran4516
    @govindarajansankaran4516 5 месяцев назад

    திருச்சிற்றம்பலம்🙏🏼

  • @anbunagi4489
    @anbunagi4489 3 года назад +1

    Om omom Nama siva siva siva Sivaya Nama omomom Erayva nin padham. Saranam saranam Ellam siva mayam. Sivamey Jayam sivamey Thavam omomom

  • @shanmugamsangarapillai1975
    @shanmugamsangarapillai1975 4 года назад +4

    excellent performance voice so divine full of bakthi nandri iyya Australia

  • @drparimaladevimdr.parimala1070
    @drparimaladevimdr.parimala1070 11 дней назад

    OM Shivaya Namah 🌹🌹🙏🙏🙏🙏

  • @arunagiri8796
    @arunagiri8796 4 года назад +11

    இனிமையாக உள்ளது

  • @nagarajanvenkataraman7592
    @nagarajanvenkataraman7592 3 месяца назад

    அருமையான பாடல்

  • @kalaik5949
    @kalaik5949 4 года назад +9

    ஓம் நமச்சிவாய ....

    • @elangogopi8481
      @elangogopi8481 3 года назад +1

      திருவாசகத்திற்கு"உருகாதாா் ஒரு வாசகத்திற்கும் உறுகார் என்பது பழம்"சொல் ஆனாலும் அண்ணலின் குரல்"சாட்சாத் அந்த"இசை"சக்கரவர்த்தி எம்பெருமான் அருளால்"கிடைத்த வரம்தான்"என சொல்வேன். வாழிய"உங்கள் இசை பயணம். அன்புடன்"இளங்கோசம்பந்தம்

  • @veenai.s.thirumalvasagan7653
    @veenai.s.thirumalvasagan7653 3 года назад +1

    Very good I am very happy sir

  • @rajamanickamsekar6960
    @rajamanickamsekar6960 4 года назад +2

    இப்பிறவி யான் பெற்ற பேறு

  • @kannayiramkannayiram6921
    @kannayiramkannayiram6921 4 года назад +3

    சிவாய நம ஓம்

  • @kannanmarathar427
    @kannanmarathar427 4 года назад +3

    ஓம் நமசிவாய

  • @subramaniamn8324
    @subramaniamn8324 4 года назад +5

    Very very pleasant nice voice.thanks.

  • @sureshbabu4212
    @sureshbabu4212 4 года назад +2

    Sivayanama ayya kuralin dheiveegam manadhai mattumalla aiempulanaiyum vurukkugiradhu sivathai kanmun niruthugiradhu ayya 🙏🙏🙏🙇🙇🙇🙏🙏🙏 thiruchitrambalam

  • @SureshSuresh-sp6sm
    @SureshSuresh-sp6sm 4 года назад +3

    சிவாயநம🙏🙏🙏

  • @raghavanrajuiyer8311
    @raghavanrajuiyer8311 3 года назад +7

    Only tears flowing from my eyes on hearing your Mighty voice.
    Lord Shiva has abundantly blessed you with a golden voice.
    Vazhga Valamudan Iyya.

  • @karuppasamyrmk9309
    @karuppasamyrmk9309 2 года назад

    நன்றி நன்றி நன்றி

  • @karthiksrinivasan7152
    @karthiksrinivasan7152 Год назад

    Arumai

  • @nithyamoulipalanimouli1156
    @nithyamoulipalanimouli1156 4 года назад +4

    Very nice voice

  • @govindarajulu-kasturi9614
    @govindarajulu-kasturi9614 2 года назад +3

    Fantastic rendition by Sangeetha Vidhwan Pon Sundaralingam Aiyah. Salutations to all in the team who made it .

  • @balamark3187
    @balamark3187 2 месяца назад

    OHM NAMASHIVAYA

  • @opelastraappukannanpollach6345
    @opelastraappukannanpollach6345 2 года назад

    Oom nama shivaya

  • @raja.k2038
    @raja.k2038 2 года назад

    Vuyir moochallava enn Ambalavanan om namasivayame potri Thiruchitrambalme potri inbasivame potri potri potri potri potri

  • @aruk3421
    @aruk3421 4 года назад +8

    Excellent voice,wonderful

    • @rrkopal5454
      @rrkopal5454 Год назад

      தமிழ் முக்கியம்

  • @pechimuthu9449
    @pechimuthu9449 4 года назад +2

    Good service continue thanks

  • @thanasingm3000
    @thanasingm3000 3 года назад +1

    Very good to hear

  • @banumani2858
    @banumani2858 4 года назад +3

    ராகங்களின் பெயரை போடமுடியுமா.

  • @madhavanvenkataraman980
    @madhavanvenkataraman980 4 года назад +2

    Super

  • @elangovanr682
    @elangovanr682 4 года назад +4

    Biessed to hear the song .Honey coated and mesmerising voice.

  • @meerabiju1294
    @meerabiju1294 4 года назад +2

    Om Namashivaya

  • @selvarajmarimuthu5157
    @selvarajmarimuthu5157 3 года назад +4

    I have heard this song almost 100 times. How to explain to others about this song.? One way to explain. 1st time hearing I felt 100 feet away from god. 100 th time hearing I felt 1 feet away from god. This is the easiest way to explain about this song.

    • @rrkopal5454
      @rrkopal5454 Год назад

      தமிழிலேயே திருவாசகம் எழுதப்பட்டுள்ளது.நாம் நம்முடைய கருத்தையாவது தமிழில் எழுதுவோம் சிவாயநம திருச்சிற்றம்பலம்

  • @vanmugil8222
    @vanmugil8222 4 года назад +3

    Sarvam sivamayam

  • @t.arumugamt.arumugam8278
    @t.arumugamt.arumugam8278 3 года назад

    குரல் இனிமை

  • @saarmenthradirghar7550
    @saarmenthradirghar7550 4 года назад +9

    Soulful and blissful rendition of this beautiful composition

    • @sundarbala7083
      @sundarbala7083 4 года назад

      Tamil musical composition about god siva. 1400 years old.THiRUVSAGAM singer Ponsundaralingam jaffna.

  • @vanmugil8222
    @vanmugil8222 4 года назад +3

    Sema super voice shiva

  • @sangarapillaishanmugam1208
    @sangarapillaishanmugam1208 2 года назад

    cosmic voice overflowing bakthi anbu arul gift from shivaperuman , i went to the school as iyya went ;;skandavadaya college chunngam in 1963 1964 s i think

  • @balamurugan-lc4ig
    @balamurugan-lc4ig 3 года назад

    Om ammaiappa potri

  • @tharsinitharsinisini8435
    @tharsinitharsinisini8435 Год назад

    🙏🙏🙏🌹🙏🙏🙏

  • @ramamoorthia3422
    @ramamoorthia3422 4 года назад +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajagopallingusamy673
    @rajagopallingusamy673 3 года назад

    Om namasivaya namaka

  • @AsokanP-ee2uw
    @AsokanP-ee2uw Год назад

    பொன் அசோகன்

  • @apparelexportskillcenter6721
    @apparelexportskillcenter6721 2 года назад

    ஓம் நமசிவாய tuch all 🙏🙏🙏

  • @lalithasatya7139
    @lalithasatya7139 4 года назад +3

    very nice voice and sang very well. full of bhakti feel like hearing again and again. A small request if you can mention the raga of each one that will help us to learn and sing. Thanks

  • @punniakotti9667
    @punniakotti9667 4 года назад +2

    🙏🙏🙏

  • @98765lkjhg
    @98765lkjhg 4 года назад +3

    Sir
    Does anyone have திருநீற்றுப் பதிகம் sung by mathipukkuRiya Thiru Pon Sundaralingam ayya ? . if so please share links

  • @marasamya8427
    @marasamya8427 2 года назад

    Bless my god

  • @govindarajulu-kasturi9614
    @govindarajulu-kasturi9614 2 года назад

    Beautiful rendition. God Bless.
    Salutations to Oodhuvar .

  • @vijayagopal4414
    @vijayagopal4414 3 года назад +1

    Before pon sundaralingam
    Who sung

  • @ramarm1384
    @ramarm1384 4 года назад +3

    Download panna mudiyuma ayya

  • @Uthamar108
    @Uthamar108 2 месяца назад

    My Thiruvasagam meaning page for siva puranam.🙏🙏

  • @muruganc1628
    @muruganc1628 3 года назад +1

    ஐயாதங்கள்குறலில்சிவனின்படல்கள்மனத்தைஉறுக்கிவிட்டதுஎண்ணாள்மனப்பாடம்செய்துபாடமுடியவில்லையேவருந்துகிறேன்

  • @renganayagishakthi7755
    @renganayagishakthi7755 3 года назад +6

    அருமை....ஐயா. .இன்னிசை வீணையர். ..இது எந்த ராகத்தில் பாடப்பட்டுள்ளது?

    • @visva6179
      @visva6179 Год назад

      சாவேரி இராகம்

    • @srinivasanjeya
      @srinivasanjeya Год назад

      @@visva6179 Ragamalika each stanza is set to different ragaa

    • @srinivasanjeya
      @srinivasanjeya Год назад

      @@visva6179 இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால் ;
      இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால் ; this stanza alone was such in Saveri.

    • @srinivasanjeya
      @srinivasanjeya Год назад

      @@visva6179 பப்பற வீட்டிருந்து உணரும் நின் அடியார்
      பந்தனை வந்தறுத்தார்; அவர் பலரும் - sahana

    • @srinivasanjeya
      @srinivasanjeya Год назад

      @@visva6179 "அது பழச்சுவையென, அமுதென, அறிதற்கு
      அரிதென, எளிதென", அமரும் அறியார், - Ataanaa

  • @krishnamoorthypadmanabhan8909
    @krishnamoorthypadmanabhan8909 4 года назад +3

    Why are u having advertisement during this beautiful devotional song. It is irritating all the devotees.pls stop advertisements atleast during devotional songs.

  • @annamalaib9628
    @annamalaib9628 4 года назад +1

    Zee it

  • @AsokanP-ee2uw
    @AsokanP-ee2uw Год назад

    1:21