திருவாசகம் Thiruvasagam Vol1 in Tamil | Dharmapuram P Swaminathan | Shambho Sankara Devotional Song

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 янв 2025

Комментарии •

  • @bhoopalanarumugam3437
    @bhoopalanarumugam3437 7 месяцев назад +4

    வாழ்வே போற்றி என் வைப்பே போற்றி
    முத்தா போற்றி முதல்வா போற்றி
    அத்தா போற்றி அரனே போற்றி
    உரைஉணர்வு இறந்த ஒருவ போற்றி
    விரிகடல் உலகின் விளைவே போற்றி
    அருமையில் எளிய அழகே போற்றி
    கருமுகி லாகிய கண்ணே போற்றி
    மன்னிய திருவருள் மலையே போற்றி
    என்னையும் ஒருவ னாக்கி இருங்கழல்
    சென்னியில் வைத்த சேவக போற்றி

  • @selvaraniumadurai5353
    @selvaraniumadurai5353 8 дней назад

    சிவயசிவ
    திருச்சிற்றம்பலம்

  • @manivithra1659
    @manivithra1659 3 месяца назад +1

    திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம் 🙏🙏
    தென்னாடுடைய சிவனே போற்றி 🙏
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி 🙏🙏

  • @manivithra1659
    @manivithra1659 3 месяца назад +1

    ஓம் திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம் 🙏🙏
    தென்னாடுடைய சிவனே போற்றி
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி 🙏🙏

  • @kanchanamalanavaneetham4217
    @kanchanamalanavaneetham4217 2 месяца назад

    திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம் ஆரூர் அமர்ந்த அரசே போற்றி சீர் ஆர் திருவையாறா போற்றி போற்றி! திருவாசகம் தந்த வள்ளல் மாணிக்க வாசகர் சுவாமிகள் திருவடிகள் போற்றி போற்றி! ஐயா அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி!

  • @manivithra1659
    @manivithra1659 3 месяца назад +1

    ஓம் பொன்னம்பலம் திருச்சிற்றம்பலம் அருணாச்சலம் மகாதேவ மஹாலிங்கம் மத்தியார் சுணாஸே🙏🙏

  • @manivithra1659
    @manivithra1659 3 месяца назад

    ஓம் திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம்

  • @manivithra1659
    @manivithra1659 3 месяца назад

    தென்னாடுடைய சிவனே போற்றி🙏 எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி 🙏🙏

  • @A-T.Arasu23
    @A-T.Arasu23 9 месяцев назад +1

    Thirunavukkarasu
    நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
    இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
    கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
    ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
    ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க
    வேகம் கெடுத்துஆண்ட வேந்தன் அடி வெல்க
    பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
    புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
    கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
    சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க
    ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
    தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
    நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
    மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
    சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி
    ஆராத இன்பம் அருளும் மலைபோற்றி
    சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்
    அவன் அருளாலே அவன்தாள் வணங்கிச்
    சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை
    முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான்
    கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி
    எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல் இறைஞ்சி
    விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கொளியாய்,
    எண்ணிறந்து எல்லை இலாதானே நின் பெரும்சீர்
    பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றறியேன்
    புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
    பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
    கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
    வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
    செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்
    எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
    மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
    உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
    மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
    ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே
    வெய்யாய், தணியாய், இயமான னாம்விமலா
    பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி
    மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே
    எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
    அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே
    ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும்
    ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
    போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்
    நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே
    மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே
    கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
    சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று
    பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
    நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த
    மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை
    மறைந்திட மூடிய மாய இருளை
    அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
    புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,
    மலம் சோரும் ஒன்பது வாயிற் குடிலை
    மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய
    விலங்கு மனத்தால், விமலா உனக்குக்
    கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
    நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
    நிலம் தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டி,
    நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்
    தாயிற் சிறந்த தயாவான தத்துவனே
    மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
    தேசனே தேனார் அமுதே சிவபுரானே
    பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே
    நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப்
    பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே
    ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
    ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
    நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
    இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே
    அன்பருக்கு அன்பனே யாவையுமாய் இல்லையுமாய்
    சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
    ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
    ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
    கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தின்
    நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே
    போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
    காக்கும் என் காவலனே காண்பரிய பேரொளியே
    ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
    தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய்
    மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
    தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்
    ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
    வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப
    ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்றென்று
    போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்
    மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
    கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே
    நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே
    தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே
    அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று
    சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்
    சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
    செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்
    பல்லோரும் ஏத்தப் பணிந்து

  • @manivithra1659
    @manivithra1659 Месяц назад

    நமசிவாய வாழ்க 🙏🙏

  • @manivithra1659
    @manivithra1659 3 месяца назад

    ஓம் நமசிவாய
    தென்னாடுடைய சிவனே போற்றி 🙏
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி 🙏🙏

  • @manivithra1659
    @manivithra1659 3 месяца назад

    ஓம் நமசிவாய சிவாயநம திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம்
    தென்னாடுடைய சிவனே போற்றி 🙏
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி 🙏🙏

  • @RAMALINGAMV-n7d
    @RAMALINGAMV-n7d 3 месяца назад

    உருகாத மனமும் உருகும்.

  • @pitchaiangappan4893
    @pitchaiangappan4893 3 года назад +21

    அருமையான குரல்வளம் கடவுள் கொடுத்த வரம்! மறக்க முடியாது தங்கள் வாயால் பாடப்பெற்ற திருவாசகம்

  • @rameshmahadevan41
    @rameshmahadevan41 3 года назад +12

    தெய்வ குரலோன்
    தேவ தூதன்
    ஈசன் புகழை பரப்பும்
    இனிய திருவாசகம்
    மாணிக்க வாசகர் அருளியது

  • @logaarulalingam4166
    @logaarulalingam4166 3 месяца назад

    ஒம் நமச்சிவாய 👏

  • @bhoopalanarumugam3437
    @bhoopalanarumugam3437 7 месяцев назад +1

    அடைந்தவர்க்கு அருளும் அப்பா போற்றி
    இத்தி தன்னின் கீழ் இருமூவர்க்கு
    அத்திக்கு அருளிய அரசே போற்றி
    தென்னாடுடைய சிவனே போற்றி
    என் நாட்டவர்க்கும் இறைவா போற்றி
    ஏனக் குருளைக்கு அருளினை போற்றி
    மானக் கயிலை மலையாய் போற்றி
    அருளிட வேண்டும் அம்மான் போற்றி
    இருள் கெட அருளும் இறைவா போற்றி
    தளர்ந்தேன் அடியேன் தமியேன் போற்றி

  • @thandapanigreen9323
    @thandapanigreen9323 Месяц назад +1

    🙏🙏🙏🙏திருமறைக்காடார்...B

    • @thandapanigreen9323
      @thandapanigreen9323 18 дней назад

      திருமறைக்காடர். அருள்மிகு ஸ்ரீ வேதாரண்யேஸ்வரர் ஆலய தேவாரப் பாடல்கள் பதிவிடவும் ஐயா 🙏🙏🙏

  • @knatarajan8081
    @knatarajan8081 4 месяца назад +2

    இமைப்பொழுதும் என் நெஞ்சின் நீங்காதான் தாழ் போற்றி 🙏

  • @palanitex
    @palanitex 3 месяца назад

    சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ ஓம் நமச்சிவாய வாழ்க🙏🙏🙏🙏🙏

  • @bhoopalanarumugam3437
    @bhoopalanarumugam3437 7 месяцев назад +1

    படி உறப் பயின்ற பாவக போற்றி
    அடியொடு நடு ஈறு ஆனாய் போற்றி
    நரகொடு சுவர்க்க நானிலம் புகாமல்
    பரகதி பாண்டியற்கு அருளினை போற்றி
    ஒழவற நிறைந்த ஒருவ போற்றி
    செழு மலர்ச் சிவபுரத்து அரசே போற்றி
    கழு நீர் மாலைக் கடவுள் போற்றி
    தொழுவார் மையல் துணிப்பாய் போற்றி
    பிழைப்பு வாய்ப்பு ஒன்று அறியா நாயேன்
    குழைத்த சொல்மாலை கொண்டருள் போற்றி

  • @vetriselvamvetriselvam2912
    @vetriselvamvetriselvam2912 2 года назад +3

    சிம்மக்குரலோன் தருமபுரத்தார் குரலோசையில் மாணிக்கவாசகர் திருவாசகம் கேட்க கேட்க திகட்டாத தேனிசை! வாழ்க திருவாசகம் வாழ்க தருமபுரத்தார் குரலோசை!

  • @manivithra1659
    @manivithra1659 3 месяца назад

    ஓம் சிவாயநம திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம் 🙏🙏

  • @thavaprakasam5617
    @thavaprakasam5617 3 года назад +9

    சிவன் இவருடைய குரலில் நடனமாடுகிறார்.

  • @manivithra1659
    @manivithra1659 3 месяца назад

    ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம் 🙏🙏

  • @bhoopalanarumugam3437
    @bhoopalanarumugam3437 7 месяцев назад

    ஏகம்பத்து உறை எந்தாய் போற்றி
    பாகம் பெண் உரு ஆனாய் போற்றி
    பராய்த் துறை மேவிய பரனே போற்றி
    சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி
    மற்று ஓர் பற்று இங்கு அறியோன் போற்றி
    குற்றாலத்து எம் கூத்தா போற்றி
    கோகழி மேவிய கோவே போற்றி
    ஈங்கோய் மலை எந்தாய் போற்றி
    பாங்கு ஆர் பழனத்து அழகா போற்றி
    கடம்பூர் மேவிய விடங்கா போற்றி

  • @manivithra1659
    @manivithra1659 4 месяца назад

    ஓம் நமசிவாய வாழ்க போற்றி

  • @kulandaivelua6998
    @kulandaivelua6998 4 года назад +6

    வாழ்க வளர்க சிவ பணி

  • @dineshkumar-lv8yj
    @dineshkumar-lv8yj 4 года назад +7

    Om Namah Shivaya ,Shivaya Namah....

  • @bhoopalanarumugam3437
    @bhoopalanarumugam3437 7 месяцев назад

    தொழுதகை துன்பந் துடைப்பாய் போற்றி
    அழிவிலா ஆனந்த வாரி போற்றி
    அழிவதும் ஆவதும் கடந்தாய் போற்றி
    முழுவதும் இறந்த முதல்வா போற்றி
    மான்நேர் நோக்கி மணாளா போற்றி
    வான்அகத்து அமரர் தாயே போற்றி
    பார்இடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி
    நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி
    தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி
    வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி

  • @bhoopalanarumugam3437
    @bhoopalanarumugam3437 7 месяцев назад

    கடையேன் அடிமை கண்டாய் போற்றி
    ஐயா போற்றி அணுவே போற்றி
    சைவா போற்றி தலைவா போற்றி
    குறியே போற்றி குணமே போற்றி
    நெறியே போற்றி நினைவே போற்றி
    வானோர்க்கு அரிய மருந்தே போற்றி
    ஏனோர்க்கு எளிய இறைவா போற்றி
    மூவேழ் சுற்றமும் முரண் உறு நரகு இடை
    ஆழாமே அருள் அரசே போற்றி
    தோழா போற்றி துணைவா போற்றி

  • @palanisamykandasamy1277
    @palanisamykandasamy1277 17 дней назад

    திருச்சிற்றம்பலம்

  • @bhoopalanarumugam3437
    @bhoopalanarumugam3437 7 месяцев назад

    கூடல் இலங்கு குருமணி போற்றி
    தென் தில்லை மன்றினுள் ஆடி போற்றி
    இன்று எனக்கு ஆர் அமுது ஆனாய் போற்றி
    மூவா நான்மறை முதல்வா போற்றி
    சேவார் வெல்கொடிச் சிவனே போற்றி
    மின் ஆர் உருவ விகிர்தா போற்றி
    கல் நார் உரித்த கனியே போற்றி
    காவாய் கனகக் குன்றே போற்றி
    ஆ ஆ என்தனக்கு அருளாய் போற்றி
    படைப்பாய் காப்பாய் துடைப்பாய் போற்fறி

  • @thangamanim2036
    @thangamanim2036 4 года назад +1

    சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ

  • @bhoopalanarumugam3437
    @bhoopalanarumugam3437 7 месяцев назад

    இடரைக் களையும் எந்தாய் போற்றி
    ஈச போற்றி இறைவா போற்றி
    தேசப் பளிங்கின் திரளே போற்றி
    அரைசே போற்றி அமுதே போற்றி
    விரை சேர் சரண விகிர்தா போற்றி
    வேதி போற்றி விமலா போற்றி
    ஆதி போற்றி அறிவே போற்றி
    கதியே போற்றி கனியே போற்றி
    நதி நேர் நெஞ்சடை நம்பா போற்றி
    உடையாய் போற்றி உணர்வே போற்றி

  • @kaliappan-e4j
    @kaliappan-e4j Год назад +1

    ஓம் நமச்சிவாய திருச்சிற்றம்பலம் போற்றி

  • @bhoopalanarumugam3437
    @bhoopalanarumugam3437 7 месяцев назад

    வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி
    அளிபவர் உள்ளதது அமுதே போற்றி
    கனவிலும் தேவர்க்கு அரியாய் போற்றி
    நனவிலும் நாயேற்கு அருளினை போற்றி
    இடைமருது உறையும் எந்தாய் போற்றி
    சடைஇடைக் கங்கை தரித்தாய் போற்றி
    ஆரூர் அமர்ந்த அரசே போற்றி
    சீர் ஆர் திருவையாறா போற்றி
    அண்ணாமலை எம் அண்ணா போற்றி
    கண் ஆர் அமுதக் கடலே போற்றி

  • @bhoopalanarumugam3437
    @bhoopalanarumugam3437 7 месяцев назад

    புரம்பல் எரித்த புராண போற்றி
    பரம் பரம் சோதிப் பரனே போற்றி
    போற்றி போற்றி புயங்கப் பெருமான்
    போற்றி போற்றி புராண காரண
    போற்றி போற்றி சய சய போற்றி
    திருச்சிற்றம்பலம்!!!

  • @jeyavathenebalanathan190
    @jeyavathenebalanathan190 4 года назад +20

    ஐயா நீங்கள் பாடிய திருமுறைகள் கேட்டு ஆனந்தம் பெறும் பாக்கியம் பெற்றேன் மார்கழி மாதம் திருவாசகம் உங்கள் குரலில் பொருள் புலப்பட பாடுவது அற்புதம் ஐயா! ஓம் நமசிவய

  • @revathysubramanian6407
    @revathysubramanian6407 4 года назад +14

    ஈசன் திருவடியில் கொண்டு சேர்க்கும் இனிய குரல்.

  • @v.rajagopalaniyer8071
    @v.rajagopalaniyer8071 4 года назад +18

    மிகவும் இனிமையாக இருந்தது திருச்சிற்றம்பலம்

  • @ManiPavi-rl8hj
    @ManiPavi-rl8hj Год назад +1

    🙏🙏ஓம் நமசிவாய போற்றி🙏🙏

  • @acniherbs1455
    @acniherbs1455 Год назад +1

    ஓம் நமசிவாய ஓம்

  • @mariappanv9089
    @mariappanv9089 3 года назад +4

    ஆண்மீகத்தின்முதல்அறிச்சுவடி திருவாசகத்திற்க்கு உருகாகதோற் ஒருவாசகத்திற்க்கும் ஒருகாதோற்...

  • @v.rajagopalaniyer8071
    @v.rajagopalaniyer8071 4 года назад +13

    ஓம் நமசிவாய வாழ்க

  • @111aaa111bbb111
    @111aaa111bbb111 Год назад +1

    ஓம் அருணாசல சிவா🙏 ஓம் நமசிவாய🙏 அடியேன் சோமசுந்தரம்🙏

  • @eswaramoorthib8270
    @eswaramoorthib8270 Год назад +1

    மிக அருமையான பதிவு

  • @thandapanigreen9323
    @thandapanigreen9323 18 дней назад

    திருமறைக்காடார் .அருள்மிகு ஸ்ரீ வேதாரண்யேஸ்வரர் ஆலய தேவாரப் பாடல்கள் பதிவிடவும் ....🙏🙏🙏

  • @balamuruganv6616
    @balamuruganv6616 3 года назад +1

    நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க

  • @r.lakshmidossr.lakshmidoss9652
    @r.lakshmidossr.lakshmidoss9652 3 года назад +5

    Vallka valamudan 😇

  • @manivithra1659
    @manivithra1659 3 месяца назад

    சிவாயநம திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம் 🙏🙏

  • @kaanagamtv
    @kaanagamtv 2 года назад

    எல்லாம் சிவமயம் எங்கும் சிவமயம் என்னுள் சிவமயம்

  • @ManiPavi-rl8hj
    @ManiPavi-rl8hj Год назад +1

    🙏🙏ஓம் நமசிவாய வாழ்க ‌🙏🙏

  • @apparso1880
    @apparso1880 3 года назад +3

    🇮🇳🙏அந்தம் ஒன்றில்லா ஆனந்தம் பெற்றேன் யாது நீ பெற்றது ஒன்று என்பால்

  • @7d2h3an9d8
    @7d2h3an9d8 3 года назад +4

    Though i understand but little Thamizh, having lived all my life in the diaspora , there is something that draws me again n again to listening to the Thevaaram n Thirupugazh.

  • @saravananvmssmipmk121p5
    @saravananvmssmipmk121p5 4 года назад +3

    Thiruchitrambalam om namasivaya sivaya nama om Romba varusam kayichi bagavan appa siva petuman arulaal endha song ennikku keetta endha chenalukku nandri thiruchitrambalam

  • @chandrasekar1174
    @chandrasekar1174 2 года назад +1

    Anmavai sundiyelukkum vasskam and divinemelody

  • @arivazhaganarumugam6673
    @arivazhaganarumugam6673 3 года назад +5

    In Thiruvasagam each words have unique meaning. On hearing this Vallalar said Thiruvasagam is spred all over the space .

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 2 года назад +2

    🙏💚👌👏🌹🌺Siva Siva Siva Siva Good Iyya arumai a. 1.voice

  • @sankarlingam3399
    @sankarlingam3399 4 года назад +7

    திருவாசகத்திற்ககு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார்.ஓம் நமச்சிவாய.ஈசன் திருவடி போற்றி.

    • @jayakumart8517
      @jayakumart8517 4 года назад +3

      மரியாதைக்குரிய ஐயா குரலில் திருவாசகம் கேட்ட பின்னர்தான் சைவ நெறியைப் உணரமுடிந்தது .

    • @kandasamybalasupramaniam5797
      @kandasamybalasupramaniam5797 3 года назад +2

      @@jayakumart8517 அருமைஅருமைநமச்சிவாயவாழ்கசாமிபாலன்

    • @mano_ranjjitham
      @mano_ranjjitham 3 года назад +1

      ஐயா தங்களின் தெய்வீக குரலில் ஈசனை நேரில் தரிசித்த உணர்வு.ஓம் நமசிவாய.

  • @ktvenkatesh1787
    @ktvenkatesh1787 4 года назад +5

    ஓம் நமச்சிவாய. அருமையான குரல் வளம்.

  • @jeevagovender9931
    @jeevagovender9931 4 года назад +5

    Vanakkam Great and getting full with the song THANKS

  • @skvenkatesh9666
    @skvenkatesh9666 Год назад +1

    OM NAMACHIVAYA POTRI POTRI🙏🙏🙏

  • @chandrasekarganapathy8264
    @chandrasekarganapathy8264 8 месяцев назад

    Ayya panivana namaskaram sivaya namaha Siva Siva divom

  • @natrajannadar7166
    @natrajannadar7166 6 месяцев назад +1

    🙏🙏🙏

  • @sssamayalsamayal1987
    @sssamayalsamayal1987 2 года назад +3

    🙏 ஓம் நமசிவாய வாழ்க🙏

  • @manoharan956
    @manoharan956 2 года назад

    நன்று... நன்று

  • @thirumoolanathanptnathan7270
    @thirumoolanathanptnathan7270 3 года назад

    Ohm namasivaya Raksha Raksha Mahadeva. . ...Shivayanamaha. ...

  • @balasubramanuang9335
    @balasubramanuang9335 3 года назад +1

    இனிமை

  • @vennilaveannamalai2050
    @vennilaveannamalai2050 4 года назад +1

    On namashivaya

  • @apparsaravanan5890
    @apparsaravanan5890 7 месяцев назад

    விளம்பரங்கள் தவிர்க்க வேண்டும்

  • @sivakumarkumar9506
    @sivakumarkumar9506 2 года назад

    Thiruchitmbalam 💐💐💐🙏💐🙏🙏🙏🌹💐🌹🙏🌹🌹🙏🌹🌹🙏

  • @prasannavenkatesan9620
    @prasannavenkatesan9620 2 года назад +3

    Divine voice, listening since my childhood!! Shivoham 🙏🙏🙏

  • @starkopi543
    @starkopi543 Год назад

    Om namachivaya

  • @thavaprakasam5617
    @thavaprakasam5617 2 года назад

    எம்பெருமான் ஈசனே இவர் குரலில் நர்த்தனம் ஆடுகிறார்.

  • @vinayagamourty3429
    @vinayagamourty3429 4 года назад +1

    Great

  • @dharmadharmaraj1605
    @dharmadharmaraj1605 2 года назад

    om namachivaya vaalga

  • @wongmee7216
    @wongmee7216 Год назад

    Om🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 name wong 🌹🌹🌹🥰

  • @sakthir7830
    @sakthir7830 Год назад

    Tanks

  • @manivithra1659
    @manivithra1659 Месяц назад

    சிவாயநம திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம் தென்னாடுடைய சிவனே போற்றி 🙏🙏
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி 🙏🙏

  • @tharumaravi
    @tharumaravi 2 года назад

    Sivan than agathilirunthu oliyai tantha tamil em aaramuthatil vaalga 🙏

  • @chandrasekarganapathy8264
    @chandrasekarganapathy8264 Год назад

    Honey dropped voice

  • @bhoopalanarumugam3437
    @bhoopalanarumugam3437 7 месяцев назад

    சரதம் ஆகவே சாத்திரம் காட்டினர்
    சமய வாதிகள் தம்தம் தங்களே
    அமைவது ஆக அரற்றி மலைந்தனர்
    மிண்டிய மாயா வாதம் என்னும்
    சண்ட மாருதம் சுழித்தடித் தாஅர்த்து
    உலோகா யதமெனும் ஒண்டிறப் பாம்பின்
    கலா பேதத்த கடுவிடம் எய்தி
    அதில் பெருமாயை எனைப்பல சூழவும்
    தப்பாமே தாம் பிடித்தது சலியாத்
    தழலது கண்ட மெழுகு அது போலத் 60
    தொழுது உளம் உருகி அழுது உடல்கம்பித்து
    ஆடியும் அலறியும் பாடியும் பரவியும்
    கொடிறும் பேதையும் கொண்டது விடாதென
    படியே ஆகி நல் இடைஅறா அன்பின்
    பசுமரத்து ஆணி அறைந்தால் போலக்
    கசிவது பெருகிக் கடல் என மறுகி
    அகம் குழைந்து அனுகுலமாய் மெய் விதிர்த்துச்
    சகம் பேய் என்று தம்மைச் சிரிப்ப
    நாண் அது ஒழிந்து நாடவர் பழித்துரை
    பூண் அது ஆகக் கோணுதல் இன்றிச் 70
    சதுர் இழந்து அறிமால் கொண்டு சாரும்
    கதியது பரமா அதிசயம் ஆகக்
    கற்றா மனம் எனக் கதறியும் பதறியும்
    மற்று ஓர் தெய்வம் கனவிலும் நினையாது
    அருபரத்து ஒருவன் அவனியில் வந்து
    குருபரன் ஆகி அருளிய பெருமையைச்
    சிறுமை என்று இகழாதே திருவடி இணையைப்
    பிறிவினை அறியா நிழல் அது போல
    முன் பின்னாகி முனியாது அத்திசை
    என்பு நைந்து உருகி நெக்கு நெக்கு ஏங்கி 80
    அன்பு எனும் ஆறு கரை அது புரள
    நன்புலன் ஒன்றி நாத என்று அரற்றி
    உரை தடுமாறி உரோமம் சிலிர்ப்ப
    கரமலர் மொட்டித்து இருதயம் மலரக்
    கண்களி கூர நுண் துளி அரும்ப
    சாயா அன்பினை நாள்தொரும் தழைப்பவர்
    தாயே ஆகி வளர்த்தனை போற்றி
    மெய் தரு வேதியன் ஆகி வினைகெடக்
    கைதரவல்ல கடவுள் போற்றி
    ஆடக மதுரை அரசே போற்றி

  • @ullas75
    @ullas75 4 года назад +3

    Om nama shivaya om

  • @K.venkatesan1975
    @K.venkatesan1975 4 года назад +1

    Thichittarmbalam

  • @vadivadisivam5551
    @vadivadisivam5551 4 года назад +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏

  • @ilayabharathi9560
    @ilayabharathi9560 2 года назад

    🙏

  • @v.rajagopalaniyer8071
    @v.rajagopalaniyer8071 4 года назад +7

    தயவு செய்து திருவொற்றியூர் எமுத்தறியம் பெருமான் மாலை சுவாமிநாதன் பாடியது போடவும்

  • @bhoopalanarumugam3437
    @bhoopalanarumugam3437 7 месяцев назад

    புல்வரம்பு ஆய பலதுறை பிழைத்தும்
    தெய்வம் என்பதோர் சித்தம் உண்டாகி
    முனிவு இலாதது ஓர் பொருள் அது கருதலும்
    ஆறு கோடி மாயா சக்திகள்
    வேறு வேறு தம் மாயைகள் தொடங்கின
    ஆத்தம் ஆனார் அயலவர் கூடி
    நாத்திகம் பேசி நாத்தழும்பு ஏறினர்
    சுற்றம் என்னும் தொல்பசுக் குழாங்கள்
    பற்றி அழைத்துப் பதறினர் பெருகவும்
    விரதமே பரம் ஆக வேதியரும்

  • @chellapandian7061
    @chellapandian7061 2 года назад

    தெய்வீகமான திருவாசகத்தேன் பாடலில்
    மெய்மறந்து ஆனந்தம்
    அடைகின்ற
    அருமையானபேரின்பம்
    அதற்கிடையே
    விளம்பரம்என்றஅபத்தமான
    நஞ்சினைப்பதிவு
    செய்து கேட்பவர் மனத்திற்குள்
    கேடாய் தேவையற்ற
    ஒன்றைஊடுருவச்செய்து
    இடையீடு இடையூறாகவே
    இருப்பதைதவிர்க்கலாம்
    தொடர்ந்து கேட்டவாறு
    தெய்வீகஇன்பம்பெறவிடாது
    ஓர்பெரும்பாவத்தை
    செய்வதைத் தவிர்க்கவும்
    ஒருகுடம்பாலில்
    பலதுளிவிஷமாக
    இடையிடையே
    ஒர்அலறலை
    ஒலிப்பது
    வேதனையானதே

  • @vetriselvamvetriselvam2912
    @vetriselvamvetriselvam2912 2 года назад +2

    உங்களுக்கு தெரியுமா??? வெளிநாடுகளில் தமிழிசையை பரப்பும் சுசிலா ராமன் ஐயா! தருமபுரத்தாரிடம் 8 மாதங்கள் தமிழகத்தில் தங்கி இசை பயின்றவர்

  • @surianuthisuria801
    @surianuthisuria801 Год назад

    Hope all will benefit from this thiruvasagam song.

  • @Manikavasagari
    @Manikavasagari 3 года назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @girishshivar5226
    @girishshivar5226 Год назад

    19:42

  • @bhoopalanarumugam3437
    @bhoopalanarumugam3437 7 месяцев назад

    ழு திங்களில் தாழ் புவி பிழைத்தும்
    எட்டுத் திங்களில் கட்டமும் பிழைத்தும்
    ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும்
    தக்க தசமதி தாயொடு தான்படும்
    துக்க சாகரம் துயர் இடைப்பிழைத்தும்
    ஆண்டுகள் தோறும் அடைந்த அக்காலை
    ஈண்டியும் இருத்தியும் எனைப்பல பிழைத்தும்
    காலை மலமொடு கடும்பகல் பசி நிசி
    வேலை நித்திரை யாத்திரை பிழைத்தும்
    கரும்குழல் செவ்வாய் வெள்நகைக் கார்மயில்

  • @bhoopalanarumugam3437
    @bhoopalanarumugam3437 7 месяцев назад

    யானை முதலா எறும்பு ஈறாய
    ஊனம் இல் யோனியின் உள்வினை பிழைத்தும்
    மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்து
    ஈனம் இல் கிருமிச் செருவினில் பிழைத்தும்
    ஒரு மதித் தான்றியின் இருமையில் பிழைத்தும்
    இருமதி விளைவின் ஒருமையில் பிழைத்தும்
    மும்மதி தன்னுள் அம்மதம் பிழைத்தும்
    ஈர் இரு திங்களில் பேர் இருள் பிழைத்தும்
    அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும்
    ஆறு திங்களில் ஊறு அலர் பிழைத்தும

  • @sriraghavan515
    @sriraghavan515 2 года назад

    விளம்பரம் செய்து தொந்தரவு செய்ய வேண்டிமே

  • @palanichamy3080
    @palanichamy3080 2 года назад +1

    Hunmansalisa

  • @adiyapathamsiva5591
    @adiyapathamsiva5591 Год назад

    PLEASE STOP THIS ADDS IN BETWEEN THE GRATEFUL MEDITATIVE DEVAOSIONAL SONG WE RESPECT THE FACEBOOK PAGES PLEASE AVOID ADDS

  • @kumaresansubramaniam3218
    @kumaresansubramaniam3218 4 года назад

    The