வளர்ந்து வரும் மாஸ்டர்கள் இந்த அரிசியில் பிரியாணி செய்தால் நீங்கள் பெரிய மாஸ்டராக வரலாம்👍👍

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • வளர்ந்து வரும் மாஸ்டர்களுக்காக என் வீடியோ சமர்ப்பணம் 🙏.
    *24 கேரட் அரிசி தண்ணீர் அளவு.
    1.1 கிலோ லிருந்து 5 கிலோ வரை செய்தால் 1 கு 1.3/4 தண்ணீர் ஊற்ற வேண்டும்.
    2.5 கிலோ விலிருந்து 40 கிலோ வரை கரி சமமாகவோ கூடுதலாகவோ சேர்த்து செய்தால். அளவு பாத்திரத்தில் அளந்து வரும் அளவில் அரை பாத்திரம் தண்ணீர் குறைத்து வைக்க வேண்டும்.
    3.5 கிலோ இருந்து 40 கிலோ வரை பிரியாணி செய்தால் கறி பாதிக்கு பாதி குறைவாக சேர்த்து செய்கிற மாதிரி இருந்தால் அளவு பாத்திரத்தில் 1 கு 1.1/2 பாத்திரம் தண்ணீர் ஊற்ற வேண்டும்.
    4. வெஜிடபிள் பிரியாணி செய்யுற மாதிரி இருந்தால் 1 கிலோ to 10 ககிலோ வரை 1 கு 1. 3/4 பாத்திரம் அளவு தண்ணீர் ஊற்ற வேண்டும்.
    5. வெஜிடபிள் பிரியாணி 10 கிலோ முதல் 50 கிலோ வரை செய்கிற மாதிரியாய் இருந்தால் ஒண்ணுக்கு ஒன்றரை பாத்திரம் தண்ணீர் ஊற்ற வேண்டும்.
    6. இந்த அரிசியில் கேஸ் அடுப்பில் செய்யற மாதிரி இருந்தால் ஒரு கிலோவில் இருந்து 5 கிலோ வரை ஒன்றுக்கு இரண்டு பாத்திரம் தண்ணீர் வைக்க வேண்டும்.
    இந்த பிரியாணி வீடியோ அளவு
    24 கேரட் அரிசி 30 kg
    மட்டன் 20 கிலோ 100 g சைஸ்
    பட்ட 100 கிராம்
    கிராம்பு 50 கிராம்
    ஏலக்காய் 75 கிராம்
    சோம்பு 60 கிராம்
    அண்ணாச்சி பூ 40 கிராம்
    மராட்டி 40 கிராம்
    பிரஞ்சு 25 கிராம்
    தனி மிளகாய் தூள் 200 கிராம்
    கரம் மசாலா
    மல்லி 100 கிராம்
    சீரகம் 50 கிராம்
    வெள்ளை மிளகு 30 g
    வர மிளகாய் 30 g
    பட்ட கிராம்பு ஏலக்காய் அனைத்தும் 5 கிராம். ஜாதிக்காய் 1/2. ஜாதி பூ 5 g. உப்பு 10 g. அனைத்தையும் ஒன்றாக மிதமான சூட்டில் வறுத்து அரைத்துக் கொள்ளவும்.
    எண்ணெய் 6 லிட்டர்
    நெய் 1 லிட்டர்
    பூண்டு 3 கிலோ
    இஞ்சி 2.1/2. கிலோ
    வெங்காயம் 9 கிலோ
    தக்காளி 9 கிலோ
    பச்சை மிளகாய் 1/2 கிலோ
    புதினா 1 கட்டு
    மல்லி 1 கட்டு
    எலுமிச்சை பழம் 12
    தயிர் 2.5 லிட்டர்
    தேவையான உப்பு.
    7. இந்த அரிசி கேஸ் அடுப்பில் செய்யற மாதிரி இருந்தால் 05 கிலோவில் இருந்து 15 கிலோ வரைக்கும் ஒன்னுக்கு ஒன்னே முக்கால் தண்ணீர் ஊற்ற வேண்டும்.
    *நாட்டு வெங்காய.
    சின்ன வெங்காயம் தோலை உரித்து அரைச்சு தக்காளி சேர்த்து அந்த இடத்தில் நீங்கள் சேர்த்து வதக்கினால் நல்ல வாசனை கிடைக்கும் அடிப்பிடிக்காமல் வதங்கி நமக்கு சூப்பரா இருக்கும்.
    இதுவே என்னை கூட பல்லாரி வெங்காயம் வதங்கும்போது சேர்த்தால் கண்டிப்பாக அடி பிடிக்கும்.
    ஆட்டுக்கறி பிரியாணிக்கு கண்டிப்பாக நாட்டு வெங்காயம் சேர்த்துக் கொள்ளவும்.
    *ஆட்டுக்கறி.
    1. ஆட்டுக்கறி பொறுத்த வரை முன்னாடி வேகவைத்து பிரியாணியில் சேர்த்தால் மிகவும் நல்லது. வேகவைத்து சேர்க்கும்போது நமக்கு வதங்குற நேரம் அதிகமாகாது.
    2. இதுவே ஆட்டுக்கறி நீங்கள் வேக வைக்காமல் நேரடியாக மசாலாவில் சேர்த்தால் அரை மணி நேரம் இருந்து முக்கா மணி நேரம் தனியாக வதங்க வேண்டும். இதில் நமக்கு மசாலா அளவுகள் மாறலாம் தண்ணீர் அளவுகள் மாறலாம். நேரம் ரொம்ப அதிகமாக மாறலாம். விறகு அதிகமாக செலவாகும். இந்தப் பிரச்சனை எல்லாம் இல்லாமல் நீங்கள் தனியாக வேக வைத்து சேர்த்தால் நேரம் உங்களுக்கு கண்டிப்பாக குறையும்.
    2. ஆட்டுக்கறி வெந்து பிறகு தான் தண்ணீர் அளவு ஊற்றி அரிசி போட்டு தம் போடணும் வேகாமல் அரிசி சேர்த்து கொதிக்கும் போது வெந்துடும் அப்படி நினைச்சு சேர்த்தீங்கன்னா கண்டிப்பா வேகாது பிரியாணி நல்லா இருக்காது.
    3. ஆட்டுக்கறி எந்த அளவுக்கு வெந்து கறி உடையுதோ அதிலிருந்து சாரம் அந்த ஜூஸ் இறங்குதோ அப்பதான் பிரியாணி அதிக சுவை கிடைக்கும். #muttonbiryani
    #smokemuttonbiriyani #muttonthambiriyani #மட்டன்பிரியாணிதமிழ்ரெசிபி #muttonbiriyanitamillrecipe

Комментарии • 205

  • @malikbasha3638
    @malikbasha3638 Месяц назад +10

    ஒவ்வொறு சீசனுக்கும் மாறும் கிச்சன் கிங் ஒருநேரம் டிரென்ட் அடுத்து ஆப்பிள் பிரான்ட் ராகவேந்திரா, SLS துளசி & etc அப்புறம் சீரகசம்பா இது நிரந்தர கிரேடு சூப்பர் கடைசியில் பாசுமதி அரிசியும் குறை கூற முயாது சமயல் செய்யும் கை பக்குவமே சிறப்பு.

  • @smohamedhussainsmohamedhus5218
    @smohamedhussainsmohamedhus5218 Месяц назад +17

    அண்ணா இந்த வேலையை காதலித்து செய்கிறேன்னு சொன்னிங்கலே அதுக்காகவே Subscribe பண்ணீட்டேன் ❤️😁😘

  • @JustinPrakashPrakash
    @JustinPrakashPrakash Месяц назад +6

    Very super.நானும் இந்த அரிசியில் பிரியாணி சாப்பிட்டு இருக்கேன் அருமையாக இருந்தது.

    • @kuttybiryanistore1990
      @kuttybiryanistore1990  Месяц назад +1

      மிகவும் நன்றி 🙏🫱🏽‍🫲🏻❤️

    • @albertantony5935
      @albertantony5935 18 дней назад +1

      கடையில பிரியாணி சாப்பிடும்போது kitchen ல போய் பாப்பீங்களோ

  • @sathishthiyagarajan1800
    @sathishthiyagarajan1800 26 дней назад +2

    UNITY basmati rice. One is the best... never compared to anything..

  • @mathikumarmathikumar-pn2zv
    @mathikumarmathikumar-pn2zv Месяц назад +9

    நான் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் நம்ம ஊரு பக்கம் இந்த அரிசியில் தான் பிரியாணி செய்கிரோம் நல்ல அரிசி . உண்மையான விளக்கம் .
    திருவாரூர் சமையல்காரன்

  • @belltklm
    @belltklm Месяц назад +4

    24 k rice la biriyani seiya nalla irukkum enga vittula naanum function la indha rice than use pannuvom

  • @agroheritageculturetourismtalk
    @agroheritageculturetourismtalk Месяц назад +3

    சிறப்பு வாழ்த்துக்கள் தோழமைகளே நன்றிங்க பாராட்டுக்கள்

  • @ghousemaidheen7320
    @ghousemaidheen7320 14 дней назад +1

    Super

  • @user-ut4rj8sq4w
    @user-ut4rj8sq4w Месяц назад +2

    Thanjavur nanjikottai side na intha rice use pannirukean bro

  • @mmbuharimohamed5233
    @mmbuharimohamed5233 Месяц назад +3

    ஓவர்பேச்சிபேச்சைகுறைத்துசெய்கையில்காட்டு

    • @kuttybiryanistore1990
      @kuttybiryanistore1990  Месяц назад

      ஆமா அண்ணா நீங்க சொல்றது சரிதான் என் வாயும் வலிக்குது. ஆனால் என் வளர்ந்து வரும் மாஸ்டர்களுக்கு சொல்லித் தரும் நினைக்கும் போது இனிக்குது. நீங்கள் ஒரு மாஸ்டரா இருந்தா பாருங்க இல்லனா தள்ளி விட்ருங்க

  • @sheikfareedh9500
    @sheikfareedh9500 Месяц назад +1

    Brother enga side le biriyani ke royal bullet and kesari kali indha rice dha use panramge rombo...unga leke infha rice theriyuma...24 carrot rice...idha vide nalla irukuma ?..please idhuke solumge

  • @ANNACHIGAMING
    @ANNACHIGAMING Месяц назад +3

    Turmic poweder.... Seriala.... Eppadi bro... Yellow colur vathuchi

    • @sragunathan
      @sragunathan Месяц назад +1

      Bro yollow colour paint powder

  • @vijayarani56
    @vijayarani56 Месяц назад +3

    Coimbatore il எந்த கடையில் கிடைக்கும் என்று சொல்ல முடியுமா

  • @uniquefashion5424
    @uniquefashion5424 Месяц назад +1

    Yes my hometown karaikal enda Rice daan use paanuvoam basmati rice vida soft ta tasty ya erukum

  • @Sakila-u9y
    @Sakila-u9y Месяц назад +7

    பிரியாணி க்கு சீர சம்பா தான் பெஸ்ட்

    • @kuttybiryanistore1990
      @kuttybiryanistore1990  Месяц назад +1

      நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் இப்போது கடைகளில் பழைய சீரக சம்பா கிடைப்பதில்லை. திண்டுக்கல்லில் மட்டும் தான் ஒரிஜினல் சீரக சம்பா கிடைக்கின்றன. சீரக சம்பா அரிசியில் செய்தால் மனமும் சுவையும் அதிக அதிகமாக கிடைக்கும். இப்போ இருக்கிற சீரக சம்பா அரிசி வாங்கி செய்து பாருங்கள் உங்களுக்கு புரியும் 🙏

    • @kuttybiryanistore1990
      @kuttybiryanistore1990  Месяц назад +1

      சீரக சம்பா ஒரிஜினல் விலை rs 130, 140. இந்த 24 கேரட் விலை மிகவும் குறைவு. நல்ல உதிரியாக கிடைக்கும் சுவை கிடைக்கும்.🙏

  • @shamarmunna7786
    @shamarmunna7786 Месяц назад +2

    Kadantha 15 varusama naan intha arisilathan biriyani ghee rice ellame seiven supara irukum thegattathu marriage ku ellam intha rice la senja ubari athigama irukkum rice

    • @kuttybiryanistore1990
      @kuttybiryanistore1990  Месяц назад +1

      நீங்கள் சொல்வது உண்மை. இந்த அரிசி அதிகமாக செய்து உணர்ந்தவர்கள் மட்டும் தான் இப்படி சொல்ல முடியும். இந்த அரிசியில் உதிரியும் உபரியும் அதிகம். அதைவிட சுவை 😋😋🙏🫱🏽‍🫲🏻❤️நன்றி

    • @MohamedMeerasha1
      @MohamedMeerasha1 Месяц назад +1

      இது பாசுமதி அரிசியா

    • @shamarmunna7786
      @shamarmunna7786 Месяц назад +1

      @@MohamedMeerasha1 illai normal arisithaan but supera irukkum

  • @mohamedgoya145
    @mohamedgoya145 Месяц назад +1

    Where this rice in salem

  • @vimamihagarden8418
    @vimamihagarden8418 15 дней назад +1

    நான் பிரியாணி கடை வைத்துள்ளேன் சீரக சம்பா அல்லது பாசுமதி தவிற வேறு எந்த (அதே விலை உள்ள) அரிசி உபயோகித்தாலும் இது வீட்டு அரிசி என்று குறைத்து மதிப்பீடு செய்ய வாய்ப்பு உள்ளது இதை எப்படி சரி செய்வது

    • @kuttybiryanistore1990
      @kuttybiryanistore1990  15 дней назад

      பிரியாணியின் உதிரி தன்மையும் கலரையும் வைத்து தான் மதிப்பிடுவார்கள். பிரியாணியில் நீர் அதிகமாகி உடைந்தாலும் கலர் மாறி போனாலும் இப்படிதான் சொல்வார்கள் 👍

  • @Kpsvasantha
    @Kpsvasantha Месяц назад +3

    Rice bag pakkavey nalla irukku naanum try panna poran

  • @ANNACHIGAMING
    @ANNACHIGAMING Месяц назад +2

    30 kg rice evlu bro rate....

    • @kuttybiryanistore1990
      @kuttybiryanistore1990  Месяц назад +1

      Rs 2400 pro. அரிசி சூப்பரா இருக்கும். அதிக உதிரியா கிடைக்கும்.

  • @ravia7856
    @ravia7856 Месяц назад +2

    முன்கூட்டியே கரியில் லெமன் தயிர் உப்பு சேர்த்தால் கரி சீக்கிரம் வேகுமா பிரதர்?

    • @kuttybiryanistore1990
      @kuttybiryanistore1990  Месяц назад +2

      சூப்பரா வேகும். தயிர் நமக்கு கறியும் சாதமும் அதிக பொச பொசப்பாக வேகவைக்கும். கறி சாப்பிடுவதற்கு தனி ருசி கிடைக்கும். பிறர் சொல்லிக் கொடுத்து உணர்ந்து சொல்லவில்லை. என் கடின உழைப்பில் உணர்ந்து கொண்டேன். 👍🫱🏽‍🫲🏻❤️

  • @dayalandayalan2968
    @dayalandayalan2968 Месяц назад +4

    பாசுமதி அரிசி எல்லாம் ஒரே மாதிரி தான் இருக்கும் வித்தியாசம் இல்லை.

    • @kuttybiryanistore1990
      @kuttybiryanistore1990  Месяц назад +2

      🫱🏽‍🫲🏻❤️

    • @susu-casual
      @susu-casual Месяц назад

      பாஸ் பதில் சொல்லுங்க.... அவர் சொல்வது சரியா ???? தவறா ?​@@kuttybiryanistore1990

  • @mohamedibrahimasan6828
    @mohamedibrahimasan6828 21 день назад +1

    Thulasi, 24 carat, bullet, unity இதில் செய்யும் பிரியாணி சுவையாக இருக்கும்

  • @JDhivanya-im7un
    @JDhivanya-im7un Месяц назад +1

    Anna 24k arici, pachai arici ya, illa புழுங்கள் riceya sollunga

    • @kuttybiryanistore1990
      @kuttybiryanistore1990  Месяц назад +1

      24 கேரட் அரிசி ஒரு தனி ரகம். அதாவது பிரியாணி அரிசி என்றால் பச்சை அரிசியில் தான் வரும். ஆனால் பதப்படுத்தி பழைய பொன்னி அரிசியாக மாற்றுவார்கள். இந்த மாதிரி செய்யும்போது தான் அதிக வேக்காடு தாங்கும் அரிசி சாதம் உதிரியா வரும். 🙏

  • @k.mvenkatachalam4261
    @k.mvenkatachalam4261 16 дней назад +1

    சாப்பிட்டதுபோல் உள்ளது.

  • @raguls6964
    @raguls6964 Месяц назад +1

    24k rice la briyani seiya super aa irukkum Naa senjirukkan

  • @SathishKumarK-ml7yc
    @SathishKumarK-ml7yc Месяц назад +1

    Ellam rice laum briyani senji irukka 24 k seiradhukku vera nalla irukkum sapda super irukkum

    • @kuttybiryanistore1990
      @kuttybiryanistore1990  Месяц назад

      மிகவும் நன்றாக சொன்னீர்கள். 🫱🏽‍🫲🏻❤️👍

  • @rajmohans1609
    @rajmohans1609 Месяц назад +2

    Super bro 👌🎊

  • @manilic3531
    @manilic3531 Месяц назад +1

    இந்த அரிசியை இப்போதுதான் கேள்வி படுகிறேன் சென்னை பகுதியில் இந்த அரிசி கிடைக்குமா??? என்று தெரியவில்லை... 24 கேரட் அரிசி.. எங்கள் பகுதியில் கிடைக்குமா.... எங்களுக்கு.. தெரிந்தது இந்திய கேட் அரிசிதான்.. நன்றி❤❤❤

    • @kuttybiryanistore1990
      @kuttybiryanistore1990  Месяц назад

      கிடைக்கும். பெரிய அரிசி கடையில் கோலம் பிராண்ட் அரிசின்னு 24 கேரட் அரிசி கேளுங்கள். 🙏🫱🏽‍🫲🏻❤️

  • @sheikfareedh9500
    @sheikfareedh9500 Месяц назад +1

    Krishnagiri le kadaikuma indha rice?

  • @IyyappanMani592
    @IyyappanMani592 Месяц назад +2

    Mutton biryani super 👍👍👍👍

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 Месяц назад +2

    👍👍👍👌👍

  • @karthiktamil9783
    @karthiktamil9783 Месяц назад +1

    Good 24 carat

  • @vijaykanapathi1766
    @vijaykanapathi1766 Месяц назад +2

    சூப்பர்❤❤❤❤

  • @jesuswayministrybrlsrael2427
    @jesuswayministrybrlsrael2427 Месяц назад +1

    கல்யாண விருந்துக்கு செய்து கொடுப்பீங்களா
    விலாசம் கூறவும்

  • @niyaz2998
    @niyaz2998 Месяц назад +1

    Ithu seeraga samba rice or ponni arisi ya
    Enna type??

    • @kuttybiryanistore1990
      @kuttybiryanistore1990  Месяц назад

      இரண்டுமே கிடையாது இந்த அரிசி ஒரு தனி ரகம். பொன்னி அரிசி ரகத்தில் சேரும். நெல்லு இரண்டு வருஷம் பதப்படுத்தி அனுப்புறாங்க. கோலம் பிராண்டு சொல்லுவாங்க.

    • @niyaz2998
      @niyaz2998 Месяц назад

      @@kuttybiryanistore1990 ok bro,try panni paakurain

  • @MohamedFarook-n3e
    @MohamedFarook-n3e Месяц назад +2

    Rate?

  • @IyyappanMani592
    @IyyappanMani592 Месяц назад +3

    Tulasi rice.24 rice ethu best anna

    • @kuttybiryanistore1990
      @kuttybiryanistore1990  Месяц назад

      இரண்டு அரிசியும் பெஸ்டான அரிசி தான். 👌🏽
      24 டைரக்டர் அரிசி அதிக உபரியாக. இருக்கும். ரொம்ப உதிரியாக கிடைக்கும்.
      துளசி அரிசி குச்சி குச்சி யா நைசாக இருக்கும். ஆனால் துளசி அரிசி இப்போ பழைய அரிசியாக கிடைப்பதில்லை. புதிய அரிசி கிடைக்கிறது சீக்கிரமாக அரிசி உடைந்து குழைந்து போகிறது. 🙏

  • @RathnaSwamy-pz5sw
    @RathnaSwamy-pz5sw 27 дней назад +1

    Chennai la yengu kidaikkum sollunga

    • @kuttybiryanistore1990
      @kuttybiryanistore1990  27 дней назад

      அரிசி கடையில் கோலம் பிராண்ட் 24 கேரட் அரிசி அப்படின்னு கேளுங்க 🙏🫱🏽‍🫲🏻❤️

  • @Rajava_irupom
    @Rajava_irupom Месяц назад +1

    Ellamey crt ah thana bro eruku ena rice bag than new ah eruku

  • @SamsungA71Ashik
    @SamsungA71Ashik Месяц назад +4

    Parota salna video podunga bro

  • @ANNACHIGAMING
    @ANNACHIGAMING Месяц назад +1

    Bro... This mutton biriyani explain semma.... Bro... 😊

  • @v.mahendramahesh4407
    @v.mahendramahesh4407 Месяц назад +2

    அருமையான பதிவு அண்ணா பயனுள்ள பதிவு அண்ணா 👌👌👍

  • @MrajeSam
    @MrajeSam Месяц назад +1

    Super sir

  • @getsijessi278
    @getsijessi278 Месяц назад +2

    இந்த அரிசி எங்க ஊர்ல (உடுமலை) கேள்வி பட்டதே இல்லை.. இந்த அரிசி எங்க கிடைக்கும்...

    • @kuttybiryanistore1990
      @kuttybiryanistore1990  Месяц назад +1

      இந்த அரிசி ஓனர் என்னிடம் பேசினார். உங்கள் எல்லா இடத்திற்கும் கிடைக்க ரெடி பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். விரைவில் தெளிவாக எங்க கிடைக்கும் என்றுநான் இதை அனுப்புகிறேன்🙏

  • @MohamedFarook-n3e
    @MohamedFarook-n3e Месяц назад +1

    Chennaila kedaikuma virugambakam

  • @gowsalyadevadoss7957
    @gowsalyadevadoss7957 Месяц назад +2

    Intha rice Veanumna Solunga.

    • @kuttybiryanistore1990
      @kuttybiryanistore1990  Месяц назад

      👍உங்களுக்கு எங்க கிடைக்கும்

    • @gowsalyadevadoss7957
      @gowsalyadevadoss7957 Месяц назад

      Shop soldren bro Neyveli la ​@@kuttybiryanistore1990

    • @gowsalyadevadoss7957
      @gowsalyadevadoss7957 Месяц назад

      Neyveli la therinja shop iruku bro​@@kuttybiryanistore1990

  • @syedabdhagir9180
    @syedabdhagir9180 Месяц назад +1

    😂supermaster

  • @raguls6964
    @raguls6964 Месяц назад +1

    Rice 🌾 rate normal aa irukkum orginal rice ah irukkum bag pathaley therium

  • @asaibiryani6217
    @asaibiryani6217 Месяц назад +4

    தம்பி இந்த அரிசியில் நான் பிரியாணி செஞ்சு இருக்கேன் கடலூரில் செஞ்ச இடம்

    • @kuttybiryanistore1990
      @kuttybiryanistore1990  Месяц назад +1

      வள்ளி விலாஸ் மண்டபத்தில் செய்தீர்கள் 👍🙏🫱🏽‍🫲🏻❤️ரொம்ப நன்றி அண்ணா

  • @jmm.babubabu5222
    @jmm.babubabu5222 Месяц назад +2

    திருச்சியில் இந்த Brand கிடைப்பதில்லை. முகவரி தெரிந்தால் சொல்லவும்

  • @saleembabu5856
    @saleembabu5856 Месяц назад +2

    Basmati rice ah ? Ila bullet ric ah ???

    • @kuttybiryanistore1990
      @kuttybiryanistore1990  Месяц назад +1

      ஒரிஜினல் 24 கேரட் கோல்ட் அரிசி. பாஸ்மதியும் இல்ல புல்லட் அரிசியும் இல்லை

    • @Sakila-u9y
      @Sakila-u9y Месяц назад +2

      ​@@kuttybiryanistore1990பொன்னியா ஆந்திர மசூரியா

    • @kuttybiryanistore1990
      @kuttybiryanistore1990  Месяц назад +1

      பொன்னி அரிசி

  • @nazeersharief110
    @nazeersharief110 Месяц назад +1

    Enna than arisi masala serthu biriyani seithalum biriyani seigira var kai yil than pakkuvam ullathu ethai muthalil purinjukka num

  • @bahrudeenali9259
    @bahrudeenali9259 Месяц назад +2

    Ethuda price Enna

    • @kuttybiryanistore1990
      @kuttybiryanistore1990  Месяц назад +1

      வீடியோவில் தெளிவாக சொல்லி இருக்கிறேன். கமெண்டில் போட்டு இருக்கேன்.நன்றி 🙏

  • @lalithasubramaniam2677
    @lalithasubramaniam2677 Месяц назад +1

    Ithu seeraga samba rice ah?

  • @vijayarani56
    @vijayarani56 Месяц назад +1

    தனியாக 1 கிலோ கடை களில் கிடைக்குமா

    • @kuttybiryanistore1990
      @kuttybiryanistore1990  Месяц назад +1

      1/4 கிலோ விலிருந்து கிடைக்கும் 🫱🏽‍🫲🏻❤️ ஒரு முறை வாங்கி செய்து பார்த்தால் அடுத்தடுத்து இந்த அரிசியில் தான் செய்வீர்கள். உங்களுக்கு எல்லா அளவும் செய் முறையும் தண்ணீர் அளவும் என்னுடைய சேனல் வீடியோ உள்ளே இருக்கு 🙏

  • @Rissu3818
    @Rissu3818 Месяц назад +1

    Dam biryani Mari seiga Anna, full rice nenga thanni la pottu kinduna thaala rice fulla odinchu vardhu paarunga.. apadi ilaana just rice masala la pottu vitturunga ok unga vdo um nallathan irunchi na 👋👍

    • @kuttybiryanistore1990
      @kuttybiryanistore1990  Месяц назад

      உங்கள் ஆலோசனைக்கு மிக்க நன்றி 🙏🫱🏽‍🫲🏻❤️

    • @Rissu3818
      @Rissu3818 Месяц назад

      @@kuttybiryanistore1990 🤝😄 nanga biryani make panravanga na Chennai la... Dhadha Bhai biryani 1962

  • @gowsalyadevadoss7957
    @gowsalyadevadoss7957 Месяц назад +1

    Ama bro intha rice la biryani Nalairukum. Neyveli la rice Kidaikum

    • @kuttybiryanistore1990
      @kuttybiryanistore1990  Месяц назад +2

      👍 உண்மை நான் நெய்வேலி யில் அதிகமாக இந்த அரிசியில் பிரியாணி செய்து இருக்கிறேன்.

  • @balajirajenderanreddiyar9491
    @balajirajenderanreddiyar9491 Месяц назад +1

    Jeeraga samba rice or basmati rice ithu please sollunga

    • @kuttybiryanistore1990
      @kuttybiryanistore1990  Месяц назад +1

      👍. என்னுடைய சேனல் வீடியோ உள்ள போய் பாருங்க 🙏

    • @mansurs123
      @mansurs123 Месяц назад

      Basmati

  • @chinnadurai295
    @chinnadurai295 Месяц назад +2

    24k rice la nalla briyani seiya nalla irukum 👌

  • @UshaJemima
    @UshaJemima Месяц назад +1

    உணர்வு பூர்வமான வர்ணனையுடன் பிரியாணி செய்முறை பிரமாதம் இப்போது கிடைக்கும் தக்காளி புளிப்பு தன்மை இல்லை 24 கேரட் அரிசி சென்னையில் எங்கு கிடைக்கிறது தெரிவிக்கவும் நன்றி

  • @Devaki-dd5wo
    @Devaki-dd5wo Месяц назад +1

    Inga chennaila kidaikka mattinguthu arisi enga kidaikkum

  • @christopherpher5166
    @christopherpher5166 Месяц назад +1

    Chennai availability stores

  • @Nazriyasamkutty2014
    @Nazriyasamkutty2014 Месяц назад +1

    😋😋😋 very testy chellam ❤️

  • @benedictgeorge6843
    @benedictgeorge6843 Месяц назад +1

    Where can I get the rice?

    • @kuttybiryanistore1990
      @kuttybiryanistore1990  Месяц назад

      பெரிய அரிசி கடைகளில் இந்த வீடியோவில் உள்ள அரிசி bag இமேஜ் காமிச்சு கேளுங்கள் 👍🫱🏽‍🫲🏻❤️

  • @PK-lj7ik
    @PK-lj7ik Месяц назад +2

    ஒரு லட்சம் குடுதாங்களா 😮

    • @kuttybiryanistore1990
      @kuttybiryanistore1990  Месяц назад +3

      வீடியோ பாத்துட்டு போன் பண்ணாங்க. வாழ்த்துக்கள் தெரிவிச்சிட்டு இன்னும் அதிகமா புரமோஷன் பண்ணனும் சொல்றாங்க .நான் அவங்க ஒரு லட்சம் தருவாங்க அப்படின்னு வீடியோ போடல. வளர்ந்து வரும் மாஸ்டர்கள் நல்லா கற்றுக் கொண்டு வாழ்க்கையில் லட்ச லட்சமாக சம்பாதிக்கணும். என் ஆசை அது தான். 🙏

  • @christoberprabu1166
    @christoberprabu1166 Месяц назад +1

    Edu bullet rice ya

    • @kuttybiryanistore1990
      @kuttybiryanistore1990  Месяц назад +1

      இல்லை. தனி ரகம் கோலம் பிராண்ட் சொல்லுவாங்க 🙏👍❤️

  • @Soundar9591
    @Soundar9591 Месяц назад +2

    Nega seithu kattidungal

  • @Kpselvam-uy9vu
    @Kpselvam-uy9vu Месяц назад +2

    அண்ணா இந்த அரசு 25 கிலோவா தான் கிடைக்குமா இல்லைணா 1 kg கிடைக்குமா

    • @kuttybiryanistore1990
      @kuttybiryanistore1990  Месяц назад +1

      1 bag 25 kg இருக்கு.30 kg bag இருக்கு.1 கிலோ கிடைக்கும்

  • @Marklin295
    @Marklin295 Месяц назад +2

    Chennai la kedaikuma intha arisi

  • @mariagnanam4297
    @mariagnanam4297 Месяц назад +16

    1kg அரிசியில் சிக்கன் பிரியாணி செய்து காண்பியுங்கள் 24கேரட் அரிசி எங்கு கிடைக்கும்

    • @kuttybiryanistore1990
      @kuttybiryanistore1990  Месяц назад +1

      எல்லா அரிசி பெரிய கடைகளில் கிடைக்கும்🙏🫱🏽‍🫲🏻❤️

    • @Sakila-u9y
      @Sakila-u9y Месяц назад

      இராணிப்பேட் மோர் சூப்பர் மார்க்கெட்டிலையே இல்லை ​@@kuttybiryanistore1990

    • @malikbasha3638
      @malikbasha3638 Месяц назад +4

      நகைகடையில் வாங்கினால் உரசிப்பார்த்து வாங்கலாம்

    • @suryaprabha4154
      @suryaprabha4154 Месяц назад +1

      ​@@malikbasha3638பிரியாணி ருசி சாப்பிட்டு அப்புறம் இப்படி சொல்லமாட்டீஙங்க

    • @vasanthasunny7387
      @vasanthasunny7387 Месяц назад

      😂😂​@@malikbasha3638

  • @SanthoshKumar-ye3sh
    @SanthoshKumar-ye3sh Месяц назад +1

    இது புழுங்கல் அரிசியா அல்லது பச்சை அரிசியா.

  • @hashpetronconnect9125
    @hashpetronconnect9125 Месяц назад +2

    இந்தியா கேட் பாசுமதி அரிசி தான் ஒரிஜினல் பிராண்ட் இரண்டு வருடம் வயசு ஆன அரிசி சாப்பாடு பிரியாணி பிரைடு ரைஸ் எல்லாவற்றுக்கும் பாசுமதி அரிசி நீளமாக வரும்

    • @kuttybiryanistore1990
      @kuttybiryanistore1990  Месяц назад

      இதிலும் நீங்கள் சொல்வது சரிதான். இந்தியா கேட். யூனிட்டி. துபார். இந்த வகையான பாஸ்மதி அரிசிகள் அதிக வேக்காடு தாங்கும். உதிரியாக இருக்கும் நல்ல சுவை கிடைக்கும். மற்றும் பார்க்கும்போது கண் பார்வைக்கு மிகவும் அழகாக இருக்கும். ஆனா இந்த வகையான அரிசிகளை அதிகமாக சாப்பிட முடியாது. இதுவே 24 கேரக்டரிசி துளசி அரிசி இந்த மாதிரி பொன்னி அரிசியில் செய்தால் நல்ல ஒரு சுவையும் அதிகமாகவும் திருப்தியாகவும் சாப்பிடலாம். ஒருமுறை இந்த அரிசியில் நீங்கள் செய்து பாருங்கள் 🙏🫱🏽‍🫲🏻❤️

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Месяц назад +2

    Super Bro 🙏

  • @SathishKumarK-ml7yc
    @SathishKumarK-ml7yc Месяц назад +1

    24 carat rice rate kakkiyadhan irukkum

    • @kuttybiryanistore1990
      @kuttybiryanistore1990  Месяц назад +1

      👍. உண்மை தான் நண்பரே ஆனால் அதிக சுவை கிடைக்கும்

  • @SathishKumarK-ml7yc
    @SathishKumarK-ml7yc Месяц назад +1

    Naa master than bro

  • @mmbuharimohamed5233
    @mmbuharimohamed5233 Месяц назад +2

    சரிசரிவுடுரொம்ப உருட்டாதே

  • @bas6345
    @bas6345 Месяц назад +1

    வண்டு பிரியாணி செம்மண் மேடு

  • @hhhyyy9880
    @hhhyyy9880 Месяц назад +2

    Unmaithan anna

  • @rajapetsfarm6174
    @rajapetsfarm6174 Месяц назад +2

    Rate

    • @kuttybiryanistore1990
      @kuttybiryanistore1990  Месяц назад

      ஹோல் சேல் ரேட் 1 kg rs 78.
      சேல் ரேட் 1 kg கடைய பொறுத்து rs 80,82,84.

  • @albertantony5935
    @albertantony5935 18 дней назад +1

    என்னடா ஒரு கிளரு சாதம் செஞ்சி அதுக்கு பிரியானின்னு பேர் வச்சி ஓவர் பில்டப் பண்றீங்கடா

    • @kuttybiryanistore1990
      @kuttybiryanistore1990  18 дней назад

      நீங்க பெரிய மாஸ்டர் நெனைக்குற 🤔

  • @hashpetronconnect9125
    @hashpetronconnect9125 Месяц назад +1

    இரண்டு அரசியல் பிரியாணி செய்வார்கள் ஒன்று பாசுமதி மற்றொன்று சீரக சம்பா இதில் எந்த அரிசி நீங்கள் சொல்கிறீர்கள்

    • @kuttybiryanistore1990
      @kuttybiryanistore1990  Месяц назад

      நீங்கள் சொல்வது சரிதான்.. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பிரியாணி அரிசி வகைகள் மாறுபடும். கர்நாடகாவில் புல்லட் அரிசி பேமஸ். சில மாவட்டங்களில் துளசி அரிசி பேமஸ். இந்த 24 கேரட் அரிசி பல வருடங்களாக வந்து கொண்டிருக்கிறது. வருடத்திற்கு வருடத்திற்கு இந்த அரிசியில் மாற்றங்கள் நான் பார்க்கிறேன். பிரியாணிக்கு இந்த அரிசியை அதிகமாக ரிசர்ச் செய்கிறார்கள். அதிக உபரியாகவும் உதிரியாகவும் கண்டிப்பாக கிடைக்கும். அதிக அளவில் கறி சேர்க்காவிட்டாலும் அதன் சுவை சூப்பரா இருக்கும். சாதாரண veg பிரியாணி நெய் சோறு இதுக்கெல்லாம் நல்ல ஒரு ருசி கிடைக்கும். பாஸ்மதி அரிசியிலும் சீரக சம்பா அரிசிலையும் நீங்கள் அதிகமாக கறி சேர்த்தால் தான் அதிக சுவை கிடைக்கும்.

  • @abdulhakkim5104
    @abdulhakkim5104 Месяц назад +2

    குட்டி உங்கள் போன் நம்பர் குடுங்க

  • @golduniversepestcontrol4696
    @golduniversepestcontrol4696 Месяц назад +3

    இந்த விளம்பரத்திற்கு எவ்வளவு வாங்குனெ

  • @albertantony5935
    @albertantony5935 18 дней назад +1

    இந்த அரிசி promotion டா

  • @mohamedrafik189
    @mohamedrafik189 Месяц назад +1

    Neega enthu ooru anna
    Contact number

  • @albertantony5935
    @albertantony5935 18 дней назад +1

    ஓவரா உருட்றப்பா

    • @kuttybiryanistore1990
      @kuttybiryanistore1990  18 дней назад

      பயங்கரமான ஒருட்டு ல 😋😋😋😋

  • @shakthivelnadar-s9w
    @shakthivelnadar-s9w Месяц назад +2

    Need contact of Kutty biryani store
    We are from marketing team of 24 carat gold brand .
    Want to thank you for praising so much .

    • @kuttybiryanistore1990
      @kuttybiryanistore1990  Месяц назад +1

      🙏 உங்கள் அன்புக்கு ரொம்ப நன்றி 🫱🏽‍🫲🏻❤️

    • @shakthivelnadar-s9w
      @shakthivelnadar-s9w Месяц назад +3

      Any way to contact your team
      Mail ID or phone number ?

  • @PandiPandi-um7jt
    @PandiPandi-um7jt Месяц назад +2

    30 கிலோ அரிசி பை விலை என்ன.

    • @kuttybiryanistore1990
      @kuttybiryanistore1990  Месяц назад +2

      1 bag 30 kg 2 year old.rs 2340 எனது கடலூர் மாவட்டத்தில்.🫱🏽‍🫲🏻❤️

  • @navamani854
    @navamani854 Месяц назад +1

    அரிசி நீளமாக இல்லை...பிரியாணி வேஸ்ட்

    • @kuttybiryanistore1990
      @kuttybiryanistore1990  Месяц назад

      நிலமா இருந்தா தான் சாப்பிடுவீங்களா சூப்பர் உங்க அட்ரஸ் சொல்லுங்க நான் பிரியாணி அனுப்பி வைக்கிறேன் சாப்பிட்டு சொல்லுங்க 🙏

  • @nurudeenesoofally4328
    @nurudeenesoofally4328 Месяц назад +1

    Can you export your rice to SRI LANKA. give your WhatsApp no. I will call you