இறந்தோர் திருப்பலி பாடல்கள் | Holy Mass Songs # death anniversary | Dhanam Sebastian | Inbaraj

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 окт 2024
  • இறந்தோர் ( நினைவு ) திருப்பலி பாடல்கள்
    வருகைப் பாடல்
    இறைவா! இதோ வருகின்றோம்.
    இறந்தவர்க்காக இறைஞ்சுகின்றோம்.
    இறைவனுன் இரக்கம் கேட்கின்றோம்.
    இரக்கத்தின் பலியினில் இணைகின்றோம்.
    உம்மிலே நம்பிக்கைக் கொண்டார் இவர்
    உம் வார்த்தை வாழ்ந்திட முனைந்தார் இவர்
    உணவென உம் உடல் குருதி பெற்றார் - இவர்
    நிலைவாழ்வடைய வேண்டுகின்றோம்.
    திருமுழுக்கினிலே தெரிந்து கொண்டீர்- இவர்
    பிழைகளை ஒப்புரவில் மன்னித்தீர்.
    திருவுடல் திரு ரத்த உணவு தந்தீர் - உம்
    திரு முகம் காண இரங்கிடுவீர்.
    தியானப் பாடல்
    ( திருப்பாடல்கள் 103, 25, 27,116 சார்ந்து )
    இரக்கமும் அருளும் நிறைந்த
    மீட்பர் இயேசுவே!
    இறந்தோர்க்கு இளைப்பாறுதல்
    தாரும் தெய்வமே!
    ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்
    நீடிய பொறுமையும் பேரன்பும் உள்ளவர் - நம்
    பாவங்களுக்கு ஏற்ப நம்மை - அவர் நடத்துவது இல்லை - நம்
    குற்றங்களுக்கேற்ப நம்மை - அவர் தண்டிப்பதும் இல்லை.
    தந்தை தமது பிள்ளை மீது
    இரங்குவது போல்
    உமக்கஞ்சிய இவர் மீது
    இரங்கிடுமே.
    ஆண்டவர் உம் இல்லம் நாடியே - வரும்
    இவரின் மீது இரக்கம் காட்டுமே - இவர்
    பாவங்களை மன்னித்திடுமே - பரத்தில்
    நிலை வாழ்வை நல்கிடுமே.
    ஆண்டவர்தம் அன்பர்களின் சாவு
    அவரது பார்வையில்
    மிக மதிப்புக்குரியது.
    உண்மையாக உமது ஊழியன் - இவர்
    கட்டுகளை அவிழ்த்து விடுக .
    உண்மையாக உமது பணியாள் - விண்
    கரை சேர வரம் அருள்க.
    காணிக்கைப் பாடல்
    நித்திய சாந்தி அளித்தருளும்- இறைவா
    நீர் இவர் பரிசாய் இருந்தருளும்.
    உம் மகன் இவர்க்கென உயிர் துறந்தார் - தன்
    உதிரமும் உடலும் பலி ஈந்தார்.
    இறப்பில் அவருடன் ஒன்றித்த இவர்
    உயிர்ப்பிலும் இணைந்து மாட்சியுற
    ஜெபங்களும் புகழ்ச்சி பலிகளுமே - யாம்
    செய்தோம் இறந்தோர் சாந்தியுற
    எம் பலிப் பொருள் இதை ஏற்றருளும் - நீர்
    எளியர் எம் ஜெபங்கள் கேட்டருளும்.
    திருவிருந்து பாடல்
    சுமை சுமந்து சோர்ந்திருப்போரே !
    வாருங்கள் நம் ஆண்டவர் அழைக்கின்றார். இளைப்பாற்றி கொடுக்கின்றார்.
    1. வரும் வழி பார்த்தவராய்
    வரம் மழை பொழிந்தவராய்
    வந்தவர் இருக்கின்றார்
    விரைந்திட தாமதம் ஏன்?
    2. துயரினில் ஆறுதலாய்
    நோயினில் மருத்துவராய்
    அடிமையின் விடுதலையாய்
    ஆண்டவர் இருக்கின்றார்....
    தாயே உத்தரிக்கும் ஸ்தலத்தோர்க்கு - ஓயா
    தஞ்சமும் ஆதரவும் நீயே!
    தீயில் விழுந்து வெந்து சோர்ந்து - உந்தன்
    திருத்தயை கேட்க நீயோ அறிந்து -( தம )
    திரித்துவ தேவன் முகம் கண்டு - என்றும்
    துதித்திட அருள் செய்வாய் புரிந்து.
    தான தர்மங்கள் மண்ணில் புரிந்தார் - பிறர்
    தவறு பொறுத்து மன்னிப்பளித்தார்.
    தாசர் யாம் இன்று செய்யும் ஜெபங்கள்
    இயேசு திருப்பாதம் சேரும் நேசத் தாயே.
    தாய்விட்டுப் பிள்ளை நிற்கலாமோ - உந்தன்
    தயை விட்டால் துயர் விட்டுப் போமோ ?
    தூய கருணை நிறை தாயே - இவர்
    துயர் போக்க பரிந்துரைப்பாயே.
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 12

  • @julianabelci2747
    @julianabelci2747 6 месяцев назад +1

    அற்புதம்❤

    • @dhanamsebastian
      @dhanamsebastian  6 месяцев назад

      நன்றி. இயேசுவுக்கு புகழ்.

  • @manoharanappu9379
    @manoharanappu9379 6 месяцев назад +1

    சிலுவைப்பாதையின் நாட்களுக்கு சிறந்த பாடல்கள், மிக நல்ல பாடல்கள், 👌🏿🙏🙏🙏

  • @charlesjustin2663
    @charlesjustin2663 6 месяцев назад +1

    அர்த்தமுள்ள பாடல்கள். ஏற்கனவே கேட்டுப் பழகிய பாடல்களில் சில வார்த்தை மாற்றங்களோடு புதிதாக இசைத்திருப்பது நல்ல அனுபவத்தை கொடுக்கிறது. நல் முயற்சி.

    • @dhanamsebastian
      @dhanamsebastian  6 месяцев назад

      நன்றி நண்பரே தங்களது மனந்திறந்த பாராட்டிற்கு.

  • @brittoarockiadossmanickam960
    @brittoarockiadossmanickam960 6 месяцев назад +1

    மிகவும் பயனுள்ள பாடல் தொகுப்பு.
    நன்றாக இருக்கிறது.

    • @dhanamsebastian
      @dhanamsebastian  6 месяцев назад

      மகிழ்வும் நன்றியும் கவிஞரே.

  • @paulrajv7985
    @paulrajv7985 6 месяцев назад +1

    எல்லாப் பாடல்களும் சிறப்பு.முதல் பாடலிலும் கடைசிப் பாடல்களிலும் செய்த திருத்தங்கள் அர்த்தமுள்ளதாகவும்,உள்ளத்தை தொடுவதாகவும் உள்ளது.பாடியவர்களனைவரும் சிறப்பாக பாடியிருக்கிறார்கள். நித்திய சாந்தி..... ரசித்து கேட்டேன்.உள்ளூர் கோடாங்கிகளையும் நம் மக்கள் ரசித்து ஏற்றுக் கொள்ளப் பழக வேண்டும்.

    • @dhanamsebastian
      @dhanamsebastian  6 месяцев назад

      இயேசுவுக்கே புகழ். மிக மகிழ்ச்சி அடைகிறேன் சகோதரரே. நெஞ்சார்ந்த நன்றி தகுந்த விமர்சன பதிவிற்கு.

  • @ourladyofransom4821
    @ourladyofransom4821 6 месяцев назад +1

    Last song thaniya poda mudiuma sir