அருவிகளுக்கெல்லாம் இதுதான் தல! செண்பகாதேவி அருவி

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 янв 2025

Комментарии • 475

  • @jeyabalasekarganapathi6480
    @jeyabalasekarganapathi6480 4 года назад +161

    இந்தக் காணொளியில் சிலவற்றை அதிகமாகச் சேர்த்து பேசியுள்ளீர்கள்.போகிறபாதையில் நீர்மின்சக்தி எடுப்பதாக பூசாரி கூறினார் என்றீர்கள்.அது தவறு நீர்மின்சக்தி எடுக்குமிடம் குற்றாலத்தில் இல்லை.குடியிருப்பை அடுத்து உள்ள ஒரு குளம் , குற்றாலம் கோடை குடிநீர்தேக்கத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல பம்பிங் ஸ்டேஷன் என்ற பெயரோடு செண்பகாதேவி அருவிக்கு சென்று சேருமுன் வருகிற இடம்தான் அது. செண்பகாதேவி அருவிதான் தலை அருவி என்றும் அந்த அருவித்தண்ணீர்தான் குற்றாலத்தைச் சுற்றியுள்ள அருவிகளுக்கெல்லாம் தண்ணீர் தருகிறது என்பதும் தவறான தகவல். செண்பகாதேவி அருவித் தண்ணீர் தரைக்கு வந்து சேருகிற இடம் இரண்டே அருவிகள்தான். குற்றாலம் அருவியும், சிற்றருவியும் மட்டுமே. முடிந்தால் தண்ணீர் வரும் பாதை வழியாகவே செண்பகாதேவி அருவி வரை சென்று பாருங்கள். வெகு சுலபமாகவே சீக்கிரமாக செண்பகாதேவி சென்று அடைய முடியும்.ஐந்தருவிக்கு தண்ணீர் வருகிற இடம் வேறு. அது குற்றாலத்திலிருந்து மேற்கே 5 கிலோமீட்ட் தொலைவிலுள்ளது. அருவிக்கான தண்ணீர் பிடிப்பு பகுதி ஐந்தருவி க்கு மேலே உள்ள காடுகளாகும். அதற்குப் பக்கத்திலேயே VIP falls பழத்தோட்ட அருவி உள்ளது. காடுகளில் பெய்கிற மழைத்தண்ணீர் சிறுசிறு ஓடைகளாக பயணித்து கீழ்நோக்கிவந்து தண்ணீர் வருகிற பாதையில் ஒரு பாறையின் மூலம் தடை ஏற்படுத்தினால் அருவி அவ்வளவுதான். புலியருவிக்கு தண்ணீர் வருகிற இடம் வேறு. அது செயற்கை அருவி.தண்ணீர் செல்லும்பாதையைத் தடுத்து அருவி மாதிரி விழவைத்துவிட்டார்கள். பெண்கள் குழந்தைகள் பயமில்லாமல் குளித்து மகிழ ஏற்ற இடமாக மாற்றிக் கொடுத்துள்ளார்கள். குற்றால அருவியில் தண்ணீர் விழும் சமயம் சிலநேரம் புலியருவியிலும் பழைய குற்றால அருவியிலும் தண்ணீர் விழுவதில்லை. மழை பெய்து பிரதான அருவியில் தண்ணீர் வரத்து ஆரம்பித்து சில தினங்களுக்குப்பின்பே புலியருவிக்கும் பழையகுற்றால அருவிக்கும் தண்ணீர் வந்து சேரும். பழைய குற்றாலத்திற்கு தண்ணீர் வருகிற இடமும் வேறு. அது குற்றாலத்திலிருந்து தென்கிழக்காக 7 km தொலைவிலுள்ளது.பழைய குற்றால அருவி செங்குத்தாகத்தான் அந்தக்காலத்தில் விழுந்தது.கடந்த 30 ஆண்டுகளுக்குமுன் பாறைகளில் உளிவைத்து செதுக்கி எடுத்துத் தட்டுத்தட்டாக தண்ணீரை விழவைத்தபடியால் குளிப்பதற்கு ஏதுவாக இப்போது உள்ளது.இல்லையென்றால் குளிக்கப்போய் , தண்ணீரால் நல்ல உதைவாங்கி வரவேண்டியதுதான். மழைக்காலத்தில் குற்றாலம் காடுகளை இலஞ்சி குமாரகோவிலுக்குச் செல்லும் பாதைகளிலிருந்து பார்த்தால் நிறைய அருவிகள், தற்காலிகமாகத் தென்படும். அடுத்து செண்பகாதேவி அருவிக்கு கீழ் உள்ள தடாகம் நீங்கள் கூறியது போல் 100 அடி ஆழமெல்லாம் இல்லை. 30 அடி வரை இருக்கும்.ஆனால் தடாகத்தில் சாகசம் செய்து குளிப்பது ஆபத்தானது.சிலர் பாறைகளின் மீதும் மரங்களின் மீதும் ஏறி தடாகத்தில் குதித்துக் குளிப்பார்கள்.நீச்சல் நன்கு தெரிந்த நபர்கள்கூட விழுந்து உயிரிழந்திருக்கிறார்கள்.அதில் பாறை இடுக்குகள் உள்ளன.ஆழத்தில் உள்ளே போய் குளிப்பவர்கள் தலையோ காலோ இடுக்குகளில் சிக்கிக்கொள்ளும் வாய்ப்பு அதிகமுள்ளது.இப்போது அங்கு செல்வதற்குத்தடையுள்ளதால் மட்டுமே உயிரிழப்பு குறைந்துள்ளது. அந்தப்பாட்டி செண்பகாதேவி அருவி குகையில் வசித்து வருவது கடந்த 45 வருடங்களாகத்தான்.அதற்கு முன்பு நாங்கள் அவரை அங்குப் பார்த்ததில்லை.பூசாரி உள்ளூர்காரராக இருந்தபோதும் உங்களிடம் இஷ்டத்துக்கு கதைவிட்டிருக்கிறார் போலும்.

    • @sp-vk4bl
      @sp-vk4bl 4 года назад +4

      Sir, is it possible to get permission to go to thenaruvi??????

    • @jeyabalasekarganapathi6480
      @jeyabalasekarganapathi6480 4 года назад +12

      @@sp-vk4bl இப்போதெல்லாம் வனத்துறை பார்வையாளர்கள் யாருக்கும் அனுமதி கொடுத்ததாகத் தெரியவில்லை. தனியார் தோப்பு தோட்டம் எதுவும் அந்த மலைப்பகுதியில் இல்லை.அதனால் முழுவதும் வனத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ளது. பெரிய இடத்து சிபாரிசோடு சென்றால் அனுமதி கிடைக்கும். பத்துப்பதினைந்துபேர் சேர்ந்து மலைமீது ஏறிப் போவதென்றால் பாதுகாப்பானதாக இருக்கும். தேனருவி செல்லுகின்ற செண்பகாதேவி அருவிக்கு மேல் செல்லும், அந்தப்பாதை நடந்து செல்வதைப் போன்று இல்லை.பாறைகளின் மீது ஏறிச்செல்லவேண்டியதாக இருந்தது.கொடிய காட்டு விலங்குகள் ஏதும் அப்போது தென்பட்டதில்லை.இப்போது மனித நடமாட்டம் இல்லாமல் போனதால் காட்டு விலங்குகள் உலா வர சாத்தியமுள்ளது.

    • @sp-vk4bl
      @sp-vk4bl 4 года назад +8

      @@jeyabalasekarganapathi6480 நன்றி ஐயா.
      கடைசியாக தாங்கள் எப்பொழுது இங்கே சென்றுள்ளீர்கள்????

    • @faiz7041
      @faiz7041 4 года назад +3

      @@jeyabalasekarganapathi6480 நிறைய தகவல்கள்.. நன்றி

    • @womensbeautykitchen
      @womensbeautykitchen 4 года назад +8

      @@jeyabalasekarganapathi6480 அருமையான தகவல்கள் ஐயா என்னைபோல் இயற்கையை நேசிபவர்களுக்கு உங்களைபோன்றவர் கூறும் தகவல்கள் நல்லபதிவு

  • @pnsaravanaraja
    @pnsaravanaraja 4 года назад +57

    இங்கு சென்ற நினைவுகள் இன்னும் மனதினில் இருக்கிறது. இதற்கு மேலே தேனருவி உள்ளது, நான் சென்று இருக்கிறேன்.

    • @GAVENKATESHAN
      @GAVENKATESHAN 2 года назад +3

      இந்தருவில் முன்னர் குளிக்க அனுமதியுண்டு.
      குடிகாரர்கள் அருவியின் பள்ளத்தில் நீந்தி சூழலில் இறந்தது அதிகமானதை த்தொடர்ந்து குளிக்க அனுமதிப்பில்லை.
      இதற்கு மேல் தேனருவி மிக அருமை. அங்கேயும் குளிக்கலாம்.

    • @Mersal-xo3mz
      @Mersal-xo3mz 2 года назад +5

      Nan senbagadevi aruvi sendru ullen then aruvi ponathu illai

    • @udhayakumarvlogsdoyourbest467
      @udhayakumarvlogsdoyourbest467 Год назад

      நானும் சென்ரு இருக்கேன்

    • @senthilkumar7672
      @senthilkumar7672 Год назад

      நானும்

  • @SyedAli-cq6ni
    @SyedAli-cq6ni 4 года назад +30

    என் இளைமை காலங்களில் என் நண்பர்களுடன் அடிக்கடி இந்த அருவிகளுக்கு வருவதுண்டு எங்கள் ஊரு இந்த ஊருக்கு மிக அருகில் என்பதினால் நினைக்கும் போதெல்லாம் வருவதுண்டு அப்போதெல்லாம் அனைவருக்கும் அனுமதி உண்டு பல சிற்றருவி மற்றும் ஓடைகளில் குளித்துக் கொண்டே இறுதியில் இந்த செண்பகா அருவியில் குளிப்போம் அது ஒரு சுக அனுபவம் அந்த காலம் மீண்டும் வருமா என்ற ஏக்கம் மட்டும் இப்போது மிச்சமிருக்கிறது

  • @aloysiusnirmal5940
    @aloysiusnirmal5940 3 года назад +180

    இதற்கும் மேலே தேனருவி இருக்கிறது சகோதரா... ஒரு இடத்தை பற்றி நன்கு அறிந்த பின் vlog பண்ணுங்க சகோதரா

    • @muthukumarmuppudathi6881
      @muthukumarmuppudathi6881 2 года назад +11

      Correct tenkasi karan

    • @suriavelanstephenfanspage3615
      @suriavelanstephenfanspage3615 2 года назад +5

      Sago .. Thenaruvi la ungalala vlog panna mudiyuma...🤣🤣

    • @Globe-Trotter1989.
      @Globe-Trotter1989. 2 года назад +2

      @@aloysiusnirmal5940 Can you make it to Theanaruvi bro

    • @Mohann6894
      @Mohann6894 2 года назад +6

      சித்திரை திருவிழா பௌர்னமிக்கு வாங்க செமயா இருக்கும் இந்த கோயில்

    • @Globe-Trotter1989.
      @Globe-Trotter1989. 2 года назад +2

      @@Mohann6894 தேனருவி போக முடியுமா

  • @user-ig3wm1kk1k
    @user-ig3wm1kk1k 4 года назад +19

    1988 to 1995 வரை செண்பகதேவி அருவிக்கு சென்று குளித்து திரும்பி இருக்கிறேன் அருமையான இடம்.

  • @JAINARASIMHA-s7c
    @JAINARASIMHA-s7c 4 года назад +16

    செண்பகாதேவி அம்மன் கோவில் அருமையாகவும் அழகாவும் இருக்கும்❤💜💖 அந்த கோவிலில் இருந்து உடனடியாக வர மனசிருக்காது💖💜❤🌷🌷🌷

    • @divyamariselvam3453
      @divyamariselvam3453 3 года назад

      இந்த கோவிலில் வைத்துதான் வாஞ்சிநாதன்.. கலெக்டர் ஆஷ்துரையை கொல்ல தன் சகாகள் கூட இருந்து திட்டம் தீட்டினார்...

  • @johnpeterp8723
    @johnpeterp8723 3 года назад +9

    அற்புதமான இடம்.
    இந்த அருவிக்கு மேலே இருக்கிற தேன்அருவியை பார்த்தால் இதைவிட சூப்பரா இருக்கும்.
    நான் பார்த்து ரசித்த நினைவுகள் எல்லாம் இப்போது வருகிறது.

    • @NoturMf-vi5ok
      @NoturMf-vi5ok Год назад

      ஐயா பாலருவியில் உங்கள் அனுபவத்தை பகிருங்கள், பாலருவி எவ்ளோ தூரம் எப்படி இருக்கும் என தெரிந்து கொள்ள மிக ஆர்வமாக உள்ளது

  • @muhammedgani9155
    @muhammedgani9155 2 года назад +2

    இயற்க்கையின் அற்புதம் இறைவனின் படைப்பு. இதை ஒவ்வொரு மனிதர்களும் பாதுகாக்க. முயற்சி செய்யினும்.

  • @icecoldviv
    @icecoldviv 4 года назад +115

    Kids: main falls
    Men: Shenbaga Devi
    Legends: தேன் அருவி 🔥🔥

    • @ayishasiddhiquanoorullah8604
      @ayishasiddhiquanoorullah8604 2 года назад +5

      தேன்அருவி திரை எழும்பி வானின் வழி ஒழுகும்

    • @Game-n3r
      @Game-n3r 2 года назад +6

      Ultra legends: palaruvi

    • @jagan6382
      @jagan6382 2 года назад +1

      Thenaruki mel paalaruvi iruku

    • @icecoldviv
      @icecoldviv 2 года назад +1

      @@jagan6382 thenaruvi is in kutralam. Palaruvi is in Kerala. Not nearby

    • @jagan6382
      @jagan6382 2 года назад

      @@icecoldviv ila bro nenga aariyangavu paal aruvi solringa naan solrathu thenaruvi ku mela ulla paal aruvi solren

  • @jhansirani3613
    @jhansirani3613 3 года назад +2

    ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் சிவம் என்னுடைய பழைய நினைவுகள் தந்த ற்க்கு. நன்றி

  • @mohamedmohideensyedabootha4962
    @mohamedmohideensyedabootha4962 4 года назад +13

    1990 ல் இந்த அருவியில் குளித்து நீச்சல் அடித்து சென்றதை தற்போது நினைக்கும் பொழுது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது ஏனென்றால் நான் சென்ற சில ஆண்டுகளில் இந்த அருவியில் குளித்து ஒரே சமயத்தில் 9 பேர் மூழ்கி அருவியின் ஆழத்தில் சுனையில் சிக்கி சடலம் கூட மீட்க முடியாத சோகத்தில் வனத்துறை நிரந்தரமாக அங்கு யாரும் செல்வதை தடை செய்து விட்டனர். அந்த அருவியில் நீச்சல் அடிக்கும் காட்சிதான் எனது Gmail profile picture.

  • @அழகர்ஐஸ்07
    @அழகர்ஐஸ்07 3 года назад +18

    நாங்களும் 2010 ஆம் வருசம் போனோம் செமையாக இருந்தது 👍👍

  • @gurumoorthy7382
    @gurumoorthy7382 4 года назад +10

    தேனருவியில் குளித்த சில நபர்களின் நானும் ஒருவன்
    செண்பக அருலிக்கு மேலே மரக்கட்டை பாலம் கடந்து சென்றால் தேனருவி வரும் தண்ணீர் விழும் இடத்திற்கு செல்வது சிரமங்க இருக்கும் சிறிது தூரம் தண்ணீரில் நீந்தி செல்ல வேண்டும். மீன்கள் அதிகமாக இருக்கும் , கால்களை கடிக்கும், தண்ணீர் விழும் இடத்தில் ஒரு கம்பி இருக்கும் அதை பிடித்து தான் நான் குளித்தேன் 95% பேர் பார்த்து விட்டுத்தான் செல்வார்கள்
    இப்போது யாருக்கும் இந்த பாக்கியம் கிடைப்பது இல்லை

  • @jagadheesanps6403
    @jagadheesanps6403 2 года назад

    அருமையான ஆபத்தான அருவி தான் **சென்பகாதேவி அருவி**
    நான் 1972 ம் ஆண்டிலிருந்து இன்று வரை குற்றாலம் வருடம் தவறாமல் சென்று கொண்டிருக்கிறேன்
    சென்பகாதேவி அருவி தேனருவி புலி அருவி புது அருவி என அனைத்து அருவிகளுக்கும் சென்றுள்ளேன்
    மறக்கவே முடியாது
    சில வருடங்களாகத் தான் தேனருவி சென்பகாதேவி அருவி என மேலும் சில அருவிகளுக்கு போவது தடை செய்யப்பட்டுள்ளது

  • @thoudeenali9832
    @thoudeenali9832 2 года назад +6

    நல்ல அனுபவம் உண்டு இந்த அருவியில்.நீச்சல் தெரிந்தால் இந்த அருவியில் நல்ல ஒரு குளியல் குளிக்காலம்.நண்பர்களுடன் சென்ற பயணம்.அது ஒரு காலம்.

  • @kannanselvam5506
    @kannanselvam5506 5 месяцев назад +1

    நாங்கள் ஒரு 25 வருடங்களுக்கு முன்பு சென்றபோது அந்த பாட்டி அங்கு தான் இருந்தார் அதேபோல் அதற்கு மேல் தான் தேனருவி உள்ளது அங்கும் நாங்கள் சென்று வந்தோம் செண்பகாதேவி அருவியில்குளித்துல்லோம் உள்ளம்

  • @ravikumar-uk6uk
    @ravikumar-uk6uk 4 года назад +8

    அருமையான இயற்கை சூழல் இடம். பதிவும் அருமை. நன்றி

  • @srksabapathi4587
    @srksabapathi4587 4 года назад +121

    இதுக்கு மேலே தேனஅருவி
    நான் இளமைகாலம் முழுவதும் அலைந்த இடம்

    • @MotorVikatanMagazine
      @MotorVikatanMagazine  4 года назад

      Thanks for your comment 👍

    • @jaikumarn4357
      @jaikumarn4357 4 года назад

      Itharku mel oru varthai venduma coutrala mannirkku thalai vanagugiren

    • @kumaraguru8517
      @kumaraguru8517 4 года назад

      Nanum poiruken ten aruvi

    • @samsungforgher4134
      @samsungforgher4134 4 года назад

      Kids jump from top shenbaga devi waterfalls and i have seen many deaths in thadagam.

    • @TheRighteous-TV
      @TheRighteous-TV 3 года назад

      @@samsungforgher4134 yes every year I've somebody died there. So only its closed years ago

  • @gurumoorthy7382
    @gurumoorthy7382 4 года назад +11

    இனி வருங்காலங்களில் எல்லோரையும் செண்பக அருவி பார்க்க குளிக்க அனுமதிக்க வேண்டும்
    தேனருவி செல்லும் பாதையை ஒழுங்குபடுத்தி எல்லோரையும் அனுமதிக்க வன துறை ஏற்பாடு செய்ய வேண்டும்
    சிற்றருவிக்கு மேலே செல்லும் பொழுது காட்டில் செல்லது போலவும் ஒடையும் சத்தம் மிகவும்
    இனிமையாக இருக்கும்

    • @Bagampiriyal
      @Bagampiriyal 5 месяцев назад

      @@gurumoorthy7382 இப்போவும் அனுமதி உண்டு. செண்பகாதேவி அம்மன் கோயிலுக்கு மட்டும் போவதானால்.
      ஆள்நடமாட்டம் குறைந்ததால் கரடி, புலி,யானைஇறங்கும். பரவாயில்லையா?

  • @ramasubramanian7558
    @ramasubramanian7558 Год назад

    Wonderful bro
    Senpagadevikku mela Thenaruvi athukkum mela oru ball aruvi romba atarntha kattu paguthikal ellam erukku bro
    I am working from courtram 2001 to 2005 five falls road
    India cement holiday home cattering worker bro daily entha malai katukalil than work mutinthathum surri theriveyn athu oru perinpam nandri iya

  • @amurugan4854
    @amurugan4854 2 года назад +4

    இதுக்கு மேல தேனருவி உண்டு bro... 👍... video & explanation super 💓

  • @tamilgovtandpvtjobs9737
    @tamilgovtandpvtjobs9737 4 года назад +41

    என் உயிரை காப்பாற்றிய செண்பகாதேவி அம்மன்.

    • @rajaramrajaram222
      @rajaramrajaram222 4 года назад

      Me too

    • @deenulislamian8406
      @deenulislamian8406 4 года назад

      Suthu

    • @balajid4430
      @balajid4430 4 года назад

      @@deenulislamian8406 போடா குல்லா பொறம்போக்கு

    • @fahadfahad7324
      @fahadfahad7324 4 года назад +1

      @@deenulislamian8406 Aduthavanga madhathym nambikaiyum kevalapaduthathinga

    • @fahadfahad7324
      @fahadfahad7324 4 года назад +6

      @@balajid4430 avaruku badhil na ungalte manippu kettkrean sago

  • @vijaym6989
    @vijaym6989 4 года назад +1

    நான் என்னுடைய சிறுவயதில் இந்த அருவிக்கு குடும்பத்துடன் சென்று உள்ளேன் 15 வருடங்களுக்கு முன் சென்று உள்ளேன்

  • @bmyfaizy3395
    @bmyfaizy3395 2 года назад +3

    ஐயா இதுக்கு மேலயே கூட்டம் கூட்டமாக நாங்கள் விளையாடி ரொம்ப காலம் ஆகல அந்த பாறய கழுவி அதுல புரோட்டா பிச்சு போட்டு குளித்த பசியில் அடித்துக்கொண்டு சாப்பிட்டது இன்னும் மறக்க முடியாத நினைவுகள் மனித காலடி படாததுங்கிறதுலாம் அக்கிரமமான பில்டப் தேனருவியில் ஊறிக்கிடந்த காலமது.மனிதன் ரசிக்காத எதுவும் இருப்பது வீண்.

  • @SivaKumar-qf2pg
    @SivaKumar-qf2pg 2 года назад +7

    Several years back there was a Training Centre for LIC Agents, once in three years we used to go there, while staying there every day morning we used to go to Senbagadevi Falls, and in the evening we used to go to Border Barotta shop. Those days are beautiful.

  • @anandchezhian
    @anandchezhian 2 года назад +1

    I've bathed hundred of times between 1990 to 2002 in this falls..after having bath in this falls, we never went to dip in main falls. It's divine..feel the experience.

  • @jayakumar4765
    @jayakumar4765 4 года назад +2

    இந்த அருவிக்கு நானும் சென்று உள்ளேன் மூலிகைச் செடிகள் அதிகமாக உள்ளது. அற்புதமான அனுபவம்.

  • @visionkings787
    @visionkings787 3 года назад +14

    Have jumped from top to this pool during my college days...now I am abroad settled missing all those Golden days

    • @mathan1967
      @mathan1967 3 года назад +1

      S S S...same experience brother...🤓

    • @ajmeerkhan9059
      @ajmeerkhan9059 2 года назад

      Romba risk ah brother

    • @visionkings787
      @visionkings787 2 года назад

      @@ajmeerkhan9059 risk ellam namaku rusk sapidra mathiri bro

  • @sivashankar2347
    @sivashankar2347 3 года назад +3

    Pure, cristal clear herbal water, fully green plants n trees Senbhaga devi falls. Above this Thenaruvi. Pothigai malai is very charming 👍👌

  • @senthils4862
    @senthils4862 4 года назад +34

    சுமார் 15ஆண்டுக்கு முன்பே நாங்கள் இங்கே சொன்றுயுள்ளோம்....

    • @sugunam7100
      @sugunam7100 4 года назад

      இது எங்கே உள்ளது

    • @esakkimuthujeeva8143
      @esakkimuthujeeva8143 3 года назад

      @@sugunam7100 tenkasi dt

    • @adhipan4744
      @adhipan4744 3 года назад

      Yes நானும் சென்றுள்ளேன் இப்போது இந்த பகுதியில் செல்ல அனுமதி இல்லையாம்
      இதுக்கு மேலே உள்ள தேனருவிய பற்றி பதிவு போடுங்க

    • @asifiqbal5397
      @asifiqbal5397 3 года назад

      இப்போ அனுமதி உண்டா ??

  • @t.rajendrant.rajendran2646
    @t.rajendrant.rajendran2646 3 года назад +1

    நாங்க தேன் அருவிக்கும் சென்று வந்துள்ளோம் எனக்கு இப்போது 56 வயதாகிறது பலமுறை சென்பாகதேவி அருவியில் திடாரத்தில் குளித்த அனுபவம் உண்டு இப்போதோ நான் Dubai இருக்கிறேன் என் சொந்த ஊர் குற்றாலம் ( காசிமேஜர் புரம் ) படித்தது RPH SHOOL இலஞ்சி now iam Satellite Madurai

    • @sathees_kumar
      @sathees_kumar 3 года назад

      Forest ku amount kudutha ulla pogalamaa

  • @ganeshsuper476
    @ganeshsuper476 3 года назад +5

    மேல போய் பார்த்த ஞாபகம் இருக்கிறது

  • @mohamedkassali8205
    @mohamedkassali8205 2 года назад

    இதுக்கு மேல தேனருவி இருக்கிறது, அங்க இருந்து தான் இங்கயே தண்ணீர் வரும்,நான் என்னுடைய 17 வயதில் தேனருவி சென்றிருக்கிறேன்,மிகவும் ஆபத்தான இடம் வாழ்நாளில் ஒரு முறையாது பார்க்க வேண்டிய இடங்கள்,முதலில் செண்பகாதேவி அருவி வரை மக்கள் போக அனுமதி இருந்தது, இப்போது அனுமதி இல்லை

  • @JAINARASIMHA-s7c
    @JAINARASIMHA-s7c 4 года назад +5

    நான் 1985 காலத்தில் டூரிஸ்ட் சென்ற போது செண்பகாதேவி அருவி உச்சியில் இருந்து ஒரு தடவை அல்ல மூன்று முறை மேல் இருந்து குதித்து ஆட்டம் போட்டோம்😇😇😇உண்மையில் திர்லிங்க்தான்....இவ்வளவுக்கு‌ம் தமிழக அரசின் காவல்துறை அதிகாரிகள் ஒவ்வொரு வருஷம் எவ்வளவு பேர் இந்த உயரத்தில் இருந்து குதித்து குழித்ததில் மரணமடைந்தார் என்ற போர்டு வைத்து இருப்பார்கள்.....நாங்கள் எதையும் கண்டு கொள்ளவில்லை.....அந்த நேரத்தில் அதிகாரிகள் இல்லாத காரணத்தால் இந்த மாதிரி நிகழ்வுகள் நடைபெற்றன......இன்று நினைத்தால் உடம்பு புல்லரிக்குது.......இளங்கன்று பயமாறியாது😇😇😇 நீச்சல் தெரிந்த ஒரே தைரியம் தான் எல்லா வகையிலும் காரணம்🌷🌷🌷💖💜❤🙏🙏🙏பதிவேற்றம் செய்தமைக்கு வாழ்த்துகள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 🌷🌷🌷

  • @jaik9321
    @jaik9321 Год назад

    so nice to see this -- MOST of the falls down are fully plastic and spoiled by humans -- we must act fast and control this - the falls should be paid and increased control

  • @hariuk6007
    @hariuk6007 2 года назад

    Naan intha aruviyil en cinna vayasula poiruke pora root ye semma thrilling a irukum atha nenga romba naal aprm neyabaga paduthininga romb thanks

  • @yuva3466
    @yuva3466 2 года назад

    Thanks bro enkalala pakka mudiyatha idathuku kuttidu ponathuku

  • @rajamohan2958
    @rajamohan2958 3 года назад +2

    இதற்கு மேல் தேனருவி உள்ளது.அருவிக்கு செல்ல அருவியின் குறுக்கே எல்லாம் ஏறி செல்ல வேண்டும். பாதை மிக கடினமாக இருக்கும். தேனருவிக்கு மேலேயும் சென்றிருக்கிறேன்.மேலே ரம்மியமாக இருக்கும். அந்த நாள் எனக்கு ஒரு நினைவாக உள்ளது.

  • @soundarsoundar2273
    @soundarsoundar2273 3 года назад +2

    Super place myself and my dad went there in 1977 it's very thrilling and wonderful experience

  • @mhs66
    @mhs66 Год назад

    சுமார் 30 வருடங்களுக்கு முன் நண்பருடன் சென்று செண்பகா தேவி அருவியில் குளித்து பின் தேனருவிக்கும் சென்று பார்த்து வந்த அனுபவம் நிழலாடியது. அது ஒரு பொற்காலம். எந்த அனுமதியும் தேவையில்லை அப்போ. தேனருவிக்கும் மேலே இருப்பது பாலருவி.😊

    • @NoturMf-vi5ok
      @NoturMf-vi5ok Год назад

      ஐயா பாலருவியில் உங்கள் அனுபவத்தை பகிருங்கள், பாலருவி எவ்ளோ தூரம், எப்படி இருக்கும் என தெரிந்து கொள்ள மிக ஆர்வமாக உள்ளது.

  • @SYEDHUSSAIN-mz9er
    @SYEDHUSSAIN-mz9er 2 года назад +1

    தேனறிவிக்கும் மேலே பாலருவி உள்ளது

  • @subramanen5331
    @subramanen5331 3 года назад

    1969 ல் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தாவர இயல் பிரிவுக்கான பயணத்தில் ஒரு வாரம் குற்றாலத்தில் தங்கி மெயின் அருவி, செண்பகாதேவி அருவி மற்றும் தேனருவி வரை மாணவர்கள் 64பேரும் மாணவிகள் 5பேரும் நடந்தே சென்று தேவையான செடி கொடிகளை பறித்து வந்தோம்.ஒரு நாள் தென் மலை அடுத்த நாள் ஐந்தருவி . செண்பகாதேவி அருவியில் டைவ் பண்ணி குதித்தது இன்றும் பசுமையான நினைவுகள்.

  • @arulselvan1205
    @arulselvan1205 3 года назад +5

    இதன் அனுபவம் அலாதியானது...sema feel

  • @ahamedali4727
    @ahamedali4727 4 года назад +2

    10 வருடத்திற்கு முன்பு என் உயிர் நண்பன் உயிர் பிரிந்த இடம் அதற்கு பின் அந்த இடத்திற்கு நான் செல்லவே இல்லை

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Год назад

    ஆஹா அருமையான பதிவு🎉🎉❤❤வாழ்த்துக்கள் தம்பி🎉🎉

  • @jananichitra7558
    @jananichitra7558 4 года назад +2

    அழகோ அழகு..... மகிழ்ச்சி......

  • @syamsriram
    @syamsriram 4 года назад +2

    2002ம் வருடம் வரையில் இந்த அருவிக்கு பொதுமக்கள் சென்று வர எந்த தடையும் இல்லை. நான் கடைசியாக 2004ம் வருடம் சென்று வந்தேன். தற்போது உங்கள் வீடியோவை பார்த்த பின்னர் நேரில் சென்று பார்த்தது போல் உனருகிறேன். நன்றி

  • @ibrahimbabu.m6562
    @ibrahimbabu.m6562 4 года назад +4

    LIVELY N LOVELY PLACE. TREASURE ISLAND. GIFT OF GOD.

  • @venkateswaranmarimuthu8472
    @venkateswaranmarimuthu8472 4 года назад +4

    மிகவும் தவறான பதிவுகள்
    1. இது குற்றால மலை பொதிகை மலை அல்ல அகத்தியர் சென்றதும் பொதிகை மலைக்குத்தான் இங்கு அல்ல
    2.செண்பகாதேவி அருவி தண்ணீர்
    பேரருவிக்கும் சிற்றருவிக்கும் மட்டுமே
    ஐந்தருவிக்கும் பழைய அருவிக்கும்
    வெவ்வேறு இடங்களில் இருந்து வருகிறது
    3 செண்பகாதேவிக்கும் மேலே தேனருவி உண்டு
    அதற்கும் மேலே தெற்கு மலை எஸ்டேட் உண்டு. அங்கு செல்ல சிற்றருவி தாண்டி சிறிது ஏறிய பின்னர் வலது பக்கம் திரும்பி செல்ல வேண்டும்
    தெற்கு மலை எஸ்டேட் தாண்டி மேலே சென்றால் தான் ' குற்றால பர்வதம்' என்ற மலை உச்சியை அடைய முடியும்
    அது தான் குற்றால மலைகளிலேயே
    உயரமானது
    4 ஐந்தருவிக்கும் மேலே வாய்தா மலை எஸ்டேட் உண்டு
    மிகைப்படுத்தப்பட்ட வர்ணனை
    Motor vikatan இதனை சரிசெய்ய வேண்டும்

  • @Qatarmahesh
    @Qatarmahesh 4 года назад +9

    2:12 gate-u கதவு 🤣🤣
    நம்மாளுயா இவரு

  • @nandhininandhini1434
    @nandhininandhini1434 2 года назад +1

    Nerla paatha mariye iruku 😻😻😻

  • @jagadeeshbaskaran4881
    @jagadeeshbaskaran4881 2 года назад +1

    unforgettable place. went on 2009.

  • @velsamykrishnadevar1846
    @velsamykrishnadevar1846 Год назад

    செண்பக அருவிக்கு மேலே சென்று பார்த்தால் இரண்டு பாறை இடுக்குகளில் தேன் போன்று நீர்வீழ்ச்சி விழுவதால் தேனருவி . பார்த்து ரசிக்கலாம்.

  • @seagreen2092
    @seagreen2092 4 года назад +1

    Unmailaye...nalla experience...greenery..amaithi...innum..konja neram video poturukalamenu thoniyadhu bro...😍😍😍😍😍

  • @jj.soundslighting8565
    @jj.soundslighting8565 3 года назад +1

    எங்கள் ஊரில் இருந்து 10கிமீ தொலைவில் குற்றாலம் உள்ளது நாங்கள் தேன் அருவிக்கு சென்று அதையூம் மீறி நாங்கள் அதற்கு மேல் உள்ள பாலருவிக்கு சென்றோம்

    • @rameshp456
      @rameshp456 2 года назад

      Ippo poga mudiyuma any contact

  • @mrstudios7846
    @mrstudios7846 4 года назад +6

    பல ஆண்டுகளுக்கு முன்னர் பல தடவை நான் சென்று வந்துள்ளேன். இப்போது அனுமதி இல்லை. இதற்கு மேல் தேனருவி உள்ளது. மேலும் என் நண்பர் இங்கு தவறி விழுந்து ஒரு நாள் கழிந்தது உயிருடன் மீண்டும் உயிருடன் மீண்டு வந்தார்

    • @sethuramalingam4708
      @sethuramalingam4708 4 года назад

      உங்கள் நண்பர் பெயர் சொல்லுங்க..நண்பரே..

  • @dervinandriya4754
    @dervinandriya4754 3 года назад +2

    2.02 Attapoochi mookula erikuma..??? Ennaya solrenga

  • @TN-60തേനി
    @TN-60തേനി 3 года назад +8

    தேனி மாவட்டம் தலையாறு அருவி
    🔥🔥🔥..............
    975 metres........

  • @dineshsanjai378
    @dineshsanjai378 4 года назад +2

    நான் சிறுவயதில் பல முறை இங்கும் இதற்கு மேல் உள்ள தலையருவியான தேன் அருவிக்கு சென்றுள்ளேன்.. மிக சவாலான பாதை இதற்கு மேல் தான் இருக்கும். அங்கு செல்ல காலையில் புறப்பட்டால்தான் மாலை மலை இறங்க முடியும்.

  • @santhanamadmk2204
    @santhanamadmk2204 Год назад

    சூப்பர்.. வாழ்த்துக்கள்

  • @nobelnagarajannobel9140
    @nobelnagarajannobel9140 Год назад

    Annaa Really amazing video first i had ever seen ,,,,

  • @mohamedthamby4819
    @mohamedthamby4819 2 года назад

    Hi. I went to this falls more than 100 times. To honey falls nearly 20 times very very nice to enjoy.. now days no permisson for publics.

  • @sudalaimadan6261
    @sudalaimadan6261 2 года назад

    மிகவும் அருமை

  • @divyamariselvam3453
    @divyamariselvam3453 3 года назад +2

    எங்க ஊர் அருவி ....

  • @solomon5050
    @solomon5050 4 года назад +7

    2:12 கேட் கதவு போட்டு இருந்தாங்க... hahahaha hahaha....."நடு சென்ட்டர்ல"

  • @SATHISHKUMAR-rd5ir
    @SATHISHKUMAR-rd5ir 4 года назад +3

    செண்பகா தேவி அருவி to தேனருவி வீடியோ பண்ணுங்க....அதுதான் thrilling experience.....falls itha Vida 4 madangu perusu....

    • @yogananthamb6514
      @yogananthamb6514 4 года назад +2

      Correct but romba carefully to walk .....1 or 2 places

  • @RajaB-ed3or
    @RajaB-ed3or 3 года назад

    நாங்கள் 2007ல் இதுக்கு மேல தான் தேனருவி.இருக்கு..அதே நாங்கள் பார்த்தாச்சு 👍

  • @venkatsubramanian1322
    @venkatsubramanian1322 4 года назад +2

    Thanks for this beautiful coverage
    Not remembering exat date but b4 30 years may be in 1987 at that time
    It was allowed we have taken bath
    Recalling sweat memories
    Thanks again

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 4 года назад +1

      1982 IL vanthen, Arumai, yen Penn piranthal Pani vizhum malarvanam yengum MAESTROVIN Paadalthan Thenkasiyil, Azhagia koil appave.Route Azhagu!!!.Vazhukku, ippo yeppadiyo?

  • @Mugu_Kanna
    @Mugu_Kanna 4 года назад +1

    Missed going these Places.

  • @logunathan7174
    @logunathan7174 4 года назад +1

    20 ஆண்டுகளுக்கு முன் கடைசியாக சென்றுள்ளேன் செண்பகாதேவி அருவிக்கு மேல் தேனருவி உள்ளது அதற்கு மேல் பாலருவி உள்ளது பாலருவி சுமார் 500 மீட்டர் உயரத்திலிருந்து விழுகிறது அதற்குமேல் மேக அருவி உள்ளது அப்போதே தேன் அருவியில் இருந்து செல்லும் பாதை பல இடங்களில் சிதிலமடைந்து இருந்தது நன்றி

    • @baskarpandian6517
      @baskarpandian6517 3 года назад

      Mega Aruvi Palaruvi kku Thenaruvi la irunthu eppdi porathu Sir..

    • @NoturMf-vi5ok
      @NoturMf-vi5ok Год назад

      @@baskarpandian6517 ஐயா பாலருவியில் உங்கள் அனுபவத்தை பகிருங்கள், பாலருவி எவ்ளோ தூரம் எப்படி இருக்கும் என தெரிந்து கொள்ள மிக ஆர்வமாக உள்ளது

  • @sheikhmdas1
    @sheikhmdas1 4 года назад +5

    My favourite place and plus then aruvii., super broo

  • @dhanrajr5059
    @dhanrajr5059 2 года назад

    I visited 3 times year 2001
    Shenbaga devi falls and honey fally......

  • @adhipriyaarul9195
    @adhipriyaarul9195 4 года назад +6

    I have visited shenbagadevi falls many times in my childhood a thrilling experience in my life. Last time when I visited the falls there was a body of died man in the falls. That was the last we saw shenbagadevi amman and her falls. I have heard that many people died in the falls while talking bath. Some suicide also happened in view point of main falls. Better the falls should reserved to avoid such a situation.

  • @mayayama9327
    @mayayama9327 Год назад

    Semaya irugu

  • @habeeb7678
    @habeeb7678 4 года назад +4

    நான் இளம் வயதில் இங்கு சென்றுள்ளேன் இதற்க்கு மேலே இருக்கும் தேனருவிக்கும் சென்றுள்ளேன்

  • @murugan572murugan7
    @murugan572murugan7 3 года назад

    I miss you this please👍👍👍

  • @vigneshmani3507
    @vigneshmani3507 2 года назад

    In my childhood. We used play in shenbaga Devi fall with my brother

  • @akpvenu5546
    @akpvenu5546 7 месяцев назад

    தேனருவி அப்புறம் பாலருவி then plain Kerala side I visited in aug 77

  • @johnsuthajohnsutha6578
    @johnsuthajohnsutha6578 2 года назад

    Semaiya irunthathu nangalum poi irukom

  • @samuelraj9569
    @samuelraj9569 2 года назад

    1992 புயலுக்கு முன் இந்த அருவி முன் பெரிய தடாகம் இருந்தது

  • @aravindhnagarajan1349
    @aravindhnagarajan1349 4 года назад +2

    நான் இங்க போயிருக்கேன் 😍😍.. 4yrs கு முன்னாடி

  • @jahabaralia5834
    @jahabaralia5834 3 года назад +13

    தேன் அருவிக்கும் மேலே போய் பார்த்த அனுபவம் இருப்பின் நீங்கள் அதை மறக்க முடியாது

  • @shriasothaial1818
    @shriasothaial1818 3 года назад +1

    நான் இந்த அருவி யில் குளித்தேன்

  • @sethuramalingam4708
    @sethuramalingam4708 4 года назад

    விதி..என் வாழ்வில் கோரதாண்டவம் ஆடிய நாள் அன்று...
    என் விதியின் கடைசி நிமிடமாய் எண்ணி, உயிரை வெறுத்த நாள் அன்று..
    யாருக்கும் அறிந்திடாத ஒரு ரகசியதிசயம் கண்டறிந்த நாளன்று..

  • @kamarajthirupathirajan1776
    @kamarajthirupathirajan1776 4 года назад +24

    இதுக்கு மேல் ஒரு தலை இருக்கு தேன் அருவி அது பெயர்

    • @dhivyapriyamuruganantham1825
      @dhivyapriyamuruganantham1825 3 года назад

      Adhu enga irukku

    • @kamarajthirupathirajan1776
      @kamarajthirupathirajan1776 3 года назад

      @@dhivyapriyamuruganantham1825 சேரன்மகாதேவி அருவியில் இருந்து மேலும் 4 கிலோமீட்டர் போகவேண்டும்

    • @dhivyapriyamuruganantham1825
      @dhivyapriyamuruganantham1825 3 года назад

      @@kamarajthirupathirajan1776 thanks bro

    • @selvan8354
      @selvan8354 3 года назад

      Bro senbaha devi falls varaikum konjam padhai karadu murada irundhalum padhai irkum,padikattu irkum,senbaha devi falls varai paadhai undu,adhar mel then aruvi ulladhu,andha falls ku sella paarahalai thaadi thaadi sella vendi irkum,neraya idangalil valuku parai irkum,then aruvi iru malai n idailal aruvi vilum,then koodugal adhihama irkum,aruviyil kulika vaaipu illai,aruvi vilundhu varum saaral il dhan kulika mudium,aruviyai nerunga mudiadhu,thenaruvi ku mel sella mudium,then aruvi ai thandi melaum sendral thoorathil irundhu pakra matum mudium adhu paal aruvi endru sonnanga,adharku mel melaum sellalam,pinnadi thirumbi parkamal step by step aga sendral konjam adarthiyana marangal niraindhu irkum,Adnan kuruke sendral ange therincha neerodai free ya kulikalam,manudhuku migavum sandhosamaha irkum,idhula ena vishyam na vandha paadhi la return poha mudiadhu🤪,avlavu danger, indha idathuku 100 meter ku mela sendral ahalamana manroad vandhu vidum,adharku mele sendral checkpost undu, next estate...andha paadhai valiaha straight a keele sitraruvi vandhu vidalam

    • @baskarpandian6517
      @baskarpandian6517 2 года назад

      Selvan bro unga contact no.please

  • @myvadakaraimyvadakarai5539
    @myvadakaraimyvadakarai5539 4 года назад +2

    எங்க ஊரு,இரு முறை சென்று இருக்கிறேன் அருமை சார்

  • @tamilselvi8454
    @tamilselvi8454 3 года назад +3

    அருவிகளுக்கு தல தேனருவி

  • @paneerselvam6823
    @paneerselvam6823 2 года назад

    Top of the way Thenaruvi irukkirathu.angu selvathatkku 4 or 5 hours must.antha aruviyai parkkum podhu nam kankalukku pugai pol theriyum.avvalavu uyaram and force.

  • @sathishkumar1023
    @sathishkumar1023 4 года назад +2

    8 years before I went, to this falls and senbagam devi temple..need to get permission from forest officer..

  • @mmdbashajsc
    @mmdbashajsc 3 года назад

    Superb

  • @gokulanc3225
    @gokulanc3225 2 года назад

    Yes honey falls iruku very interesting palace

  • @jayanthilalgandhi4110
    @jayanthilalgandhi4110 4 года назад +1

    Location can not understand

  • @gurumoorthy7382
    @gurumoorthy7382 4 года назад +1

    பாலருவி நான் செல்லவில்லை
    ஆரியங்காவுக்கு அடுத்து சில தூரத்தில் பாலருவி உள்ளது அங்கு சென்று குளித்து வந்திருக்கிறேன்
    1978 வருடம் தேனருவிக்கு சென்று குளித்து வந்தவன் குறிப்பிட்ட நபர்களின் நான் ஒருவன்

  • @lasanananlasananan7973
    @lasanananlasananan7973 3 года назад

    Goodbro👌👌👌👏👌💯💯😘😘😍💕💕💓

  • @selvakumarm1142
    @selvakumarm1142 2 года назад

    Ithu enga ouru

  • @Sundarmoorthi-vh3lf
    @Sundarmoorthi-vh3lf 4 года назад +1

    Super brother

  • @angeswaras7396
    @angeswaras7396 4 года назад +14

    என்னது, அட்டை பூச்சி மூக்குல ஏறுமா - 2.01 ?

  • @king-kq4vc
    @king-kq4vc 2 года назад

    Video is king

  • @syedsyedsyedsyed8056
    @syedsyedsyedsyed8056 3 года назад

    Nan senreruken 18 varusam achi ethukumel then aruvi eruku athu than first aruvi athei parkkathan mudium kulikka mudiyathu parkka alaga erukum

  • @Nellaitamil250
    @Nellaitamil250 2 года назад

    Shenbagadevi
    Thenaruri
    Balaruri, 3 falls iruku main falls iku mella