பிருஹத் பராசர ஹோர சாஸ்திரம் - அத்தியாயம்:6 / சிறப்பு லக்னங்கள்: 2/4 | Dr. R.Sambasivam | SA23

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 янв 2025

Комментарии • 15

  • @kadhaisolli2737
    @kadhaisolli2737 День назад +1

    Quite understanding the new things especially special lagnas with examples.Really it's new to me.Thanks a lot.🎉🎉

  • @aadhithyabalupillai2868
    @aadhithyabalupillai2868 13 дней назад +1

    வணக்கம் வளமுடன் வாழ்க குருவே சரணம் மிக சிறப்பான இலக்கணங்களைப் பற்றி சிறப்பாக விளக்கம் கொடுத்த ஸ்ரீமான் சாம்பசிவம் ஐயா அவர்களுக்கும் ஜெயமணி சூத்திரத்தைப் பற்றி சிறப்புகளை எடுத்து உரைத்தது ஒரு கோடி நமஸ்காரங்கள் ஐயா வாழ்த்துக்கள் நன்றி

  • @m.e.balamuruganmebalamurug1591
    @m.e.balamuruganmebalamurug1591 11 дней назад +1

    சிறப்பான விளக்கம் நன்றி சார்

  • @vijayashanmugam4980
    @vijayashanmugam4980 12 дней назад +1

    🙏வணக்கம் ஐயா
    லக்ன கணக்கீடுகளையும் அவற்றை ராசி கட்டத்தில் போட்டு எப்படி பார்ப்பது குறிப்பாக கர்த்தா கிரகம் எது அந்த கிரகம் ராசி பார்வையில் கேவலா என்றும் 2இடத்தை பார்த்தால் கேவலாயோகடா என்றும் 2லக்னத்தை பார்த்தால் மஹாயோகடா என்றும் இறுதியில் ஹோரா லக்னதின் முக்கியத்துவத்தை பற்றியும் மிக தெளிவாக சிறப்பாக எடுத்து தந்தமைக்கு மிக்க மிக்க நன்றிகள் ஐயா🙏🙏🙏

    • @R_Sambasivam
      @R_Sambasivam 12 дней назад +1

      உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி!
      கேவலா இரண்டு லக்னங்களைப் பார்த்தால், கேவலா யோகடா! மூன்று லக்னங்களைப் பார்த்தால், கேவலா மஹாயோகடா!
      அது போல, வேறு ஏதாவது ஒரு கிரகம் கர்த்தாவாகி, இரண்டு லக்னங்களைப் பார்த்தால், யோகடா! மூன்று லக்னங்களைப் பார்த்தால், மஹாயோகடா! நன்றி

  • @RAMESHT1976
    @RAMESHT1976 14 дней назад +1

    பாவ லக்னம் பற்றிய பல புதிய தகவல்களை அறிந்து கொண்டேன். மிக்க நன்றி.
    தங்களிடம் சில கேள்விகள்.
    1. பாவ லக்னம் பாவகம் கணிக்க பயன்படுவதில்லையா? அப்படி எனில் இங்கே பாவம் என்பது என்ன?
    2. இந்த லக்னங்களில் லக்ன இடம் மட்டுமே முக்கியமா? அவற்றின் அடிப்படையில் பிற பாவக இடங்கள் கணிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறதா?
    3. ஒரு பாவ லக்னம் 0 பாகை மேஷம் லக்னம் எனில் அதன் பாவ அதிபதி யார்? செவ்வாயா அல்லது குருவா? இந்த புள்ளியியல் சூரியன் இருந்தால் அது எந்த ராசிகளை பார்க்கும்? தமிழ் புத்தாண்டு சூரிய உதயத்தில் எல்லா சிறப்பு லக்னங்களும் சில நேரம் இந்த புள்ளியில் விழக்கூடும். அப்போது எப்படி பார்வையை புரிந்து கொள்வது.

    • @R_Sambasivam
      @R_Sambasivam 14 дней назад

      தங்களுடைய கேள்விகளுக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி!
      1) ஸ்லோகம் 9ல் சொன்ன படி, பராசரர் இந்த மூன்று சிறப்பு லக்னங்களையும் வைத்துத் தனித்தனியாக பாவகக் கட்டங்களை அமைத்து பலன் தேடச் சொல்கிறார். எனவே இந்த மூன்று லக்னங்களைக் கொண்டு பாவகக் கட்டங்கள் அமைக்கப்பட்டு, ஜன்ம லக்னம் போலவே பயன்படுத்தப் பட வேண்டும்.
      பராசரர் பிருஹத் பராசர ஹோர சாஸ்திரத்தில் பாவ லக்னத்தைப் பயன்படுத்தும் விதிகளை நேரடியாகச் சொல்லவில்லை என்று தான் கருதுகிறேன். ஜெய்மினி மஹரிஷி பேசி இருக்கிறார்.
      பாவ (Bhava) என்ற சொல்லுக்கு வீடு, ஆர்வம் (inclination/interest) என்று பொருள் கொள்ளலாம். பாவ லக்னத்தைப் பயன்படுத்தும் சில ஜோதிடர்கள், பாவ லக்னத்தையும் ஜென்ம லக்னத்தையும் ஒப்பிட்டுப் பலன் தேடுகிறார்கள். பாவ லக்னம் சீரான வேகத்தில் நகர்வது! எனவே பாவ லக்னம் இருக்கும் இடத்தை வைத்து, இறை நம்மைப் படைத்த நோக்கத்தை அறியலாம் என்றும், ஜென்ம லக்னம் வெவ்வேறு வேகத்தில் நகர்வதால், அது நம் வாழ்வில் செயலின் வெளிப்பாட்டைக் காட்டுகிறது என்பது அவர்கள் கருத்து!
      பாவ லக்னம், ஜென்ம லக்னம் இருக்கும் பாவத்தைத் தாண்டி அல்லது பின்னோக்கிச் சென்று அடுத்த/பின் பாவங்களுக்குப் போய் விடும் ஜாதகர்கள், தம் நோக்கம் எதுவென அறிவதில் குழப்பம் கொள்ளலாம். பாவ லக்னம், ஜென்ம லக்னம் இருக்கும் ராசியில் இருந்து அடுத்த/பின் ராசிகளுக்குச் செல்பவர்களும் அவ்வாறே! இது ஆராய்ச்சிக்குரியது. தொடர்கிறேன்.

    • @R_Sambasivam
      @R_Sambasivam 14 дней назад

      3) 0 பாகை மேஷம் (30 பாகை மீனம்) என்பது ஒரு கணம் மட்டுமே நிகழக் கூடியது. ஏனெனில் அடுத்த கணத்தில் லக்னம் மேஷத்தில் நுழைந்து விடும். அல்லது, முந்தைய கணத்தில் அது மீனத்தில் இருக்கும். ஆனால், லக்ன பாவம் இரண்டு ராசிகளிலும் இருப்பதால், லக்னத்திற்கு இரண்டு தன்மைகளுமே இருக்கும் என்று கருதலாம்.
      எனவே நாம், துல்லியமாக எழுதும் பொழுது, மேஷம் அல்லது மீனம் இரண்டில் ஒன்றில் தான் லக்னம் இருக்க முடியும்.

    • @R_Sambasivam
      @R_Sambasivam 13 дней назад

      சுருக்கமாக ஹோரா லக்னம், 2ம் பாவத்திற்கான பலன்களையும், கடிக லக்னம் 3ம் பாவத்திற்கான பலன்களையும் அறியப் பயன்படுகிறது. நன்றி

    • @R_Sambasivam
      @R_Sambasivam 13 дней назад

      யூடியூபிற்கு உங்கள் 2ம் கேள்விக்கான என் பதில் பிடிக்கவில்லை என்று நினைக்கிறேன். மீண்டும் அதை நீக்கி விட்டது. 😀

  • @RAMESHT1976
    @RAMESHT1976 14 дней назад +1

    வர்ணதா லக்னம் குறித்த தகவல்கள் இந்த காணொலியில் மாறி வந்து விட்டதோ? சரி பார்க்கவும்

    • @ASTROSTARACADEMY
      @ASTROSTARACADEMY  14 дней назад

      சரி செய்யப்பட்டது. நன்றி.