பென்சனர்களுக்கு 20-25 லட்சம் ரூபாய் அதிரடி அறிவிப்பு மகிழ்ச்சியான தகவல்

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 янв 2025
  • மத்திய அரசு உயர்த்தியதைத் தொடர்ந்து, தமிழக அரசு ஊழியர்களுக்கான பணிக்கொடை ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
    தமிழக அரசு ஊழியர்களில் 2003-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதிக்குப் பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதற்கு முன் பணியில் சேர்ந்தவர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் வருகின்றனர்.
    பழைய ஓய்வூதிய திட்டத்தில் பணியாற்றுவோர் ஓய்வு பெற்றால், அவர்களுக்கு பணிக்கொடை வழங்கப்படுகிறது. அந்த வகையில், தற்போது வரை ரூ.20 லட்சம் பணிக்கொடையாக வழங்கப்படுகிறது. இந்த தொகையை மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு ரூ.25 லட்சமாக உயர்த்தியுள்ள நிலையில், தமிழக அரசும் தற்போது உயர்த்தியுள்ளது.

Комментарии •