நெல்லை வழக்கறிஞர்கள் ரயிலை மறித்து போராட்டம் நடத்த முயன்றதால் பரபரப்பு

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 июл 2024
  • ஜூலை 1ந் தேதி முதல் மத்திய அரசு கொண்டுவந்த புதிய மூன்று குற்றவியல் சட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது .இதனை திரும்ப பெற வலியுறுத்தி வழக்கறிஞர் சங்கத்தினர் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த நிலையில் நெல்லை மாவட்ட வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் ரயில் மறியல் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது
    இந்த நிலையில் நெல்லை மாநகர காவல் துறை துணை ஆணையாளர் கீதா தலைமையில் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு ரயில் நிலையம் வாயில் முழுவது தடுப்புகள் அமைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு ஊர்வலமாக வந்த நெல்லை மாவட்ட வழக்கறிஞர் சங்கத்தினர் மத்திய அரசை கண்டித்தும் மூன்று சட்ட திருத்தங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் கோசங்கள் எழுப்பினர். தலைவர் ராஜேஷ்வரன், செயலாளர் மணிகண்டன், பொருளாளர் எஸ்.கே. ராஜா ஆகியோர் தலைமையில் ரயில் நிலையத்திற்குள் சென்று ரயிலை மறிக்க முயற்சி செய்த நிலையில் அங்கிருந்து தடுப்புகள் வைத்து காவல்துறையினர் வழக்கறிஞர்களை தடுத்தனர். அப்போது இருவருக்கும் இடையே கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் அங்கிருந்தவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்திய நிலையில் போலீசாருக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து அவர்களை கைது செய்ய முயற்சித்த போது ரயிலை மறிக்காத தங்களை ஏன் கைது செய்ய வேண்டும் என சொல்லியவாரே ரயில் நிலையத்திலிருந்து வழக்கறிஞர்கள் வெளியேறினர் தொடர்ந்து அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் வலுக்கட்டாயப்படுத்தி 40-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்து சென்றனர்.
    வழக்கறிஞர்களின் திடீர் ரயில் மறியல் போராட்டத்தின் காரணமாக சந்திப்பு ரயில் நிலையம் அமைந்துள்ள இடம் முழுவதும் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

Комментарии •