தெய்வத்தின் குரல் - முதல் பகுதி : தத்துவமயமான விநாயகர் | Deivathin Kural Volume 1

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • தெய்வம் பேசுமா? பேசும். பேசியது…பேசிக்கொண்டிருக்கிறது - இன்னும் பலருக்கு சூக்ஷ்ம வடிவில். காஞ்சி மஹாஸ்வாமிகள் என்னும் அந்த ஒரு நடமாடும் தெய்வம் நமக்காகவே வாழ்ந்து நம் துயர் களைவதற்காகவே வாழ்ந்தது. இவர் நமக்கு ஆச்சார்யராக வந்தது அவரது கருணையே தவிர நாமோ நம் முன்னோர்களோ செய்த புண்ணியம் அல்ல. சிவனை நாம் பார்த்தது இல்லை; அம்பாளை பார்த்தது இல்லை; நாராயணனைப் பார்த்தது இல்லை - தேவை இல்லை; நாம் நம் குருவைப் பார்த்து விட்டோம்.
    ஆச்சார்ய சுவாமிகளின் அன்பு மொழிகளில் அருள் கனிகிறது. புராணங்களையோ - இதிகாசங்களையோ - வேதங்களையோ - தர்ம சாஸ்திரங்களையோ அனைவராலும் முழுதும் படிக்க முடியாது. பெரியவர்கள் அவற்றை எல்லாம் முழுதும் படித்து நமக்கு சாறு பிழிந்து தருவது போல் இந்நூலில் தந்துள்ளார்கள். அத்தனையும் அருட்கனிச்சாறுகள்.
    இந்து மதத்தின் பெருமையையும், நமது பண்பாட்டின் அருமையையும், கடவுளின் வடிவங்களையும், வேத சாரங்களையும், வாழ்வியலின் இலக்கணங்களையும், சகல துறைச் சாஸ்திரங்களையும், தத்துவ உண்மைகளையும், பாமரரும் புரிந்துகொள்ளும் வண்ணம் இந்நூலில் அவர்கள் குரல் உரை வடிவில் ஒலிப்பதை கேட்கலாம்; படிக்கலாம்.
    மொத்தத்தில் இது ஒரு அருட்பெரும் அறிவுக் களஞ்சியம்; ஞானக் களஞ்சியம்.
    மகா பெரியவாளின் பாதார விந்தத்தில் நமஸ்கரித்து இந்த தெய்வத்தின் குரலைப் படிப்போம்; அடுத்த சந்ததியினர்க்குப் படித்துக் காட்டுவோம்.
    ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர
    Looking for some motivation, bedtime stories, or devotional tales? Look no further! This video is filled with inspiring Tamil stories to help you relax and unwind. Subscribe now and let these stories help you relieve stress and find peace. Join us on this journey of faith and inspiration.

Комментарии •