வல்வை மகளிர் மகா வித்தியாலயத்தின் 2023 ம் ஆண்டிற்க்கான மாணவர் பாராளுமன்ற அமர்வு...!

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 дек 2024
  • வல்வை மகளிர் மகா வித்தியாலயத்தின் 2023 ம் ஆண்டிற்க்கான மாணவர் பாராளுமன்ற அமர்வு இன்று காலை இடம் பெற்றது.
    இதில் முதல் நிகழ்வாக பிரதம விருந்தினர் உட்பட்ட விருந்தினர்கள் பாடசாலை வாயிலிலிருந்து பாண்ட் இசை முழங்க மாலை அணிவிக்கப்பட்டு பாராளுமன்ற அமர்வு இடம் பெறும் மண்டபம் வரை அழைத்து செல்லப்பட்டு அங்கு பாராளுமன்ற. அமர்வுகள் ஆரம்பமாகின. அமர்வை பாடசாலையின் அதிபரும் மாணவர் பாராளுமன்ற செயலாளருமான திருமதி சிறி சுபேந்திரன் சம்லிர்தாய பூர்வமாக ஆரம்பித்து வைத்து சபாநாயகர் தெரிவு இடம் பெற்றது.
    அதனை தொடர்ந்து செங்கோல் முன்வர பின்னால் வருகை தந்த சபாநாயகர் தலமையில் அமர்வுகள் ஆரம்பமாகின.
    இதில் சபை முதல்வர், பிரதம மந்திரி, மற்றும் அமைச்சர்கள் தெரிவும் நியமன கடிதங்கள் வழக்கல், உரருதியுரை என்பன இடம் பெற்றன.
    அதனை தொடர்ந்து அமைச்சர்களின் பிரேரணைகள் முன்வைக்கப்பட்டதுடன் சபை அமர்வு நிறைவிற்க்கு வந்தது.
    தொடர்ந்து சபை அமர்வு தொடர்பான உரைகளை பாடசாலை அதிபர் திருமதி சிறி சுபேந்திரன், பாடசாலை உப அதிபர், நிகழ்வின் சிறப்பு விருந்தினராக. வடமராட்சி கல்வி வலய தமிழ் பாட ஆலோசகர் திருமதி வளர்மதி அம்பிகைபாலன்,
    பிரதம விருந்தினராக கலந்து கொண்ட வடமராட்சி கல்வி வலய சமூக விஞ்ஞான வளவாளர் திரு.கண்ணகுமார், ஆகியோர் வழங்கினர்.

Комментарии •