கபுரில் அடக்கப்பட்டவர்களுக்கு நாம் பேசினால் கேட்குமா ? அது எப்படி சாத்தியமாக மா
HTML-код
- Опубликовано: 5 фев 2025
- ஆதாரம்:📔📔📔
மரணித்தவர்களுக்கு கேட்கும் சக்தி உண்டு
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதனின் உடலை கப்ரில் அடக்கம் செய்து விட்டு, அவனுடைய தோழர்கள் திரும்பும் போது அவர்களின் செருப்பின் ஓசையை கூட மய்யித் கேட்கும். அறிவிப்பவர் அனஸ் ரலியல்லாஹு அன்ஹு (நூல் புகாரி 1338, முஸ்லிம் 5115
அல்லாஹ்வின் தூதரே! கப்றுகளை தரிசிக்கும் போது நான் எவ்வாறு சொல்ல வேண்டும் என்று ஆயிஷா றழியல்லாஹு அன்ஹா அவர்கள் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்ட போது 'அஸ்ஸலாமு அலைக்கும் அஹ்லத் தியாரி மினல் முஃமினீன வல்முஸ்லிமீன வயர்ஹமுல்லாஹு அல்முஸ்தக்தமீன மின்கும் வல்முஸ்தஹ்கிரீன வயின்னா இன்ஷா அல்லாஹு பிகும் லாஹிகூன்' என்று சொல்ல வேண்டும் என்று கூறினார்கள். (நூல் - முஸ்லிம்,அல்அக்தார் பக்கம் - 152)
நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மதீனாவில் உள்ள அடக்கத்தலங்களைக் கடந்து சென்றபோது அவற்றை நேராக நோக்கி, ''அஸ்ஸலாமு அலைக்கும் யாஅஹ்லல்குபூர், யக்ஃபிருல்லாஹு லன வலகும். அன்தும் ஸலஃபுனா வ நஹ்னு பில்அஃதர்'' என்று கூறினார்கள். (நூல் திர்மிதீ 973)
பத்று“ப் போரில் சுமார் 70 “காபிர்”கள் கொல்லப்பட்டனர். அவர்களில் 24 பேர்கள் குறைஷித் தலைவர்களாக இருந்தனர். நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள், அவர்களின் உடல்களை மட்டும் ஒரு பாழுங் கிணற்றில் அசுத்தமானதும், அசுத்தப்படுத்தக் கூடியதுமான (கற்களால் உட்சுவர் எடுக்கப்பட்ட) கிணறு ஒன்றில் தூக்கிப் போடுமாறு உத்தரவிட்டார்கள்.
பின்னர் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் (24 பிரேதங்களையும்) நோக்கி (அந்தக் கிணற்றில் கிடந்தவர்களைப் பார்த்து) இன்னான் மகன் இன்னானே! இன்னான் மகன் இன்னானே! அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் நீங்கள் கீழ்ப்படிந்து நடந்திருந்தால் (இப்போது அது) உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் தானே! ஏனெனில், எங்களுடைய இரட்சகன் எங்களுக்கு வாக்களித்த (நன்மை)தனை உண்மையானதே என்று நாங்கள் கண்டு கொண்டோம். உங்களுக்கு உங்களுடைய இரட்சகன் வாக்களித்த (தண்டனை)தனை உண்மையானது தான் என்று நீங்கள் கண்டு கொண்டீர்களா?” என்று கூறினார்கள். உடனே (அருகிலிருந்த) உமர் (ரலியல்லாஹு அன்ஹு), ”இறைத்தூதர் அவர்களே! உயிரற்ற சடலங்களிடமா பேசுகிறீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், ”என்னுடைய உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக! அவர்களை விட நீங்கள் அதிகம் செவியேற்பவர்களல்லர், ஆயினும் அவர்கள் பதிலளிக்க மாட்டார்கள்’ எனக் கூறினார்கள். அறிவிப்பவர் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு (நூல் புகாரி 1370, 3976)