என் ஊர் ; என் பெருமை - கல்லூரி மாணவிகள் மேற்கொண்ட தூய்மை பணி

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 окт 2024
  • ஓசூரில், என் ஊர் ; என் பெருமை - மக்கள் இயக்கம் சார்பில், கல்லூரி மாணவிகள் பங்கேற்ற தூய்மை பணி.
    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் உள்ள குப்பைகளை அகற்றி தூய்மை பணிகளை மேற்கொள்ளும் விதமாக, என் ஊர் ; என் பெருமை, என்ற தனியார் மக்கள் இயக்கம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    இதில், செயின்ட் ஜோசப் கல்லூரி மாணவிகள் ஏராளமானவர்கள் பங்கேற்று புனித ஜான் பாஸ்கோ அரசு உதவி பெறும் மகளிர் மேல்நிலைப்பள்ளி எதிரில் உள்ள சாந்தி நகர் குடியிருப்பு பகுதி சாலைகளில் இருந்த குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
    இவர்களோடு மாநகராட்சியின் 30 வது வார்டு மாமன்ற உறுப்பினர் திருமதி இந்திராணி, அந்தப் பகுதியில் குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள், உள்ளிட்ட தன்னார்வலர்களும் கலந்து கொண்டு தூய்மை பணிகளை மேற்கொண்டனர்.
    மேலும், மாணவிகள் சார்பில், குப்பைகளை தெருவில் கொட்ட வேண்டாம் , குப்பை அள்ளும் வாகனத்தில் கொட்ட வேண்டும், வீடுகளை தூய்மையாக வைத்துக் கொள்வதாக எண்ணி, சாலைகளை அசுத்தப்படுத்த வேண்டாம், என்று பொதுமக்களிடையே கோரிக்கை விடுக்கும் நோக்கில் முழக்கமிட்ட வாரே, வீதிகளின் வழியே பேரணியாக சென்று வந்தனர்.
    இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதிகளில் குப்பை கொட்டப்பட்டிருந்த இடத்தை தூய்மைப்படுத்தியதோடு அந்தப் பகுதியில் உள்ள சுவற்றில் மாநகரை தூய்மையாக வைத்துக் கொள்வது குறித்த விழிப்புணர்வு ஓவியங்களையும் மாணவிகள் வரைந்தனர்.

Комментарии • 1