தமிழ்க்கடவுள் முருகனும் தைப்பூசமும் | Murugan and Thaipoosam | SangathamizhanTV

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024
  • தமிழ்க்கடவுள் முருகனும் தைப்பூசமும் | Murugan and Thaipoosam | SangathamizhanTV
    பொங்கல் பண்டிகையின் வரலாறு: • பொங்கல் பண்டிகையின் வர...
    தமிழ்ப்புத்தாண்டு சித்திரையா? தையா?: • தமிழ்ப்புத்தாண்டு சித்...
    பண்டைத் தமிழ்க்குடி மக்களின் சமுக, கலாச்சார, மத வாழ்க்கை முறைகள் அனைத்தும் 'முருக' வழிபாட்டு முறைகளுக்கு ஏற்பவே அமைந்து இருந்தன. தொல்காப்பியம்', 'பத்துப்பாட்டு' மற்றும் 'எட்டுத் தொகை' போன்ற நூல்களில் கூறப்பட்டுள்ள செய்திகளில் இருந்து அந்தக் காலத்தில் முருக வழிபாட்டு முறையைச் சார்ந்தே பண்டைத் தமிழ்க்குடி மக்களுடைய சமுக, கலாச்சார, மத வாழ்க்கை முறைகள் அமைந்து இருந்தன எனத் தெரிய வருகின்றது. “சேயோன் மேய மைவரை உலகம்” எனப் பண்டைத் தமிழ் இலக்கண நூலாகிய தொல்காப்பியம் குறிக்கும். இதனால் முருகப்பெருமான் குறிஞ்சி நிலத்திற்கு உரிய தெய்வமாக வழிபடப்பட்டமை புலனாகின்றது. எனவே தொன்மைச் சிறப்புக் கொண்ட தமிழும் முருகு எனப்படும் முருகனும் பற்றிச் சுருக்கமாகக் காண்போம்.
    தமிழர்களுக்கு முருகு என்று சொல்லும்போதே மனதெல்லாம் உருகும் சொல்லது. "முருகு" என்ற சொல்லிற்கு அழகு, இளமை என்று பொருள்படும். ஆகவே முருகன் என்றால் அழகன் என்பதாகும். மெல்லின, இடையின, வல்லின மெய் எழுத்துக்களுடன் உ எனும் உயிரெழுத்து ஒவ்வொன்றுடனும் சேர்ந்து முருகு (ம்+உ, ர்+உ, க்+உ - மு ரு கு) என்றானதால், இம்மூன்றும் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி இவைகளைக் குறிக்கும்.
    வேலன் பெயர் சங்க இலக்கியத்தில் முப்பத்து ஓரிடங்களில் இடம்பெற்று வந்துள்ளது. வேல் என்னும் கருவியினை உடையவன் என்னும் பொருளில் வேலுடையான் பொருளுணர்த்தி நிற்கிறது. அக்காலத்தில் நடுகல் வழிபாடு தமிழர்களிடையே இருந்தது.அதுவே அவர்களின் முதன்மை வழிபாடாக இருந்தது.பின்னர் இந்த நடுகற்களும் அவர்களின் ஆயுதமான வேலும் சேர்ந்து வேல் வழிபாடாக மாறியது. சிலப்பதிகாரத்தில், வேலுக்கு எனத் தனிக் கோட்டமே இருக்கும்! இந்த வேல் வழிபாடு நாளடைவில் நின்று விட்டது! பல தொன்மையான கோயில்களில் முருகன் சிலையே ஆரம்பத்தில் இருந்து இருக்கவில்லை ! வெறும் வேல் வழிபாடு தான்!
    #SangathamizhanTV #Thaipoosam #Taiposam #Murugan #Pongal #DravidaPongal #HappyPongal #TamilarThirunaal
    ***************************************************************************************
    Join this channel to get access to perks:
    / @sangathamizhantv
    For more videos please SUBSCRIBE to Sangathamizhan TV: / @sangathamizhantv
    Email ID: sangathamizhantv@gmail.com
    Follow me on Telegram: t.me/sangathami...
    Follow me on Facebook Page: / changatamizhan

Комментарии • 331