CRIME GHOST NOVEL-புஷ்பா தங்கதுரையின் "மங்களா சுபமங்களா "(தமிழ் கிரைம் ஹாரர் நாவல் )
HTML-код
- Опубликовано: 6 фев 2025
- மங்களா சுபமங்களா
எழுதியவர் புஷ்பா தங்கதுரை.
நாவல் கதை வளர்ச்சியில் புதிய திருப்பங்களை ஏற்படுத்திய புதுமை எழுத்தாளர்களில் புஷ்பா தங்கதுரை முன்னோடி ஆவார். இனியது ஒரு துள்ளல் நடை,புத்தம் புதிய பாணி கற்பனை வளம், செறிந்த கதை இவையே புஷ்பாத் தங்கதுரை அவர்களின் பானியாகும். புதிய பாணியில் நவீன நூலாக மங்களா சுபமங்களா படைக்கப்பட்டிருக்கிறது. புஷ்பா தங்கதுரை வாசகர்களை ஏமாற்றுவதில்லை. வாசகர்களை கவர்வதில் அவர் வல்லவர். இதுவரை அவர் நூல்களை ரசித்த தமிழ் மக்கள் .இந்த கதையையும் வரவேற்பார்கள்
கொலை நடந்து விட்டால் லட்டு மாதிரி கேசில் இறங்கி விடலாம் . விறுவிறு என்று துப்புகள் தொடங்கும். அவை ஒவ்வொன்றாக தெரிந்து கொண்டு மேலே மேலே போவதில் ஒரு குஷி. கடைசியில் கொலை செய்தவனை பக் என்று பிடித்துக் கொள்ளும் போது பெரிய அல்ஜீப்ரா ஈகுவேஷன் படிப்படியாக கரைந்து கடைசியில் விடை மட்டும் தனியாக நிற்கும் போது ஒரு மகிழ்ச்சி ஏற்படுமே, அதுபோன்ற ஒரு அனுபவம் ஏற்படுகிறது. உண்மையில் குற்ற ஆய்வும் ஒரு அல்ஜிப்ரா கணக்கு தான்.