தால் மக்னி | Dal Makhani Recipe in Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 май 2019
  • We also produce these videos on English for everyone to understand
    Please check the link and subscribe
    • Restaurant Style Dal M...
    தால் மக்னி | Dal makhani in Tamil
    தேவையான பொருட்கள்
    கருப்பு உளுந்து - 3/4 கப்
    ராஜ்மா பீன்ஸ் - 1/4 கப்
    தண்ணீர்
    தக்காளி - 4
    எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
    வெங்காயம் - 2
    இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
    காஷ்மீரி மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
    சீரகத்தூள் - 1 தேக்கரண்டி
    மல்லி தூள் - 2 தேக்கரண்டி
    உப்பு - 1 தேக்கரண்டி
    கரம் மசாலா - 1 தேக்கரண்டி
    வெண்ணெய்
    கிரீம்
    #தால்மக்னி #Dalmakhani #Blackgramdal
    செய்முறை
    1. முதலில் கருப்பு உளுந்தையும், ராஜ்மா பீன்சையும், தண்ணீர் சேர்த்து தனித்தனியாக எட்டு மணி நேரம் ஊறவைக்கவும்
    2. ஊற வைத்த பருப்புகளை தண்ணீர் சேர்த்து குக்கரில் சேர்த்து ஆறு விசில் வரும் வரை வேகவைக்கவும்
    3. அடுத்து ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய், இரண்டு துண்டு வெண்ணெய், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்
    4. வெங்காயம் பொன்னிறமானவுடன் இஞ்சி பூண்டு விழுது மற்றும் அரைத்த தக்காளி சேர்த்து பத்து நிமிடத்திற்கு கொதிக்கவிடவும்
    5. பத்து நிமிடத்திற்கு பின்பு அதனுடன் மிளகாய் தூள், சீரகத்தூள், மல்லித்தூள் மற்றும் உப்பு சேர்த்து அதனுடன் வேகவைத்த பருப்பைசேர்த்து நன்கு கலக்கவும்
    7. இந்த கலவையில் தேவையான அளவு தண்ணீர் மற்றும் கரம் மசாலா தூள் சேர்த்து பத்து நிமிடத்திற்கு குறைவான தீயில் கொதிக்கவிடவும்
    8. சூடான மற்றும் மிகவும் சுவையான தால் மக்னி தயார்
    9. இதனுடன் ஒரு துண்டு வெண்ணெய் மற்றும் கிரீம் சேர்த்து பரிமாறவும்
  • ХоббиХобби

Комментарии • 110