"அம்பிகையின் அருள் " எட்டு திட சக்திகளை என்றென்றும் பெறுவோம்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • அம்பிகையின் அருள் " எட்டு திட சக்திகளை என்றென்றும் பெறுவோம்!
    என் திட சக்தி
    1. இமையோர் வணங்கிடும் சின்மய ரூபிணி இகம்பரம் இருட்டிலும் துணை நீயே உமையே உன்னை வணங்கி நின்றோமே உருகிடும் அன்பின்த் தந்திடுவாய் சமயங்கள் யாவுமே ஒன்றெனக்கூறி பக்தரை காத்திடும் வைஷ்ணவியே அமைந்திடும் வாழ்வில் அமைதியைத் தந்திடும் சாயீ நீ தந்திடு பக்தி திடமே
    2.அருள்தர வந்திடும் சாயி சுபாஷினி அனுதினமும் வந்திடு நாயகியே பொருள் தரும் லட்சுமி நீ புண்ணியம் தந்திடும் நான்முகியே திருவடி தந்திடும் திரிபுரசுந்தரி திவ்யஸ்ரூபிணி மங்கலேயே வரும் துயர் நீக்கிடும் மாதவன் சோதரி துர்கை நீ தந்திடு உடல் திடமே
    3.பந்தங்கள் அறுக்கும் பரமததயா பரி
    பாவங்கள் நீக்கிடும் பைரவியே சொந்தம் என்றுன்னேந சரணடைந்தேனே
    சுகம் தர வந்திடும் சௌந்தரியே கந்தனே ஈன்றவன் காட்சி தந்தென்னை காத்திடும் வந்திடும் காமாட்சியே வந்தனை செய்து ன்னை வணங்கி நின்றோமே சக்தி நீ தந்திடு புத்தி திடமே
    4.மாயவன் உருவிலே மானிட வடிவிலே மாதவன் நீயே வந்திடுவாய் சேயெனைக் காத்திட தாயினைப் பணிந்தேன் வா என அழைத்தேன் வணங்கி நின்றேன் பேயேன் தன்னை பெரும் மகிழ்வுடன் பேணியே காத்திடும் பஞ்சமே வாய்மையில் நின்றிடும். வா வாதிபோரிடலம் வாசுவி தந்திடும் வாக்குத்திடமே
    5.கண்ணொளி தந்தே கருத்துடன் காப்பாய் கருமாரி உருவான காமாட்சியே பன்னொலி கொண்டு பரவி நின்றோமே பக்தியில் வந்திடு கௌமாரியே மண்ணில் வந்தாய் அன்பரைக் காக்க மாசில்லா மாமணி ஈஸ்வரியே எண்ணியே நாங்கள் அளித்திடும் காணிக்கை ஏற்றி நீ தந்திடு மனோ திடமே
    6.வெல்லும் பகையை ஓட்டிட வந்தாய் வல்வினை தீர்க்கும் மாதங்கியே கல்லும் உருக பாடி நின்றோமே கஷ்டங்கள் தீர்க்கும் காரிகையே பல்கலை தந்திடும் சரஸ்வதி வடிவில் பாரினில் வந்த நாரணியே செல் வழி நேர்வழி தந்திடு தேவியே என்றும் நீ தந்திடு அருள் திடமே
    7.சிவனுடன் தாண்டவம் ஆடியேன் நின்றாய் சிவகாமி உன்னை வேண்டி நின்றோம் பவ வினைத் தொடர்ந்து வந்திட வண்ணம் பார்வதி நீயே காத்திடுவாய் அவப்பெயர் நீக்கி அன்புடன் ஆள்வாய் அருள் வடிவாகிய அம்பிகையை உவப்புடன் உன்னை நம்பி வந்தேனே நீயே தந்திரு தாலித்திடமே
    8.மதுரை நகரினில் தங்கிடும் அன்னையே மனமகிழ் துணையை தருபவளே இதுவரை செய்திடும் பூஜையின் பலனை எங்களுக்கே தர வந்திடுவாய் பதுமை போல அழகியே ஒளியுடன் பக்தரை காத்திட நிற்பவளே எது வந்த போதிலும் மீனாட்சி துணையென நின்றேன் தந்திரு காட்சி திடமே

Комментарии • 8

  • @sukanyasuresh6948
    @sukanyasuresh6948 Месяц назад

    என்னிடம் இந்த பாடல் உள்ளது. நவராத்திரி போது இதை சொல்லுவோம்.. அருமையான பாடல்

  • @user-uw7rp7qd2f
    @user-uw7rp7qd2f Месяц назад

    மாமி இந்த சமயம் எனக்கு இந்த பாடல் அவசியம் தேவை என் மனதிற்கு நல்ல திடத்தை தந்துள்ளது. நன்றி மாமி

  • @manjulaarumugam2643
    @manjulaarumugam2643 Месяц назад

    மாமி இந்தப் பாடல் என்னிடம்உள்ளது சிதம்பரத்தில் உங்களிடம் ஸ்லோகங்கள் எல்லாம் கற்றுக் கொடுத்தீர்கள் நோட்டில் என்னிடம் உள்ளது 🙏🙏 திட சக்தி அருமை மாமி

  • @shripanjamideviarul6317
    @shripanjamideviarul6317  Месяц назад

    அப்போது..நெய்வேலியில்.. வாழ்ந்த பலரிடம் இந்த பாடல்கள் இருக்கின்றன