ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 2 வது என்கவுண்டர்.

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • போட்டுத் தள்ளும் போலீஸ்
    5 கொலை உள்பட 32 வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ள சீசிங் ராஜாவை சுட்டுத் தள்ளிய சென்னை போலீஸ்
    --
    பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் 5ம் தேதி சென்னையில் படுகொலை செய்யப்பட்டார்.
    கூலிப்படையினரின் இந்த செயலால் தமிழக அரசியல் வட்டாரமே அதிர்ச்சிக்கு உள்ளானது.
    இது தொடர்பான வழக்கில் இரண்டு தினங்களுக்கு முன்புவரை 27 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்களில் 25 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
    கைதான 27 பேரில் அதிமுக, திமுக, காங்கிரஸ் பாஜக என பல கட்சிகளை சேர்ந்த வக்கீல்களும், கட்சி நிர்வாகிகளும் அடக்கம் என்பது அதிர்ச்சிகரமான உண்மையாகும்.
    இந்த வழக்கில் 28வது குற்றவாளியாக சீசிங் ராஜா நேற்று ஆந்திராவில் கைது செய்யப்பட்டு, சென்னை நீலாங்கரைக்கு கொண்டுவரப்பட்டான். அங்கு ரகசிய இடத்தில் விசாரிக்கப்பட்ட சீசிங் ராஜா, போலீசாரை தாக்க முயற்சித்த போது, போலீசார் அவனை சுட்டுக் கொன்றனர்.
    வயிறு, மார்பில் அவனுக்கு துப்பாக்கி குண்டுகள் பாய்ந்திருந்தன. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதற்கு முன்பு திருவேங்கடம் என்ற சரித்திர குற்றப்பதிவேடு கிரிமினல் சுட்டுக் கொல்லப்பட்டான்.
    சென்னை போலீஸ் கமிஷ்னராக அருண் பொறுப்பேற்ற பிறகு, ரவுடிகளுக்கு அவர்களுடைய மொழியிலேயே பதில் சொல்லப்படும் என கூறி இருந்தார். அதன்படி முதல் என் கவுண்டர் திருவேங்கடம் என போலீசார் பதிவு செய்தனர். அதற்கு அடுத்து வேறு ஒரு வழக்கில் தொடர்புடைய காக்காதோப்பு பாலாஜி என்கவுண்டரில் சென்னையில் சுட்டுக் கொல்லப்பட்டான்.
    மூன்றாவது என் கவுண்டராக சீசிங் ராஜா கொலை நடந்திருக்கிறது. சீசிங் ராஜா, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான ஆற்காடு சுரேஷின் நெருங்கிய கூட்டாளி. ஐந்து கொலை உள்பட 32 வழக்குகள் இவன் மீது உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. #armstrong #armstrongdeathnews #armstrongissue #breakingnews

Комментарии •