மாதா சுப்ரபாதம் யாழினி குரலில் முதல் முறையாக | Super Singer Yazhini | Tamil Christian Songs

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 июн 2023
  • #yazhini #supersingeryazhini #yazhchristiansongs #christiansongs
    Singer : Super Singer Yazhini
    music : Sam
    camera : Pazhani
    editing : Bella
    காலங்கள் யாவுமே காத்திடும் தாயே அன்னையே ஆரோக்கிய மாதாவே
    உன்னடி பணிந்து உன்னையே வணங்கும் எங்களை காத்திட வந்துவிடு
    பொன்னிற மேனியில் புன்னகைத் தவழ இன்முகம் காட்டிடும் மாதாவே
    அனுதினம் உன்னையே வேண்டிடும் எம்மையே இனிதுடன் காத்திட வந்துவிடு
    சத்திய மைந்தனை கருவினில் சுமந்து உலகினுக்கீந்த மாதாவே
    உன் துணையன்றி வேறெமக்கில்லை அன்புடன் காத்திட வந்துவிடு
    அலை கடலோரம் ஆலயம் கொண்ட அன்னையே புண்ணிய மாதாவே
    அடைக்கலம் என்றே அடி பணிகின்றோம் அன்புடன் காத்திட வந்துவிடு
    உலகின் உதயமே தயைமிகு தாயே கருணையின் வடிவே மாதாவே
    கலங்கிடும் எங்கள் துயரினை நீக்க கனிவுடன் காத்திட வந்துவிடு
    வேளை நகர் வாழ் அன்னையே மரியே சுடர்கின்ற ஒளியே மாதாவே
    சோதனை தீர்ந்திட வேதனை நீங்கிட வேண்டினோம் உன்னையே வந்துவிடு
    கன்னி மாமரியே கருணையின் வடிவே கற்கண்டு சுவையே மாதாவே
    கண்கள் இரண்டுமே தேடுது உன்னையே கனிவுடன் அன்னையே வந்துவிடு
    இன்முகம் காட்டியே துன்பங்கள் தீர்த்திடும் இறைவனின் தாயே மாதாவே
    பாவிகள் எம்மையும் பாசமாய் அணைத்து வாழ்வினை நல்கிட வந்துவிடு
    தரணியை என்றும் காத்திடும் தாயே தாய்மையின் வடிவே மாதாவே
    தவறுகள் பலவும் செய்தவர் எம்மை மன்னித்து காத்திட வந்துவிடு
    ஊழ்வினை நீக்கும் சத்திய வடிவே உண்மையின் சுடரே மாதாவே
    உன்மத்தர் எம்மையும் உலகினில் காக்க அன்புடன் தாயாய் வந்துவிடு
    ஈடில்லா தெய்வமே இயேசுவின் அன்னையே முடியா முதலே மாதாவே
    பாசமும் நேசமும் பூமியில் செழித்திட பரிவுடன் அன்னையே வந்துவிடு
    உத்தமர் இயேசுவை உதரத்தில் சுமந்த கன்னியே மரியே மாதாவே
    இவ்வுலகெல்லாம் இன்பத்தில் நிலைத்திட அன்புடன் அன்னையே வந்துவிடு
    அன்புடன் என்றும் ஜெபிப்பவர் நெஞ்சில் நிலைத்திடும் தாயே மாதாவே
    நித்தியம் உலகில் சத்தியம் வாழவே சத்திய ஜோதியே வந்துவிடு
    அன்பினுக் கென்றும் அடிமையாய் இருக்கும் அன்னையின் வடிவே மாதாவே
    உன் துணையன்றி உலகமே இல்லை உண்மையின் வடிவே வந்துவிடு
    துன்பம் என்றவர் துயரினைத் தீர்க்கும் தாய்மையின் வடிவே மாதாவே
    பங்கம் தொலைந்திட பலர் நலம் பெற்றிட பரிவுடன் அன்னையே வந்துவிடு
    உலகங்கள் யாவுமே ஒரு புன்னகையால் ஒளிபெற செய்திடும் மாதாவே
    பொய் எனும் இருளில் மூழ்கிடும் உலகை கரை சேர்த்திடவே வந்துவிடு
    நீலக்கடலில் வன்புயல் காற்றில் வணிகரை காத்திட்ட மாதாவே
    வாடி நின்றவரை நின் அருளாலே உயர்வாய் செய்திட வந்துவிடு
    வாழும் வரைக்கும் உன் துணையன்றி துணை ஒன்றும் இல்லை மாதாவே
    கதி என்றவரை கரை சேர்த்திடவே தோணியாய் நீயும் வந்துவிடு
    கண்ணொளியாலே இருளினை நீக்கி கருணையை பொழியும் மாதாவே
    புன்னகையாலே புதியதோர் உலகம் செய்திட வேண்டும் வந்துவிடு
    நன்மை தீமை இருவகை அறிந்து எங்களை காக்கும் மாதாவே
    அன்னையே என்றவர் அருகினில் இருந்து துன்பங்கள் நீக்கிட வந்துவிடு
    எங்கும் எதிலும் நிறைந்திடும் தாயே வேளாங்கண்ணி மாதாவே
    ஆயுதம் இல்லா புதியதோர் உலகம் இங்கே வேண்டும் தந்துவிடு
    வைக்கோல் புதரில் வைரத்தை ஈன்ற புண்ணிய வடிவே மாதாவே
    மதங்கள் இல்லா மனித மனத்தை உலகினில் மீண்டும் தந்துவிடு
    விண்மீன் நடுவே மதியாய் தோன்றும் மாணிக்க வடிவே மாதாவே
    எல்லா உயிரும் தன்னுயிர் என்றே எண்ணும் கருணையை தந்துவிடு
    எல்லா உயிருக்கும் ஓர் உயிரான அன்னையே மரியே மாதாவே
    இருதயம் எங்கிலும் ஈரம் கசிந்திட புதிதாய் இருதயம் தந்துவிடு
    தேவனின் தூதனை மகனாய் பெற்ற புண்ணிய வடிவே மாதாவே
    பண்ணிய பாவங்கள் யாவுமே தீர்த்து பூமியை புதிதாய் மாற்றிவிடு
    மழையாய் கருணை சிந்தும் வடிவே எங்களைக் காக்கும் மாதாவே
    மாநிலம் எங்கும் மக்களின் பஞ்சம் இனிதாய் இன்றே தீர்த்துவிடு
    திருவடி நிழலில் உலகினை காக்கும் சத்திய வடிவ மாதாவே
    நித்தமும் இங்கே நல்லருள் ஓங்க அன்னையே மரியே காட்சி கொடு
    தீமைகள் யாவுமே விழிகொண்டு எரிக்கும் வேளாங்கண்ணி மாதாவே
    மனம் கொண்ட கவலைகள் சடுதியில் நீக்கி கனிவுடன் எமக்காய் காட்சி கொடு
    மரணத்தை வெல்லும் அமுதத்தை பொழியும் பரமனின் தாயே மாதாவே காய்ந்திடும் மனதில் கருணை உண்டாக்கி மாநிலம் காக்க காட்சி கொடு
    சினம் கொண்ட பேயின் சிரசினை மிதித்திட்ட உண்மையின் வடிவே மாதாவே மனம் கொண்ட துயரங்கள் சீக்கிரம் ஆறவே கனிவுடன் எமக்காய் காட்சி கொடு
    16 புலன்களுள் பரிசிலாய் பிறந்த மங்கைய மலரே மாதாவே
    ஆதரவின்றியே அலைந்திடும் எங்கள் துன்பங்கள் தீர்ந்திட காட்சி கொடு வின்னவர் மன்னவர் வியந்தே போற்றிடும் வித்தகத் தாயே மாதாவே
    கதியின்றி அலையும் எங்களின் வேண்டுதல் கனிவுடன் கேட்டு காட்சி கொடு
    நித்தமும் உலகம் வணங்கிடும் வடிவே சத்திய பொருளே மாதாவே
    புனிதத்தின் பாதையில் நாங்களும் தொடர்ந்திட பரிவுடன் எமக்கு காட்சி கொடு கடவுளின் கருணையை கரத்தினில் சுமக்கும் கனிவுள்ளம் கொண்ட மாதாவே இரந்திடும் அடியவர் எம் குலம் செழித்திட கனிவுடன் எமக்கு காட்சி கொடு
    அபயம் என்றவர் இரு கரம் பிடித்து கரை சேர்த்தருளும் மாதாவே
    பாவக்கடலில் மூழ்கிடும் எங்களை பரிவுடனே கரை சேர்த்துவிடு
    நம்பினோர் நலம் பெற நலமுடன் கைத் தரும் நம்பிக்கை ஒளியே மாதாவே
    வம்பும் வழக்கும் இல்லை என்றொழிய பரிவுடன் எமக்காய் காட்சி கொடு
    விண்ணக அமுதென விளங்கிடும் புனிதமே விந்தைகள் புரிந்திடும் மாதாவே இதயங்கள் எல்லாம் புன்னகை பூக்க கனிவுடன் எமக்காய் காட்சி கொடு
    குழந்தை இயேசுவை கைகளில் சுமந்த கருணைக்கடலே மாதாவே
    பாவங்கள் போக்கி நல்லருள் தந்து பூமியில் புதிதாய் வாழ்வு கொடு
    வேளாங்கண்ணியில் வலமாய் வந்து வணங்கியே நின்றோம் மாதாவே
    இகபரம் இரண்டும் சுகமாய் கழியும் வழியினை இங்கே கண்டுவிட்டோம் வேளாங்கண்ணியை ஒரு முறை வணங்க தவம் என்ன செய்தோம் மாதாவே பிறவியின் பயனை என்னவென்று இங்கே உன்னால் தெரிந்தோம் மாதாவே என்றும் உன்னை வணங்குவதல்லால் பணி ஒன்றும் இல்லை மாதாவே
    வருவோம் வருவோம் தினமும் வருவோம் என்றும் உன்னை வணங்கிடுவோம் என்றும் உன்னை வணங்குவதல்லால் பணி ஒன்றும் இல்லை மாதாவே
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 531

  • @anbalagananbu4250
    @anbalagananbu4250 10 месяцев назад +89

    இப்பாடலை எழுதியவர் இப்பாடலை பாடிய வர்கள் இப்பாடலை கேட்டவர்கள் அணைவருக்கும் அருள்புரிய வேண்டும் அண்ணையே தாயே மாதாவே நன்றி ❤❤❤❤❤

    • @albertantonyantony2614
      @albertantonyantony2614 9 месяцев назад +1

      Amen.........tq sister

    • @selvaraj3687
      @selvaraj3687 7 месяцев назад +3

      Amma,Asaikka mudiyathaNambikkai,Tharum.Amma,Amma,Amma,Amma,Amma,Amma

    • @savarimuthuxavier2631
      @savarimuthuxavier2631 6 месяцев назад +1

      Lovely song. Explains the love of Mother Mary in a new format. Very useful for meditation. Nice singing by Yazhini. Love you Mother. Mary. S. Xavier

    • @samidosspaulraj5897
      @samidosspaulraj5897 Месяц назад

      Madha cannot grant arul. Only GOD can grant graces /arul !!!

    • @carolinenataraj1370
      @carolinenataraj1370 3 дня назад

      😮😮❤🎉🎉❤😮😮

  • @ranzymilfar-yb1vn
    @ranzymilfar-yb1vn 6 месяцев назад +18

    அம்மா இந்த பாடலை கேட்டதர்க்கு நன்றி❤❤❤❤❤

  • @sagayaraj3957
    @sagayaraj3957 11 месяцев назад +5

    அருமை நன்றி

  • @amalraj7605
    @amalraj7605 9 месяцев назад +14

    ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அன்பு உங்களுக்கு

  • @franklinmaster5122
    @franklinmaster5122 Год назад +5

    MARIYA..VAZGa .

  • @ullatharasus9761
    @ullatharasus9761 7 месяцев назад +21

    இந்த பாடல் கேட்கும் அனைவரும் நல்ல மனமாற்றம் அடைய வேண்டுமாறு வேண்டுகிறேன்

  • @FiliciaAntonypillai
    @FiliciaAntonypillai 6 месяцев назад +10

    தாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 🤲🤲🤲🤲🤲🙏🙏🙏🙏🙏

  • @sajivarghese4568
    @sajivarghese4568 10 месяцев назад +4

    Great, a follower of Velankanni Matha😘

  • @arogyarajarogyaraj8143
    @arogyarajarogyaraj8143 9 месяцев назад +3

    ❤❤❤❤❤❤❤

  • @vijaybrandon870
    @vijaybrandon870 10 месяцев назад +2

    Super amen

  • @matharasij9152
    @matharasij9152 8 месяцев назад +2

    Praise the lord

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 9 месяцев назад +13

    உன் குழந்தை யேசுவிற்கு நல்ல வாழ்க்கை அமைத்துக் தாருங்கள் எனக்கான கண்ணீர் வடிக்கும் இதயம் கொண்ட மேரியே நீங்கள் என்றும் என்னுடன் இணைந்து இருக்க வேண்டும் என விரும்புகிறேன் இல்லற வாழ்வை துறந்து கன்னியாஸ்திரி யாக என் வாழ்க்கையில் வந்தாலும் எனக்கு சந்தோஷம் தான் எந்த உருவத்தில் வந்தாலும் எனக்கு சந்தோஷம் தான் 🎉

  • @universalthings5581
    @universalthings5581 9 месяцев назад +5

    Ave Maria❤❤❤❤

  • @johnbaskarkumars8721
    @johnbaskarkumars8721 Год назад +5

    ஆமென் ஜீசஸ் ✝️✝️✝️👑👑👑👑👑✨️✨️✨️✨️🌹🌹🌹🌹🌹🕯️🕯️🕯️🕯️🕯️🕯️♥️♥️♥️♥️🎂🎂🎂🎂🌾🌾🌾🌾🌾🎈🎈🎈🎈🎈🕊️🕊️🕊️🕊️🕊️👏👏👏👏👏👏

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 10 месяцев назад +11

    என்மாதாவும் நீங்கள் தான் உன் குழந்தை இமேசுவிற்கு இணையான துனையும் நீதான் அன்பே மேரியே❤️ எனக்கானவளே அன்பே❤️

  • @rosalixaverpraisethelord9121
    @rosalixaverpraisethelord9121 10 месяцев назад +27

    மரியே வாழ்க!துன்பத்தில் வாழ்வோரையும் தனிமையில் இருப்பவரையும்பாதுகாத்தருளும் அம்மா.

  • @arokiamaryjacob6814
    @arokiamaryjacob6814 9 месяцев назад +7

    அனைவருக்கும். அனைத்தும் தர வேண்டும் ஆரோக்கிய தாயே.

  • @vasantharajanc.s2608
    @vasantharajanc.s2608 11 месяцев назад +31

    இரக்கமுள்ள ஆண்டவரே உம்மை சிந்திக்கும் அனைவரையும் ஆசீர்வதித்தருளும்.... ஆமென்.

  • @ammachellam7726
    @ammachellam7726 9 месяцев назад +8

    Amma எல்லாரும் நல்லா இருக்கட்டும் அதுபோல என்னையும் என் அம்மா, பிள்ளைகள் அனைவரையும் காத்தருளும் அம்மா

  • @susidass9518
    @susidass9518 9 месяцев назад +29

    அன்னையைப் பற்றி அருமையான வரிகளுடன், நல்ல இசை நயத்துடன் வளமான குரல் வளத்துடன், மனதிற்கு இதமான வார்த்தைகளால் உருவாக்கப்பட்ட பாடல். அருமை👍. வாழ்த்துக்கள்

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 10 месяцев назад +9

    இந்த பாடல் எண் மனதை இதமாக வருடுகிறது

  • @vanathiyanvanathiyan7608
    @vanathiyanvanathiyan7608 9 месяцев назад +2

    Amen amen amen Ave Maria

  • @sowmiyarex
    @sowmiyarex 10 месяцев назад +5

    ஆவே மரியா 🙏🙏🙏

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 8 месяцев назад +11

    இன்று உங்களிகளின் திருத்தலத்தில் உங்களை பார்த்தவுடன் என் கண்களில் இருந்து நீர் ஆறாய் பெருக்கெடுத்ததை நீங்கள் பார்த்து இருப்பீர்கள் கண்ணீரால் உள்ளத்தை பறிமாரிகொண்டோம் என்பது தான் உண்மை உன் கைகளில் இருப்பதை பெருமையாக உணர்கிறேன் ❤️

  • @maryambika1698
    @maryambika1698 Год назад +6

    அம்மா என்னுடைய மன்றாட்டையும் வேண்டுதலையும் கேளுங்கள் அம்மா ஆமென்

  • @VivoYs-ck5ex
    @VivoYs-ck5ex 9 месяцев назад +7

    Nalla padal sister god bless you 💞

  • @VasanthVasanth-pt4fz
    @VasanthVasanth-pt4fz Год назад +35

    உங்களுடைய கிறிஸ்துவ பாடல்களை அதிகம் கேட்பேன், கேட்டதில் மிகவும் பிடித்த பாடல் (எங்களுக்குள்ளே வாசம் செய்யும் ஆவியாணவரே)
    ஆக மகிழ்ச்சி, ஆண்டவர் நிறைவாக ஆசீர்வதித்து காத்து வழிநடத்துவராக.... ஆமென்......

  • @sasikalamoorthy3639
    @sasikalamoorthy3639 Год назад +6

    21.6.2023 🎶🎷🥁🎻🎺📢
    Happy World Music day dear ❤💐🙋‍♀️ God Bless You 🤝🤚

  • @dhivyaalex9063
    @dhivyaalex9063 9 месяцев назад +5

    ஆரோக்கிய மாதாவே எங்களுக்குகாக வேண்டி கொள்ளும்

  • @mstellarani9672
    @mstellarani9672 Год назад +12

    நீங்கள் பாடிய தேன் இனிமையிலும் ஏசுவின் நாமம் பாடலை அடிக்கடி கேட்ககறேன்

  • @shanthiirudayaraj5101
    @shanthiirudayaraj5101 Год назад +2

    Mariya vizgaaaaa🎉

  • @anbarasuanitha
    @anbarasuanitha Год назад +2

    மரியே வாழ்க

  • @Albinjoe74
    @Albinjoe74 10 месяцев назад +3

    Hi god those who there are listening the song plz give u r bleesing and for u r kindness

  • @lavanyalavanya9023
    @lavanyalavanya9023 7 месяцев назад +2

    Praise the lord Ave Maria

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 10 месяцев назад +6

    என் யசோதை யாக நீங்கள் தெரிகீர்கள் ஆரோக்கிய மாதாவே 🎉

  • @Biranamals
    @Biranamals 11 месяцев назад +3

    ✨Amen 🙏🏻 ✨

  • @jebasthiyanjebamalai-br4xh
    @jebasthiyanjebamalai-br4xh Год назад +10

    Please upload more Christians songs

  • @omkarlee9986
    @omkarlee9986 8 месяцев назад +2

    🙏🙏🙏❤️❤️❤️

  • @maxell008
    @maxell008 9 месяцев назад +2

    God bless you all the crew

  • @ajanthamalani2048
    @ajanthamalani2048 10 месяцев назад +59

    என் நீண்ட கால ஆசை நிறைவேறியது.இந்த முயற்சியை செய்த அனைவருக்கும்❤❤❤

    • @JohnDegaule
      @JohnDegaule 9 месяцев назад +3

      🙏🙏👍

    • @LEVI_EMMANUEL777
      @LEVI_EMMANUEL777 7 месяцев назад +1

      Follow Commandments of the Lord. Explaining 10 Commandments video in ur Channel Record it. Publish it. EXODUS 20th Chapter

    • @aruljayanaruljayan1331
      @aruljayanaruljayan1331 5 месяцев назад +1

      Amen matha amma❤❤❤❤ jayan

  • @christiansongs-mljmedia4442
    @christiansongs-mljmedia4442 Год назад +9

    Super voice... Congrats

  • @rajendranpalani2656
    @rajendranpalani2656 Год назад +38

    ❤ எழுதியவர்க்கும் பாடிய மகள் யாழினிக்கும் மணம் மகிழ்ந்தும் நெஞ்சார்ந்த நல் வாழ்த்துக்கள் மகளே அம்மா தீர்க்கா சமாய் இருப்பாய் மகளே அம்மா

  • @francisxavier317
    @francisxavier317 8 месяцев назад +1

    Praise the lord 🙏

  • @Annan6539
    @Annan6539 Год назад +11

    🪔🌹🙏✝️🙏🌹🧎 நன்றி இறைவா ஆண்டவரே இயேசுவே அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அம்மா தாயே ஆமென் 🪔⛪🧎

  • @eemmanuvel6167
    @eemmanuvel6167 Год назад +6

    யாழ் இனிது. நல்ல பாடல்.

  • @user-en7uz4op1b
    @user-en7uz4op1b 11 месяцев назад +4

    Amen amen thing's so sweet arumi arumi amen thing's so sweet ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @jeslovdiv999
    @jeslovdiv999 9 месяцев назад +27

    பரிசுத்த அன்னை மரியாவின் மாசற்ற இதயத்துக்கு இந்த சுப்ரபாதம் பாடல்களை கேட்கின்ற எல்லோரையும், இனிய குரலில் பாடிய சகோதரியை சிறப்பாக இசை, ஒலிப்பதிவு செய்து வெளியிட்ட குழு உழைப்பையும் ஒப்புக்கொடுத்து ஜெபிக்கிறேன்! எம் வாழுகின்ற கடவுள் இயேசு கிறிஸ்து உங்களை அன்புடன் ஆசீர்வதிப்பாராக! மரியே வாழ்க!❤🙏💕💐👍

  • @jayadavid293
    @jayadavid293 10 месяцев назад +3

    ❤❤❤மரியே வாழ்க

  • @maryjacinthads9301
    @maryjacinthads9301 Год назад +10

    Mother mary blessings always with you .

  • @mariyinmagilvil6984
    @mariyinmagilvil6984 Год назад +32

    அருள் நிறைந்த மரியே வாழ்க ஆண்டவர் உம்மோடு இருக்கிறார் ❤✝️❤

  • @prabakaranjeyaraj1833
    @prabakaranjeyaraj1833 9 месяцев назад +3

    போற்றுதலுக்குரியது....
    தன்னம்பிக்கையைத்
    தரக்கூடியது....
    நல்ல முயற்சி... மனமார்ந்த
    பாராட்டுக்கள்....

  • @user-tq6th4fp7k
    @user-tq6th4fp7k 8 месяцев назад +7

    அம்மாவேளங்கண்ணி ஆரோக்கிய மாதவே எங்கள் அனைவரையும்காப்பாற்றும் தாயே

    • @samidosspaulraj5897
      @samidosspaulraj5897 Месяц назад

      Only GOD can save us/ all. JESUS is the SAVIOUR of the world !!!

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 10 месяцев назад +6

    நீங்களும் உங்கள் மகள்கள் இருவரும் என் வாழ்க்கையில் வந்தால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன் ஆரோக்கிய மாதாவே உங்களிகளின் உள்ளே இருப்பது யார் என்று எனக்கு மட்டுமே தெரியும்🎉

  • @jeyarajs6995
    @jeyarajs6995 11 месяцев назад +5

    இறைமகன் இயேசு அன்னை மரியாள் உடன் இணைந்து உமக்கு கொடுத்த அற்புதக் கொடை இறைவன் உங்களை நிறைவாக ஆசீர்வதிப்பார்

  • @user-wb1sw1yl8u
    @user-wb1sw1yl8u 5 месяцев назад +1

    அருமையான..
    மாதா சுப்ரபாதம்.
    அழகாகப் பாடிய..
    யாழினிக்கு,
    வாழ்த்துக்கள்.

  • @poornajeyam4089
    @poornajeyam4089 2 месяца назад

    மாதா சுப்ரபாதம் கேட்கும் போது மனதிற்கு நிம்மதியும் சந்தோஷமும் கிடைக்கிறது

  • @floranayagam4446
    @floranayagam4446 9 месяцев назад +3

    Amma❤

  • @johnbritto2625
    @johnbritto2625 Год назад +2

    Ave mariya❤

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 8 месяцев назад +5

    என்னை இயேசுவின் உருவமாக தான் பார்க்கிறேன் மற்றவர்களின் வேதனைனை பார்த்து கண்ணீர் வடிக்கும் இதயம் கொண்ட வர்கள் இயேசுவின் அவதாரம் தான் என் பிறந்த நாளில் என்னை இரத்தம் சிந்த வைத்து என்னை யார் என்று என் எதிரிகளே அடையாளம் காட்டி விட்டார்கள் வேளாங்கண்ணி விரைவில் வருவேன் என் கைகளில் பணம் வந்தவுடன் வேளாங்கண்ணி வருவேன் முதல் முதலாக இன்று உங்களிகளின் ஆலயம் சென்றது என் வாழ்க்கையில் திருப்தியும் மகிழ்ச்சியும் உண்டாக்கி விட்டது

  • @user-zw1pp6cw7m
    @user-zw1pp6cw7m 11 месяцев назад +7

    மனதை மயக்கும் மரியின் பாடல்.மரியே வாழ்க

  • @saravanamuthurajacon2756
    @saravanamuthurajacon2756 Год назад +7

    அற்புதம். மிக்க நன்றி யாழினி. வாழ்க மகிழ்வுடன்.

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 10 месяцев назад +5

    அகிலத்தின் நண்மைக்காக என் வாழ்க்கை யை அர்பணிக்க விரும்புகிறேன் அகிலம் முழுவதிலும் நிறைந்து உள்ளது நீங்கள் தான் உங்களின் தன்னலமற்ற சேவையினை நிணைத்து பெருமை படுகிறேன் ஆரோக்கிய மாதாவே உங்களிகளின் கைகளில் நான் பாதுகாப்பாக இருப்பேன் என்று நம்புகிறேன்🎉 என் யசோதை அலமேலூ கைகளில் உள்ளதாக உணர்கிறேன்

  • @augustim.a1515
    @augustim.a1515 11 месяцев назад +1

    May God bless you

  • @mjohnson3457
    @mjohnson3457 11 месяцев назад +2

    மேரி மாதா புகழ் வாழ்க

  • @JulBapou-bh8bf
    @JulBapou-bh8bf 10 месяцев назад +2

    Avé Maria Avé Maria Avé Maria Avé Maria ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @t.jayarajreddy9553
    @t.jayarajreddy9553 8 месяцев назад +3

    Excellent singing.Ave Maria.Praise the Lord.👌💐🙏💯

  • @deenadayalanmurugesan1821
    @deenadayalanmurugesan1821 9 месяцев назад +3

    அன்னை அனைவரையும் காத்து
    நல் வழி நடத்த வேண்டும் பிரார்த்தனையும் வாழ்த்துக்களும் அன்பு பிள்ளைகளே.

  • @MarySunitha-lx1tu
    @MarySunitha-lx1tu 3 месяца назад +1

    எங்களுடைய மனக்கவலையை நீக்கி எங்களுடைய தேவையை அறிந்து ஆசீர் வழங்குவீராக ஆமென் ❤

  • @franklinmaster5122
    @franklinmaster5122 Год назад +3

    Supar ..TaYa

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 4 месяца назад +1

    அன்னையின் மன்றாட்டை மிகவும் இனிமையாக பாடிய மகள் யாழினிக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉❤❤❤

  • @sebasthiraju6779
    @sebasthiraju6779 Год назад +3

    Amenappa 🙏⛪✝️🌹💐🙏

  • @prasadg7439
    @prasadg7439 9 месяцев назад +4

    God bless you my child 🎉🎉🎉🙏🙏🙏

  • @akilanakil2610
    @akilanakil2610 11 месяцев назад +13

    மிகவும் அற்புதம்மான பாடல் 🙏🙏🙏🙏🙏வேளாங்கண்ணி மாதாவே துணை 🙏🙏🙏🙏🙏

  • @kalaiselvan5882
    @kalaiselvan5882 10 месяцев назад +20

    மாதாவே இந்தப் பாடலைக் கேட்கின்ற அனைவருக்கும் எங்கள் குடும்பத்தாருக்கும் நல்ல சுகத்தையும் பலத்தையும் ஆசீர்வாதத்தையும் தாரும் ஆண்டவரே

    • @stephenstee9025
      @stephenstee9025 9 месяцев назад +1

      இயேசு கிறிஸ்துவால் மட்டுமே அது முடியும் மாதாவால் முடியாது.

  • @xaviamal6872
    @xaviamal6872 11 месяцев назад +13

    யாழினி உன் பெற்றோர் இசைக்கருவியின் தமிழ் பெயரை இறைஅருளின் தூண்டுதலால் தான் வைத்திருக்கிறார்கள். அதைவிட உன்இனிய குரலில் பாடல்கள் வழியாக நற்செய்தி பணிசெய் மரியின் மகளே ஆசீர்கள் பல

  • @jayakanthi9442
    @jayakanthi9442 Год назад +10

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் யாழினி உன் குரலுக்கு நான் அடிமை மா ஆண்டவர் உன்னை ஆசீர்வதிப்பாராக

  • @musthafajosphin2619
    @musthafajosphin2619 10 месяцев назад +2

    👌

  • @rajentranraju4842
    @rajentranraju4842 9 месяцев назад +1

    ❤ Amen ❤

  • @sheelajames6762
    @sheelajames6762 10 месяцев назад +1

    SUPERB......❤❤❤🎉🎉🎉

  • @TharsiTharsi-pm7nl
    @TharsiTharsi-pm7nl 9 месяцев назад +5

    அம்மா வேளாங்கன்னி மாதாவே💖 🙏🙏வாழ்க. இயேசுவின் தாயே சதா சகாய மாதாவே💖 🙏🙏🙏🙏உமக்கு புகழ் உண்டாவதாக. மாசில்லாக்கன்னிகையே💖🙏🙏🙏🙏 🙏🙏எனக்காக உம் இறைவனிடம் பரிந்து பேசி அற்புதம் செய்திடுங்க. மரியே வாழ்க 💖🙏🙏🙏.ஆமென் 🙏🙏🙏🙏🙏

  • @paulama777
    @paulama777 9 месяцев назад +3

    GREAT GREAT GREAT EXCELLENT BEAUTIFUL BEAUTIFUL SONG AMEN AMEN AMEN 🙏

  • @theophilusanthony1026
    @theophilusanthony1026 9 месяцев назад +9

    Praise the Lord. Amen 🙏🏼

  • @sasikumarbalasubramani7784
    @sasikumarbalasubramani7784 8 месяцев назад +1

    ஆண்டவர் உ ங் க லு ளோ டு இ ரு பா ர் ஆமென் இயேசு வு க் கே புகழ்

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 9 месяцев назад +5

    வேளாங்கண்ணி வருகிறேன் அங்கே உங்களை நேரில் பார்க்க விரும்புகிறேன் ஆரோக்கிய மாதாவே🎉

    • @sheltonkennedy9735
      @sheltonkennedy9735 3 месяца назад

      நம்பிக்கையுடன் செல்லுங்கள் அம்மாவை நேரில் பார்ப்பீர்கள்

    • @lalithajaya1766
      @lalithajaya1766 12 дней назад

      Me too awaiting to visit this Holy Shrine with my life partner mother Annai Vellangani Our Lady of Good Health please help me show me a miracle 🙏♥

  • @sironmanisingarayan7621
    @sironmanisingarayan7621 10 месяцев назад +2

    Nice songs 🙏 🙏 🙏

  • @stephensakthivel6248
    @stephensakthivel6248 10 месяцев назад +3

    jesus and maria amma bless you thank you your song very nice super song .

  • @user-ol8hi9ps1z
    @user-ol8hi9ps1z 7 месяцев назад +1

    Amen Amazing ❤❤❤❤🌷🌷🌷🌷

  • @secretaryarockya8586
    @secretaryarockya8586 5 месяцев назад +1

    I have been praying to mother mary to do something in my family. Nothing received. I thank to everyone who have more faith in Mother Mary. God bless you. Please pray for my family members

  • @mariaseelanganasegran4670
    @mariaseelanganasegran4670 Год назад +15

    யேசுவுக்கே பகழ் மாியே வாழ்க மகளே யேசுவின் ௮௫ளோடு நலமுடன் வாழ வாழ்த்துகள்

  • @johnsonvincent548
    @johnsonvincent548 Год назад +5

    Ave maria❤

  • @sasikalamoorthy3639
    @sasikalamoorthy3639 Год назад +14

    உண்மை சத்தியம் ஒன்றே இலட்சியம்..
    பூமியில் புதிதாய் வாழ்வு கொடு...👏👏👌👌🙏🙏💐🎶🎶🎷🥁🎻🎺🎧❤❤❤ யாழினி இசையில் அமுதகானம் மிகவும் அருமை...அருமை..
    அருமையான வரிகள்..
    இசையுடன் தெய்வீக குரல்வளம்👏👏👌👌👌👌
    வாழ்க வளமுடன் நலமுடன் என்றும் என்றும் மகிழ்ச்சியாக ❤❤🎉🎉🎉

    • @sasikalamoorthy3639
      @sasikalamoorthy3639 11 месяцев назад +1

      🙏🙏🙏🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🌹🌹🌹

  • @AnjaliMary-ki4yw
    @AnjaliMary-ki4yw 11 месяцев назад +2

    🙏🙏🙏

  • @samrajsriraman2921
    @samrajsriraman2921 11 месяцев назад +5

    இயேசுவே வழி, சத்தியம், ஜீவன்.

  • @SanthiSuriya-hj5on
    @SanthiSuriya-hj5on Год назад +2

    Amma thayae en makaneke oru nalla jeevitham kitta ummidam vendukuraen

  • @ananthakannans9767
    @ananthakannans9767 Год назад +5

    Super

  • @sarojini763
    @sarojini763 Год назад +6

    🙏🙏🙏🙏🙏🙏

  • @user-wd6yk7yv8x
    @user-wd6yk7yv8x 9 месяцев назад +2

    ஆமென்...அன்னை மரியா

  • @k.anhony8193
    @k.anhony8193 Год назад +37

    பாடல் மிகவும் இனிமைக புத்துணர்ச்சி யாக இருந்தது இன்னும் நிறைய பாடல்கள் பாட எல்லாம் வல்ல ஏசுகிருஸ்துவின் ஆசி உங்களுக்கு கிடைக்க வேண்டிக்கிறோம்

  • @blindzerax
    @blindzerax Год назад +5

    Amen God bless yuo

  • @vijayKumar-uz2mt
    @vijayKumar-uz2mt 10 месяцев назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏 super